Saturday, 1 August 2015

20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி ?

Windows 7 என்பது இப்போது பரவலாக பயன்படுத்தபடும் OS . இதை நாம் இன்ஸ்டால் செய்யும் போது குறைந்தது ஒரு மணி நேரம் ஆகலாம். ஆனால் இதை இருபதே நிமிடத்தில் இன்ஸ்டால் செய்ய முடிந்தால்? முடியும் என்று நான் சொல்கிறேன். நான் செய்து பார்த்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் XP இன்ஸ்டால் பண்ண வேண்டுமே என்று கேட்பவர்கள் இந்த பதிவை படிக்கலாம். பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க .
DVd ஐ உள்ளே போட்டு Install Now, License Terms போன்றவற்றை முடித்து விடுங்கள்.
இப்போது கீழே உள்ளது போல வரும்.
அடுத்து Drive Selection,Format ஸ்டெப் முடிக்கவும். இப்போது கீழே உள்ளது போல உங்கள் விண்டோவில் வரும்.
இப்போது Shift F10 ஐ பிரஸ் செய்வதன் மூலம் command Prompt க்கு வரலாம்.
இங்கு மேலே உள்ளது போல “taskmgr” என டைப் செய்வதன் மூலம் “task Manager” க்கு வரலாம்.
இப்போது “Install Windows” மீது Right Click செய்து “Go To Process” கிளிக் செய்யவும். இப்போது “Set Up” என்பது தெரிவு ஆகி இருக்கும்.
இப்போது “Setup” மீது Right Click செய்து”Set Priority” என்பதில்  “Real Time” என்பதை தெரிவு செய்யவும்.
இப்போது Task Manager And Command Prompt இரண்டையும் close செய்து விடவும்.
அவ்வளவுதான் நண்பர்களே 20 நிமிடத்தில் உங்கள் வேலை முடிந்து விடும்.

PENDRIVE மூலமாக OS போடுவது எப்படி?

PENDRIVE மூலமாக OS போடுவது எப்படி?
pendrive மூலமாக os போட அதை bootable ஆக மாற்ற வேண்டும்
அதற்க்கான வழிமுறைகள்
1.முதலில் search box சென்று cmd என type செய்யவும்
பிறகு தோன்று வரிசையில் cmd அருகே சென்று right click செய்து Run as admimistrator click செய்யவும்
பிறகு தேவைபட்டால் password உள்ளிட்டு ok கொடுக்கவும்
2 .cmd யில் diskpart என type செய்யவும்
3.அடுத்ததாக list disk என type செய்யவும்
இப்பொழுது உங்கள் pendrive name மற்றும் அதற்கு left side ல் ஒரு number தெரியும்
4.அடுத்தாக select disk * என type செய்யவும்
இங்கு * என்பதற்கு பதிலாக உங்கள் pendrive nameக்கு left side இருக்கும் எண்ணை type செய்யவும்
5.அடுத்து clean என type செய்யவும்
6.அடுத்து create partition primary என type செய்யவும்
7.அடுத்து select partition 1 என type செய்யவும். இந்த 1 மாறாதது
8.அடுத்து active என type செய்யவும்
9.அடுத்து format fs=ntfs quick என type செய்யவும்
10.100 % வரை complete ஆன பிறகு
assign என type செய்யவும்
இப்பொழுது உங்களிடம் உள்ள os ஐ paste செய்யவும்
இப்பொழுது உங்கள் Pendrive மூலமாக os போடலாம்
நன்றி

விண்டோஸ் 7 os போடுவது எப்படி

நண்பர்களே வணக்கம் இது அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை :) ;)
அதே போல தெரியாமளிருக்கவும் வாய்ப்பில்லை.................!!!!!!!!!
(தெரிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது )
************************************************************************************************************
பதிவை முதலில் பகிர்ந்து படிக்கவும் (share)
கணினியில் os போடுவது என்பது  கஷ்டமான வேலை என பலர் நினைகின்றனர்
அது சுலபம் தான் இதை புரிந்து கொண்டால் போதுமானது
உங்களுக்கு நான் ஸ்டேப் by ஸ்டேப் அக விளக்கப்படங்களுடன் இந்த பதிவை பதிவிடுகிறேன்
முதலில் முக்கியமான விசியம் உங்களுடைய கணினியில் தேவையானவை எதாவது டெஸ்க்டாப் இல் வைத்திருந்தால் அதனை முதலில் வேறு இடத்திற்கு வைத்து விடுங்கள் (ஏனென்றால் os போட்ட பிறகு டெஸ்க்டாப் இல் உள்ள அனைத்தும் அழிந்து விடும் ) #அப்பரம் localdisk :c தான் os பதிவிடும் அதானால் குழப்பம் ஏதும் வராமலிருக்க c: கு உங்களுடைய பெயரை வைத்து விடுங்கள்
அப்புறம் os cd யை உள்ளே போட்டு விட்டு restart பட்டன் அழுத்தி விடுங்கள்
பிறகு Escape பட்டனை அழுத்தி கொண்டு இருங்கள் press any key என திரையில் தோன்றும் போது எதாவது ஒரு key ஐ அழுத்துங்க அப்புறம் கீழே பாருங்க அது போல வரும் கொஞ்ச நிமிடம் காத்திருங்க >(அப்போ விண்டோஸ் file load ஆகி கொண்டிருக்ம்
குறிப்பு :மறுபடியும் press any key என வந்தால் அழுத்த கூடாது அப்படி செஞ்சால் மறுபடியும் முதல்ல இருந்து வரும்
பிறகு சரியான குடுத்து (பொதுவாக அதிலே சரியாகத்தான் வரும் ஒரு வேலை தவறாக வந்தால் மாற்றிக்கொளவும் )
next குடுக்கவும்
பிறகு வரும் விண்டோ வில் இன்ஸ்டால் now குடுக்க வேண்டும்
பிறகு i accept the licence terms கொடுத்து next கொடுக்க வேண்டும்
பிறகு வரும் விண்டோ வில் custom தேர்வு செய்து
பிறகு வருவதில் நீங்கள் தேட வேண்டிய அவசியம் இல்லை முதல்ல localdisk:c தான தங்களுடைய பெயரை மாதி வச்சிங்க இப்போ அந்த பெயருள போய் கிளிக் பண்ணுக
பிறகு next கொடுத்து விட்டால் தங்களுடைய os run ஆகும் சிறிது நேரம் காத்திருக்கவும்

இப்படி ஒவ்வொன்றாக ரன் ஆகும் காத்திருங்கள்
இவ்வாறு முடிந்த பின் மறுபடியும் விண்டோஸ் restart ஆகும்
#மறுபடியும் press any key வந்துச்சின்னு அழுத்தி விட்டுராதிங்க அப்புறம் முதல்ல இருந்து தான் வரணும்
அப்படி வந்த பிறகு கடைசியாக உள்ள ஒன்று முழுமையாக இன்ஸ்டால் ஆகும் வரை காத்திருங்கள்
இப்படி தோன்றுவதில் restart now கொடுங்கள்
மறுபடுயும் reastart ஆகி ரன் ஆகும் காத்திருங்கள்
பிறகு வரும் விண்டோ வில் உங்கள் விருப்பம் போல் வையுங்கள்
பிறகு பாஸ்வர்ட் கொடுப்பதெல்லாம் உங்கள் விருப்பம்
முக்கியாமனது product key கேற்கும் சரியான இருந்தால் உள்ளிடவும் இல்லை என்றால் next தேர்ந்தெடுக்கவும்

பிறகு தேதி நேரம் இதை சரியாக கொடுத்து next குடுங்க
அப்புறம் கீழே பாருங்க
அவ்வளவு தான் முடிந்தது ரன் ஆகும்
os போட்டு முடித்த பிறகு நீங்கள் டிரைவர்ஸ் கட்டாயமாக போட வேண்டும் இல்லை என்றால் எதுவுமே முறையாக ஓடாது
டிரைவர்ஸ் cd வைத்திருந்தால் அதை வைத்து சுலபமாக இன்ஸ்டால் செய்யுங்க இல்லை என்றால் இணையத்தில் தேடி பெறுங்கள்
முழுமையாக os ,டிரைவர்ஸ் போட்ட பிறகு
வைரஸ் சாப்ட்வேர் >>மிகவும் முக்கிய மான ஒன்று அதனை கணினியில் கட்டாயம் backup வைத்திருக்க வேண்டும் அதனை இன்ஸ்டால் செய்து முழுமையாக ஸ்கேன் செய்யுங்க பிறகு அவலூதான் சொல்ல வேண்டியது
தேவையான சாப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணிகொங்க
இந்த பதிவை டைப் பண்ணுறதுக்கு மட்டும் எனக்கு சரியாக ஒரு மணி நேரம் தேவை பட்டது
அதே போலதான் os போடவும்
பகிருங்கள் இந்த பதிவை மற்றவருக்கு கட்டாயம் உதவிகரமாக இருக்கும்
((**நான் உங்கள் நண்பன் ராக்கிராஜேஸ் CSE**))
மேலும் எதாவது இதை பற்றி தகவல் தேவை என்றால் தவறாமல் கேளுங்கள

அனிராய்ட் போன் மூலம் PDF

Android சாதனத்தில் உள்ள Chrome, Firefox இணைய உலாவிகள் மூலமாக இணைய பக்கங்களை
PDF வடிவில் சேமிப்பது எவ்வாறு?
நீங்கள் கூகுள் குரோம் அல்லது Firefox இணைய உலாவியை உங்கள் Android சாதனத்தில் பயன்படுத்துபவர் எனின் நீங்கள் விரும்பும் இணையப் பக்கங்களை PDF வடிவில் சேமித்துக்கொள்ள முடியும்.
நீங்கள் விரும்பும் இணையப்பக்கங்களை PDF வடிவில் சேமித்துக்கொள்ள விரும்பினால் கீழுள்ள வழிமுறையை பின்பற்றுக.
1. நீங்கள் PDF வடிவில் சேமிக்க விரும்பும் இணைய பக்கத்தை உங்கள் Android சாதனத்தில் உள்ள Google Chrome இணைய உலாவியை பயன்படுத்தி திறந்து கொள்க.
2. பின் Google Chrome இணைய உலாவியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள Menu Button ஐ சுட்டுக.
3. இனி தோன்றும் சாளரத்தில் Print என்பதை சுட்டுவதன் மூலம் தோன்றும் சிறிய சாளரத்தில் Save as PDF என்பதை தெரிவு செய்து Save என்பதை சுட்டுக.
4. பின்னர் சிறிது நேரத்தின் பின் தோன்றும் இடைமுகத்தில் குறிப்பிட்ட PDF கோப்பிற்கு பெயர் ஒன்றினை இட்டு Save என்பதை அழுத்துவதன் மூலம் அதனை PDF வடிவில் சேமித்துக் கொள்ளலாம்.
அவ்வளவுதான்.
இனி இணைய இணைப்பு இல்லாத போதும் கூட சேமிக்கப்பட்ட PDF கோப்பினை திறந்து தேவையான தகவல்களை மீட்டிப் பார்க்க முடியும்.
நீங்கள் பயன்படுத்துவது Firefox இணைய உலாவி எனின் பின்வரும் வழிமுறையை பின்பற்றுக.
1. PDF வடிவில் சேமிக்க விரும்பும் இணைய பக்கத்தை உங்கள் Android சாதனத்தில் உள்ள Firefox இணைய உலாவியை பயன்படுத்தி திறந்து கொள்க.
2. பின்னர் Menu Button ஐ சுட்டுவதன் மூலம் திறக்கும் சாளரத்தில்உள்ள Page என்பதை சுட்டுக.
3. இனி உங்களுக்கு Save as PDF என்ற வசதி கிடைக்கும்.
4. பின் அதனை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட இணைய பக்கத்தை PDF வடிவில் சேமித்துக் கொள்ள முடியும்.

விண்டோஸ் 10

விண்டோஸ்-10 வெளியீடு : அப்கிரேட் செய்வதற்கு முன்னர் பயனர்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை
மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மைக்ரோசாஃப்டின் கடைசி பதிப்பான விண்டோஸ் 10 இன்று வெளியிடப்பட்டது. லேப் டாப், டெஸ்க்டாப், 'டேப்லட்' கணினி பயனர்கள், விண்டோஸ் 10 பதிப்பை இலவசமாக அப்கிரேட் (upgrade) செய்துக் கொள்ளலாம். மொபைல்களுக்கான பதிப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
இந்த பதிப்பில் பல்வேறு புதிய அம்சங்கள் இருந்தாலும், சில வரம்புகளும் (limitations ) உள்ளதாக ’தி வேர்ஜ்’ என்னும் ஆய்வு நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்தது. எனவே விண்டோஸ் பயனர்கள் புதிய பதிப்பிற்க்கு அப்கிரேட் செய்வதற்க்கு முன்னர் அதன் குறைப்பாடுகளை பற்றி தெரிந்துக் கொள்வது அவசியம்.
விண்டோஸ் 10 பதிப்புக்கு அப்கிரேட் செய்யும் போது ஏற்கெனவே உள்ள சில சாஃப்ட்வேர்ஸை, பயனர்கள் இழந்து விட வாய்ப்பு இருக்கிறது.
மேலும் சில குறைப்பாடுகள்,
1. விண்டோஸ் மீடியா சென்டர் (Windows Media Center) நீக்கப்படும்.
2. ஹார்ட்ஸ் சீட்டு விளையாட்டு (The card game Hearts) நீக்கப்படும்.
3. விண்டோஸ் 7 டெஸ்க்டாப் கேஜெட்டுகள் (Windows 7's desktop gadgets) நீக்கப்படும்.
4. ஃப்ளாப்பி டிஸ்க் பயன்படுத்துவோர் விண்டோஸ் 10 க்கு அப்கிரேட் செய்யும் போது புதிய இயக்கிகளை (Drivers) இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
5. டிவிடிகள் பார்ப்பதற்கு "தனி பின்னணி மென்பொருள்" (separate playback software) தேவைப்படும்.
விண்டோஸ் 10 பல சிறப்பம்சங்களை கொண்டு இருந்தாலும், ஒரு சில குறைப்பாடுகள் உள்ளது விண்டோஸ் பயனர்களிடையே சிறிய ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பிருப்பதாக மென்பொருள் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனவே விண்டோஸ் 10 பதிப்பை பெறுவதற்கு முன்னர் கணிணியில் உள்ள அனைத்து மென்ப்பொருள்களையும் வேறு கருவியில் சேமித்து வைத்துக் கொள்வது அவசியம்.