ஸ்மார்ட் போன்களை வைத்து இருக்கும் அனைவருமே தினமும் இணையத்தை உபயோகிக்க தவறுவதில்லை. மேலும் ஒரு படி மேலே சென்று கூறினால், ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பதே இணையத்தை உபயோகிக்க தான் என்று கூறினாலும் மிகையாகாது. ஆகவே இன்றைய பதிவில் உங்களது ஸ்மார்ட் போன்களுக்கும் இணையத்திக்கும் இடையேயான மிகவும் பயனுள்ள ஒரு விடயத்தை பகிர்ந்து கொள்ள போகிறேன்.
ஸ்மார்ட் போன்கள் மூலம் இணையத்தை தொடர்பு கொள்ள இருப்பது இரண்டு வழிகள் தான். அவையாவன,
1. வை-பை மூலம் இணையத்தை அணுகுவது
2. போன் டேட்டா மூலம் இணையத்தை அணுகுவது
சரி.. எப்படி எமது ஸ்மார்ட் போனில் இருந்து இலவசமாக டேட்டா உபயோகித்து இணையத்தை தொடர்பு கொள்வது என்று பார்ப்போம்.
இந்த வேலையை மிக இலகுவாக செய்து முடிக்க உதவுகிறது கீழே வழங்கப்பட்டுள்ள அன்றொஇட் போனுக்கான சிறப்பு செயலி.
இந்த செயலியை உங்களது அன்றொஇட் ஸ்மார்ட் போனில் நிறுவுங்கள்.
நிறுவிய செயலியை உங்களது ஸ்மார்ட் போனில் ஆரம்பியுங்கள்.
அடுத்து உங்களது மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி இலக்கத்தை என்பவற்றை வழங்கி இந்த சேவையுடன் பதிந்து கொள்ளுங்கள்.
இப்போது இந்த சேவையுடன் இணைந்ததால் உங்களுக்கு 10 MB டேட்டா இலவசமாக கிடைக்கும்.
அடுத்து இந்த செயலியில் உங்களது கணக்கில் காணப்படும் ஒவ்வொரு செயலிகளை நிறுவும் போதும் உங்களுக்கு குறிப்பிட்ட ஒரு அளவு டேட்டா இலவசமாக கிடைத்துக்கொண்டே இருக்கும்.
உங்களுக்கான இலவசமான டேட்டா உங்களது சிம்மிட்கு வந்து சேர்ந்ததும், நீங்கள் ஏற்கனவே இந்த சேவை மூலம் நிறுவிய மற்றைய செயலிகளை உங்களது ஸ்மார்ட் போனில் இருந்து நீக்கி விட முடியும்.
இந்த முறையை பின்பற்றி தினமும் குறிப்பிட்ட அளவான டேட்டாவை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.
அதுமட்டும் இல்லாமல் இந்த சேவையில் உங்களுக்கான சிறப்பு Referral Code-ஐ உருவாக்கி அந்த Code மூலம் உங்களது நண்பர் ஒருவர் இந்த சேவையுன் இணையும் போது உங்களது கணக்கிற்கு 25 MB டேட்டா இலவசமாக கிடைக்கும்
உங்களது Referral Code-ஐ பயன்படுத்தி இந்த சேவையுடன் இணைத்து கொள்ள உங்களது நண்பர்களை பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக அழைப்பு விடுக்கலாம்.
ஆகவே இந்த அன்றொஇட் போனுக்கான சிறப்பு செயலியை தரவிறக்க
இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த சேவை இந்தியாவில் மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் பொதுவாக அனைத்து இந்திய மொபைல் நெட்வொர்க் களுடனும் ஒத்துழைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செயலி அன்றொஇட் ஸ்மார்ட் போன்களுக்கு மட்டுமே...
No comments:
Post a Comment