இந்த பதிவில் IE Code அப்ளிகேஷன் பார்மான ANF2A -ஐ எப்படி பெறுவது? என்பதைப் பற்றி பார்ப்போம்.
அதற்கு முன் IE Code பெறுவது எப்படி ? என்பதன் முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் கீழிருக்கும் லிங்கை கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்.
IE Code பெறுவது எப்படி ? என்பதன் அனைத்து பதிவுகளையும் படிக்க :
சரி வாருங்கள், IE Code அப்ளிகேஷன் பார்மான ANF2A -ஐ எப்படி பெறுவது? என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.
முதலில் இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக இணையதளமான http://www.dgft.gov.in/ என்ற முகவரிக்கு செல்லுங்கள்.
அங்கு கீழிருப்பதை ஒரு விண்டோவ் ஒப்பன் ஆகும்.
இதில் Chennai என்பதை கிளிக் செய்யுங்கள்.
பின்பு கீழிருப்பதை போல மற்றொரு விண்டோவ் ஒப்பன் ஆகும்.
பின்பு இதன் இடது பக்கத்தில் இருக்கும்Application Form என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கான அப்ளிகேஷன் பார்ம் டவுன்லோட் ஆக ஆரம்பிக்கும்.
அல்லது கிழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.
Click here to Download IE Code Application Form (ANF2A) :
டவுன்லோட் ஆன அப்ளிகேஷன் பார்மானது மைக்ரோசாப்ட் வேர்ட் பார்மேட்டில் இருக்கும். அதனை ஒன்றுக்கு இரண்டாக பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளுங்கள்.
அப்போதுதான் பார்மை பூர்த்தி செய்வதில் ஏதும் தவறு ஏற்பட்டால் மற்றொன்றை பயன்படுத்தி கொள்ளலாம். இல்லையென்றால் மறுபடியும் புதிதாக அப்ளிகேஷன் பார்ம் டவுன்லோட் செய்ய வேண்டி இருக்கும்.
அதனை எப்படி பூர்த்தி செய்வது என்பதைப் பற்றிய வழிமுறைகள் அந்த அப்ளிகேஷன் பார்மின் கடைசி பக்கத்திலேயே கொடுக்கப் பட்டிருக்கும்.
முடிந்தால் வேறொரு பதிவில் அப்ளிகேஷன் பார்மை எப்படி பூர்த்தி செய்வது என்பதை பற்றி சொல்கிறேன்.
நண்பர்களே அடுத்த பதிவில் பூர்த்தி செய்யப்பட்ட அப்ளிகேஷன் பார்மை எங்கு சமர்ப்பிப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.
உதவிக்கு தொடர்பு கொள்ளவும்,
நன்றியோடு அன்பு நண்பன்-
ராக்கி ராஜேஷ்
No comments:
Post a Comment