Tuesday, 10 May 2016

பென் டிரைவை எடுக்க குறுக்கு வழி (Pen Drive Removable Problem Solving )

                     கணினியில் பென் டிரைவ் ( PEN DRIVE ) மெமரி கார்டு ( MEMORY CARD)போன்றவற்றை பயன்படுத்திய பின்னர் சிஸ்டம் டிரேவிற்கு சென்று  “Safely Remove Hardware” எனும்  ஆப்சனை தேர்வு செய்த பின்னர்தான் பென் டிரைவ் , மெமரி கார்டு போன்ற சாதனங்களை , USB போர்ட்டிலிருந்து நீக்க முடியும்.

                    இதில் சிரமம் என்னவெனில் ஒரு சிலருக்கு  சிஸ்டம் டிரேவில் ஒரு மூலையில் ஒளிந்து கிடைக்கும் சிறிய ஐகானை (ICons) தேர்வு செய்து , பின்னர் “Safely Remove Hardware”  ஆப்சனைத் தேர்வு செய்வது , கடினமான செயலாக இருக்கும். இதற்கு  குறுக்கு வழி  இருந்தால் சிரமம் இல்லாமல் இருக்கும்.

அதற்கான தீர்வு இதோ :

நாமே எளிதாக குறுக்கு வழியை எளிமையாக உண்டாக்கலாம்.

Desktop ல் ஏதேனும் ஒரு காலி இடத்தில் வலது கிளிக் செய்யவும்தோன்றும் மெனுவில் New —> Shortcut என்பதை கிளிக் செய்யவும்.

LOCATION எனும் பெட்டியில் கீழ்க்கண்டவாறு  தட்டச்சு செய்து , NEXT பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.RunDll32.exe  Shell32.dll,Control_RunDLLhotplug.dllஉருவாக்கிய குறுக்கு வழிக்கு ஒரு பெயரினை கொடுத்து  FINISH பட்டனை கிளிக் செய்யவும்.இப்போது உருவாகியிருக்கும் குறுக்குவழி (Shortcut) வலது கிளிக் செய்து PROPERTIESயை தேர்வு செய்யவும்.இப்போது தோன்றும் விண்டோவில் குறுக்கு வழி எனும் பெட்டியில் கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த KEY COMPINATION ( சான்றாக Ctr + F2) ஐ தேர்வு செய்து OKபட்டனை கிளிக் செய்யவும்.மேற்க்கண்ட வழிமுறைகளை சரியாக செய்தபின்னர் மிகவும் எளிதாக பென் டிரைவ், மெமரி கார்டு போன்ற சாதங்களை எளிதாக நீக்க முடியும்.

No comments:

Post a Comment