Sunday, 27 March 2016

உங்கள் Android போனில் pattern Lock/ Password ஆகியவற்றை மறந்து விட்டீர்களா? எப்படி Unlock செய்வது?



இன்று உலகில் அதிகமானோர் பாவிக்கும் கையடக்க தொலைபேசியாக Android போன்கள் அமைந்துள்ளது. நியாயமான விலையுடன் பல்வேறு வசதிகளை கொண்டுள்ள Android ஸ்மார்ட் போன்கள், இன்றைய உலக ஸ்மார்ட் போன் சந்தையில் தனி இடத்தை பிடித்து உள்ளது.

இன்றைய Tech in Tamil-இன் பதிவு, உங்களின் Android ஸ்மார்ட் போனுடன் சம்மந்தபட்டது. உங்கள் ஸ்மார்ட் போனில் உள்ளடங்கி இருக்கும் தரவுகள், மற்றைய முக்கியமான கோப்புகைளை பாதுகாத்து கொள்ளும் முகமாகவே, Pattern Lock, Pin, Password போன்ற பாதுகாப்பு வலயங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சில சமயம், உங்கள் Android ஸ்மார்ட் போனில் வழங்கப்பட்ட Pattern Lock அல்லது Password மறந்து போகலாம். இவ்வாறன ஒரு சந்தர்ப்பம் வந்தால், உங்கள் Android ஸ்மார்ட் போனில் போடப்பட்டிருக்கும் Pattern Lock அல்லது Password-ஐ எப்படி Unlock செய்வது என்று பார்ப்போம்.

Pattern Lock அல்லது Password மூலம் Lock ஆகிய Android போனை இரண்டு வழிகளில் Unlock செய்யலாம். அவை இரண்டையும் கீழே தருகிறேன்.

முதலாவது வழிமுறை பொதுவாக அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். அதாவது உங்கள் Android போனுடன் இணைக்கப்பட்ட Google Account மூலமாக Reset செய்வது.

உங்கள் போனில் போடப்பட்ட Password அல்லது Pattern Lock தெரியாத பட்சத்தில், ஒரு சில முறைகள் பிழையான Pattern Lock/ Password-ஐ வழங்கும் போது உங்கள் போனில் Forgot Pattern என்று ஒரு option வரும்.

அங்கே உங்கள் Android போனுடன் இணைக்கபட்டிருக்கும் Google கணக்கு Username மற்றும் Password-ஐ உள்ளிட்டு Pattern Lock-ஐ மின்னஞ்சல் மூலமாக Reset செய்து கொள்ள முடியும்.

அடுத்த உபாயம் உங்கள் Android போனுடன் இணைக்கப்பட்டுள்ள Google கணக்கின் Username மற்றும் Password தெரியாத பட்சத்தில் எப்படி Pattern Lock அல்லது Password-ஐ இல்லாமல் செய்து உங்கள் ஸ்மார்ட் போனை மீட்டெடுப்பது.

இப்படியான சந்தர்ப்பம் மிகவும் அரிது. இருந்த போதிலும் இப்படியான இக்கட்டான நிலை ஒன்று ஏற்பட்டால் எவ்வாறு Reset செய்து கொள்வது என்று கீழே குறிப்பிட்டுள்ளேன்.

Middle of post

உங்கள் போனை Switch Off செய்யுங்கள்.Switch Off ஆனதும் Power Button + Home Button + Volume Up Button போன்றவைகளை ஒரேயடியாக சேர்த்து அழுத்தவும்.

இவ்வாறு சிறிது நேரம் அழுத்திக்கொண்டு இருக்கும் போது Android Recovery Mode துவங்கும்.உங்கள் Android போன் Recovery Mode-ல் இருக்கும் பட்சத்தில் Touch Screen வேலை செய்யாது. அதனால் Volume Button-ஐ பாவித்தே Option-களை Select செய்ய வேண்டும்.

இப்போது Recovery Mode-ல் Wipe Data எனும் option-ஐ தெரிவு செய்து,பின்னர் Yes என்பதை தெரிவு செய்யுங்கள்.அடுத்தபடியாக Reboot System Now என்று காணப்படும் option-ஐ select செய்யுங்கள்.

அவ்வளவு தான். சிறிது நேரத்தில் Lock ஆகி இருந்த உங்கள் Android ஸ்மார்ட் போன் இப்போது Unlock செய்யப்பட்டு விட்டது.

குறிப்பு

இவ்வாறு Wipe Data செய்து Reset பண்ணுவதால் உங்கள் போனில் இருக்கும் அனைத்து கோப்புகளும் நீக்கபடும் என்பதை கருத்திட்கொள்ளுங்கள்.

Wipe Data Recovery முறையானது, உங்கள் ஸ்மார்ட் போனை எந்த வழியிலும் Unlock செய்ய முடியாது என்று இருக்கும் பட்சத்தில் மட்டுமே பாவிக்கப்பட வேண்டும் என்பதை கவனித்தில் கொள்ளுங்கள்

No comments:

Post a Comment