சென்னை, ஆக. 15–
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைப்படி நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதி மன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தமிழ்நாடு புது வாழ்வு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட திட்ட மேலாளர்களுடன் புது வாழ்வு திட்ட தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
முதல்வரால் 15.11.2005 அன்று கிராமப்புறங்களில் உள்ள பெண்கள், நலிவுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து வதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட உன்னத திட்டமான புதுவாழ்வு திட்டம் தமிழ் நாட்டில் ரூ.1665 கோடி செலவினத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக, புதுவாழ்வு திட்டத்தின்- 2வது பகுதி ரூ.900 கோடியில் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்த பிரதமரின் நேரடி கவனத்திற்கு முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்தமைக்காக இக்கூட்டத்தில் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் 5வது முறையாக பதவி ஏற்றவுடன் அறிவிக்கப்பட்ட ஏழை மகளிரை குடும்பத்தலைவராக கொண்ட குடும்பங்களுக்கான புதிய சிறப்பு வாழ்வாதார திட்டம்’ ஜூலை 2015ல் துவங்கப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் இதுவரையில் நடைமுறையில் இல்லாத இந்த உன்னத திட்டம் மேற்கொள்ளப்பட்டு முதற்கட்டமாக, வரும் சுதந்திர திருநாளில் 26 மாவட்டங்களிலும் மாவட்ட கலெக்டர்கள் மூலமாக 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணைகள் வழங்கப்படும். இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் 12 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஆணைகள் மாவட்டந்தோறும் சிறப்பு நிகழ்ச்சி மூலம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த ஆண்டு 83 ஆயிரத்து 673 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வருகின்ற 24.2.2016 அன்று தமிழகம் முழுவதும் 68 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து நிரந்த வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி பணி ஆணைகள் வழங்கிட ஏதுவாக, தகுதி பெறும் இளைஞர்களை தேர்வு செய்து பயிற்சிக்கு அனுப்பி வைக்க இம்மாதம் முதல் ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
தனிநபர் கழிப்பிடங்கள்
முதல்வர் ஜெயலலிதாவின் முற்போக்கு நோக்கமான தமிழக கிராமங்கள் எல்லாம் படிப்படியாக தனிநபர் கழிப்பிடங்கள் கட்டப்பட்டு திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத கிராமங்களாக உருவாக்கிட வேண்டும் என்பதற்காக கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஒத்துழைப்புடன் 5.27 லட்சம் தனிநபர் இல்லக் கழிப்பிடங்கள் டிசம்பர் இறுதிக்குள் கட்டப்பட்டு முழுச்சுகாதாரம் பெற்ற கிராமங்களாக மாற்றிட ஒர் இயக்கமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
4,174 வறுமை ஒழிப்புச் சங்கங்களிலும் கணினிகளை பயன்படுத்தி மின்சேவை மையங்கள் முழுமையாக செயல்படச் செய்வதன் மூலம் கிராம மக்கள் தங்களுக்கு தேவைப்படும் முக்கிய சான்றுகள், திட்டங்கள் குறித்த படிவங்கள் மற்றும் விவரங்கள் கிராம அளவிலே கிடைக்கச் செய்து தமிழக கிராமங்களை மின் ஆளுமை கிராமங்களாக மாற்றிட தேவையான நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும் என அமைச்சர் மவாட்ட திட்ட மேலாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும். தமிழ்நாடு புது வாழ்வு திட்டம் மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து பணிகளையும் துரிதப்படுத்தி டிசம்பர் 2015 இறுதிக்குள் முழுமையாக முடிக்க வேண்டும் என அமைச்சர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் அரசு முதன்மை செயலர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, திட்ட இயக்குனர், புதுவாழ்வு திட்டம், கூடுதல் திட்ட இயக்குனர், மாவட்ட திட்ட மேலாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Posts
மணலூர் ஊராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் 35 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் நலத்திட்ட உதவி
3 ஆண்டுகளில் ஜெயலலிதா ஆட்சியில் 14 குடும்ப நல நீதிமன்றங்கள்
ரூ.117 கோடியில் குடிசை மாற்று வாரிய வீடுகள்
நல் உறவுக்கு பாலமாய் விளங்கும் கூடங்குளம் மின் பகிர்வு
தமிழக ஹஜ் குழுவுக்கு மானியம் ரூ.30 லட்சமாக உயர்வு
ஒகேனக்கல் வந்து சேர்ந்தது காவிரி நீர் கபினி அணையிலிருந்து 25,000 கன அடி திறப்பு
ஆழித்தேர் வெள்ளோட்டம்
அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை... ஆயிரம் ஆயிரம்!
நேபாளத்தில் மீண்டும் பூகம்பம்:
எடப்பாடி நகராட்சியின் அடிப்படை வசதிக்கு ரூ.25 கோடி: ஜெயலலிதா அறிவிப்பு
பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் 15–-ந்தேதி முதல் ஒரிஜினல் சான்றிதழ்
காஞ்சீபுரத்தில் வடிவமைத்த தூய பட்டு, ஜரிகையில் அப்துல்கலாமின் உருவப்படம்Load more posts
No comments:
Post a Comment