Sunday, 10 January 2016

உங்கள் Android போனில் இருக்கும் Photos, Videos, Audio அல்லது ஏதேனும் ஒரு File தவறுதலாக அளிக்கபட்டுவிட்டதா?

உங்கள் Android போனில் இருக்கும் Photos, Videos, Audio அல்லது ஏதேனும் ஒரு File தவறுதலாக அளிக்கபட்டுவிட்டதா? இன்றைய பதிவில் Android போனில் இருந்து அழிக்கப்பட்ட கோப்புக்களை எப்படி மீண்டும் மீட்டு கொள்வது என்று பார்ப்போம்.

நமது அன்றாட வாழ்வில் முக்கியமான ஒரு பங்கை வகிக்கும் இந்த ஸ்மார்ட் போன்களிலேயே நாம், பல்வேறு தரவுகளை சேமித்து வைத்து இருக்கிறோம். இதில் அன்றாடம் நீங்கள் எடுத்து கொள்ளும் Selfie முதல் வங்கி கணக்கு Password வரை உள்ளடங்கும்.

இவ்வாறு தினம்தோறும் உங்களோடு பயணிக்கும் இந்த ஸ்மார்ட் போனிலிருந்து ஏதாவது முக்கியமான தகவல் ஒன்று தவறுதலாக அழிந்து விட்டால் அதை எவ்வாறு பாதுகாப்பாக மீட்டெடுப்பது என்று கூறுகிறேன்.



முதலாவதாக உங்கள் ஸ்மார்ட் போனில் இருந்து ஏதேனும் ஒரு File தவறுதலாக அழிந்து விட்டால், உடனடியாக உங்கள் போனை பாவிப்பதை நிறுத்துங்கள். அதாவது, உங்கள் போனில் புதிய ஆடியோ வீடியோ அல்லது வேறு ஏதேனும் File-களை புதிதாக சேமிப்பதை நிறுத்துங்கள்.

ஏனெனில், உங்கள் போனில் இருந்து ஏதேனும் ஒரு File அழிந்து விட்டால், அது முழுமையாக இல்லாமலாகி விட்டது என்று அர்த்தமல்ல. குறிப்பிட்ட File, உங்கள் மெமரி கார்டு அல்லது போன் மெமரியில், அதே இடத்தில் மறைந்து காணப்படும்.

இதுவே Delete செய்யப்படும் File-களுக்கான நியதி. ஒரு File Delete செய்யப்பட்டவுடன், அது உடனடியாக, அழிக்கப்பட்டு விடாமல், குறிப்பிட்ட அதே இடத்தில் மறைந்து காணப்படுமாறே Program செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மறைந்து காணப்படும் File-களையே Data Recovery மென்பொருட்கள் இலகுவாக மீட்டெடுத்து தருகின்றது.

ஆனால் ஒரு File Delete செய்யப்பட்டவுடன் நீங்கள் இன்னொரு புதிய File-ஐ உங்கள் போனில் Save செய்யும் போது, புதிய File ஆனது, ஏற்கனவே Delete ஆகி இன்னும் உங்கள் போனில் மறைந்து காணப்படும் அந்த பழைய File-ஐ Replace செய்தே உங்கள் போனில் சேமிக்கப்படும்.
இவ்வாறு Delete செய்யப்பட்ட File Replace செய்யப்படும் போது, Data Recovery மென்பொருட்களுக்கு Delete செய்யப்பட்ட File-களை மீட்டெடுப்பது கடினமான காரியம் ஆகிறது. இதனாலேயே நான் உங்களை, ஒரு Delete செய்யப்பட்ட File-ஐ மீட்டெடுக்கவேண்டுமாயின், உடனடியாக உங்கள் போனில் புதிய File-களை சேமித்து கொள்வதை தவிர்க்க கூறினேன்.
இந்த விதியை பின்பற்றிய பின்னர், ஏதேனும் சிறந்த Data Recovery மென்பொருளை பயன்படுத்தி மிக இழகுவாக Delete செய்யப்பட்ட File-ஐ மீட்டெடுத்து கொள்ள முடியும்.

Delete செய்யப்பட்ட File-களை மறுபடியும் மீட்டெடுத்து கொள்ள சிறந்த மென்பொருளாக, கீழே குறிப்பிட்டுள்ள மென்பொருட்கள் காணப்படுகிறது.
Recuva Data Recovery ToolFonepaw Android Data Recovery7 Data Android Recovery
இவற்றில் ஏதேனும் ஒரு Data Recovery மென்பொருளை Download செய்து உங்கள் கணனியில் Install செய்து கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய ஸ்மார்ட் போனை கணனியுடன் USB Cable மூலம் தொடர்புபடுத்தி, Install செய்த Data Recovery மென்பொருள் மூலம் Scan செய்யுங்கள்.

ஒரு சில நிமிடங்களில் Scan முடிவடைந்து, Data Recovery மென்பொருளால் மீட்டெடுக்க முடியுமான File-களை உங்களுக்கு பட்டியலிட்டு காட்டும். Scan முடிவடையும் நேரமானது நீங்கள் Scan செய்யும் Device-இன் அளவை பொறுத்தே உள்ளது.

Delete செய்யப்பட்ட File-களை வெற்றிகரமாக மீட்டெடுப்பதில் Recuva Data Recovery மென்பொருளானது மிகப்பிரபல்யமான ஒன்றாகும். இதனால், உங்கள் Delete செய்யப்பட்ட File-களை மீட்டெடுத்துகொள்ள முதலாவதாக Recuva மென்பொருளை முயற்சித்து பாருங்கள்.

No comments:

Post a Comment