பெரம்பலூர், மே 26: பெரம்பலூர் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள் ஜூன், ஜூலையில் சிறப்பு உடனடி தேர்வெழுத மே. 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இது
பெரம்பலூர், மே 26: பெரம்பலூர் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள் ஜூன், ஜூலையில் சிறப்பு உடனடி தேர்வெழுத மே. 28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) க. ஜெயலட்சுமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை தராத மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் நடைபெறவுள்ள சிறப்பு உடனடி தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்கள் 23-ம் தேதி முதல், அந்தந்த பள்ளிகளில் விநியோகம் செய்யப்படுகிறது.
இதுவரை உடனடி தேர்வில் அதிகப்பட்சம் 3 பாடங்கள் வரை மட்டுமே தேர்வெழுதலாம் என்ற அரசு விதி தளர்த்தப்பட்டு, தேர்ச்சி பெறாத, வருகை புரியாத அனைத்து பாடங்களிலும் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம்.
எனவே, நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தில் மாணவரின் புகைப்படத்தில் தலைமை ஆசிரியரின் சான்றொப்பம் இடம் பெறவேண்டும். 2012 மார்ச் மாதம் நடைபெற்ற மேல்நிலை தேர்வுக்கு வழங்கப்பட்ட பதிவெண்ணை விண்ணப்பத்தின் முதல் பக்கத்தில் அதற்குறிய கட்டங்களில் இலக்கம் மாறாமல் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பத்துடன், ரொக்கத் தொகையாக ஒரு பாடத்துக்கு ரூ. 85, 2 பாடங்களுக்கு ரூ. 135, 3 பாடங்களுக்கு ரூ. 185, 4 பாடங்களுக்கு ரூ. 235, 5 பாடங்களுக்கு ரூ. 285, 6 பாடங்களுக்கு ரூ. 335 செலுத்த வேண்டும். நிறைவு செய்த விண்ணப்பங்களை வரும் 28-ம் தேதிக்குள், தாங்கள் படித்த பள்ளியிலேயே ஒப்படைக்க வேண்டும். தேர்வு எழுதுவதற்கான அனுமதிச்சான்று விண்ணப்பித்த பள்ளி மூலமாகவே தேர்வு தொடங்கப்படுவதற்கு 5 நாள்களுக்கு முன்னதாக வழங்கப்படும். அறிவிக்கப்பட்ட இறுதி தேதிக்குள், தங்களது பள்ளி மூலமாக விண்ணப்பிக்க தவறுபவர்கள் 2012 ஜூன், ஜூலை மாதம் தேர்வெழுத விரும்பினால் அரசு தேர்வுத்துறை அறிவிக்கும் நாள்களில் விண்ணப்பிக்க, உரிய தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ. 1000 செலுத்தி, அதனை ஒப்படைக்கவும், தேர்வெழுதவும் சென்னைக்கு செல்ல நேரிடும்
No comments:
Post a Comment