Thursday, 31 March 2016

பத்தாம் வகுப்பு கணிதத்தில் 100மதிப்பெண்கள் மற்றும் தேர்ச்சி பெறுவதற்கான வழிகாட்டல்கள்:

வருகிற 10-th std கணிதத் தேர்வை எதிர்கொள்வதற்கான வழிகாட்டல்களை மாணவர்களுக்கு வழங்குகிறார்கள் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த கல்விக்குரல் MATHS CENTUM TEAM ஆசிரியர்கள் திரு.பி விஸ்வநாதன் மற்றும் குமார் அவர்கள் பொதுவானவைதேர்வறைக்குள் நுழைந்ததும் விடைத்தாளை அமைதியாக படிக்கவும். நன்றாகப் படிக்கிற மாணவர்கள் கூட பதற்றத்தில் பிளஸ் குறி போடும் இடத்தில் மைனஸ் குறி போட்டு மொத்த மதிப்பெண்கள் இழந்து போகிற சம்பவங்களும் நடக்கின்றன. பதற்றம் வேண்டவே வேண்டாம்.வினாக்களின் எண்களை மிகச்சரியாக குறிப்பிட்டு விடைகளை எழுத வேண்டும். இல்லையென்றால் மதிப்பெண் இழப்பு ஏற்படும்.கேள்விக்கான விடையை செய்து பார்ப்பதற்கு விடைத்தாளில் ஒரு பகுதியை ஒதுக்குவார்கள். செய்து பார்க்கிற பகுதியில் சரியான விடையை உருவாக்குகிற மாணவர்கள் கூட அந்த விடையை எடுத்து எழுதும்போது தப்பாக எழுதும் விசித்திரமும் நடக்கிறது. கவனம் தேவை. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் சரியான விடையை மாணவர் உருவாக்கி உள்ளார். ஆனால் எடுத்து எழுதும்போதுதான் தவறு செய்துள்ளார் என உணர்ந்தாலும் அவரால் மார்க் போட முடியாது.

ஒரு கணிதக்கேள்விக்கான விடையை நிறுவும்போது படிநிலைகளில் வரிசைக்கிரமமாக,நிறுவுதல் முக்கியமானது. அதற்கு ஸ்டெப் மார்க் உண்டு. நிறுவலை தவறாக எழுதிவிட்டு விடையை சரியாக எழுதினாலும் மதிப்பெண்கள் கிடைக்காது.பத்து மதிப்பெண்கள் கேள்விகளான செய்முறை வடிவியல்,வரைபடம் ஆகியவற்றுக்கும் இத்தகைய ஸ்டெப் மார்க் உண்டு. வடிவியல் கேள்விகளுக்கான விடை எழுதும்போது உதவிப்படம், வரைபடம், வரைபடமுறை,நிரூபித்தல் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மதிப்பெண்கள் உண்டு.

கவனம் தேவை.

விடைத்தாள்களை திருத்துவதற்கான வழிகாட்டலாக அரசாங்கம் ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கும்.அதில் ஸ்டெப் மதிப்பெண்கள் வழங்கவும் வழி உள்ளது.தெளிவான கையெழுத்தில், விடைகளை அடித்தல் ,திருத்தல் இல்லாமல் எழுதுவது அதிகமதிப்பெண்களை பெற உதவும். விடைத்தாளின் கடைசி இரண்டு வரிகளில் புதிய கேள்வியை ஆரம்பிக்க வேண்டாம்.கடைசி நிமிடம் வரைக்கும் தேர்வு எழுத வேண்டாம். பத்து நிமிடம் முன்னதாகவே முடிக்கவும். எழுதி முடித்ததை முழுமையாக பரிசீலிக்கவும். அப்படி செய்தால் அதில் கவனக்குறைவான விடுதல் இருந்தால் சரி செய்ய முடியும்.10 மதிப்பெண்கள் பகுதியில் உள்ள செய்முறை வடிவியல்,வரைபடம் ஆகிய இரண்டு வினாக்களுக்கான விடைகளை முதலில் எழுதினால், கடைசி நேர பதற்றம் இல்லாமல் அழகாக அவற்றை வரைய முடியும். அப்படி செய்தால், 20 மதிப்பெண்களை பெற்றுவிட்ட தன்னம்பிக்கையில் அடுத்த பகுதிகளை பார்க்கலாம்.

கணித தேர்வு என்றால்…

பொதுவாக, தேர்வில் கேட்கக்கூடிய மிகப் பெரும்பாலான கேள்விகளும் பாடப்புத்தகத்தை அடிப்படையாக கொண்டே கேட்கப்படும். பாடப்புத்தகங்களில் உள்ள ஒரே மாதிரியான கேள்விகள்தான் தேர்வுக்கு தேர்வு மாறி மாறி உங்களிடம் வந்து கொண்டிருக்கிறது. கேள்விகளுக்கு சாய்ஸாக புத்தகத்தில் வருகிற கேள்விகள்கூட மாறுவதில்லை. எனவே, பாடப்புத்தகத்தை முழுமையாக பயிற்சி செய்வதுதான் மாணவர்களுக்கு உதவும்.பாடப்புத்தகத்தில் உள்ள அத்தியாயம் 10:1 மற்றும் 10:2-ல் பயிற்சிகள் உள்ளன. அதிலும் குறிப்பாக,10:2 பயிற்சியில் உள்ள பயிற்சிகளைமுழுமையாக படித்தால் எளிதாக 10 மதிப்பெண்கள் பெறலாம்.செய்முறை வடிவியலில் மூன்று பயிற்சிகள் உள்ளன. அதில் ஏதாவது இரண்டு பயிற்சிகளை முழுமையாக பயின்றாலே,கண்டிப்பாக 10 மதிப்பெண்கள் கிடைத்துவிடும்.மூன்றாவது அத்தியாயத்தில் உள்ள இயற்கணிதம்,வர்க்கமூலம், காரணிப்படுத்து,ஆகிய பயிற்சிகளை படித்தால் ஒரு ஐந்து மதிப்பெண் கேள்விக்கு விடையளித்துவிடலாம்.புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் கணங்களும், சார்புகளும் பற்றிய பயிற்சிகளில் நான்கு கணித விதிகள் உள்ளன. அவற்றிலிருந்து இரண்டு ஐந்து மதிப்பெண் கேள்விகள் வரும்.நான்காம் அத்தியாயத்தில் அணிகள் பற்றிய பயிற்சிகளில் ஒரு ஐந்து மதிப்பெண் கேள்வி வரும். 12 வது அத்தியாயத்தில் உள்ள நிகழ்தகவு பற்றிய பயிற்சிகளில் பகடை உருட்டல்,நாணயங்கள் சுண்டுதல், சீட்டுக்கட்டுகள் தொடர்பான பயிற்சிகள் வரும். அவை எல்லாவற்றும் ஒரே பார்முலாதான். அந்த பார்முலாவை நன்கு பயிற்சி எடுக்கக்கூடியவர் ஒரு ஐந்து மதிப்பெண்ணை அள்ளிவிடலாம்.

சுமாராக படிக்கிற மாணவர்களுக்காக

ஐந்து மதிப்பெண்களுக்கான கேள்விகள் வரக்கூடிய புத்தகத்தின் அத்தியாயங்கள் 1,4,12 ஆகியவற்றை நன்றாக பயிற்சி எடுத்தாலே இரண்டு மதிப்பெண்கள் பகுதியில் உள்ள 2,3 கேள்விகளுக்கும் பதில் அளிக்கும்வகையில் திறமை பெற்றுவிடுவீர்கள்.புத்தகத்தின் ஒன்று, நான்கு, 12வது அத்தியாயங்களில் உள்ள பயிற்சிகளை முழுமையாக பயின்றாலே, 30 மதிப்பெண்களை எளிதாக எடுக்கலாம். 10 மதிப்பெண்கள் கேள்விகளான செயல்முறை வடிவியல்,வரைபடம் தொடர்பான இரண்டு கேள்விகளையும் சரியாக போட்டுவிட்டாலே 50 மதிப்பெண்களை நீங்கள் எட்டிவிடலாம்.புத்தகத்தின் இந்தப்பகுதிகளை இன்னமும் பயிற்சி எடுக்காதவர்கள் கூட இன்று ஆரம்பித்தால் கூட 10 நாள்களில் படித்து தேர்வை எழுதிவிடலாம்.புத்தகத்தில் உள்ள நான்காம் அத்தியாயத்தில் உள்ள அணிகள் தொடர்பான பயிற்சிகளில் எண் 4:3 ல் உள்ள பயிற்சிகளைச் செய்து பார்த்தாலே 5 மதிப்பெண்கள் எடுக்கலாம்.சென்டம் மாணவர்களுக்கு100க்கு 100 வாங்க வேண்டும் என நினைக்கிற மாணவர்களைப்பொறுத்தவரையில் கணித அறிவை அவர்கள் புத்தகத்துக்கு வெளியிலும் தேடும் அளவுக்கு தங்கள் தேடுதல் வேட்டையை விரிவுபடுத்த வேண்டும்.இன்று கணித அறிவை தேட இணையத்தில் பலவிதமான புதுமையான நவீன வசதிகள் உள்ளன. ஆனாலும் மதிப்பெண்கள் அடிப்படையில் பார்க்கும்போது பாடப்புத்தகத்தை முழுமையாக புரிந்து பயிற்சி எடுப்பதும் மனப்பாடம் செய்வதும்தான் அவர்களுக்கு உதவும்.புத்தகத்தில் இருந்துதான் அனைத்து வினாக்களும் தேர்வுக்கு வரும். புத்தகத்தில் உள்ள எல்லா பயிற்சிகளையும் முழுமையாக பயில்பவரே 100க்கு 100 எடுக்க முடியும்.

கணிதத்தையும் ஒரு ஜாலியான விளையாட்டாக ரசித்து பயிலும் மனநிலைக்கு வந்து விட்டால் கணிதத்திலும் அள்ளலாம் நூற்றுக்கு நூறு

Sunday, 27 March 2016

உங்கள் Android போனில் pattern Lock/ Password ஆகியவற்றை மறந்து விட்டீர்களா? எப்படி Unlock செய்வது?

இன்று உலகில் அதிகமானோர் பாவிக்கும் கையடக்க தொலைபேசியாக Android போன்கள் அமைந்துள்ளது. நியாயமான விலையுடன் பல்வேறு வசதிகளை கொண்டுள்ள Android ஸ்மார்ட் போன்கள், இன்றைய உலக ஸ்மார்ட் போன் சந்தையில் தனி இடத்தை பிடித்து உள்ளது.

இன்றைய Tech in Tamil-இன் பதிவு, உங்களின் Android ஸ்மார்ட் போனுடன் சம்மந்தபட்டது. உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ளடங்கி இருக்கும் தரவுகள், மற்றைய முக்கியமான கோப்புகைளை பாதுகாத்து கொள்ளும் முகமாகவே, Pattern Lock, Pin, Password போன்ற பாதுகாப்பு வலயங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சில சமயம், உங்கள் Android ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்ட Pattern Lock அல்லது Password மறந்து போகலாம். இவ்வாறன ஒரு சந்தர்ப்பம் வந்தால், உங்கள் Android ஸ்மார்ட் போனில் போடப்பட்டிருக்கும் Pattern Lock அல்லது Password-ஐ எப்படி Unlock செய்வது என்று பார்ப்போம்.

Pattern Lock அல்லது Password மூலம் Lock ஆகிய Android போனை இரண்டு வழிகளில் Unlock செய்யலாம். அவை இரண்டையும் கீழே தருகிறேன்.

முதலாவது வழிமுறை பொதுவாக அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். அதாவது உங்கள் Android போனுடன் இணைக்கப்பட்ட Google Account மூலமாக Reset செய்வது.

உங்கள் போனில் போடப்பட்ட Password அல்லது Pattern Lock தெரியாத பட்சத்தில், ஒரு சில முறைகள் பிழையான Pattern Lock/ Password-ஐ வழங்கும் போது உங்கள் போனில் Forgot Pattern என்று ஒரு option வரும்.

அங்கே உங்கள் Android போனுடன் இணைக்கபட்டிருக்கும் Google கணக்கு Username மற்றும் Password-ஐ உள்ளிட்டு Pattern Lock-ஐ மின்னஞ்சல் மூலமாக Reset செய்து கொள்ள முடியும்.

அடுத்த உபாயம் உங்கள் Android போனுடன் இணைக்கப்பட்டுள்ள Google கணக்கின் Username மற்றும் Password தெரியாத பட்சத்தில் எப்படி Pattern Lock அல்லது Password-ஐ இல்லாமல் செய்து உங்கள் ஸ்மார்ட் போனை மீட்டெடுப்பது.

இப்படியான சந்தர்ப்பம் மிகவும் அரிது. இருந்த போதிலும் இப்படியான இக்கட்டான நிலை ஒன்று ஏற்பட்டால் எவ்வாறு Reset செய்து கொள்வது என்று கீழே குறிப்பிட்டுள்ளேன்.

Middle of post

உங்கள் போனை Switch Off செய்யுங்கள்.Switch Off ஆனதும் Power Button + Home Button + Volume Up Button போன்றவைகளை ஒரேயடியாக சேர்த்து அழுத்தவும்.

இவ்வாறு சிறிது நேரம் அழுத்திக்கொண்டு இருக்கும் போது Android Recovery Mode துவங்கும்.உங்கள் Android போன் Recovery Mode-ல் இருக்கும் பட்சத்தில் Touch Screen வேலை செய்யாது. அதனால் Volume Button-ஐ பாவித்தே Option-களை Select செய்ய வேண்டும்.

இப்போது Recovery Mode-ல் Wipe Data எனும் option-ஐ தெரிவு செய்து,பின்னர் Yes என்பதை தெரிவு செய்யுங்கள்.அடுத்தபடியாக Reboot System Now என்று காணப்படும் option-ஐ select செய்யுங்கள்.

அவ்வளவு தான். சிறிது நேரத்தில் Lock ஆகி இருந்த உங்கள் Android ஸ்மார்ட் போன் இப்போது Unlock செய்யப்பட்டு விட்டது.

குறிப்பு

இவ்வாறு Wipe Data செய்து Reset பண்ணுவதால் உங்கள் போனில் இருக்கும் அனைத்து கோப்புகளும் நீக்கபடும் என்பதை கருத்திட்கொள்ளுங்கள்.

Wipe Data Recovery முறையானது, உங்கள் ஸ்மார்ட் போனை எந்த வழியிலும் Unlock செய்ய முடியாது என்று இருக்கும் பட்சத்தில் மட்டுமே பாவிக்கப்பட வேண்டும் என்பதை கவனித்தில் கொள்ளுங்கள்

Saturday, 19 March 2016

இணைய வேகத்தை அதிகரிக்க எளிய வழி

 Way to increase internet speed in Windows XP, Windows 7

வணக்கம் நண்பர்களே..!

நீங்கள் அன்லிமிடட் பிளானில் இணைய இணைப்பு பெற்றிருக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் இணைய வேகம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். அன்லிமிட்ட் பிளான் பயன்படுத்துபவர்களுக்கு இது நன்றாக தெரியும். உங்கள் பிளானில் உள்ளபடி இணைய வேகத்தை அதிகரிக்க ஒரு சுலப வழியைப் பார்ப்போம். 

இணைய வேகம் இடத்திற்கு இடம் மாறும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதைப்பற்றி மற்றொரு பதிவில் பார்ப்போம். நம்மில் பெரும்பாலானோர் Unlimited Internet தான் பெற்றிருப்போம். இவ்வாறான அன்லிமிட்டட் பிளானில் இணைய வேகமானாது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்காது. ஒரு கோப்பைத் தரவிறக்கம் செய்ய வேண்டுமெனில் அதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியது வரும்.

இவ்வாறில்லாமல் இணைய வேகத்தை அதிகரித்து, விரைவாக தரவிறக்கம்(Download), மற்றும் கோப்புகளை மேலேற்றம்(upload) செய்வதற்கும், பிரௌசிங் வேகத்தை அதிகப்படுத்தவும் கீழ்க்கண்ட உத்திகள் உங்களுக்குப் பயன்படும்.

இணைய வேகத்தை அதிகப்படுத்த வழிகள்: 

நீங்கள் Windows XP வைத்திருப்பீர்களானால் இந்த முறை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். 

Windows XP யில் இணைய வேகத்தை அதிகரிக்கும் வழி முறைகள்: 

1.Strar button கிளிக் செய்யுங்கள்.
2. Run கிளிக் செய்யுங்ள். அல்லது CTRL+R கிளிக் செய்தாலும் Run Window-வைப் பெற முடியும்.
3. Run Window-வில் gpedit.msc என தட்டச்சிடுங்கள்.
4. கிளிக் ஓ.கே.
5. அடுத்து தோன்றும் திரையில் computer configuration==>administrative Templates தேர்ந்தெடுங்கள்.
6. தோன்றும் சப்மெனுவில் (submenu) நெட்வொர்க் network தேர்ந்தெடுங்கள். 
7. இப்போது தோன்றும் சப்மெனுவில் (submenu) Qos Packet scheduler என்பதை கிளிக் செய்யுங்கள்.
Limit reservable bandwith என்பதை கிளிக் செய்யுங்கள். 
8. அதில் Band with limit என்பதில் 4% என கொடுத்து OK கொடுங்கள்.
இப்போது செய்த மாற்றங்களை சேமித்துவிடுங்கள். 

அனைத்தையும் சரிவர செய்தவுடன் கணினியை மறுதொடக்கம் (Restart) செய்துவிட்டு இன்டர்நெட்டை இயக்கிப் பாருங்கள்.. நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும். முன்பை விட இணைய வேகம் அதிகரித்திருப்பதை கண்கூடாக பார்ப்பீர்கள்.. 

கட்டண மென்பொருட்களை இலவசமாக தரவிறக்குவது எப்படி?

எங்கள் எல்லோரிடமும் கணினி இருக்கும். ஆனால் எங்கள் தேவைக்கேற்ற மென்பொருட்கள் எல்லோரிடமும் இருக்குமா? மென்பொருட்களை அவற்றிற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டியிருப்பதால் பலர் பல மென்பொருட்களை உபயோகப்படுத்தாமலேயே விடுகிறார்கள். மென்பொருட்கள் மாத்திரமன்றி கணினி விளையாட்டுக்களும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும்.
இவ்வாறு அல்லாமல் எந்த கட்டண மென்பொருளையும் பணம் செலுத்தாமல் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியுமா? ஆம். அதற்கு உதவி செய்கிறது Torrent என்ற முறை.

Torrent மூலம் எவற்றை தரவிறக்கம் செய்யலாம்?

Torrent மூலம் உங்களுக்கு தேவையான எதனையும் தரவிறக்கிக்கொள்ளலாம். Movies, Videos, TV Programs மற்றும் அனைத்து இயங்குதளங்களுக்குமான (Windows, Mac, Linux) மென்பொருட்கள், Games, அனைத்து தொலைபேசிகளுக்குமான மென்பொருட்கள் (iOS, Android) , Audio, E books, Photos என அனைத்துமே Torrent இல் இலவசமாக கிடைக்கும்.

Torrent மூலம் எப்படி இலவசமாக தரவிறக்கம் செய்வது?

இதற்கு முதலில் Torrent File களை தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் ஒன்றை தரவிறக்கி நிறுவவேண்டும். Bittorent அல்லது Utorrentஇதற்கு பொருத்தமான மென்பொருள். இவற்றில் ஏதாவது ஒன்றை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். அடுத்து தரவிறக்கவேண்டிய மென்பொருளிற்கான Torrent file ஐ தரவிறக்கவேண்டும்.

இணையத்தில் Torrent தளங்கள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றிற்கு செல்வதன் மூலம் தரவிறக்கலாம். அல்லது http://torrentz.eu/ என்ற தளத்திற்கு செல்லுங்கள். இது ஒரு Torrent தேடுபொறியாகும். இதில் சென்று உங்களுக்கு தேவையானவற்றை ரைப் செய்து தேடுங்கள்.

தேடியதும், நீங்கள் தேடிய மென்பொருள் என்னென்ன வகைகளில் உள்ளது என்று காண்பிக்கும். உதாரணமாக Windows 7 என்று தேடினால் windows 7 இல் உள்ள Business, Home Premium, Ultimate போன்ற version களை காண்பிக்கும். அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்ததும், அதற்குரிய Torrent இணைப்பு எந்தெந்த தளங்களில் உள்ளது என்று பட்டியல்படுத்தும். விரும்பிய தளம் ஒன்றை கிளிக் செய்து சென்று அதில் உள்ள Torrent File ஐ தரவிறக்கிக்கொள்ளவேண்டும். இதன் அளவு Kb அளவுள்ள மிகச்சிறிய File ஆக இருக்கும்.

இதை தரவிறக்கிய பின்னர் Open செய்யுங்கள். இப்போது Bittorent மென்பொருளுடன் நீங்கள் தரவிறக்கவேண்டிய மென்பொருள் தரவிறங்க ஆரம்பிக்கும்.

உதவிக்கு இந்த வீடியோவை பாருங்கள்

குறிப்பு : இது பலருக்கும் தெரிந்த விடயம்தான். இருப்பினும் தெரியாமல் இருக்கும் சிலருக்காக இந்த பதிவு :)

இன்னைக்கு டிசைன் (Design) டிபார்ட்ம்ண்ட்ல வேலைக்குச் சேரணும்னா என்னல்லாம் நீங்க படிக்கனும்னு பார்க்கலாம்.

AUTO CAD:

ஒரு மெக்கானிகல் எஞ்ஜினியரா வேலைக்குப் போறவங்களுக்கு, பேண்ட், சட்டையை விடவும் அடிப்படைத் தேவை ஆட்டோ கேட் பற்றிய அறிவு தான். இப்போல்லாம் காலேஜ்லயே ஆட்டோகேட் சொல்லித்தர்றாங்க.அப்படி இல்லைன்னா, நீங்க வெளில ஏதாவ்து கம்ப்யூட்டர் செண்டர்ல போய்க் கத்துக்கோங்க. 

முன்னாடில்லாம், பெரிய A1 சைஸ் சீட்ல, மினி ட்ராஃப்டெர் போன்ற கருவிகளின் உதவியோடதான் கம்பெனிகள்ல டிராயிங் வரைஞ்சுக்கிட்டு இருந்தாங்க.ஒரு டிராயிங் போட எப்படியும் ஒரு வாரம் ஆயிடும். இப்பவும் அந்த நிலைமை இருந்திருந்தா, நம்ம பாடு திண்டாட்டம்தான். ஆனால், நல்லவேளையா இந்த சாஃப்ட்வேர் வந்தது. ஒரு கோடு (Line) பொடணும்லா ல்-ன்னு தட்டுனாப் போதும். எவ்வளவு ஈஸி பாருங்க..உண்மையில் இப்போ டிசைன்ல இருக்குற சில பேர்கிட்ட ஒரு லைனை கையால நேராப் போடச்சொன்னா,அவங்க அந்தக் கோடை, காஷ்மீர்ல ஆரம்பிச்சு காசி போய் ராமேஸ்வரம் தாண்டி, கன்னியாகுமரில முடிப்பாங்க.

ஆட்டோகேட் பெரும்பாலும் 2D டிராயிங் வரையத்தான் யூஸ் பண்றாங்க. இதில் 3D வரையறதும் ரொம்பக் கஷ்டம்.

கம்பெனிகள்ல ஒரு பேப்பர்ல கையால ரஃபா வரிஞ்ச டிராயிங்கயோ, PDF ஃபார்மேட்ல இருக்கிற டிராயிங்கையோ உங்ககிட்ட எஞ்சினியர் கொடுப்பார். நீங்க அதை அப்படியே சரியான டைமன்சனோட ஆட்டோகேட்ல வரையணும். இது தான் உங்க வேலை. அதை க்ளையண்டுக்கு அனுப்புவாங்க. அவங்க ஏதாவது கரெக்சன் சொன்னா, அதையும் செய்யணும்.

இதுல சக்ஸஸ் ஆதத் தேவை நல்ல ஆட்டோகேட் நாலேட்ஜும், நல்ல ஸ்பீடா வரையற திறமையும் தான்்

PRO-E/SOLID WORKS/CATIA/IDEA/UNI GRAPHICS/Auto Desk:

ஆட்டோகேட் 2D ல சக்ஸஸ் ஆன அளவுக்கு 3 Dல ஆகலை. 2D ல உள்ள பிரச்சினை, நாம தான் அது 3 ல எப்படி இருக்கும்னு ஃப்ரண்ட், டாப், சைடு வியூவை வச்சு முடிவு செய்யணும். அதனால 3Dக்காகவே ஸ்பெஷலாத் தயாரிக்கப்பட்ட சாஃப்ட்வேர்கள் தான் மேலே சொன்னவை. இதுல உள்ள டூல்ஸை யூஸ் பண்ணி,நாம நேர்ல பார்க்குற மாதிரியே மாடலை உருவாக்கலாம். அதிலிருந்து 2D டிராயிங்-ம் எடுத்துக்க முடியும்.

CNC Machining பத்தி படிச்சிருப்பீங்க. அதுக்கு இந்த 3D மாடல் ரொம்ப உதவியா இருக்கும்.இதிலிருந்தே நேரா சிஎன்சி கோடை உருவாக்கி மெசினிங் பண்ண முடியும். அதனால நிறைய நேரமும் செலவும் மிச்சமாகும்.

ஒரு 2D டிராயிங் கொடுத்தா, அதை ஸ்டடி பண்ணி, 3D-ல வரையணும் நீங்க..என்ன தான் 3டி-ல போட்டாலும், மெசின் ஷாப்/புரடக்சன் சாப்-க்கு 2டி-ல தான் டிராயிங் கொடுக்க வேண்டியிருக்கும். 2டி-ல தான் டைமென்சன் டீடெய்ல் நல்லாக் கொடுக்க முடியும். எப்படியானாலும், ஆட்டோகேட் கத்துக்காம 3டி சாஃப்ட்வேர் படிக்கிறது நல்லதில்லை. ஆட்டோகேட் தான் எல்லாத்துக்குமே அடிப்படை.

மேலே சொன்ன சாஃப்ட்வேர் தவிர வேறு சிலவும் உண்டு. இது தான் அதிகமா யூஸ் பண்றாங்க. குறிப்பா SolidWroks & Pro-E தான் டாப்ல இருக்கு.

ANSYS:

இது ஸ்ட்ரெஸ் அனலிஸ் பண்ண உதவுற சாஃப்ட்வேர். நீங்க படிச்ச Strength of Materials, Finite Element Method போன்ற பாடங்கள் இங்க யூஸ் ஆகும். ஒரு புராடக்ட் எவ்வளாவு ஸ்ட்ரெஸ் தாங்கும், எவ்வளவு Elongate ஆகும் போன்ற விஷயங்களை, அதைத் தயாரிக்கறதுக்கு முன்னாலேயே, செக் பண்ணிக்க இது உதவுது. இதனால கம்பெனிகளுக்கு நிறைய புரடக்சன் செலவும் நேரமும் மிச்சமாகும். இது ஒரு ப்யூர் டெக்னிகல் ஒர்க்கா இருக்கும்.

PDS/PDMS/CADWorx:

மேலே உள்ள படத்தைப் பாருங்க. இது ஒரு Piping System-ன் 3டி படம். இதை SolidWorks மாதிரி சாஃப்ட்வேர்ல பண்ணா, தாவு தீர்ந்திடும். அதனால தான் PDS, PDMS, CADWorx போன்ற சாஃப்ட்வேர்ஸ் இதுக்குன்னே ஸ்பெஷலாக் கண்டுபிடிச்சிருக்காங்க. இதை சில குறிப்பிட்ட கம்ப்யூட்டர் செண்டர்ல தான் சொல்லித் தருவாங்க. இதைப் பத்தி நிறையப் பேருக்குத் தெரியறதில்லை. ஆட்டோகேட் மட்டும் தெரிஞ்சவங்க, டைரக்டா இதைக் கத்துக்கலாம். சென்னைல MechciCADD, SivaPDS center, CADDCenter ஆகிய இடங்களில் சொல்லித் தர்றாங்க. இதைப் படிச்சா, ஆயில் ரிஃபைனரி ப்ளாண்ட் டிசைன், கப்பல்/ரிக் பைப்பிங் டிசைன், பில்டிங் பைப்பிங் டிசைன் போன்றவற்றைப் பண்ணலாம். 

மெக்கானிகல்-ல டிசைன் -ல நல்ல துறை. டிசைன் -ல பைப்பிங் டிசைன் நல்ல துறை..நல்ல காசு!

CAESAR:

இதுவும் பைப்பிங்-ல யூஸ் ஆகுற சாஃப்ட்வேர் தான். ANSYS மாதிரி, Stress Analys பண்ண, இது யூஸ் ஆகுது. பைப்பிங் பத்தி, கொஞ்சம் பேசிக் தெரிஞ்சப்புறம் இது படிக்கலாம்.

மேலே சொன்ன எதைப் படிச்சுட்டு, இண்டெர்வியூ போனாலும், ஏதோ ஒரு டிராயிங்-கைக் கொடுத்து அரை மணி நேரத்திலேயோ, ஒரு மணி நேரத்திலேயோ முடிக்கச் சொல்வாங்க. அதைக் கரெக்டாப் பண்ணீட்டீங்கன்னா, வேலை உறுதி. அதனால, ஸ்பீடா வரைய கத்துக்கிட்டாப் போதும். வேலை கிடைச்சப்புறம் அதே டிராயிங்கை ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து போடுவோம்..அதனால இண்டெர்வியூவைப் பார்த்து பயந்துடாதீங்க. ஆல் தி பெஸ்ட்.

அடுத்த வாரம்...உற்பத்தி, அசெம்ப்ளி, எரக்சன் ( Production ,Assembly & Erection)