சமையல் - அசைவம் - குடல் குழம்பு
போன வாரம் ஞாயிறு அன்னிக்கு வீட்டுல நம்ம கைவண்ணம் தான்.(அன்னிக்கு மட்டும் நம்ம அம்மணிக்கு ரெஸ்ட்)குடல் குழம்பு, பெப்பர் மட்டன் பிரை.இரண்டும் செய்தேன்..செம டேஸ்ட்.சூடான இட்லிக்கு இது செம மேட்ச்.இதுல குடல் குழம்பு மட்டும் செய்முறை சொல்லிடறேன்.
வேண்டிய பொருட்கள்:
ஆட்டு குடல் - 750 கிராம்
பெ.வெங்காயம் - 4
தக்காளி - 4
தேங்காய் - ஒரு மூடி அரைத்தது (கசகசா வுடன் )
இஞ்சி பூண்டு - விழுது
பட்டை, கிராம்பு, சோம்பு, கசகசா - கொஞ்சம்
மிளகாய்த்தூள்- தேவையான அளவு
மல்லித்தூள் - ஒரு ஸ்பூன்
கரம் மசாலா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கொ.மல்லி, புதினா - தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஆட்டுக்குடலை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.(தயிர், மஞ்சள் போட்டு கழுவிக்கொள்ள வேண்டும் )
குக்கரில் கொஞ்சம் எண்ணை விட்டு பட்டை,கிராம்பு சோம்பு, மஞ்சள் தூள் சிறிது போட்டு குடலுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி (கொஞ்சம் தாராளமாக ) பட்டை கிராம்பு, சோம்பு, போட்டு பின் நறுக்கின வெங்காயம் வதக்கி கொள்ளவும். பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.அடுத்து இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கவும்.(பூண்டு பல் கொஞ்சம்) நன்கு வதங்கியவுடன் தக்காளி சேர்த்து மைய வதக்கவும். இப்பொழுது மிளகாய் தூள், மல்லித்தூள் ஒரு ஸ்பூன் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்க்கவும்.அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.ஒரு கொதி வந்தவுடன் குக்கரில் இருந்து வெந்த குடலை இதில் போட்டு பிரட்டவும். இதுவும் நன்கு கொதித்தவுடன் கொத்தமல்லி, புதினா தழை தூவி இறக்கி பரிமாறலாம்...இட்லிக்கு சரியான டிஷ் இது தான்.
வெறும் குடல் வறுவல் மட்டும் என்றால் தேங்காய் சேர்க்காமல் இருந்தால் போதும். நன்கு வதக்கியவுடன் பரிமாறலாம்.
இதைவிட மிக எளிய முறை ஒன்று இருக்கிறது.
(பதினைந்து டு இருபது நிமிடம்).
குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, சோம்பு, இதெல்லாம் போட்டு பின் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, குடல், உப்பு, மிளகாய்,மஞ்சள், மல்லித்தூள், கரம் மசாலா, கொத்தமல்லி, புதினா தழை இதெல்லாம் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கலக்கிவிட்டு மூடி போட்டு மூன்று அல்லது நான்கு விசில் விட்டு இறக்கி விடவும்.அப்புறம் விசில் இறங்கியவுடன் பரிமாறலாம்.
இதுவும் நன்றாக இருக்கும்.ஆச்சி, அன்னபூர்ணா, போன்ற மட்டன் மசாலாக்களையும் சேர்த்துக்கொண்டால் இன்னும் ருசி அதிகமாகும்..
இட்லியும் பெப்பர் மட்டன் பிரை : புகைப்படம் மட்டும்.
கிசுகிசு : ஞாயிறு அன்னிக்கு எப்பவும் விசேசம் தான்...காலையில் எட்டு எட்டரை மணிக்குள் குடல் வறுவல் ரெடி ஆகிவிடும்..அப்போ இருந்து மதியம் மூணு மணி வரை பொழுது நல்லாப்போகும்....
No comments:
Post a Comment