பேஸ்புக் வீடியோ கோப்புக்களை உங்கள் Android ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்குவது எப்படி?
உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக் தளத்தில் அன்றாடம் பல இலட்சக் கணக்கான வீடியோ கோப்புக்கள் பகிர்ந்து கொள்ளப் படுகின்றன.
எனினும் பேஸ்புக் தளத்தில் பகிரப்படும் வீடியோ கோப்புக்களை எம்மால் பார்க்க மட்டுமே முடிகின்றது. அவைகளை தரவிறக்கிக் கொள்வதற்கான வசதி பேஸ்புக் தளத்தில் தரப்படவில்லை.
இருப்பினும் பேஸ்புக் வீடியோ கோப்புக்களை எமது ஸ்மார்ட் போனுக்குபல்வேறு வழிமுறைகளில் தரவிறக்கிக் கொள்ள முடியும்.
அவ்வாறு தரவிறக்கிக் கொள்வதன் மூலம் அந்த வீடியோ கோப்புக்களை பிறகொரு சந்தர்பத்திலும் பார்க்க முடிவதுடன் உறவினர்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ள முடியும் அல்லவா?
எனவே நீங்களும் பேஸ்புக் வீடியோ கோப்புக்களை தரவிறக்க விரும்பினால் கீழுள்ள வழிமுறைகளில் ஒன்றை பின்பற்றலாம்.
வழிமுறை 01
Tubemate எனும் செயலியானது இணையத்தில் உள்ள வீடியோ கோப்புக்களை எமது ஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கிக் கொள்வதற்கான வசதியை தருகின்றது.
நீங்கள் இந்த செயலியை பின்வரும் இணைப்பு மூலம் தரவிறக்கிக் கொள்ளலாம்.
இது APK கோப்பாக தரவிறக்கப்படும். இனி அதனை சுட்டுவதன் மூலம் நிறுவிக் கொள்ளலாம். நிறுவும் போது (Settings ===> Security பகுதியில் உள்ள Unknown Sources என்பதை Tick செய்து கொள்க.)
இனி நிறுவப்பட்ட Tubemate செயலியை திறந்து அதன் இடது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று சிறிய கோடுகளால் ஆன Menu குறியீட்டை சுட்டுக.
பின்னர் தோன்றும் சாளரத்தில் Facebook என்பதை சுட்டுவதன் மூலம் உங்கள் பேஸ்புக் Username கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிட்டு உள்நுழைந்து கொள்க.
அவ்வளவு தான்.
இனி பேஸ்புக் தளத்தில் உள்ள வீடியோ கோப்புக்களை சுட்டும் போது தோன்றும் சாளரத்தில் Tubemate என்பதை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ கோப்பை தரவிறக்கிக் கொள்ளலாம்.
வழிமுறை 2
இதற்கு உங்கள் ஸ்மார்ட் போனில் பேஸ்புக் செயலியின் 34 ஆம் பதிப்பு அல்லது அதற்கு முன்னைய பதிப்புக்கள் நிறுவப்பட்டிருத்தல் வேண்டும்.
எனவே நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் நிறுவி இருக்கக் கூடிய பேஸ்புக் செயலியை நீக்கி விட்டு பின்வரும் இணைப்பில் உள்ள பேஸ்புக் செயலியை உங்கள் Android ஸ்மார்ட் போனிற்கு தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.
பின் மேலே தரப்பட்டுள்ள Tubemate செயலியையும் தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.
இனி பேஸ்புக் செயலியில் உங்கள் Username மற்றும் Password போன்றவற்றை உள்ளிட்டு உள்நுழைந்து கொள்க.
இனி நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோ கோப்பின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள அம்புக்குறி அடையாளத்தை சுட்டுவதன் மூலம் அதனை சேமித்துக் கொள்க.
பின்னர் பேஸ்புக் செயலியின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று சிறிய கோடுகளால் ஆன Menu குறியீட்டை சுட்டுக.
பின் தோன்றும் சாளரத்தில் Saved எனும் பகுதியில் நீங்கள் சேமித்த வீடியோ கோப்பை காணலாம்.
இனி அதனை சுட்டும் போது தோன்றும் சாளரத்தில் Tubemate செயலியை சுட்டுவதன் மூலம் குறிப்பிட்ட வீடியோ கோப்பை Tubemate செயலியின் ஊடாக தரவிறக்கிக் கொள்ளலாம்,.
வழிமுறை 3
Android ஸ்மார்ட் போன்களுக்கான ES File Explorerசெயலி மூலம் ஏராளமான வசதிகளை பெற முடியும்.
அந்த வகையில் பேஸ்புக் வீடியோ கோப்புக்களை தரவிறக்குவதற்கும் ES Explorer செயலியில் வசதி தரப்பட்டுள்ளது.
உங்கள் Android சாதனத்தில் ES File Explorer செயலி இல்லை எனின் பின்வரும் இணைப்பு மூலம் அதனை தரவிறக்கிக் கொள்க.
பின் குறிப்பிட்ட செயலியை திறந்து அதன் இடது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று கோடுகளை கொண்ட Menu குறியீட்டை சுட்டுக.
பின் திறக்கும் சாளரத்தில் Favorite என்பதை சுட்டுக.
பின்னர் அதற்குக் கீழ் தரப்பட்டுள்ள உப பிரிவுகளில் Facebook என்பதை சுட்டுக.
இனி உங்கள் Username, Password போன்றவற்றை உள்ளிட்டு உள்நுழைந்து கொள்க.
பின்னர் நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோ கோப்பை தொடர்ச்சியாக சிறிது நேரத்திற்கு அலுத்துக.
பின் தோன்றும் சாளரத்தில் Save என்பதை சுட்டுக.
அவ்வளவு தான்.
இனி குறிப்பிட்ட வீடியோ கோப்பு உங்கள் Androidஸ்மார்ட் போனுக்கு தரவிறக்கப்படும்.
No comments:
Post a Comment