Thursday, 12 May 2016

கணினியை ரிப்பேர் ஆகாமல் பார்த்து கொள்ள எளிய தந்திரங்கள்.!!!

கணினி மற்றும் லேப்டாப்பை விரும்பி வாங்குபவர்கள் அதை பாதுகாப்பதில் கோட்டை விட்டு விடுகின்றனர். உங்கள் கருவியை பாழாக்கும் பல விஷயங்களை தெரிந்தும் தெரியாமலும் செய்து வருகின்றோம். அவை என்ன என்பதை அறிந்து முறையாக கணினியை பயன்படுத்தினால் உங்கள் கணினி மற்றும் லேப்டாப்பின் ஆயுளை நீட்டிக்க முடியும். அவை என்ன என்பதை பாருங்கள்.. 

கீபோர்டை சுத்தம் செய்யவும்

கீபோர்ட் கிலீனரை கொண்டு கீ போர்டை சுத்தம் செய்யவும். இதனால் கீ போர்ட் சுத்தமாக இருப்பதுடன் டைப் செய்வதற்கும் நன்றாக இருக்கும்.

பிரவுஸரை அப்கிரேட் செய்யவும்

நீங்கள் பழைய பிரவுஸரை பயன்படுத்தி கொண்டு இருந்தால் அதை அப்கிரேட் செய்து விடுங்கள். HTML 5 போன்ற தற்பொழுது நிலுவையில் உள்ள வர்ஷனை நிறுவி கொள்வது சிறந்தது.

லேப்டாப் கூளர் 
உங்கள் லேப்டாப் அடிக்கடி சூடாகும் என்பதால் அதற்கு நீங்கள் லேப்டாப் கூளர் பயன்படுத்தலாம். அதற்கு நீங்கள் உண்மையான கூளர் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை. அதற்கு பதில் கூளர் பையை பயன்படுத்தலாம்.

க்ரோம் நீட்டுப்புக்களை நிறுவவும்

உங்கள் பிரவுஸரில் extensionsஐ நிறுவவும். இதனால் செயல்கள் மிகவும் எளிமையாக நடைபெறும். தற்பொழுது நூற்றுக்கணக்கான Chrome browser extensions உள்ளன.

ஹார்டு டிரைவ் கோப்புகள்
உங்கள் கணினியில் நீங்கள் அதிகமாக கோப்புகளை வைத்திருந்தால் உங்கள் கணினி மெதுவாக செயல்படும். இதை தவிர்க்க சேமித்து வைத்துள்ள கோப்புகளை தனி ஹார்டு டிரைவில் சேமித்து வைத்து கொள்வது நல்லது.

கணினியின் கேபிலை முறைப்படுத்தவும்

உங்கள் கணினியின் கேபில் முறைபப்டுத்தப் படாமல் இருந்தால் பிரச்சனை உங்களுக்குதான். ஆகவே அவற்றை சீர்படுத்தி வைத்தல் அவசியம். இதனால் தேவையற்ற டிரிப்ஸ், பிளக் விலகுதல் போன்றவற்றில் இருந்து தப்பிக்க முடியும்.

சி கிலீனர் பயன்படுத்தவும்

இதை இலவசமாக டவுன்லோட் செய்வதிட முடியும். உங்கள் வரலாறு, கேச் போன்றவற்றை சுத்தம் செய்ய இதை பயன்படுத்தலாம். இதனால் உங்கள் கணினி வேகமாக செயல்படும்.

அங்கீகரக்கிப்பட்ட ஆண்டி வைரஸ் 
தேவை இவை இந்தியாவில் 450 ரூபாயில் இருந்து கிடைக்கின்றது. இதனால் உங்கள் கணினியில் உள்ள வைரஸ் நீக்கப்படும். இதை பொருத்தி உங்கள் கணினியை வைரஸ் பாதிப்பில் இருந்து காக்க முடியும்.

No comments:

Post a Comment