Wednesday, 25 May 2016

*ЁЯФ░10 роо் ро╡роХுрок்рокு рооро▒்ро▒ுроо் +2 ро╡роХுрок்рокு рокроЯிрод்родு рооுроЯிрод்родро╡ро░ா роиீроЩ்роХро│்*


*🔰முதலில்  செய்யவேண்டியது*

*🔰 உங்கள் படிப்பை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும*்

*🔰ஆன் லைனில்  வேலைவாய்ப்பு பதிவு செய்வது எப்படி❓*

🔰மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப் பட்டுள்ளன.

🔰புதியதாக ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி
இதற்கு

🎟குடும்ப அட்டை,
🎟ஜாதி சான்றிதழ்,
🎟10th (or)  12th  மதிப்பெண் அட்டை கண்டிப்பாக கையில் வைத்திருத்தல் வேண்டும். முதலில்

🎟இணையதள முகவரி www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று

🔰click here for new user ID registration என்று இருக்கும்.

🔰அதை கிளிக் செய்தால் ஒரு விண்டோ ஓபன் ஆகும் அதில் I agree என்று சொடுக்கி அடுத்து வரும் பக்கத்தில்

🔰பதிவு செய்யும் விண்ணப்பதாரரின் பெயர்,
ஈமெயில் முகவரி, user id என்ற இடத்தில் புதியதாக ஒரு ID  கொடுக்கவும், பின்பு அப்பா பெயர், பிறந்த தேதி, குடும்ப அட்டை எண்ணையும் Image Code என்ற இடத்தில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் codeஐ கொடுத்து Save செய்தால் உங்களுகென்று ஒரு ID Create ஆகி விடும். அடுத்து வரும் பக்கத்தில்

🔰உங்களது Personal detail, Contact detail, Qualification detail, Technical detail ஆகியவற்றை பூர்த்தி செய்து Save செய்தால் உங்களது Register Number Create ஆகிவிடும்.

🔰குறிப்பு 1
Qualification detail பூர்த்தி செய்தவுடன் add என்று பட்டன் இருக்கும் அதை கிளிக் செய்தால் ஒரு சின்ன விண்டோ ஓபன் ஆகும் அதில் கிளிக் செய்து Save கொடுக்கவும். இதே போன்று Technical Detailம் செய்ய வேண்டும்.

🔰குறிப்பு 2
மேலே சொன்ன அனைத்தும் முடிவடைந்தவுடன் Home பகுதிக்கு சென்று பார்த்தால் Print ID Card என்று இருக்கும் அதை கிளிக் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ளலாம்.

🔰குறிப்பு 3
ஏதேனும் தவறாக செய்திருந்தால் Home  பகுதியில் Modify Contact இருக்கும் அதில் சென்று மாற்றி கொள்ளலாம்.

🔰குறிப்பு 4
Update Profileல் சென்று Renewal செய்து கொள்ளலாம்.

🔰அவ்வளவு தான் இனி கால விரையமுமின்றி வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Tuesday, 24 May 2016

ро╡ி.роП.роУ. родேро░்ро╡ு ро░роХроЪிропроо்! - роОро╕். роЪெро▓்ро╡ро░ாроЬ்



                    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளதை அறிவீர்கள். இவ்வறிவிப்பின் மூலம் வி.ஏ.ஓ. பதவிக்கு தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்க எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 300 ஆகும். இவற்றை பொது அறிவு பாடத்திலிருந்து 100 கேள்விகளும், பொதுத்தமிழ் பாடத்திலிருந்து 100 கேள்விகளும் கேட்கப்படும். அதன்படி ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். இவற்றுள் அதிகமான சரியான விடைகளை யார் அளிக் கிறார்களோ அவர்களே வெற்றி பெற முடியும். இதில் ஐ.ஏ.எஸ்., வங்கி, இரயில்வே தேர்வுகள் போன்று நெகடிவ் மதிப்பெண்கள் கிடையாது. இத்தேர்வில் ஒருவர்  வெற்றிப் பெற்று வி.ஏ.ஓ. ஆக வேண்டுமெனில் தமிழ் பாடத்தில் 100  வினாக்களுக்கு சரியான  விடைகளையும், பொது அறிவு பாடத்தில் 85 வினாக்களுக்கு சரியாகவும், ஆக மொத்தம் 200 வினாக்களில் 185 கேள்விகளுக்கு சரியான பதில் தருபவர்கள் உறுதியாக  வெற்ற பெற முடியும். 

அது சரி, பயிற்சி மையங்களுக்கு செல்லாமல், தனியாக தயார் செய்பவர்களால் இந்த அளவுக்கு மதிப்பெண்களை பெற முடியுமா? என்றால் முடியும். நிச்சயம் உங்களால் வெற்றி பெற முடியும். எந்த பயிற்சி மையங் களிலும் சென்று படிக்காமல் 190 கேள்விகளுக்கு மேல் சரியாக பதில் தர உங்களால் முடியும்.  அதற்கு வழிகாட்டவும், உதவி செய்யவும் "பொது அறிவு உலகம்'  தயாராக உள்ளது.      அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, இத்தேர்வின் போக்கினை நன்கு புரிந்துக் கொண்டு அதற்கேற்ற முறையில் படிக்க     வேண்டும். பயிற்சி செய்ய வேண்டும்.  இத்தேர்வில் 200 கேள்விகள் எப்படி கேட்கப் படுகின்றன, அதற்கு எப்படி தயார் செய்வது என்பதை பார்ப்போம்.

பொது அறிவும், பொதுத்தமிழும்

பொது அறிவுக்கான 100 வினாக்களும்  டி.என்.பி.எஸ்.சி.-யின் சிலபஸின்படி    கேட்கப்பட்டாலும், அவை மிக நுட்பமாக ஆராய்ந்தோமெனில் பின்வருமாறுதான்    கேட்கப்படுகின்றன. இந்திய வரலாறு மற்றும் இந்திய விடுதலைப் போராட்டம் பாடத்திலிருந்து 6 அல்லது 7 கேள்விகள், புவியியல் பாடத்தில் பொதுப் புவியியல், தமிழக புவியியல், இந்திய புவியியல் உட்பட 7 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்திய  அரசிய லமைப்பு-8, இந்திய பொருளாதாரம்-8, இயற்பியல்-4, வேதியியல்-4, உயிரியல்-12, புள்ளியியல்-4        அல்லது 3, அறிவுக்கூர்மை (கணிதம்)-8, இந்தியப் பொது அறிவு-5, நடப்பு நிகழ்வுகள்-8, அறிவியல்-2, கம்ப்யூட்டர்-2, இந்தியப் பண்பாடு-3, தமிழக பொது அறிவு-7, தமிழக வரலாறு-6, தமிழ் இலக்கிய வரலாறு-3 என்றவாறு கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதை பார்த்ததும் ஒவ்வொரு பாடத்திலிருந்து இவ்வளவு கேள்விகள் தானா என நீங்கள் எண்ணக்கூடும். ஆனால் 1 கேள்விக்கூட உங்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியுடையது, நீங்கள் இத்தேர்வில் வெற்றிப் பெற வேண்டுமானால் அனைத்து கேள்விக்கும் பதில் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில்தான் படிக்க வேண்டும்.

அடுத்து பொதுத்தமிழ் பார்ப்போம்.  டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ள பொதுத்தமிழ் சிலபஸானது, 20 பாடக்குறிப்புகள் உள்ள டக்கியது. அதில் ஒவ்வொன்றுக்கும் 5 கேள்விகள் வீதம் மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன.

படிக்கும் முறை

வெற்றியாளர்கள் புதிதாக எதையும் செய்வதில்லை. மற்றவர்கள் செய்வதையே புதுமையாக செய்கிறார்கள். அதுபோல நீங்கள் வெற்றிபெற்றே தீர வேண்டுமானால் புதிய முறையில் தேர்வை அணுக வேண்டியது        அவசியம். முதலில் இத்தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள தமிழ்நாட்டு அரசு பாடநூல் நிறுவனத்தின் பாட நூல்களிலிருந்தே கேட்கப்படுகின்றது என்பது உண்மை. ஆனாலும் கம்ப்யூட்டர், புள்ளியியல், அறவியல், இந்தியப் பண்பாடு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவை 11, 12-ம் வகுப்பு பாடநூல்கள். இந்திய பொது அறிவு, தமிழ்நாடு பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் போன்றவை வெளியிலிருந்து கேட்கப்படும் வினாக்கள். அதனால் பாடநூல்களை முழுவது மாக படித்து கொள்ளுங்கள்.  சிலபஸ் உள்ளடக்கிய (பாடநூல்கள் மற்ற முக்கிய நூல்கள்) அனைத்து பாடக்குறிப்புகளையும் "பொது அறிவு உலகம்' இதழில் விரிவாக தந்து வரு கிறோம். அதனையும் சேர்த்து படித்து கொள்ளுங்கள். அதன் பின்னர், பொது அறிவு உலகம் வெளியிடும் 5 யஆஞ தேர்வு சிறப் பிதழ்களில், தேர்வுக்கு கேட்கப்படவுள்ள மிக மிக முக்கிய வினா-விடைகள், அடிக்கடி     கேட்கப்படும் முந்தைய தேர்வு வினா-விடைகள், மிக முக்கியமான டி.என்.பி.எஸ்.சி கேள்விகளை தயாரிக்கும் அதே முறையில் அதே நூல்    களிலிருந்து 15,000-த்திற்கும் மேற்பட்ட          வினா-விடைகளை 5 சிறப்பிதழ்களாக வெளியிட்டு வருகிறோம். இவற்றை அனைத் தையும் வாங்கி பயிற்சி செய்யுங்கள்.

மாதிரி தேர்வுகள்

படித்துக்கொண்டே இருந்தால் சோர்வுதான் வரும். ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடித்தவுடன்யஆஞ  சிறப்பிதழை கொண்டு மாதிரி தேர்வு எழுதி பாருங்கள்.  உங்களை நீங்களே சோதித்துக் கொண்டால், எப்படி படித்துள்ளீர்கள், இன்னும் எப்படி படிக்க வேண்டும் என்பதை சுய மதிப்பிடலாம். இதன் மூலம்  தேர்வை வென்று விடுவோம் என்ற தைரியமும் கிடைக்கும். அதேபோல் பொதுத்தமிழில் நூறு வினாக்களுக்கும் சரியான மதிப்பெண்களை பெற்றுத்தரும் நோக்கில் "பொதுத்தமிழுக்கான சிறப்பிதழ்' கல்லூரி பேராசிரியர்களின் துணையுடன் தயாரித்துள்ளோம். இப்போது அச்சில் உள்ளது. விரைவில் வெளிவரும். எமது அனைத்து வெளியீடுகளும் யஆஞ தேர்வுக்கு 100 சதவீதம் பொருந்தும் முறையில் தயாரிக்கப்படுதால்  மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முந்தைய குரூப்-2, ஊ.ஞ., காவலர், ந.ஒ. தேர்வுகளுக்கு       சிறந்த முறையில் பாடத்தொகுப்புகள் மற்றும் மாதிரி வினா-விடைகள் தொகுப்புகள் வெளி யிட்டுள்ளோம். அவற்றில் அதிக அளவிலான    வினாக்கள் தேர்வுகளில் கேட்கப்பட்டு பாராட்டுக்களையும் பெற்றோம். சமீபத்தில் பிரபலமான நாளிதழ் ஒன்று மார்க்கெட் கைடை படிக்க வேண்டாம் என்று செய்தி வெளியிட்டனர். அதன்பின் அந்த நாளிதழ் வெளியிடும் வி.ஏ.ஓ. தேர்வு மாதிரி வினா-விடை (இணைப்பு) குறிப்பிட்ட சில மார்க்கெட் கைடி லிருந்தே எடுக்கப்பட்டு, வெளியிடப்படுகிறது. அதுபோல இல்லாமல் பொது அறிவு உலகம் மாணவர்கள் நலன் சார்ந்தே வெளிவருகிறது என்பதை அறிவீர்கள். 

வாசகர்களின் சந்தேகங்களும்அதற்கான பதில்களும்

 எண்ணற்ற பொது அறிவு உலகம் வாசக கள் பல்வேறு சந்தேகங்களை  கேட்டு வரு கின்றனர். அவர்களின் சந்தேகங்களை களைவது "பொது அறிவு உலக'த்தின் கடமை. அந்த அடிப்படையில் சமீபத்தில் கேட்கப்பட்ட சந்தேகங்களை தொகுத்து இங்கு விளக்கம் அளிக்க முற்பட்டுள்ளோம்.

சரியாக எவ்வளவு பேர் வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்?

13 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன. அதில் 12 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகின. தொடர்ந்து அனைத்து விண்ணப்பங்களும் பிரிக்கப்பட்டு அடுக்கிவைத்து எண்ணும் பணி முழுவீச்சாக நடந்து வருகிறது. இந்த கட்டுரை எழுதும் வரை 9 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை கட்டி வைத்துவிட்டனர். மீதியுள்ளவற்றை தொடர்ந்து கட்டுமானப்பணி நடந்துவருகிறது. விற்பனையாகிய அளவிலான விண்ணப்பங்கள்  டி.என்.பி.எஸ்.சி அலுவல கத்திற்கு வரவில்லை. ஏனெனில் பல ஆயிரக் கணக்கான பேர் விண்ணப்பத்தை அனுப்பாமல் இருந்துவிட்டனர்.

எந்தெந்த காரணங்களால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்?

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான மிக முக்கிய மூன்று காரணங்கள்  ஒன்று, கையெழுத்திடாமல் விண்ணப்பத்தை அனுப்பி யிருத்தல். இரண்டு, தேர்வுக் கட்டணத்தை செலுத்தாமல் விட்டிருத்தல், குறிப்பாக ஆதிதிராவிடர்/அருந்ததியர், பழங்குடியினர் உடல் ஊனமுற்றோர், ஆதரவற்ற விதவை இவர்களுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவ திலிருந்து சலுகை அளிக்கப்பட்டுள்ளது.    ஆனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டப்படிப்பு தேர்ச்சி  பெற்றிருப்பின், முதல் மூன்றுமுறை மட்டும் தேர்வுக் கட்டணம் செலுத்தத் தேவை யில்லை. பட்டப்படிப்பு இல்லாமல் +2,          அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தால் கட்டாயம் தேர்வுக் கட்டணத்தை செலுத்தி யிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மூன்றாவ தாக சான்றிதழ்களில் முறைகேடு செய்தவர்கள். இவைகள் தவிர மற்ற எந்தவொரு காரணத்திற் காகவும் உங்களின் விண்ணப்பங்கள் உறுதியாக நிராகரிக்கப்படமாட்டாது. அட்டஸ்டேஷன் வாங்கவில்லை என்றாலோ, விண்ணப்பப் படிவத்தில் தெரியாமல் செய்த சிறியப் பிழை, ஒழுக்கம் மற்றும் நடத்தைச் சான்றிதழ்  அனுப் பாமலிருந்தாலோ இன்னும் எந்த ஒரு காரணத்திற்காகவும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படமாட்டாது. டி.என்.பி.எஸ்.சி சேர்மன் அவர்களும் மற்ற அதிகாரிகளும் மனிதநேயம் கொண்டவர்கள். உங்களின் விண்ணப்பங்களை உங்களின் வாழ்க்கையாக கருதுகிறார்கள். அதனால் விண்ணப்பங்களை நிராகரிக்க மாட்டார்கள்.

வி.ஏ.ஓ. தேர்வு எப்போது?

 2007-ம் ஆண்டு 2500 காலியிடங்களுக்கான வி.ஏ.ஓ. தேர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப் பித்தனர். பின்னர் எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டு, 2007 ஜூன் 10-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதுபோல வி.ஏ.ஓ. போன்ற பெரிய தேர்வுகளை நடத்தும்போது எவ்வளவு பேர் விண்ணப்பிக்கிறார்களோ அதற்கு      தக்கவாறு வினாத்தாள்கள், தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.  

அதற்கு திட்டமிடவும் செயல்படுத்தவும் சிறிது காலம் தேவைப்படுவதால் தேதி        பின்னர் அறிவிப்பது இயல்பான ஒன்றாகும். எமக்கு கிடைத்த தகவல்படி ஜனவரி இரண்டாம் வாரத்தில்  வி.ஏ.ஓ. தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஆகஸ்ட் மாதம் முழுவதும் மருத்துவ பணிகளுக்கான நேர்காணல். செப்டம்பர் மாதம் முழுவதும் வி.ஏ.ஓ. தேர்வு விண்     ணப்பங்கள் பரிசீலனை மற்றும் சென்ற வருடம் நடைப்பெற்ற குரூப்- 2 தேர்வு முடிவுகள் தயாரித்தல். அக்டோபர் இரண்டாம் வாரத்தில் குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்பு மற்றும் குரூப்-1 தேர்வு முடிவுகளை தயாரித்தல்.  டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடுதல். இதன் பொருட்டு,  டி.என்.பி.எஸ்.சி தலைவர் அரங்க. செல்லதுரை ஐ.ஏ.எ.ஸ் அவர்கள் ஓய்வின்றி உழைக்கின்றார். வயதாகிவிட்டாலும் அவரின் வேகமும், திட்டமிடலும் மிகவும் சிறப்பான முறையில் உள்ளது. தமிழக இளைஞர்கள் மேல் மிகுந்த நேசம்  கொண்டதால், தனது காலத்திலேயே அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுதர வேண்டுமென நினைக்கிறார். அதையே கூறிவருகிறார்.

அடுத்த அறிவிப்பு ஏதேனும் உண்டா?

நிச்சயம் உண்டு. இப்போதுதான் வரு  வாய்த்துறை, சமூக நலத்துறை, வணிக வரித்துறை போன்ற பல்வேறு துறைகளிலும் உள்ள காலியிடங்கள் கண்டறிந்து தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அதனால் நவம்பர் மாதம் அறிவிக்கப்படும் குரூப்-2 தேர்வுக்கான காலியிடங்கள் சென்ற ஆண்டைவிட கூடுதலாக இருக்கும்.   

рокிро│ро╕் 2 рооாрогро╡ро░்роХро│ுроХ்роХாрой роЙроЯройроЯி родுрогைрод் родேро░்ро╡ு, роЬூрой், 22 рооுродро▓் роЬூро▓ை, 4 ро╡ро░ை роироЯроХ்роХுроо்' роОрой, роЕро░роЪு родேро░்ро╡ுрод் родுро▒ை роЕро▒ிро╡ிрод்родுро│்ро│родு.

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்வுக்கு வராதவர்களுக்காக, சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த துணைத் தேர்வு, ஜூன், 22 முதல் ஜூலை, 4 வரை நடக்கும். இந்த தேர்வை எழுத விரும்பும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள், தங்கள் பள்ளி மற்றும் தேர்வு மையம் மூலம் மட்டுமே, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்க முடியும். தனியார், 'பிரவுசிங்' மையங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியாது. தேர்வு எழுத விரும்புவோர், இன்று முதல் மே, 27 வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, 23 May 2016

TNPSC - VAO родேро░்ро╡ிро▓் ро╡ெро▒்ро▒ி рокெро▒ рооுроХ்роХிроп роХுро▒ிрок்рокுроХро│் !



'TNPSC - VAO' தேர்வில் வெற்றி பெற கீழுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்

1. நீங்கள் சமச்சீர் கல்வி புத்தகங்களை (6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களும்)  முழுமையாக படிக்க வேண்டும். 

2. அவற்றை படித்து முடித்த பிறகு , உங்களிடம் TNPSC Guide களை படிக்க வேண்டும். அப்பொழுதான் கைடில் இருக்கும் கேள்வி  பதில்கள் உங்களுக்கு உடனடியாக மனதில் நிற்கும். 

3. சுய தேர்வு எழுதி பழக வேண்டும். முந்தைய "TNPSC Group IV" குரூப் கேள்வி தாள்களை எடுத்துக்கொண்டு, தேர்வில் கொடுக்கப்படும்OMR சீட் போன்று உள்ள சீட்டில் நீங்களாகவே 3 மணி நேரத்திற்கு அந்த கேள்வித்தாள்களில் உள்ள கேள்விகளுக்கு Shade செய்து பழக வேண்டும். 

4. இவ்வாறு செய்யும்பொழுது தேர்வு நேரங்களில் Shading பிரச்னை மற்றும் பதட்டம் ஆகியவற்றை குறைக்க முடியும். அதே சமயம் ஒரு தேர்வை முழுமையாக எழுதிய பிறகு, அந்த கேள்வித்தாள்களுக்கான விடைகளை சரிபார்க்கும்பொழுது, உங்களுக்கு அந்த கேள்விகளுக்கான சரியான விடைகள் அனைத்தும் தெரிந்துவிடும். 

5. முடிந்தால் "TNPSC Coaching ClassK செல்லலாம். அவ்வாறு செல்லும்பொழுது, பணம் கொடுத்து படிப்பதால் அங்கு அவர்கள் கொடுக்கும் அறிவுரைகள் குறிப்புகள் மற்றும் தேர்வுகள் அனைத்துமே பயனுள்ளதாக அமையும். 

6. தொடர்ந்து படித்தல்: ஒரு முறை படித்துவிட்டோம். நமக்கெல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கு இருக்க கூடாது. தெரிந்த வினாக்களாக இருந்தாலும்,தெரியாத வினாக்களாக இருந்தாலும், அவைகளை தொடர்ந்து படித்துக்கொண்டிருக்க வேண்டும். 

7.நேரம் கிடைக்கும்போதெல்லாம் திருப்புதல் நடத்திக்கொண்டே இருக்க வேண்டும். கணிதம் போன்ற பாடங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கான சூத்திரங்கள், மற்றும் கணிதங்களை போட்டு, சரியான விடைகளை ஒரீரு வினாடிகளில் கண்டுபிடிக்கும் அளவிற்கு திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

8. செய்தி தாள் வாசிப்பது, அன்றாட நடப்பு நிகழ்வுகளை தெரிந்துகொள்வது பெரிதும் கைகொடுக்கும். பொது அறிவுப் பிரிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க இதுபோன்ற கற்றல் செய்கைகள் பயனுள்ளதாக இருக்கும். 

மேற்கண்ட குறிப்புகளை பின்பற்றினால் நிச்சயம் நீங்கள் TNPSC V.A.O. தேர்வில் கட்டாயம் வெற்றி பெறலாம். 

роХிро░ாроо роиிро░்ро╡ாроХроо் роХுро▒ிрод்род роХேро│்ро╡ி рокродிро▓்роХро│் | Tnpsc vao study material in tamil



1. கொடிய காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து விட்டால் அது பற்றி உடனே யாருக்கு தகவலளிக்க வேண்டும்?
(A) காவல்துறை
(B) வட்டாட்சியர்
(C) வனத்துறை
(D) இம்மூன்றும்

2. கேடி ரிஜிஸ்டரின் உள்ள நபர்களின் நடமாட்டம் பற்றி விஏஓ காவல் துறைக்கு தகவல் அறிக்கை அளிக்கலாம். இங்கு K.D என்பது
(A) Known Depradator
(B) Knife Depradator
(C) Killer Depradator
(D) Keen Depradato

3. கிராம நிர்வாக அலுவலர் பதவிகள் என்று முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணை குழுமத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டது?
(A) 12-12-1980
(B) 12-12-1990
(C) 12-12-1988
(D) 12-12-1999

4. தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆண்டு?
(A) 1972
(B) 1963
(C) 1986
(D) 1967

5. நீண்டகாலக் குத்தகை என்பது
(A) 3 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
(B) 5 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
(C) 8 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
(D) 10 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்

6. 'ஆ' பதிவேடு என்பது
(A) இராணுவ நில பதிவேடு
(B) ரயில்வே நில பதிவேடு
(C) இனாம்களின் நிலைப்புல பதிவேடு
(D) பசலி மாற்றம் பற்றிய பதிவேடு

7. தற்போது 'அ' பதிவேடு இவ்வாறு பராமரிக்கப்பட்டு வருகிறது
(A) விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடு
(B) கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடு
(C) ஒரு வருவாய் கிராமத்திற்கு இரண்டு அ பதிவேடுகள்
(D) இவை அனைத்தும்

8. இவற்றில் எந்த வரியை கிராம நிர்வாக அலுவலர் வசூலிப்பதில்லை?
(A) நிலவரி
(B) கடன்கள்
(C) அபிவிருத்தி வரி
(D) வருமானவரி

9. இவற்றில் எது குத்தகைக்குக் கொடுக்கப் பட்ட நிலங்களைப் பற்றிய நிலைப் பதிவேடாகும்
(A) பதிவேடு A
(B) பதிவேடு B
(C) பதிவேடு B1
(D) பதிவேடு C

10. நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் கால நிலக் குத்தகைகள் பதிவேடு எத்தனை பிரிவுகளாக பராமரிக்கப்பட வேண்டும்?
(A) நான்கு
(B) ஐந்து
(C) ஏழு

TNPSC Group 2, Group 4 родேро░்ро╡ுроХ்роХு родропாро░ாро╡родு роОрок்рокроЯி?



இதற்கென்று  தனியா கைடு, புத்தகம் எதையும் வாங்கத் தேவையில்லை. குரூப் 4-க்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரைக்கும்  இருக்கும் ஸ்டேட் போர்டு புத்தகங்கள், குரூப் 2-க்கு அதனுடன் சேர்த்து +1, +2 வரலாறு, புவியியல் இதைப் படித்தாலே போதும், எல்லாவற்றையும் படிப்பதைவிட பாடத் திட்டத்தை அறிந்து கொண்டு படிக்க வேண்டும். குரூப்4, குரூப்2 இரண்டுக்குமே அறிவியல் 20, கணக்கு 10, அரசியல் 10, வரலாறு 10, புவியியல் 10, பொருளியல் 10, பொது அறிவு 20, இதர கேள்விகள் 10, மொத்தம் 100, பொது தமிழ் 100 என மொத்தம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்.பொது தமிழில் அ முதல் ஒள வரைக்குமான பாடத்திட்டம்; அகர வரிசை, ஆங்கிலச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல், இலக்கணக் குறிப்பு, உவமையால் விளக்கப்படுதல், எதிர்ச்சொல் போன்றவைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். சமூக அறிவியலில் முக்கிய தினங்கள், ஐ.நா., சார்க் அமைப்புகள், வங்கி, தமிழ்நாடு ஆறுகள்... இதைப் பற்றி ஒரு கேள்வி கண்டிப்பாக இருக்கும். கணக்கு என்றால் முக்கோணவியல், எண்ணியல், அளவிடல், பகுமுறை வடிவியல், வடிவியல்; குரூப் 2-க்கு கூட்டுச் சராசரி, இடைநிலை அளவு, முகடு...இதிலிருந்து ஒரு கணக்கு கண்டிப்பாக வரும். பொது அறிவுக்கு தினசரி நாளிதழ்களைப் படித்து குறிப்பு எடுத்து வைத்தாலே போதுமானது. 

படிக்கிறபோது கோடு வேர்டு (Code Word) வைத்து படிக்க வேண்டும். உதராணமாக சோடியம், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் இதை 'சோகாபொமெ’ என மனதில் வைத்துக்கொண்டால், எளிதாக மனதில் பதியும். மறக்கவும் மறக்காது.

இப்படி கடினமாக உள்ளதை கோர்வேர்ட் மூலம் மிக எளிதாக மாற்றி படிக்கும்பொழுது, மிக எளிதாக அதிக எண்ணிக்கையில் கேள்விகளுக்கான பதில்களை தவறில்லாமல் மனதில் பதிய வைத்துக்கொள்ள முடியும்.

ஒரு முறை தேர்வில் தோல்வி அடைந்தாலும், தளராது தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருக்க வேண்டும். அப்பொழுதுதான் டி.என்.பி.எஸ்.சி தேர்விகள் கண்டிப்பாக வெற்றி பெற முடியும்.

தளராத நம்பிக்கையும், தொடர் முயற்சியும், புத்திசாலித்தனமான தாயாராதல் இருந்தால் வெற்றி உங்கள் வசம்தான்.

Friday, 20 May 2016

роХிро░ாроо роиிро░்ро╡ாроХроо் роХுро▒ிрод்род роХேро│்ро╡ி рокродிро▓்роХро│் | Tnpsc vao study material in tamil



1. கொடிய காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து விட்டால் அது பற்றி உடனே யாருக்கு தகவலளிக்க வேண்டும்?
(A) காவல்துறை
(B) வட்டாட்சியர்
(C) வனத்துறை
(D) இம்மூன்றும்

2. கேடி ரிஜிஸ்டரின் உள்ள நபர்களின் நடமாட்டம் பற்றி விஏஓ காவல் துறைக்கு தகவல் அறிக்கை அளிக்கலாம். இங்கு K.D என்பது
(A) Known Depradator
(B) Knife Depradator
(C) Killer Depradator
(D) Keen Depradato

3. கிராம நிர்வாக அலுவலர் பதவிகள் என்று முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணை குழுமத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டது?
(A) 12-12-1980
(B) 12-12-1990
(C) 12-12-1988
(D) 12-12-1999

4. தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆண்டு?
(A) 1972
(B) 1963
(C) 1986
(D) 1967

5. நீண்டகாலக் குத்தகை என்பது
(A) 3 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
(B) 5 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
(C) 8 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
(D) 10 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்

6. 'ஆ' பதிவேடு என்பது
(A) இராணுவ நில பதிவேடு
(B) ரயில்வே நில பதிவேடு
(C) இனாம்களின் நிலைப்புல பதிவேடு
(D) பசலி மாற்றம் பற்றிய பதிவேடு

7. தற்போது 'அ' பதிவேடு இவ்வாறு பராமரிக்கப்பட்டு வருகிறது
(A) விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடு
(B) கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடு
(C) ஒரு வருவாய் கிராமத்திற்கு இரண்டு அ பதிவேடுகள்
(D) இவை அனைத்தும்

8. இவற்றில் எந்த வரியை கிராம நிர்வாக அலுவலர் வசூலிப்பதில்லை?
(A) நிலவரி
(B) கடன்கள்
(C) அபிவிருத்தி வரி
(D) வருமானவரி

9. இவற்றில் எது குத்தகைக்குக் கொடுக்கப் பட்ட நிலங்களைப் பற்றிய நிலைப் பதிவேடாகும்
(A) பதிவேடு A
(B) பதிவேடு B
(C) பதிவேடு B1
(D) பதிவேடு C

10. நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் கால நிலக் குத்தகைகள் பதிவேடு எத்தனை பிரிவுகளாக பராமரிக்கப்பட வேண்டும்?
(A) நான்கு
(B) ஐந்து
(C) ஏழு