Friday, 18 December 2015

விண்டோஸ் 7 Bootable USB Pendrive உருவாக்குவது எப்படி?

கணினி மென்பொருள்
பல இணைய தளங்களிலிருந்து சேகரித்தவைகளை பலருக்கும் பயனாக அமையும் என்ற நோக்கம் கருதி இந்த பிளாக்கில் பதிந்துள்ளேன். குறிப்பு : வணக்கம் வலைப்பூவின் பதிவுகளை PDF பைல்களாக பெற உங்களுடைய மொசில்லா பாயர் பாக்ஸ் இல் (Mozila Fire Fox) PDF IT என்ற add on 's சை சேர்க்கவும்.

விண்டோஸ் 7 Bootable USB Pendrive உருவாக்குவது எப்படி?
இன்று பென்டிரைவுகள் நம்மிடையே டேட்டா சேமிப்புக்கு பயன்படுவது போல ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை நிறுவுவதற்க்கும் பயன்படுகிறது.
விண்டோஸ் XP , விஸ்டா,விண்டோஸ் 7, உபுண்டு போன்ற ஆப்பரேடிங் சிஸ்டங்களை பென்டிரைவிலிருந்து நிறுவிய அணுபவம் உண்டு. இன்றைய படைப்பு விண்டோஸ் 7 ஐ பென்டிரைவிருந்து நிறுவுவது எப்படி என பார்க்கலாம்.
விண்டோஸ் 7 ஐ பென்டிரைவிலிருந்து நிறுவ உங்களிடம் 4GB பென்டிரைவ் இருக்க வேண்டும். பொதுவாக இந்த பூட்டபுள் பென்டிரைவ் தயாரிக்க மைக்ரோசாப்ட் நிறுவனமே ஒரு கோப்பை தந்திருக்கிறது. ஆனால் இந்த கட்டுரையில் நாம் Manual ஆக தயாரிக்க இருக்கிறோம். மேலும் உங்களது கணினியில் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 ஐ நிறுவியிருந்தால் இந்த பணியினை மிக எளிதாக செய்துவிடலாம். காரணம் அதில் DISKPART என்கின்ற ஒரு கமாண்ட் உள்ளது.
ஆனால் உங்களிடம் விண்டோஸ்XP தொகுப்பு இருந்தால்? அதில் இந்த DISKPART கமாண்டை பயன்படுத்த இயலாது. இதற்க்கு வழி என்ன? இதோ தொடருங்கள் கட்டுரையை….
முதலில் உங்களுடைய பென்டிரைவை கணினியில் இணைக்கவும். உங்களது பென்டிரைவில் டேட்டா இருப்பின் பேக்கப் எடுத்துக்கொள்ளவும்,
பின்னர் My Computer சென்று உங்களது பென்டிரைவில் வலது கிளிக் செய்து Format என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும்.பின்னர் FAT32 என்ற பைல் பார்மேட்டை தேர்ந்தெடுத்து பார்மேட் செய்து கொள்ளவும். பார்க்க கீழேயுள்ள படங்களை.

DISKPART என்ற கமாண்டை விண்டோஸ் XP ஆதரிக்காததால் இதனை MBRWiz என்கின்ற ஒரு இலவச மென்பொருளை பயன்படுத்த இருக்கிறோம்.
முதலில் MBRWizard என்ற இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
Link: http://mbrwizard.com/download.php

பின்னர் இதனை winzip, winrar துணைக்கொண்டு extract செய்துகொண்டு இதனை C: டிரைவில் போடவும்.
பின்னர் Start,>Run சென்று CMD என தட்டச்சு செய்து என்டர் செய்யவும்.

பின்னர் CD\ என தட்டச்சு செய்து என்டர் செய்யவும்.

இப்போது உங்களது கமாண்ட் ப்ராம்ப்ட் ஆனது C:\இல் நிற்கிறதா?
சரி இனி mbrwiz /list என தட்டச்சு செய்து என்டர் செய்யவும்.

இப்போது உங்களது ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் பார்டீஷன் பற்றிய தகவல்களை காட்டும் இதில் உங்களது பென்டிரைவின் எண்ணை கவனமாக குறித்துக்கொள்ளவும்.

இக்கட்டுரையில் என்னுடைய பென்டிரைவின் லெட்டர் 1 அடுத்ததாக கீழ்கண்ட கமாண்டை தட்டச்சு செய்யவும்.
mbrwiz /disk=1 /active=1

இங்கு 1 என்பது என்னுடைய பென்டிரைவின் லெட்டரை குறிக்கிறது.
இப்போது உங்களிடம் Are you Sure you want to set the partition(s) Active (Y/N)என்று கேட்கிறதா? தட்டச்சு பலகையில் இருக்கும் Y ஐ அழுத்தி என்டர் செய்யவும்.

இனி, உங்களின் விண்டோஸ் 7 DVDயை DVD டிரைவில் போடவும், பின்னர் விண்டோஸ் 7 டிவிடியில் உள்ள அனைத்து கன்டன்ட்களையும் காப்பி செய்து உங்களது பென்டிரைவில் பேஸ்ட் செய்யவும்.

குறிப்பு: உங்களிடம் விண்டோஸ் 7 தொகுப்பு ISO கோப்பாக இருப்பின் Winrar அல்லது Winzip அல்லது 7-zip போன்ற மென்பொருளை பயன்படுத்தி Extract செய்துகொண்டு காப்பி பேஸ்ட் செய்யவும்.
கன்டென்டுகள் பென்டிரைவில் பேஸ்ட் ஆனவுடன் My Computer சென்று உங்களது பென்டிரைவின் டிரைவ் லெட்டரை குறித்துக்கொள்ளவும்.
இனி, இந்த பென்டிரைவை பூட்டபுளாக மாற்ற இருக்கிறோம். உங்களது கமாண்ட் பிராம்ப்டில் கீழேயுள்ள கமாண்டை தட்டச்சு செய்து என்டர் செய்யவும்.
H:\boot\bootsect /nt60 H:

குறிப்பு: இங்கு H என்பது என்னுடைய பென்டிரைவின் டிரைவ்லெட்டர் ஆகும், அதுபோல உங்களுடைய பென்டிரைவின் டிரைவ்லெட்டரை குறிப்பிடவும். இப்போது பூட் கோடானது உங்களது பென்டிரைவில் சரியாக எழுதப்பட்டிருக்கும்.

அவ்வளவுதான் இனி கணினியின் பயாஸ் செட்டபிற்க்கு சென்று உங்களது Boot Order  ஐ USB என மாற்றியமைத்துக்கொண்டு பூட் செய்வீர்களேயானால் விண்டோஸ் 7 Installation Window ஆனது தோன்றுவதை காணலாம்.

No comments:

Post a Comment