IE Code - பெறுவது எப்படி? என்பதின் இறுதி பதிப்பு இது.
அதற்கு முன்பு, IE Code பெறுவது எப்படி? என்பதின் கடந்த பகுதிகளை படிக்காதவர்கள் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்.
IE Code பெறுவது எப்படி ? என்பதன் அனைத்து பதிவுகளையும் படிக்க :
IE Code - க்கான அப்ளிகேஷன் பார்மை எங்கு சமர்ப்பிப்பது ?
உங்களது பூர்த்தி செய்யப்பட்ட IE Code-க்கான அப்ளிகேஷன் பார்மை இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனகரக (Zonal Joint Directorate General of Foreign Trade ) அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
உங்களது சான்றிதழ்கள் அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் உங்களுக்கான பத்து இலக்க ஏற்றுமதி இறக்குமதி உரிமைக் கடிதத்தை (IE Code) உங்களது அலுவலக முகவரிக்கு அனுப்பி வைப்பார்கள்.
நீங்கள் IE Code அப்ளிகேஷன் பார்மை சமர்ப்பித்த தேதியிலிருந்து அதிகபட்சம் பதினைந்து நாட்களுக்குள் உங்களது முகவரிக்கு வந்து சேரும்.
உங்களது IE Code - அப்ளிகேஷன் பார்மை வெளிநாட்டு வர்த்தக இயக்குனகரகத்தில் சமர்ப்பித்த பிறகு, அதன் தற்போதைய நிலவரம் பற்றி http://zjdgft.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
அல்லது கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
Click here to Check your Application Status :
இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இயக்குனகரகங்கள் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் என மொத்தம் மூன்று இடங்களில் உள்ளன.
அவைகளின் முகவரிகள் :
மதுரை அலுவலக முகவரி :
The Joint Director General of Foreign Trade,
Plot No.117, Ist Main Road, K.K. Nagar,
Madurai - 625 020
Tel: 0452-2586485
மதுரை அலுவலகத்திர்க்கானமாவட்டங்கள் :
(1) மதுரை,
(2) தேனி,திண்டுக்கல்,
(3) ராமநாதபுரம்
(4) விருதுநகர்,
(5) சிவகங்கை,
(6) திருநெல்வேலி
(7) தூத்துக்குடி
(8) கன்னியாகுமாரி
கோயம்புத்தூர் அலுவலக முகவரி :
Joint Director General of Foreign Trade,
1544, India Life Building, (Annex. 1st Floor),
Tirchy Road,
Coimbatore - 611 018
Tel: 0422-2300947
கோயம்புத்தூர் அலுவலகத்திர்க்கானமாவட்டங்கள் :
(1) கோயம்புத்தூர்,
(2) நீலகிரி,
(3) ஈரோடு,
(4) சேலம்
(5) கரூர்
(6) நாமக்கல்
சென்னை அலுவலக முகவரி :
Zonal Joint Director General of Foreign Trade
4th Floor, Shastri Bhavan Annexe
26, Haddows Road,Nungambakkam
Chennai - 600 006
Phone: (044)28283404/08
மேலே உள்ள மதுரை மற்றும் கோயம்புத்தூர் அலுவலகங்களுக்கான மாவட்டங்களைத் தவிர, மற்ற மாவட்டத்தினர் தங்களது IE Code-க்கான அப்ளிகேஷன் பார்மை சென்னை அலுவலக முகவரியில் சமர்ப்பிக்கவும்.
மேலதிக விபரங்களுக்கு,
தங்கள் மாவட்டத்தின் அருகிலுள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் தொடர்பு கொண்டு, தங்கள் மாவட்டதிர்க்கான அலுவலகம் எது என்பது பற்றி கேட்டறிந்து கொள்ளவும்.
என்ன நண்பர்களே, IE Code - பெறுவது எப்படி என்பதின் அனைத்துப் பகுதிகளையும் படித்து விட்டீர்களா இன்னும் என்ன தயக்கம்?
நாமும் நலம் பெறுவோம்,
நாடும் நலம் பெறும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நன்றியோடு அன்பு நண்பன்,
ராக்கி ராஜேஷ்.
No comments:
Post a Comment