இன்றைய கால கட்டத்தில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தாத நபரே இல்லை எனலாம். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ் ஆப்பின் மூலம் நாம் நாட்டு நடப்புகளை அறிந்து கொள்வதுடன் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க முடிகிறது.
தற்பொழுது வரும் ஆன்றாயிட் மொபைல்கள் அதிகமாக இரட்டை சிம் வசதி கொண்டது. ஆனால் ஏதேனும் ஒரு சிம் நம்பரில் மட்டுமே வாட்ஸ் ஆப் அக்கௌன்ட் பயன்படுத்த முடியும். இனி அந்த கவலை வேண்டாம். ஒரே ஆன்றாயிட் மொபைலில் இரண்டு நம்பரிலும் வாட்ஸ் ஆப் அக்கௌன்ட் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு OGWhatsApp என்கிற அப்ளிகேசன் உதவி அளிக்கிறது.
OGWhatsApp -ன் சிறப்பம்சங்கள்
வாட்ஸ் ஆப்பில் இல்லாத ஒரு சில அம்சங்கள் OGWhatsApp-ல் உள்ளது அவை :
1.ஒரே மொபைலில் இரு வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் வசதி.
2.OGWhatsApp செட்டிங்க்ஸில் PLUS MODS எனும் ஆப்சன் உள்ளது. இதன் மூலம் காண்டாக்ட்ஸ், குரூப்ஸ் மற்றும் ப்ராட்காஸ்ட் போன்றவற்றின் receipt status(இரண்டாவது டிக் மார்க்), read status (ஊதா நிற டிக் மார்க்), டைப் செய்வது போன்றவற்றை பிறருக்கு தெரியாத வகையில் மறைத்து கொள்ள முடியும்.
3.OGWhatsApp-ஐ பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
(இது போன்று WhatsMapp என்ற ஆப் மூலமாகவும் ஒரு மொபைலில் இரு வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடியும். அதற்கும் இதே வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.)
அதற்கான வழிமுறைகள் பின்வருமாறு:
1. முதலில் அபீசியல் வாட்ஸ் ஆப்-ஐ ஓபன் செய்து, மூன்று புள்ளிகள் போன்ற அமைப்பை க்ளிக் செய்து "settings"-ஐ செலக்ட் செய்து, பின்னர் "chat settings"-ல் "Back up chats" மூலம் முந்தைய உரையாடல்களை back up எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
2.இப்பொழுது போனில் உள்ள "settings" மூலம் "App -> WhatsApp -> App Info சென்று "clear data" க்ளிக் செய்து தகவல்களை அழித்து கொள்ளவும்.
3. இனி ES File Explorer ( பிற File Manager-உம் பயன்படுத்தலாம்) ஓபன் செய்து "WhatsApp" போல்டரை rename ஆப்சன் மூலம் "OGWhatsApp" என பெயர் மாற்றி கொள்ளவும். பிறகு அபீசியல் வாட்ஸ் ஆப்-ஐ அன்-இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும்.
4. இப்பொழுது http://apps.apk4file.com/do.php?filename=OGWA.apk லிங்க் மூலம் OGWhatsApp-ஐ டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இனி முன்னர் அபீசியல் வாட்ஸ் ஆப்-இல் பயன்படுத்திய சிம் நம்பரை OGWhatsApp அக்கௌன்ட்டில் கொடுத்து, நம்பர் சரி பார்க்கப்பட்ட பிறகு OGWhatsApp பயன்படுத்த தயாராகி விடும்.
5. இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் அபீசியல் வாட்ஸ் ஆப்-ஐ இன்ஸ்டால் செய்து கொண்டு, மற்றொரு சிம் நம்பரை பதிவு செய்து, அபீசியல் வாட்ஸ் ஆப் அக்கௌன்ட்டை பயன்படுத்தலாம்.
இப்பொழுது உங்கள் மொபைலில் இரு வாட்ஸ் ஆப் பயன்படுத்த தயாரான நிலையில் இருக்கும். இதன் மூலம் இரண்டு நம்பரிலும் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி கொள்ளலாம். ஒரே கல்லுல... ரெண்டு மாங்கா...
No comments:
Post a Comment