நம்முடிய கணினியில்(வோய் ஃபை இருக்கும் கணினியில் மட்டும்) இருக்கும் இணையதளத்தை(INTERNET) ஐ வோய் பை மூலமாக மட்ற்ற அதாவது மொபைல் அல்லது வோய் ஃபை வசதியுள்ள அனைத்து சாதனத்திலும் பயன்படுத்தி கொள்ளலாம்…
அதற்க்கு இந்த மென்பொருள் பயன்படுகின்றது
இதனை டவ்ன்லோட் செய்து ரன் செய்து பயன்படுத்திகொள்ளலாம்
http://www.4shared.com/get/G8TFMOo1/Virtual-wi-fi-router.html
படத்தை பார்க்க
இதில் கான்பிகர் பகுதியில் சென்றால்
Hotspot Name : இல் நம்மக்கு விருப்பமுள்ள அல்லது நமது பெயரை கொடுத்து அதற்க்கு அடுத்து உள்ள Password இல் குறைந்த பச்சம் எட்டு எழுத்திற்கு குறையாமல் உங்களுக்கு தேவையான Password ஐ கொடுத்து Setup Hotspot என்பதை அழுத்தி சேவ் செய்து கொள்ளவேண்டும்
பிறகு start—–}run——இல் ncpa.cplஎன்று கொடுக்கவேண்டும் இப்போது Local Area Network இல் Right Click செய்து Properties ஐ அழுத்தி Sharing என்பதில் Allow other network user என்பதை தேர்வுசெய்து(டிக் செய்து) Home network Connection என்பதில் புதிதாக வந்துள்ள அதாவது Warless Network Connection2 என்பதனை கொடுத்து சேவ் செய்து முடித்து Virtual Wifi Router இல் Start/Stop என்பதில் சென்று Start செய்து பயன்படுத்தலாம்…
கூகுள் குரோம் இன்ஸ்டால் செய்யும் முறை(என் நண்பனுக்காக)
Posted: May 7, 2014 in கணினி தகவல்கள்
கூகுள் குரோம் இன்ஸ்டால் செய்யும் முறை(என் நண்பனுக்காக)
http://dl.google.com/edgedl/chrome/install/GoogleChromeStandaloneEnterprise.msi
இந்த லிங்க்கை க்ளிக் செய்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்
Posted: April 23, 2014 in கணினி தகவல்கள்
விண்டோவ்ஸ் ஐ பொறுத்தவரையில் டிரைவர்ஸ் என்பது மிகவும் ஒரு முக்கியமான ஒன்றாகும்…!
விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் 7 என்பது பொதுவானது என்றாலும் நாம் அதனை பல்வேறு கணினிகளில் பயன்படுத்துகின்றோம் அதாவது டெஸ்க் டாப்ஸ், லேப் டாப்ஸ்,…. அதிலும் பல்வேறு தயாரிப்பாளர்கள் உள்ளனர் டெல்,லினோவோ,ஏசர்,ஹேச்பி,சோனி…. இன்னும் பல தயாரிப்பாளர்கள் பல்வேறு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கின்றனர். எனவே அதற்க்கு ஏற்றவாறு அவர்கள் பயன்படுத்தும் மாதர்போர்ட்க்கு ஏட்ரவாறு டிரைவர்ஸ் நாம் இன்ஸ்டால் செய்யவேண்டும் அதற்க்கு ஒவ்வொரு கம்பெனி ப்ராடெக்ட்க்கும் அதனுடைய வெப்சைட்டில் அல்லது அதற்க்கான டிரைவர் சீடியே வைத்திருக்க வேண்டும்.. டிரைவர்ஸ் ஐ இன்ஸ்டால் செய்தால் தான் அதனுடைய (கணினியின்) செயல்பாடு சரிவர இருக்கும் உதாரணமாக ஆடியோ,வீடியோ,லேன்,சிப் என்று இன்னும் பல சர்வீஸ்கள் சரிவர இயங்கும்..
அணைத்து தயாரிப்புகளுக்கும் சீடி தனித்தனியாக வைத்திருப்பது என்பது சுலபமான விசையம் இல்லை. எனவே இந்த சாப்ட்வேர் மூலம் முடிந்த வரை அனைத்தையும்(அணைத்து தயாரிப்புக்கான) ஆடியோ,வீடியோ,லேன்,சிப் என்று இன்னும் பல சர்வீஸ்கலே இன்ஸ்டால் செய்யலாம்
http://kickass.to/driverpack-solution-11-8-1-8-2011-32-64-bit-victory-t5799185.html
இது யூ டோரன்ட் அல்லது பிட் டோரன்ட் மூலம் தான் டவ்ன்லோட் செய்ய முடியம் நேரடியான டவுன்லோட் செய்யும் லிங்க் எனக்கு கிடைக்க வில்லை அதானால் தான் இந்த லிங்க் ஐ கொடுத்துள்ளேன்.. இதில் இன்னும் அட்வான்சிஸ் வெர்சன் வந்துவிட்டது ஆனாலும் இந்த வெர்சன் நன்றாக உள்ளது.. தேவையென்றால் டவுன்லோட் செய்துகொள்ளலாம்..
டவுன்லோட் செய்து முடித்ததும். அதனை திறந்தாள் இவ்வாறு வரும்
இதில் டிரைவர்ஸ் என்பதை கிளிக் செய்து பின் எக்ஸ்பெர்ட் மோட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்
இப்போது எந்த டிரைவர் இன்ஸ்டால் ஆஹாவில்லையோ அதனை படத்தில் காட்டியவாறு சித்தாள் இன்ஸ்டால் ஆகிவிடும்
இந்தகோப்ரா டிரைவர் பேக் ஐ வைத்து எளிதான முறையில் ட்ரைவர்ஸ் ஐ இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்…
இதனை போல் என்பதும் டிரைவர் இன்ஸ்டால் செய்யும் மென்பொருள்தான்.. ஆனால் இதனை விண்டோஸ் எக்ஸ் பி இல் மட்டுமே பயன் படுத்த முடியும்.. இதுவும் நல்ல ஒரு உபையோஹமான ஒண்டு தான்
http://www.4shared.com/get/5hOWg6-w/SkyDriver_XP_99.html
http://www.4shared.com/get/vC2Zl-xW/skydriver_v11_for_windows_xp__.html
நன்றி…மாஸ் ஃபாித்
விண்டோஸ் 7 எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்று பார்க்கலாம்..
Posted: April 21, 2014 in கணினி தகவல்கள்
விண்டோஸ் 7 எவ்வாறு இன்ஸ்டால் செய்வது என்று பார்க்கலாம்..
முதலில் எந்த ஒரு சிஸ்டம்மில் ஆப்ரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்றாலும் அதற்க்கான (பாத்)ஐ (வழியே) முதலில் நாம் அமைத்து கொடுக்க வேண்டும்
உதாரணமாக பூட்டிங் மெனுவில் அட்வான்ஸ் (அல்லது) பூட்டிங் ஆப்சன் இல் சென்று பூட்டிங் ஆடரில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் என்ன உள்ளது அதாவது ஹார்டிஸ்க் அல்லது சீடி டிரைவ் போன்றவற்றில் முதலில் எது உள்ளது என்று பார்த்து.. சீடி டிரைவை முதலில் வைக்க வேண்டும்.. ஏன் என்றால் நாம் சீடி மூலம் ஆப்ரட்டிங் சிஸ்டம் ஐ இன்ஸ்டால் செய்வதால் சீடி டிரைவை முதலில் வைக்கவேண்டும்…. இப்போது அட்வான்ஸ் முறைகள் (யு எஸ் பி) இல் ஆப்ரேடிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்யும் முறை வந்துவிட்டது.. அப்படி என்றால் முதலில் (யு எஸ் பி) ஐ வைத்துகொள்ள வேண்டும்…
பிறகு F10 ஐ அழுத்தி சேவ் செய்யவேண்டும்..
வேறு வழிகளிலும் இதனை செய்யலாம்
சிஸ்டம் ஐ ஆன் செய்தவுடன் (சில நிமிடத்திற்குள்) ஸ்க்ரீன் இல் மேல்ப்புறம் அல்லது கீழ் புறம் பார்த்தான் அதில்
(F1- Help,F12 to Enter the boot menu , F2-network boot) இவ்வாறு இருக்கும் இவற்றில் F2 என்பதை தேர்வு செய்தால் நாம் (சீடி அல்லது யூ எஸ் பி ) ஐ தேர்வு செய்து கொள்ளலாம் உதாரணம் தான் (F1,F2,F12)
இப்போது சீடி அல்லது யூ எஸ் பி ஐ செலேக்ட் செய்தவுடன் கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல வரும்
நெக்ஸ்ட் ஐ கொடுக்க வேண்டும்
இவர்ற்றில் இன்ஸ்டால் நவ் என்பதை கொடுக்க வேண்டும்
இதில் ஐ அக்ரீ என்பதை கொடுத்து நெக்ஸ்ட் கொடுக்க வேண்டும்..
இதில் கஸ்ட்டம் என்பதை கொடுக்க வேண்டும்
இவற்றில் நான் புதிய ஹார்டிஸ்க்(அல்லது) எந்த பார்டிசனும் செய்யாத ஹார்டிஸ்க் ஐ வைத்துள்ளேன்
இதில் நாம் பார்டிசன் செய்ய விரும்பினால் நியூ என்பதை கொடுக்க வேண்டும் அதாவது இந்த படம்
நான் இங்கு 20GB ஹர்டிஸ்க் வைத்துள்ளேன் இதனை இரண்டாஹ பிரிக்க வேண்டும் என்பதால் அதில் காட்டப்பட்டுல்ள்ள நம்பரை தேவைக்கு எட்ட்ரவாறு பிரிக்க வேண்டும் அதாவது எனக்கு C: டிரைவ் 13 GB ம் 7 GB D; டிரைவ் ம் வேண்டும் என்பதால் c: டிரைவில் (14000) இவ்வாறு பிரித்துள்ளேன். பின் ஒக்கே கொடுக்க வேண்டும்.
ஒக்கே கொடுக்க வேண்டும்.
அதனேபோல D: ஐ யும் பிரித்துக்கொள்ளலாம்.. இப்போது D: டிரைவ் ஐ பிரித்து விட்டால் வேலை முடிந்து விடும். இல்லை என்றால் நாம் மீண்டும் இந்த இன்ச்டாலாசன் முடிந்த பிறகு தனியாக பிரிக்க வேண்டும் எனவே இப்போதே பிரித்து கொள்வது சிறந்தது
partition unallocated space இல் வைத்து நியூ அதே நம்பரை வைத்து அப்ளை கொடுக்க வேண்டும் இது தான் ( D: )
பிறகு disk 0 partition 2 வில் வைத்து அதாவது ( C: ) டிரைவ் இல் மௌஸ் ஐ க்ளிக் செய்து நெக்ஸ்ட் கொடுக்க வேண்டும்
இது முடிந்த பின்பு
இவர்ற்றில் உங்களது பெயரை கொடுதுகொள்ளலாம் பிறகு நெக்ஸ்ட்
பாஸ்வர்ட் தேவை இல்லை நெக்ஸ்ட் கொடுக்கவேண்டும்
உங்களிடம் கீ இருந்தால் கொடுங்கள்.. அனால் என்னிடம் இல்ல அதனால் கீ நான் கொடுக்க வில்லை அதனால் நெக்ஸ்ட் கொடுத்துவிட்டேன்
இதில் ஆஸ்க் மீ லெட்டர் என்பதை கொடுக்க வேண்டும் தேவை என்றால் யூஸ் ரெக்கமன்ட் என்பதையும் கொடுக்கலாம்
இதில் நாம் நாட்டை கொடுத்து UTC+05:30 இந்தியா நெக்ஸ்ட் கொடுக்க வேண்டும்
அவ்வளவுதான்
முடிந்தவுடன் அதற்குரிய சிஸ்டம் டிரைவர்ஸ் ஐ இன்ஸ்டால் செய்து கொல்லவேண்டும்
உங்களுடன்
மாஸ் ஃபாித்
விண்டோஸ் XP இல் எவ்வாறு கூகிள் தமிழ் எழுதும் கருவியே இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம்..
Posted: February 25, 2014 in கணினி தகவல்கள்
விண்டோஸ் XP இல் எவ்வாறு கூகிள் தமிழ் எழுதும் கருவியே இன்ஸ்டால் செய்வது என்று பார்ப்போம்
முதலில் இந்த லிங்கில் சென்று டூலை டவ்ன்லோட் செய்து கொள்ளவேண்டும்
http://www.google.co.in/inputtools/windows/
பிறகு உங்களது விண்டோஸ்ஸில் லாங்வேஜ் பேக் இன்ஸ்டால் செய்துல்லாதா என்பதை பார்க்கவேண்டும் அதனை
Control Panel—–} Regional and Language Options ——} Languages tab
இங்கு இரண்டையும் டிக் செய்து கொள்ளவேண்டும் அவ்வாறு டிக் செய்யும் பொழுது விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் லாங்வேஜ் சப்போர்ட் செய்யும் பைல்கள் தேவைப்படும் எனவே விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டம் சீடி அல்லது அதற்க்கான பைல் ஐ தேர்வு செய்து கொடுக்க வேண்டும் உங்களிடம் சீடி இருந்தால் அதனை தேர்வு செய்து கொள்ளுங்கள் இல்லை என்றால் இந்த பைல் ஐ டவ்ன்லோட் செய்து இதற்கான பாத்(வழியே) தேர்வு செய்து கொடுக்க வேண்டும் உதாரணமாக D இல் வைத்துள்ளீர்கள் என்றால் D/i386/lang/
http://www.mediafire.com/download/0c6220upv8hh6on/language_pack.7z
http://www.4shared.com/get/AqH4qsHF/XP_East_Asian_Language_Files.html
Control Panel—–} Regional and Language Options ——} Languages tab——-} Text services and input languages (Details) —–} Advanced tab
இதனையும் தேர்வு செய்து கொள்ளவேண்டும்
இதனை செய்து முடித்த பின் கணினியே ரீஸ்டார்ட் செய்துவிட்டு. நாம் டவ்ன்லோட் செய்த கூகிள் தமிழ் எழுதும் கருவியே இன்ஸ்டால் செய்ய துவங்கலாம்.
இன்ஸ்டாலேசன் முடிந்தபின்பு கீபோர்டில் ALT கீ மற்றும் SHIFT கீ ஐ சேர்த்து( ALT+SHIFT) அழுத்தி நாம் தாய்மொழியில் எழுதி மகிழலாம்
உங்களுடம்
கமான்ட் ப்ராம்ட் மூலம் பென் டிரைவின் வைரஸை நீக்கலாம்
Posted: February 21, 2014 in கணினி தகவல்கள்
சுலபமாக தகவல்களை கையாள நமக்கு துணைபுரிவது இந்த பென் டிரைவாகும். இதனை பல கணினிகளில் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் சுலபமாக வந்துவிடுகிறது. இது போன்று வைரஸ் உள்ள பென் டிரைவினை திறக்கவோ அல்லது தகவல்களை ஏற்றவோ அல்லது இறக்கவோ முடியாது.
பென் டிரைவில் முக்கியமான தகவல்கள் ஏதும் இல்லை என்றால் அதனை “பார்மட்” செய்து வைரஸினை நீக்கிவிடலாம். ஒருவேளை அதில் முக்கியமான தகவல் இருப்பின் என்ன செய்ய?
கவலையில்லை அதனை எந்த விதமான மென்பொருளும் இன்றி சுலபமாக மீட்டுவிடலாம். அது எவ்வாறு என காணலாம்.
பென் டிரைவினை கணினியில் இணைத்தப்பின் செய்யவேண்டியது
01. START ——> RUN சென்று அதில் CMD என டைப் செய்து ENTER கீயினை அழுத்தவும்
02. இப்பொழுது Command Prompt திறக்கும். அடுத்து பென் டிரைவ் கணினியில் எந்த டிரைவில் உள்ளது என அறிந்துகொண்டு Command Prompt-ல் அந்த டிரைவிற்கு செல்லவேண்டும். (உ.ம்) H டிரைவ் எனில் H : \ > என மாற்றிக்கொள்ள வேண்டும்.
03. பின்பு H :\ >attrib s h /s/d *.* என டைப் செய்யவேண்டும். சரியான இடைவெளியுடன் டைப் செய்தது உறுதிசெய்தவுடன் ENTER கீயினை அழுத்த வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து பென் டிரைவினை திறந்து பார்த்தால் அனைத்து தகவலும் நமக்கு கிடைக்கும்.
USB போர்ட்டை DISABLE செய்யும் வழிமுறை
Posted: February 21, 2014 in கணினி தகவல்கள்
USB PORT அனைவருக்கும் பயன் உள்ளதாக இருந்தாலும் பள்ளி ,கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USB னை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும். கணினியில் VIRUS ஆல் பாதிப்பு வந்து விடும் அல்லவா ! அதனால் USB PORT னை DISABLE செய்யப்பட்டு இருக்கும்.
இதை எப்படி செய்யும் வழிமுறைகளை காண்போம்.
இதனை WINDOWS இல் DISABLE செய்வது பற்றி பார்ப்போம்
REGISTRY EDITOR செல்லவேண்டும் அதற்க்கு ,
RUN—–>TYPE ” regedit ”
REGISTRY EDITOR சென்றவுடன்,
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Services\UsbStor
மேலே உள்ள PATH க்கு சென்று பின்,
START என்பதை இரண்டு முறை கிளிக் செய்யவேண்டும்.
அடுத்து ஒரு விண்டோ ஒன்று திறக்கும்,
அதில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் “4” என்று மாற்றவேண்டும். (படம் 2).
பின் OK கொடுத்து கணினியை RESTART செய்யவேண்டும்.இதில் கவனிக்க வேண்டிய வை 4 என்று மற்றும் முன் அதில் உள்ள எண்னை (“3”) நினைவில் கொள்ளவேண்டும்.அதுதான் ENABLE செய்யவேண்டிய எண் .
Posted: February 21, 2014 in கணினி தகவல்கள்
இணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக network வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப ஒவ்வொரு network அமைப்பும் அடுத்தடுத்த network தளத்தினை அடைய ஒரு internet protocol முகவரி தேவைப்படுகிறது. இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது. இவற்றை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும்.
இதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
எனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் Internet Society-யினால் அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால் இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் 16 என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
IPv4 அமைப்பு முகவரியில் (32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதன் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.
IPv6 அமைப்பில் 340 undecillion முகவரிகளை அமைக்கலாம். இந்த எண்ணிக்கையை எண்களில் சொல்வது எனில் 340 எழுதி பின்னால் 36 சைபர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் network நிறுவனங்கள் கையாளும்.
கம்ப்யூட்டர் CRASH ஆவதற்கான காரணம்…
Posted: February 21, 2014 in கணினி தகவல்கள்
கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும்.
சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும்.
இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
ஹார்ட்வேர் பிரச்னை
கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start => Settings => Control pannel => System => Device Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
ரம் மெமரி சிப்ஸ்
ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
ஹார்ட் டிஸ்க் டிரைவ்
பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
வீடியோ கார்ட்
சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். Start—> Settings—->Control Panel—->Display—-> Settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
வைரஸ்
பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
பிரிண்டர்
பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
சாப்ட்வேர்
முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
அதிக வெப்பம்
இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
மின் ஓட்டம்
கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு
USB வழியாக விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டு போட
Posted: February 21, 2014 in கணினி தகவல்கள்
விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டி வைக்க கணினி பயன்பாட்டாளர்கள் பலரும் பயனர் கணக்கிற்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி வைப்பார்கள். தற்போது வெளிவந்திருக்கு விண்டோஸ் 8 இயங்குதளத்தில் படத்தினை கொண்டு பயனர் கணக்கினை பூட்டி வைக்க முடியும். இதற்கு மேல் விண்டோஸ் இயங்குதளத்தை பூட்ட வேறு வழி இருக்கிறதா என்ற இன்னும் ஒரு சில வழிகள் உள்ளன அவற்றில் ஒன்றுதான் USB வழியாக விண்டோஸ் இயங்குதளத்தை பூட்டுதல்.
விண்டோஸ் இயங்குதளத்தை பூட்ட சிறந்ததொரு மென்பொருள் VSUsbLogon ஆகும். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.
தரவிறக்க சுட்டி :
http://www.lokibit.com/download.htm#vsusblogon
மென்பொருளை சுட்டியில் குறிப்பிட்ட தளத்தில் இருந்து பதிவிறக்கி கணினியில்
நிறுவிக்கொள்ளவும்.பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொண்டு பின் இந்த VSUsbLogon அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும். பின் கணினியில் USB ட்ரைவினை கணினியில் இணைக்கவும்.
பின் நீங்கள் கணினியில் இணைத்த USB ட்ரைவானது அப்ளிகேஷனில் காட்டும். அதை தெரிவு செய்து பின் Assign என்னும் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக தோன்றும் விண்டோவில் நம்முடைய விண்டோஸ் பயனர் கணக்கிற்கு என்ன கடவுச்சொல்லை உருவாக்கினமோ அதே கடவுச்சொல்லை இங்கும் உள்ளிடவும். அடுத்து Auto Logon எனும் செக்பாக்சை டிக் செய்து கொள்ளவும். பின் Check Password எனும் பொத்தானை அழுத்தி ஒரு முறை சோதனை செய்து பார்த்துக்கொள்ளவும்.
இதற்கு முன் விண்டோஸ் பயனர் கணக்கிற்கு கடவுச்சொல்லை உருவாக்கி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம்.
பின் OK பொத்தானை அழுத்தவும். இப்போது உங்கள் பயனர் கணக்கிற்கு USB பூட்டு உருவாக்கப்பட்டுவிட்டதாக செய்தி வரும்.
பின் கணினிக்குள் நீங்கள் உள்நுழையும் போது கடவுச்சொல் கேட்கும் அதற்கு பதிலாக USB ட்ரைவினை கணினியில் பொருத்தினால் போதும் பயனர் கணக்கு தானகவே திறக்கும்.
இயங்குதளங்கள்
விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா , ஏழு மற்றும் எட்டு ஆகிய இயங்குதளங்களுக்கு பொருந்தும்.
மெமரி ஸ்டிக்கில் உங்கள் கம்ப்யூட்டர்
Posted: February 20, 2014 in கணினி தகவல்கள்
மெமரி ஸ்டிக்கில் உங்கள் கம்ப்யூட்டர் நம்மில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். வீட்டில் நம் கம்ப்யூட்டரில் நாம் விரும்பும் பிரவுசரில் இணைய உலா வருவோம்; அதில் புக்மார்க் செய்த தளங்களை மட்டுமே பார்ப்போம். பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பயன்படுத்தி வரும் நம் பிரிய இமெயில் கிளையண்ட் புரோகிராமினை நம் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்து பயன்படுத்துவோம். சரி, அதற்கென்ன என்கிறீர்களா! திடீரென வெளியூர் செல்கிறோம். அல்லது உங்கள் ஊரிலேயே வேறு ஒரு நண்பர் வீட்டிற்குச் செல்கிறோம். அங்கு இன்டர்நெட்டில் ஒன்றை உங்கள் நண்பருக்குக் காட்ட விரும்புகிறீர்கள். நண்பரின் கம்ப்யூட்டரில் வேறு ஒரு பிரவுசர்; பட்டன்களெல்லாம் மாறி இருக்கிறது. புக்மார்க் எல்லாம் எப்படி இருக்கும்? தடுமாறுகிறீர்கள், இல்லையா? அதே போலத் தான் இமெயில் கிளையண்ட் புரோகிராம் மற்றும் வேர்ட் புராசசிங் சாப்ட்வேர் தொகுப்புகளும்.இதற்காக நம் சிபியூ டவரைத் தூக்கிக் கொண்டு செல்லவா முடியும்? என்று நீங்கள் கேட்கலாம். அதெல்லாம் வேண்டாம். ஒரு சின்ன பிளாஷ் டிரைவ் இருந்தால் போதும். உங்களுடைய பிரியமான, உங்களுடைய விருப்பங்களுக்கேற்றபடி வடிவமைக்கப் பட்ட சாப்ட்வேர் புரோகிராம்களைத் தூக்கிச் சென்று பயன்படுத்தலாம். ஒரு மெமரி ஸ்டிக்கில் எடுத்துச் சென்று உங்களுடையதாக மட்டும் பயன்படுத்தும் பல புரோகிராம்கள் இப்போது புழக்கத் தில் உள்ளன. அவற்றைப் பார்ப்போம். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிளாஷ் டிரைவில் நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் வேர்ட் புரோகிராம் முழுவதையும் இன்ஸ்டால் செய்து கொண்டு போய் பயன்படுத்த முடியாது. இதற்கென போர்டபிள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் உள்ளன. அவற்றைத்தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும். அவை புரோகிராம்களையும் அதில் உள்ள ஸ்பெஷல் செட்டிங்குகளையும் பதிந்து வைத்து எடுத்துச் சென்று பயன்படுத்த தருகின்றன. இப்படி அனைத்து புரோகிராம்களும் நமக்குக் கிடைப்பதில்லை. ஒரு சில முக்கிய பயன்பாடு களுக்கான போர்ட்டபிள் புரோகிராம்கள் கிடைக்கின்றன. முதலில் இன்டர்நெட் பிரவுஸ் செய்வதற்கான புரோகிராம் குறித்து பார்க்கலாம். இது பயர்பாக்ஸ் வெப் பிரவுசர் புரோகிராம். இதற்கு ஒரு மெமரி கீ ஸ்டிக்கில் 30 எம்பி அளவு இடம் இருந்தால் போதும். இதனைhttp://www.portableapps.com/apps.internet/firefox_portable என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். இதனை முதலில் டெஸ்க்டாப்பில் டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். பின் மெமரி ஸ்டிக்கை அதன் ஸ்லாட்டில் செருகி ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள். பின் டெஸ்க்டாப்பில் இருக்கும் புரோகிராமினை இருமுறை கிளிக் செய்து இன்ஸ்டாலேஷன் செயல்பாட்டை மேற்கொள் ளுங்கள். முதலில் கிடைக்கும் விண்டோக்களில் லைசன்ஸ் அக்ரிமெண்ட் ஆகியவற்றிற்கு சரி என்று கிளிக் செய்து எங்கு இன்ஸ்டால் செய்திட என்று கேட்கும்போது மெமரி ஸ்டிக்கின் டிரைவைத் தேர்ந்தெடுத்து ஓகே கொடுக்கவும். சில நிமிடங்களில் மெமரி ஸ்டிக்கில் புதிய போல்டர் ஒன்று உருவாக்கப்பட்டு பயர்பாக்ஸின் போர்டபிள் பதிப்பு ஒன்று அதில் இருக்கும். இதன் மீது டபுள் கிளிக் செய்து இயக்கிப் பார்க்கவும். மெமரி ஸ்டிக்கில் இருந்து இயங்கும் பிற புரோகிராம்கள் மற்றும் பைல்களைப் போல இதுவும் சற்று மெதுவாகத்தான் இயங்கும். அது குறித்து கவலைப் படாமல் தொடர்ந்து பிரவுஸ் செய்திடுங்கள். உங்கள் வழக்கமான செட்டிங்குகளை ஏற்படுத்துங்கள். புக் மார்க்குகளை உருவாக்குங்கள். இனி இந்த மெமரி ஸ்டிக் மூலம் நீங்கள் யாருடைய கம்ப்யூட்டரில் வேண்டுமென்றாலும் உங்களுக்குப் பிரியமான பிரவுசர் மூலம் இன்டர்நெட் உலா வரலாம். போர்ட்டபிள் பயர்பாக்ஸ் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் இன்டர்நெட் தளம் சென்று இமெயில்களைக் காண முடியும் என்றாலும் நீங்கள் உங்களுடைய இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் மூலம் அவர்களின் சர்வரில் இருந்து மெயில் களை டவுண்லோட் செய்திட உங்களுக்கு ஒரு இமெயில் கிளையண்ட் புரோகிராம் தேவை. இதற்கென தண்டர்பேர்ட் போர்ட்டபிள் இமெயில் கிளையண்ட் புரோகிராம் கிடைக்கிறது.http://www.portableapps.com/nes/20080502_ thunderbird_portable_2.0.0.14 என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இதனை டவுண்லோட் செய்து கொள்ளலாம். ஏற்கனவே முன் பத்தியில் போர்ட்டபிள் பயர்பாக்ஸ் புரோகிராமினை மெமரி ஸ்டிக்கில் இன்ஸ்டால் செய்தது போல இதனையும் இன்ஸ்டால் செய்திடவும். இன்ஸ்டால் செய்து இயக்கி எப்படி டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள தண்டர்பேர்ட் தொகுப்பில் அக்கவுண்ட் உருவாக்கி இமெயில்களை டவுண்லோட் செய்து கையாண்டீர்களோ அதே போல இதிலும் செயல்படலாம். ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் டவுண்லோட் செய்திடும் இமெயில்களெல்லாம் மெமரி ஸ்டிக்கிலேயே இடம் பெறும். எனவே மிக அதிக அளவில் இமெயில்களைப் பெறுபவர்கள் சற்று கவனத்துடன் அவற்றை டெஸ்க் டாப்பிற்கு அல்லது இணையத்தில் உள்ள ஸ்டோரேஜ் டிரைவ்களுக்கு மாற்றிவிட வேண்டும். இந்த தொல்லையைத் தவிர்க்க விடுமுறை நாட்களில் வெளியே செல்கையில் அவசியம் ஏற்பட்டால் மட்டும் இந்த மெமரி ஸ்டிக் இமெயில் டவுண்லோடிங் செயல்பாட்டை மேற்கொள்ளவும்.ஓகே. உங்கள் ஸ்டிக் மூலம் நீங்கள் விரும்பும் வகையில் இணையம் செல்வதும் இமெயில் பார்ப்பதுவும் சரி. வேறு டெக்ஸ்ட் உருவாக்கும் செயல்பாடுகளை மெமரி ஸ்டிக் மூலம் மேற்கொள்வது எப்படி? அதிர்ஷ்டவசமாக நமக்கு ஓர் அருமையான வேர்ட் பிராசசிங் புரோகிராம் கிடைத்துள்ளது. எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு தரும் அனைத்து புரோகிராம் வசதிகளும் இதில் உள்ளன. அது ஓப்பன் ஆபீஸ் என அழைக்கப்படும் புரோகிராம் ஆகும். ஓப்பன் ஆபீஸ் சற்று பெரிய புரோகிராம். மெமரி ஸ்டிக்கில் 190 எம்பி இடம் எடுத்துக் கொள்கிறது. இதனை http://tinyurl.com/y84z89 என்ற தளத்திலிருந்து இன்ஸ்டால் செய்திடலாம். இதனை இன்ஸ்டால் செய்வது பயர்பாக்ஸ் மற்றும் தண்டர் பேர்டைக் காட்டிலும் எளிதானது. ஏனென்றால் லைசன்ஸ், கண்டிஷன் என்பதெல்லாம் கிடையாது. இது சற்று நேரம் பிடிக்கும் என்பதால் மெமரி ஸ்டிக்கில் பதியும்போது பொறுமையாக இதனைப் பதிய வேண்டும். இதுவும் செயல்படுகையில் சற்று மெதுவாகவே செயலாற்றும் என்றாலும் இது தரும் வசதிகளுக்காக இதனைப் பொறுத்துக் கொள்ளலாம். போட்டோக்களைக் கையாளவும் நமக்கு ஒரு போர்ட்டபிள் அப்ளிகேஷன் உள்ளது. இதனை எடிட்ணீ என்று அழைக்கின்றனர். இதனை http://www.portableapps.com/apps/ graphics_pictures/gimp_portable என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். இது மெமரி ஸ்டிக்கில் 18 எம்பி இடத்தைக் கேட்கிறது. இந்த பைலை டவுண்லோட் செய்த பின்னர் டபுள் கிளிக் செய்து Extract என்பதில் கிளிக் செய்திடவும். இது Gimp portable என்ற போல்டரை உருவாக்கும். இந்த போல்டரை அப்படியே மெமரி ஸ்டிக்கில் காப்பி செய்திடவும். பின் இன்ஸ்டால் செய்திடவும். பயர் பாக்ஸ், தண்டர் பேர்ட், ஓப்பன் ஆபீஸ் போல இது விண்டோஸ் மற்றும் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் நன்றாக இயங்குகிறது. போட்டோக்களைக் கையாளவும் ஒரிஜினல் ஆர்ட் ஒர்க் மேற் கொள்ளவும் தேவையான அனைத்து டூல்களும் இந்த புரோகிராமில் கிடைக்கின்றன. பெரும்பான் மையான இமேஜ் பைல்களை இது ஏற்றுக் கொள்கிறது. மேலே சொன்னவை எல்லாம் கடமைகளை மேற்கொள்ள நமக்கு உதவிடும் போர்ட்டபிள் அப்ளிகேஷன்கள். பொழுது போக்குவதற்கான அப்ளிகேஷன்கள் ஒன்றுமே கிடையாதா? என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். VLC என்ற புரோகிராம் இதற்கெனவே தயாரிக்கப்பட்டு கிடைக்கிறது. மெமரி ஸ்டிக்கில் 17 எம்பி இடத்தை மட்டுமே எடுத்துக் கொள்கிறது. இதனை http://tinyurl.com/2erg6s என்ற தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம். மேலே சொன்ன வழிகளிலேயே இதனையும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். எம்பி3, ஙிMஅ மற்றும் டிவ் எக்ஸ் வீடியோ போன்ற பலவகை ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை இந்த போர்ட்டபிள் புரோகிராம் மூலம் இயக்கலாம். பி.டி.எப். பைல்களை நாம் அடிக்கடி திறந்து படிக்க வேண்டியுள்ளது. சிலர் இந்த பைல்களை அறவே பயன்படுத்துவதில்லை. அப்படிப்பட்டவர்களின் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துகையில் நாம் பி.டி.எப். பைல்களை எப்படி படிக்க முடியும். இதற்கெனவேhttp://tinyurl.com/2Vr39c என்ற தளத்தில் Sumatra PDF என்ற புரோகிராம் கிடைக்கிறது. இதே போல Clamwin Portable என்ற புரோகிராம் ஆண்டி வைரஸ் புரோகிராமாகவும், 7Zip என்ற புரோகிராம் விண்ஸிப் புரோகிராம் போலவும் செயல்படுகின்றன. ஒரு காலத்தில் செங்கல் ஒன்றில் பாதியளவு ஹார்ட் டிஸ்க் ஒன்று எடுத்துச் சென்று பயன்படுத்தும் விதத்தில் 20 எம்பி டேட்டாவை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. இன்று பாக்கெட்டில் பல ஜிபி டேட்டாவை எடுத்துச் செல்ல முடிகிறது. மேலே குறிப்பிட்ட போர்ட்டபிள் அப்ளிகேஷன்களை ஒரு மெமரி ஸ்டிக்கில் பதிந்து எடுத்து செல்வதன் மூலம் ஒரு கம்ப்யூட்டரை அல்லவா பாக்கெட்டில் எடுத்துச் செல்கிறோம்.
RAM அண்ட் ROM வித்தியாசம் தெரியுமா?
கம்ப்யூட்டரைப்பயன்படுத்துவதற்கு அதன் அனைத்து தொழில் நுட்பச் சொற்களைத் தெரிந்து கொள்வது அவசியமில்லை; என்றாலும் ஒரு சிலவற்றின் அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து கொள்வது நாம் கம்ப்யூட்டரைக் கையாள்வதனை எளிதாக்குவதனுடன் பயனுள்ளதாகவும் மாற்றும். அவ்வகையில் கம்ப்யூட்டரில் உள்ள இருவகையான அடிப்படை மெமரி எனப்படும் நினைவகங்களைத் தெரிந்து கொள்ளலாம். கம்ப்யூட்டர் தன்னிடம் இடும் தகவல்களை 0 மற்றும் 1 என்ற இரு இலக்கங்களின் கூட்டு அமைப்பில்தான் நினைவில் கொள்கிறது. எனவே தான் இந்த இரண்டையும் பைனரி (இரண்டு) டிஜிட் (இலக்கங்கள்) என அழைக்கின்றனர். இந்த சொல்லின் சுருக்கமே பிட். இந்த இரு எண்கள் (பைனரி டிஜிட்கள்) மொத்தமாக எட்டுமுறை எழுதப்பட்ட கூட்டே ஒரு பைட். எனவே ஒரு பைட் என்பது எட்டு பைனரி டிஜிட் அடங்கிய ஒரு தொகுப்பு. கம்ப்யூட்டருக்கு ஒரு எழுத்து அல்லது எண்ணை எழுதி வைக்க ஒரு பைட் போதும். இப்படியே மொத்த மொத்தமாய் எழுதுகையில் 1024 பைட்கள் ஒரு கிலோ பைட் என்றும் (ஒரு கேபி) 1024 கிலோ பைட்கள் ஒரு மெகா பைட் (எம் பி) என்றும் 1024 மெகா பைட்கள் ஒரு கிகா பைட் என்றும் 1024 கிகா பைட்கள் ஒரு டெரா பைட் என்றும் அழைக்கப் படுகின்றன. இந்த பெருக்கம் குறித்து ஏற்கனவே இங்கு எழுதப்பட்டது. கம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு வந்த புதிதில் ஒரு மெகா பைட் அளவிலான தகவல் தொகுப்பு அல்லது டிஸ்க்குகள் மிகப் பெரிதாக எண்ணப்பட்டன. ஆனால் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த நாளில் கிகாபைட்கள் தூசியாய் எண்ணப்பட்டு டெராபைட் கள் சாதாரணமாய்ப் பேசப் படும் அளவிற்கு வந்துவிட்டன. என்ன வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் தகவல் நினைவகங்கள் (டேட்டா மெமரி) இதே அளவுகளில் தான் பேசப்படுகின்றன. கம்ப்யூட்டரில் மெமரி பல நிலைகளில் பல்வேறு பயன் பாடுகளில் உள்ளது. இவற்றில் RAM என்பது Random Access Memory என்பதன் சுருக்கம் ஆகும். கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் உறுப்பாக மதர்போர்டில் பதிந்தோ அல்லது வயர் மூலம் இணைக்கப்பட்டோ கிடைக்கிறது. கம்ப்யூட்டர் சரியாக இயங்கிட சில அடிப்படை புரோகிராம்களை இயக்கவும் சில கட்டளைகளைச் செயல்படுத்தவும் RAM பயன்படுகிறது. இந்த நினைவகம் கம்ப்யூட்டர் மின்சக்தியைப் பெற்ற பின்னரே செயல்படும். நாம் பயன்படுத்தும் புரோகிராம்கள் RAM மெமரியில் தற்காலிகமாக எழுதப்பட்டு இயக்கப்படுகின்றன. RAM என்பதனை ஒரு பெரிய விளையாட்டு மைதானமாக எண்ணிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு புரோகிராமும் ஒரு குறிப் பிட்ட அளவு இடத்தை எடுத்துக் கொண்டு அங்கு இயங்குகின்றன. இந்த இடத்தில் ஒன்று அல்லது குறிப்பிட்ட அளவிலான புரோகிராம்களை எடுத்துக் கொள்ள முடியும். ஏனென்றால் கீஅM மெமரியின் அளவு வரையறை செய்யப்பட்டதே. ஒரு புரோகிராமினை நீங்கள் முடித்து மூடுகையில் அந்த புரோகிராம் RAM மெமரியில் இருந்து எடுக்கப்படுகிறது. அந்த புரோகிராம் இருந்த இடத்தில் வேறு புரோகிராம் வைக்கப்பட்டு பயன்படுத்தப்படலாம். சில வேளைகளில் விண்டோஸ் உட்பட சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் புரோகிராம்களை மூடியபின்னரும் மெமரியின் இடத்தை அதற்கென வைத்திருக்கும். எப்படி இருந்தாலும் மின்சக்தியின் அடிப்படையிலேயே RAM மெமரி இயங்குவதால் மின்சக்தியினை நிறுத்தினால் அனைத்து புரோகிராம்களும் RAM மெமரியிலிருந்து நீக்கப்பட்டு கிளீன் ஸ்லேட் ஆகிவிடும். நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் புரோகிராம்கள் அல்லது தகவல் களைக் கொண்டு இயக்க விரும்பி னால் உங்கள் கம்ப்யூட்டரில் அதிக RAM மெமரி வேண்டியதிருக்கும். அதிக எண்ணிக்கையில் பஸ்கள் வந்து செல்ல பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்திட பக்கத்து இடத்தை வளைத்துப் போடுவது போல கூடுதலாக சற்று இடத்தை இணைப்பதுதான் அதிக மெமரியைத் தரும். இதனை கூடுதல் ராம் மெமரி ஸ்டிக் இணைத்து மேற்கொள்ளலாம். இது சிறிய செவ்வக வடிவிலான ஸ்டிக் வடிவில் கிடைக்கின்றன. இதில் மெமரி மாட்யூல்கள் எனப்படும் காலி இடங்கள் இருக்கும். இவற் றை கம்ப்யூட்டர் மதர் போர்டில் இதற்கென உள்ள இடங்களில் இணைத்து வைக்கலாம். இவை இருவகைகளில் தற்போது பிரபலமாய் உள்ளன. அவை: SIMM எனப்படும் Single Inline Memory Module மற்றும் DIMM எனப்படும் Dual Inline Memory Module ஆகும். முதல் வகை இன்னும் புழக்கத்தில் இருந்தாலும் இரண்டாவது வகையே அடிப்படை தரத்தைக் கொண்டதாக ஆக்கப்பட்டுள்ளது. உங்கள் கம்ப்யூட்டரின் மெமரி அதிக அளவில் இருந்தால் தான் நிறைய அளவிலான எண்ணிக்கையில் புரோகிராம்களை இயக்க முடியும். தற்போதைய மல்ட்டி மீடியா (ஆடியோ, வீடியோ, படங்கள் ஆகியன) புரோகிராம்கள் பெரிய அளவில் அமைவதால் அவற்றைக் கையாள அதிக இடம் தேவையாய் உள்ளது. இன்றைய நிலையில் ஒரு ஜிபி ராம் மெமரி ஒரு கம்ப்யூட்டர் இயங்க தேவையாய் உள்ளது. இனி அடுத்ததான மெமரி குறித்து பார்க்கலாம். ROM என்பது Read Only Memory என்பதன் சுருக்கமாகும். மதர் போர்டில் உள்ள சிப்களில் மாற்றமுடியாத கட்டளைகள் அடங்கிய புரோகிராம்களைக் கொண்டுள்ள மெமரி இது. கம்ப்யூட்டர் இயக்கத்தில் உள்ளதோ இல்லையோ இதில் உள்ள புரோகிராம்கள் இயங்குவதற்கு தயாராய் எப்போதும் ரெடியாக இருக்கும். உங்கள் கம்ப்யூட்டரை இயக்கத் தேவையான சில அடிப்படை புரோகிராம்களை இது கொண்டிருக்கும். இவை கம்ப்யூட்டர் இயக்கத்தின் உயிர்நாடியான இயக்கத்தைக் கொண்டிருப்பதால் இவை மாற்றப்படக் கூடாது. அதே போல இதனை மாற்றி வேறு சில புரோகிராம்களை இணைப்பதுவும் கூடாது. இதனை மாற்றுவதும் அவ்வளவு எளிதான வேலை அல்ல. வீட்டுக்கு கேஸ் மற்றும் மின்சாரம் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் இந்த ROM மெமரியில் உள்ள புரோகிராம்கள். எனவே இந்த வகை மெமரியே லேசர் பிரிண்டர், கால்குலேட்டர் போன்ற சாதனங்களிலும் சில விஷயங்களை எப்போதும் நினைவில் கொண்டு இயங்க பயன்படுத்தப்படுகின்றன. கம்ப்யூட்டரின் திறன் அதிகப்படுத்தப்படுகிறது என்று சொல்கையில் இந்த இரு நினைவகங்களும் அதில் நிச்சயமாய் சம்பந்தப் படுத்தப்படுகின்றன. உங்கள் கம்ப்யூட்டரின் RAM மெமரியை எவ்வளவு அதிகப்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் கம்ப்யூட்டரின் திறனும் கூடும்.
No comments:
Post a Comment