Tuesday, 10 May 2016

சாதிச் சான்றிதழ் வாங்குவது எப்படி?

 Download

வேலை வாய்பிற்கும், பள்ளி, கல்லூரியில் சேர்வதற்கும், உதவித்தொகை பெறுவதற்கும், சிறுதொழில் தொடங்குவதில் முன்னுரிமை பெறுவதற்கும் சாதிச் சான்றிதழ் மிகவும் முக்கியமான தஸ்தாவேஜி ஆகும்., அதை பெறுவதற்கான வழிகாட்டுதல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலை ஜாதியினர் பெயர்கள் அடங்கிய பட்டியலை 24.11.1997 தேதியிட்ட அரசு ஆணையில் வெளியிட்டிருக்கிறது.. அதில் இல்லத்துப்பிள்ளைமார் சமூகம் வரிசை எண்.35-ல் சேர்க்கப்பட்டுள்ளது. 1993-ல்மண்டல் குழு பரிந்துரையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ஒவ்வொரு மாநிலத்திலும உள்ள மேற்படி சமூகத்தில் உள்ள சாதிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியலை வாங்கி, 8..9.1993- அன்று அரசு ஆணை வெளியிட்டது. அந்த அரசு ஆணையிலும் இல்லத்துப்பிள்ளைமார் சமூகம் வரிசை எண் 45-ல் இடம் பெற்றிருக்கிறது.

நம்மில் பலர், சாதி சான்றிதழ் ஒன்று மட்டும் .உள்ளதாக நினைக்கிறோம். அப்படியல்ல. சாதிச்சான்றிதழ் இரண்டு வகைப்படும்.. 1) பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழ் (Backwardclass Certificate-BC) மற்றொன்று .இதர பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழ் (Other Backward class Certificate-OBC) பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழ், தமிழ் நாடு அரசு பணியில் வேலைவாய்ப்பு பெறவும், மற்ற சலுகைகள் பெறவும் பயன்படுகிறது.

இதர பிற்படுத்தப்பட்டோர் சாதிச் சான்றிதழ் இரயில்வே, தபால், வருமானவரித்துறை போன்ற மத்திய அரசு நிறுவனங்களிலும், வங்கித்துறையிலும், பாரத் மிகுமின்நிறுவனம் (BHEL) போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெறவும், இந்திய தொழில் நுட்ப கழகம் (I.I.T), அகில இந்திய ஆளுமை கழகம் (AIIM), அகில இந்திய விஞ்ஞான மருத்தவக் கழகம் (AIIMS) போன்ற உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும் ஓபிசி சான்றிதழ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.. சுமார் 60 ஆண்டு கால நீண்ட நெடிய போரட்டத்தின் பலனாக 27% இட ஒதுக்கிட்டின் அடிப்படையில் இந்த அரிய வாய்ப்பு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு தற்போது கிடைத்திறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பிசி சர்டிபிகேட் வாங்குவது எப்படி?
நாம் எந்த பகுதியில குடியிருக்கிறமோ அந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் (தாலுகா) அலுவலகத்தில் பிசி சர்டிபிகேட் வாங்க வேண்டும். உதாரணமாக ஒருவர் அம்பத்தூரில் வசிப்பவராக இருந்தால், அம்பத்தூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் வாங்க வேண்டும். பெரம்பூரில் உள்ள தாலுகா அலுவலகத்தில் வாங்க கூடாது. அப்படி கொடுக்கவும் மாட்டார்கள். 

. சாதி சான்றிதழ் பெறுவதற்கான மனு தாலுகா அலுவலகத்தில் கிடைக்கும். மனுசெய்யும் போது, எழுத்து பிழை இல்லாமல் சரியாக பூர்த்தி செய்ய வேண்டும். நம் வீட்டிற்கு அருகாமையில் குடியிருக்கும் 10 நபர்களிடம் மனுதரார் இல்லத்துப்பிள்ளைமார் சமூகத்தைச் சார்ந்தவர் என்று கையெழுத்து வாங்க வேண்டும், மேலும் கீழ்கண்ட நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

1) ரேசன் கார்டு 
2) குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் 
3) தந்தை/தாயின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)

இவை மூன்றும் இணைக்கப்பட வேண்டும். மாற்றுச் சான்றிதழிலில் BC(இல்லத்துப்பிள்ளைமார்) என்று குறிப்பிட்டிருந்தால், மற்ற தஜ்தாவேஜிகள் அவசியமில்லை. சாதி பெயர் குறிப்பிடவில்லை என்றால், தந்தை/தாய் இல்லத்துப்பிள்ளைமார் சாதிச் சான்றிதழ் தனியாக வாங்கி இருந்தால் அதனுடைய நகல் இணைக்கப்பட வேண்டும். மேலே குறிப்பிட்ட மூன்று நகலும் இணைக்கப் பட்டிருந்தால், சாதிச் சான்றிதழ் வாங்குவது சுலபம். இல்லை என்றால் தந்தை/தாயினுடைய சகோதரர்/சகோதரி இல்லத்துப்பிள்ளைமார் என்ற சாதிச் சான்றிதழ் வாங்கியிருந்தால், அதனுடைய நகல் இணைக்கப்பட வேண்டும். மேலும் சகோதரர்/சகோதரி உடன் பிறந்தவர் என்பதற்கான வாரிசு சர்டிபிகேட் நகல் இணைக்கப்பட வேண்டும. கிராம அதிகாரி(VAO), வருவாய்(Revenue Inspector) இருவரிடமும் கையெழுத்து வாங்கிய பிறகு, தாலுகா அலுவலகத்தில் மனுவில் இரண்டு ரூபாய் கோர்ட்பி ஸ்டாம்பு ஒட்டிக் கொடுக்க வேண்டும். இவை எல்லாம் சரிபார்த்த பிறகு, துணை தாசில்தார் அல்லது தாசில்தார் சாதிச் சான்றிதழ் வழங்குவர். 

சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு முன் தாலுகா அலுவலகத்தில் சாதிச் சான்றிதழுக்கான பதிவேட்டில் பதிவு செய்கின்றனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவேட்டிலும் பதிவு செய்கின்றனர். அதற்குபின்னர் தான் சாதிச் சான்றிதழ் வழங்குகின்றனர். ஏனெனில் சாதிச் சான்றிதழ் வழங்குவது சம்பந்தமாக அடிக்கடி நீதிமன்ற வழக்குகள் வருவதால், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. நமது சங்கத்தில் வழங்கப்படும் கடிதம் ஒரு அத்தாட்சியே தவிர, இதை வைத்துக் கொண்டு சாதிச் சான்றிழ் வழங்கும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. தகுந்த ஆதாரம் காண்பித்து சாதிச் சான்றிதழ் வாங்க வேண்டும. ஆதாரம இல்லாமல் தாலுகா அலுவலகத்தில் வாக்குவாதம் செய்வது வீண்பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இதர பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்(OBC) வாங்குவது எப்படி?

சாதிச் சான்றிதழ் பிசி வாங்கியிருந்தால் இதர பிற்படுத்தப்பட்டோர் ஓபிசி சான்றிதழ் வாங்குவது சுலபம். பிசி சான்றிதழ் வாங்கவில்லை என்றால் அதை வாங்கிவிட்டு ஓபிசி-க்கு மனுசெய்ய வேண்டும். ஓபிசிக்கு மனு செய்யும் போது பொருளாதாரத்தில் முன்னேறியவர்(Creamy Layer) இல்லை. பொருளதாரத்தில் பின்தங்கியவர்(Non Creamy Layer) என்பதற்கான ஆதாரம் காட்டவேண்டும். 

(Creamy Layer) என்றால் என்ன?

ஒரு குடும்ப தலைவருடைய ஆண்டு வருமானம்ரூபாய 6 லட்சத்திற் மேல் இருந்தால் அதற்கு கிரிமிலேயர் என்று பெயர். அதாவது அவர்கள் பொருளாதாரத்தில் முன்னேறியவர் என்று பொருள். அவர் பிற்படுத்தப்பட்ட சாதியாக இருந்தாலும், வருமானம் 6 லட்சத்திற்கு மேல் இருந்தால் அவர்களுக்கு எந்த சலுகையும் கொடுக்க கூடாதுஎன்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. அப்படியானல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் (Non-Creamy Layer) யார்?. குடும்பத் தலைவரின் வருமானம் 6லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அவர் பொருளதாரத்தில் பின்தங்கியவர். அவர் பிறபடுத்தப்பட்டோருக்கான சலுகைகளை பெற தகுதி உடையவர். அவர்கள் மட்டும் ஒபிசி சான்றிதழ் வாங்க வேண்டும். அதோடு பொளாதாரத்தில் பின்தங்கியவர் (Non-Creamy Layer) என்று தாசில்தாரிடம் சான்றிதழ் வாங்க வேண்டும். ஓபிசி சான்றிதழ் வழங்கும் போதே, இதையும் சேர்த்துக் கொடுத்துவிடுவார்கள். 

பயப்பட வேண்டாம், நம்மில் பெரும்பாலனவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்(Non-Creamy) தான்!

8.9.1993 அன்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏஎஸ், ஐபிஎஸ், குரூப்-ஏ ( Group-A) அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், மற்றும்வழக்கறிஞர்களை பொருளாதாரத்தில் முன்னேறியவர்களாக வகைப்படுத்தி யிருக்கிறது. குரூப்-ஏ அதிகாரிகளுக்கு கீழே பணிபுரியும் குரூப்-சி மற்றும் குரூப்-டி பணியாளர்களை பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக(Non-Creamy Layer) குறிப்பிட்டிருக்கிறது. 

மேலும் பிற்படுத்தப் பட்டோரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கும் போது, மாதந்திர வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், விவசாயத்தின் மூலம் வருகின்ற வருமானத்தையும் கணக்கில் டுத்துக்கொள்ள கூடாது என்றும் மத்திய அரசு வெளியிட்ட ஆணையில் குறிப்பிட்டிருக்கிறது. மத்திய சர்க்காரின் உத்தரவை மேற்கொள் காட்டி, தமிழக அரசும் விளக்கமான ஒரு ஆணையை 24.4.2000-ல் பிறப்பித்து இருக்கிறது. அதில் வருமானத்தை கணக்கில் எடுத்துக கொள்ள கூடாது என்றும் குறிப்பிட்டிருக்கிறது. ஓபிசி சான்றிதழ் வாங்க மனு செய்யும் போது, வேலை செய்யும் அலுவலகத்திலிருந்து பெறப்பட்ட சம்பள சான்றிதழை தாசில்தார் அலுவலகத்தில் கேட்டால் மட்டும் கொடுக்கவும். அதை ஒரு ஆதாரமாக எடுத்துக்கொள்வார்கள். சம்பளத்தை வைத்து ஓபிசி சான்றிதழ் நிராகரிக்க மாட்டார்கள்.

முக்கியமாக கவனிக்க வேண்டியது.

1. ஓபிசி சான்றிதழில் தாசில்தார் கையெழுத்து போட்டிருக்க வேண்டும். தாசில்தார் (Head QuatersTahsildar) பதவிக்கு கீழே உள்ளவர்கள் கையெழுத்துப் போட்டிருந்தால் செல்லாது.
2. தமிழக அரசின் கோபுரசீல் போட்டிருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
3. பெயர், விலாசம் மற்றும் சாதியின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். 

ஏனெனில் ஓபிசி சான்றிதழ் சரிபார்ப்பவர்கள் மத்திய அரசு அதிகாரிகள். ஒரு சிலரே தமிழ் படிக்கத் தெரிந்தவர்கள். பெரும்பாலனவர்கள் தமிழ் படிக்கத் தெரியாதவர்கள். அதனால் ஆங்கிலத்தில் சாதி சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என்று திருப்பி அனுப்பி விடுவார்கள். அதனால் சான்றிதழ் வாங்கும் போதே, ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறதா என்பதை முன்கூட்டியே கவனித்து வாங்கிவிடுவது நல்லது. 

பிசி சான்றிதழ் வாங்குவது கடினம். ஓபிசி வாங்குவது அதைவிட கடினம். இவ்வளவு சிரமப்பட்டு வாங்கப்படுகின்ற ஓபிசி சான்றிதழ் 6 மாதத்திற்கு தான் செல்லுபடியாகும். அதனால் மனம் தளர்ந்துவிட வேண்டாம். இரயில்வே, வங்கித்துறை, மத்திய தேர்வு வாரியம், யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (Unian Public Service Commission-UPSC), ஊழியர் தேர்வு வாரியம்(Sfaff Selection Commission-SSC) போன்ற தேர்வு வாரியங்கள், சில காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு விளம்பரம் செய்து, மனு பெறும் போது ஓபிசி சான்றிதழ் கேட்கிறது. அதுவும் மனு செய்வதற்கு 6 மாதத்திற்குள்(within 6 month) பெற்றிருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. இந்த சிரம்மத்தை கருதி ஒரு சிலர் மனு செய்யாமல் இருந்து விடுகின்றனர். அது சரியல்ல. குறுகிய காலத்தில் ஓபிசி சான்றிதழ் வாங்க முடியவில்லை என்றால், ஏற்கனவே ஓபிசி சான்றிதழ் 6 மாத்திற்கு முன்பாக வாங்கியிருந்தால் அதனுனைடய நகலை அனுப்பி வைக்கலாம். பின்னர் வாங்கி அனுப்பலாம். நீங்கள் தேர்வில் வெற்றி பெற்று விட்டால். நேர்காணலுக்கு செல்லும் முன்பாக புதிய ஓபிசி சான்றிதழ் தாசில்தாரிடம் வாங்கிச் சென்றால் போதும். இதற்கான மத்திய அரசு ஆணை இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் காலிபணியிடங்களுக்கான விளம்பரங்கள் வரும் போது 27 சதவீத இட ஓதுக்கிட்டின்கீழ் மனு செய்யலாம். தகுதி இருந்தும் மனு செய்யாமல் இருந்து விட வேண்டாம்.

மத்திய அரசு பணிகளில் இட ஒதுக்கீட்டின்கீழ் 2011-ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 80.000 பணியிடங்கள் காலியாக உள்ளன. . இவ்வளவு பணியிடங்கள் நிரப்படாமல் காலியாக இருப்பதற்கு ஓபிசி சான்றிதழ் வாங்குவதில் உள்ள சிரமம் ஒரு முக்கிய காரணம். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சொல்லப்படாத பிற்படுத்தப்பட்டோரில் பொருளாதாரத்தில் (Creamy Layer) முன்னேறிவர்கள் என்ற ஒரு விதியை கொண்டு வந்து மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டவர்களை நுழைய விடாமல் செய்கின்றனர். இந்த விதி முன்னேறிய சமுதாயத்திற்கோ, தாழ்ததப்பட்ட சமுதாயத்திற்கோ கிடையாது. இதை எதிர்த்து சாதி சங்கங்கள் தான் குரல் கொடுக்க முடியும். அதனால்சாதி சங்கம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும், இவற்றை எல்லாம் தகர்த்து எறிவதற்கு சாதி சங்கங்களின் ஒட்டு மொத்த குரல் அவசியம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசு பணிகளிலும், வங்கி துறையிலும் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களிலும் காலி பணியிடங்கள் நிரப்படாமல் இருந்தன, நிரப்புவதற்கான தடை ஆணை நீக்கப்பட்டுள்ளது. இரயில்வே துறையில் மட்டும் சுமார் 1,80,000 காலியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கையில் எடுக்கப்பட்டு வருகின்றன. பிற்படுத்தபட்டோர் மற்றும் தாழ்ததப்பட்டோருக்கான சுமார்80.000 (Backlog vaccancies) காலியாகவே உள்ளன. மத்திய அரசும் அதை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றன, பங்கித துறையிலும் சுமார் 60,000-க்கும் மேற்பட்ட கிளார்க் மற்றும் புரேபேசனரி ஆபிசர் பதவிகளில் உள்ள காலியிடஙகளை நிரப்புவதற்கான விளம்பரங்கள் எம்பிளாயமெண்ட் நியூஸ் பத்திரிக்கையில் வந்து கொண்டே இருக்கிறது, ஓபிசி சான்றிதழ் வாங்குவதில் சற்று சிரமம் ஏற்பட்டாலும் அதை தாங்கி கொண்டு நமது சமுதாயத்தில் படித்த பட்டம் பெற்ற இளைஞர்கள் நிரந்தர வருமானம் வரக்கூடிய இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று சென்னைவாழ் இல்லத்துப்பிள்ளைமார் உறவின்முறை சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம். முக்கியமான மத்திய, மாநில அரசின் ஆணைகளும் இணைக்கப்பட்டுள்ளன.

தொகுத்தவர்,
த. மீனாட்சி சுந்தரம்,
துணைச்செயலாளர்,
செ,வா.இ.உ.சங்கம். 

No comments:

Post a Comment