Sunday, 10 January 2016

வை-பை ஹாக்

இன்று WiFi Technology ஆனது பொதுவாக அனைவரின் வீட்டிலும் காணப்படும் சாதார ஒரு விடயமாகி விட்டது. WiFi தேவையானது மனிதனின் அடிப்படை தேவைகளில் இடம் பிடித்து விட்டது என்று கூறினாலும் மிகையாகாது.

இன்று உலகில் அறிமுகப்படுத்தப்படும் பெரும்பாலான Technology சாதனங்களில் WiFi Technology அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கையடக்க தொலைபேசியிலே அல்லது மடிக்கணணியில் WiFi Technology இருக்கும் பட்சத்தில், நொடிப்பொழுதில் உங்களுக்கு இணையத்துடன் தொடர்பு கொள்ள முடியும். இதனாலேயே பல வீடுகளில் இன்று WiFi பாவிக்க கூடிய விதமான இணைய இணைப்புக்களை காணலாம்.

இவ்வாறு WiFi Technology உங்கள் இணைய இணைப்புடன் இருக்கும் பட்சத்தில் யார் யார் உங்கள் இணைய இணைப்பை பயன்படுத்தி இன்டர்நெட்டில் உலா வருகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியாது. ஏனெனில் WiFi Technology-யில்  ஒரு சில உபாயங்களை பயன்படுத்தி அதன் பாதுகாப்பு வெளியை உடைக்க முடியும்.



இவ்வாறு யாரேனும் உங்கள் WiFi-ஐ உங்கள் அனுமதி இன்றி உபயோகிக்கும் சந்தர்பத்தில், பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உதாரணமாக உங்கள் Data பாவனை அதன் எல்லையை தாண்டி இணைய வேகம் குறைய வாய்ப்புண்டு. அதே போல் உங்கள் நேட்வோர்க்கிட்குள் யாரேனும் அத்துமீறி நுழையும் சந்தர்பத்தில் பல வகையான பாதுகாப்பு பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரிடும். இதனால் உங்கள் இணைய இணைப்பை பாதுகாப்பாக வைத்து கொள்வது உங்கள் பொறுப்பு.

உங்கள் இணைய இணைப்புடன் ஏதேனும் புதிய Device-கல் தொடர்பு கொள்ளும் போது எப்படி தெரிந்து கொள்வது?

இதை தெரிந்து கொள்வதற்கு பல வழிகள் உண்டு. இன்றைய பதிவில் நான் மிக இலகுவான இரண்டு வழிமுறைகளை உங்களுக்கு தெளிவுபடுத்துகிறேன். உங்கள் இணைய இணைப்புடன் எதாவது புதிய Device இணைந்துள்ளதா என்று,

இணைய இணைப்பை வழங்கும் router மூலம் தெரிந்து கொள்ளலாம்.Wireless Network Watcher எனும் மென்பொருள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Router மூலம் எப்படி தெரிந்து கொள்ளவது?

உங்கள் Router-ற்கு Login செய்து அங்கே Status எனும் Option-இற்கு சென்றால், Current Connected Devices எனும் Option-ல், உங்கள் இணைய இணைப்புடன் இணைந்துள்ள Device-களின் விபரத்தை பெற்று கொள்ளலாம்.

ஆனால் இது அனைத்து Router-களுக்கும் பொருத்தமல்ல. இந்த Settings ஒவ்வொரு Router-இக்கும் வேறுபடும். இதனால் இரண்டாவது உபாயம் அனைவருக்கும் பொருந்துமாறு மிக எளிதான வகையில் தந்துள்ளேன்.

Wireless Network Watcher மென்பொருள் மூலம் எப்படி தெரிந்து கொள்வது?

இந்த மென்பொருளானது உங்கள் WiFi Network உடன் புதிதாக இணையும் Device-களை கண்டறிய உதவுகிறது.

Wireless Network Watcher மென்பொருளைஇங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.
தரவிறக்கிய மென்பொருளை உங்கள் கணனியில் Install செய்து கொள்ளுங்கள்.

Wireless Network Watcher-ஐ Install செய்து முடித்தவுடன் Application-ஐ கணனியில் ஆரம்பித்து, Scan எனும் Option-ஐ கிளிக் செய்யுங்கள்.

அவ்வளவு தான். ஒரு சில நொடிப்பொழுதில் உங்கள் WiFi Network உடன் இணைந்து இருக்கும் அனைத்து Device-களும் பட்டியலிட்டு காட்டப்படும். இங்கே உங்கள் WiFi Network உடன் இணைந்து இருக்கும் சகல Device-களையும் பரிசீலனை செய்ய முடியும்.


Wireless Network Watcher ஆனது, உங்கள் Router உடன் இணைந்து இருக்கும் Device-களை அதன் IP Address அடிப்படையில் பட்டியலிடும். அத்தோடு இணைந்து இருக்கும் Device-ன் பெயர், MAC Address போன்றவைகளையும் உங்களுக்கு தெரியப்படுத்தும்.

இவ்வாறு உங்கள் Router உடன் இணைந்து இருக்கும் Device-களை Scan செய்வதன் மூலம், உங்களின் இணைய இணைப்பை யாரவது திருட்டுதனமாக உபயோகிக்கிறார்களா என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

அப்படி ஏதேனும் புதிய Device-கள் உங்கள் WiFi Network உடன் இணைந்து இருப்பதை கண்டால், குறிப்பிட்ட Device-ன் MAC Address-ஐ அறிந்து கொண்டு, அதை Router மூலம் Block செய்யலாம். அத்தோடு உங்கள் Wireless Network-ன் கடவுச்சொல்லையும் மாற்றி விடுவது மிகவும் சிறந்தது.

No comments:

Post a Comment