Thursday, 29 October 2015

தமிழ் எண்கள்

தமிழில் பேசுவதையும், கையொப்பமிடுவதையும்

பற்றி வேந்தர் எழுதியிருந்தார். தமிழ் எண்களை

எளிதாக நினைவில் கொள்ள ஒரு வழியை

ஓர் அன்பர் கவனப்படுத்தி இருந்தது நினைவுக்கு

வந்தது -

பத்தாம் வகுப்பு படிக்கும் பக்கத்து வீட்டுப் பெண்ணிடம்,

தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன். அதில், 1-ல் இருந்து

0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்

பட்டிருந்தது.

எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன்.

உடனே அப்பெண், “1 2 3 4 5 6 7 8 9 0 என்ற எண்ணுக்கு

முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0′ என்றாள்.

“இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.

அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி

மனப்பாடம் செய்ததாக கூறினாள்.

அதாவது, “க’டுகு, “உ’ளுந்து, “ங’னைச்சு, “ச’மைச்சு, “ரு’சிச்சு,

“சா’ப்பிட்டேன், “எ’ன, “அ’வன், “கூ’றினான்; “ஓ’ என்றாள்.

Tuesday, 27 October 2015

திருமணத்தை பதிவு செய்ய

திருமணத்தைப் பதிவு செய்வது எப்படி?

திருமணப் பதிவு கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்பதை தமிழக அரசு 2009ல் சட்டமாக்கியது. பதிவு செய்யாதவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும் என எச்சரித்திருந்தது. திருமண மோசடிகள் அதிகம் நடப்பதை தவிர்க்கும் வகையிலே இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அலட்சியம் மற்றும் அறியாமை காரணமாக படித்தவர்கள்கூட திருமணத்தை பதிவு செய்வதில்லை. அலுவலம் அலுவலகமாக அலைய வேண்டும் என்பதில்லை. இப்போது ஆன் லைனிலேகூட திருமணத்தைப் பதிவு செய்ய முடியும். தெரிந்து கொள்வோம் வாருங்கள்…

திருமணப் பதிவில், இந்து திருமண சட்டம், சிறப்பு திருமண சட்டம் ( Special marriage Act ) என இரண்டு வகை உண்டு.
இந்து திருமண சட்டம் என்பது, இந்து மதம் மட்டுமல்லாது புத்த மதம், சீக்கிய மதம், ஜைன மதம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இந்தச் சட்டத்தில், திருமணம் வேறொரு இடத்தில் நடந்திருக்கும். அதன் பதிவு மட்டுமே அலுவலகத்தில் செய்யப்படும்.
இதற்கான தகுதிகள் என்னவென்றால், பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் முடிந்திருக்க வேண்டும். இருவருக்குமான உறவுமுறை திருமணத் துக்கு புறம்பானதாக இருக்கக்கூடாது. இருவரில் எவருக்குமே முன்பே ஒரு திருமணம் முடிந்து, துணை இருக்கக் கூடாது.
இந்தத் தகுதிகள் இருக்கும்பட்சத்தில், மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியின் எல்லைக்கு உட்பட்ட அல்லது திருமணம் நடந்த இடத்தின் எல்லைக்கு உட்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வந்து திருமணத்தைப் பதிவு செய்யலாம். இதற்கான பதிவுக் கட்டணம் ஐந்து ரூபாய் மட்டுமே.
அவர்களது திருமணம், எங்காவது (கோயிலிலோ, வீட்டிலோ, மண்டபத்திலோ) எந்த முறையிலாவது (மரபு முறையிலோ, சீர்திருத்த முறையிலோ) நடந்ததற்கான ஆதாரம், பதிவுக்கு அவசியம் தேவை. அது திருமணப் பத்திரிகை, புகைப்படம் அல்லது கோயிலில் தந்த ரசீது போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம். பதிவுக்கான விண்ணப் பத்தில் மூன்று பேர் சாட்சிக் கையெழுத்திட வேண்டும். அதே மூவர், பதிவு அலுவலகத்துக்கும் நேரில் வந்து கையெழுத்திட வேண்டும். ‘இந்தத் திருமணத்தில் வரதட்சணை வாங்கவும் இல்லை, கொடுக்கவும் இல்லை’ என்று இரு தரப்பிலிருந்தும் உறுதிமொழி தரவேண்டும். மணமக்களின் முகவரிக்கான ஆதாரமும் வயதுக்கான ஆதாரமும் அவசியம் தேவை.
பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி, பதிவு செய்யாமல் விட்டவர்களும் இதே முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.
அடுத்ததாக, சிறப்பு திருமண சட்டம்… எப்படிப்பட்ட ஜோடியும் (அதாவது இரு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் அல்லது ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்) இந்தச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்யலாம். அவர்களுக்கு பதிவாளர் அலுவலகத்திலேயே திருமணம் நடத்தி வைக்கப்படும். பிறகு, பதிவும் செய்யப்படும்.
இந்து திருமண சட்டத்துக்கு சொன்ன அனைத்துத் தகுதிகளும் இதற்கும் இருக்கவேண்டும். கூடுதலாக, இன்னொரு விஷயமும் உண்டு. அதாவது, ‘இந்த இருவருக்கும் திருமணம் நடக்கப் போகிறது. ஆட்சேபணை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்’ என்ற அறிவிப்பு, மணமகன், மணமகள் இருவரின் எல்லைக்குட்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். 30 நாட்களுக்குள் யாரிடமிருந்தாவது ஆட்சேபணை வரும்பட்சத்தில், திருமணம் நடத்தப்பட மாட்டாது. அப்படி எந்த ஆட்சேபணையும் வரவில்லை என்றால், 31-ம் நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் அவர்கள் திருமணம் முடித்து, பதிவும் செய்து கொள்ளலாம். பதிவு தொடர்பான தகவல்கள்http://www.tnreginet.net/என்றஇணையதள முகவரியிலும் கிடைக்கிறது.

திருமணப் பதிவு எதற்கு?
திருமணத்துக்கு என்று வயது வரம்பு இருப்பதால், மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுப்பதும், குழந்தைத் திருமணங்களும் அறவே நின்றுவிடும் என்பது முதல் நன்மை.
முதல் மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்ய முடியாது என்பது அடுத்த நன்மை. இதனால், பெண்களின் மணவாழ்க்கை, அவர்கள் அறியாமலேயே பறிபோவதிலிருந்து காப்பாற்றப்படும். அதேபோல், மணவாழ்வில் பிரச்னை என்று வரும்போது, ‘எனக்கும் இவளுக் கும் திருமணமே நடக்கவில்லை’ என்று கணவன் பொய் சொல்லித் தப்பிக்க முடியாது.
மூன்றாவது, கணவன் இறந்தபிறகு, அவரது சொத்து மற்றும் உடைமைகள், பதிவு செய்யப் பட்ட மனைவிக்குத்தான் சட்டப்படி சேரும். எனவே, கட்டாயமாக திருமணத்தைப் பதிவு செய்திருந்தால், கணவருக்கு சட்டத்துக்குப் புறம்பான துணை இருந்தாலும், அவர்களிடம் சொத்தை இழக்காமல் காப்பாற்றிக் கொள்ள முடியும்! எனவே, ஒவ்வொரு திருமணமும் பதிவு செய்யப்படுவது மிக மிக அவசியம்.

கல்வி தகுதியை பதிய

உங்கள் கல்வி தகுதியை மாநில & மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்க்கு செல்லாமல் ஆன்லைனில் பதிவது எப்படி
[...]
உங்கள் கல்வி தகுதியை மாநில & மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிய சென்றால் இன்றைய கால கட்டத்தில் வேலை வாய்ப்பு வேண்டி பதிபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் உங்களுடைய பதிவை கண்டிப்பாக ஆன்லைன் பதிய சொல்லி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இன்று அனைவரும் கணிணி அறிவு உள்ளவராகவே 
இருந்தாளும் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வலை பக்கத்துக்கு சென்றால் பைத்தியம் பிடித்துவிடும். உள்ளே பதிவு தகுதியோ அல்லது கூடுதல் கல்வி தகுதியை சேர்க்க வேண்டுமானால் username மற்றும் password கேட்கும். இதில் உள்ளே நுழைவதற்க்கு திண்டாட வேண்டிஉள்ளது. (நானே பழ முயற்சி செய்து வெறுத்து விட்டேன். இன்று கூடுதல் கல்வி தகுதியை சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டேன். எப்படியோ உள் நுழைந்து பதிவும் செய்துவிட்டேன்) அதற்கான வழிமுறையை கீழ் கண்டவாறு காணலாம்

இணையதளம்
[...]
பயனர் பெயர்(username):

பயனர் பெயரானது பதினாறு இலக்கத்தில் இருக்க வேண்டும்

எடுத்துக்காட்டு:

உங்களின் பதிவு என் : 1996M00216 (ஆண்-M) (பெண்-F)

உங்களின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு: DGD (மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் - திண்டுக்கல்)

இந்த இரண்டும் இனைந்தது தான் உங்களின் பயனர் பெயர்.

DGD1996M00000216 (1996M 00216 பதில் எட்டிழக்கமாக 00000216 மாற்றவும்.

கடவுசொல்(password)

உங்கள் கடவுச்சொல்லை இந்த முறையில் உங்கள் பிறந்த தேதியை
(dd / mm / yyyy) இட வேண்டும்.

(dd / mm / yyyy)
[...]
username : DGD1996M00000216
password : dd / mm / yyyy

உள் சென்று பதிவது எப்படி:

1. புதியவர்

புதிய பயனர் ID பதிவு செய்ய இங்கே சொடுக்கவும் ( Click here for new User ID Registration )

பின்பு உங்களின் கல்விதகுதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு சேமிக்கவும் பிறகு உங்களின் அடையாள அட்டையை நகழ் எடுக்கவும்.
மிக எழிதாக உங்களின் புதிய பதிவை வீட்டில் இருந்தபடியே செய்யலாம்.

2.பழையவர்

உங்களின் கணக்கை லாக்ஆன் செய்தவுடன் உங்களின் பக்கம் திறக்கப்பட்டுவிடும்.

பின்பு தகுதி சேர்க்கவும் (Add Qualification) இங்கே சொடுக்கவும்

பின்பு உங்களின் கல்விதகுதி மற்றும் பிற தகவல்களை உள்ளிட்டு சேமிக்கவும் பிறகு உங்களின் அடையாள அட்டையை நகழ் எடுக்கவும்.


உங்களின் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு


ARD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்
CBD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூர்
CBR மண்டல துணை இயக்குனர் அலுவலகம் (தொழில்) கோயம்புத்தூர்
CDC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி - கோயம்புத்தூர் 
CHD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
CHG தலைமை அலுவலகம், சென்னை
CHP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
CHR மண்டல துணை இயக்குநர் அலுவலகம், சென்னை
CHS மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (ஊனமுற்றோர்-சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம்) சென்னை
CHT மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில் நுட்ப பணியாளர்) .- சென்னை
CHU மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (திறனற்ற) சென்னை
CUC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி - கடலூர்
CUD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்
DGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திண்டுக்கல்
DRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தர்மபுரி
ERD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஈரோடு
KGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கிருஷ்ணகிரி
KPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம்
KRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கரூர்
MDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மதுரை
MDP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் மதுரை
MDR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகம், மதுரை
NGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கன்னியாகுமாரி
NKD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நாமக்கல்
NPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், நாகப்பட்டினம்
PDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புதுக்கோட்டை
PRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பெரம்பலூர்
RPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ராமநாதபுரம்
SGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சிவகங்கை
SLD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சேலம்
TCC பயிற்சி வழிகாட்டல் மையம், திருச்சி
TCD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருச்சி
TCR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), திருச்சி
THD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி
TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்
TMD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருவண்ணாமலை
TNC பயிற்சி வழிகாட்டல் மையம், திருநெல்வேலி
TND மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி

Monday, 26 October 2015

விந்தையான சிந்தனைகள்.

Comments - விந்தையான சிந்தனைகள்...
>>1) ”நீர் அமைதியாக இருப்பதால் முதலைகள் இல்லையென்று நினைத்து விடாதே”
>>2) ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான்.
>>3) எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார்.
>>4) பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார்.
>>5) நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
>>6) முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்..
>>7) யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து.
>>8) ”ஒரு மலரையோ, ஒரு பட்டுப் பூச்சியையோ அதன் தோற்றத்தைக் கொண்டு மதிப்பிட்டு விடலாம். ஆனால் மனிதப்பிறவியை அவ்வாறு மதிப்பிட இயலாது!”
>>9) வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள் ஒரு கடமை - நிறைவேற்றுங்கள் ஒரு இலட்சியம் - சாதியுங்கள் ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள் ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள் ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்
>>10) கற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் அறிந்ததை சொல்லிக்கொடு!! கற்றுக்கொள்வாய்!!! பெற்றுக்கொள்ள வேண்டுமா? முதலில் முடிந்ததை அள்ளிக்கொடு!! பெற்றுக்கொள்வாய்!!!
>>11) நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்
>>12) எந்தப் பிழையை நீ எங்கே கண்டாலும் அதை உன்னிடம் இருந்தால் திருத்திக்கொள்.
>>13) நீங்கள் விரும்புவது ஒருவேளை உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்கு தகுதியானது உங்களுக்கு கண்டிப்பாக
*கிடை த்தே தீரும்..

Sunday, 25 October 2015

வைரஸ் தாக்கிய 'பென்ரைவ்'


வைரஸ் தாக்கிய ‘பென்ட்ரைவ்’ இலிருந்து பைல்களை மீட்க இலகுவான வழி ....!!!!

தற்பொழுது தகவல்களை சேமிக்க
பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும்பைல்களை பாதிக்கிறது.

இப்படி பாதிக்கும் பொழுதுஉங்கள் பென்ட்ரைவில் உள்ளபைல்கள் மறைக்கப்பட்டு விடும். கணனியில் பென்டிரைவை ஓப்பன் செய்தால் எந்த பைல்களும் இருக்காது. வெற்றிடமாக இருக்கும். ஆனால் properties சென்று பார்த்தால் பைல்கள் இருப்பது போன்றே அளவு காட்டும். காரணம் நம் தகவல்களை வைரஸ்கள் மறைத்து வைத்துவிட்டது. பென்டிரைவில் முக்கியமான தவல்கள் ஏதும் இல்லை எனில் Format செய்து பென்டிரைவை திரும்ப பெறலாம். ஆனால் ஏதேனும் முக்கிய மான தகவல்கள் இருந்தால் எப்படி அந்த பைல்களை பத்திரமாக மீண்டும் கொண்டு வருவது என பார்ப்போம்.

இதற்க்கு நீங்கள் எந்த மென்பொருளையும் உங்கள் கணினியில் Install செய்து உபயோகிக்க வேண்டியதில்லை. உங்கள் கணனியிலேயே சுலபமாக செய்து விடலாம். கீழே உள்ள வழிமுறையின் படி கவனமாக செய்து அந்த பைல்களை மீட்டு எடுங்கள்.

1) முதலில் பென்டிரைவை உங்கள் கணினியில் சொருகி கொள்ளுங்கள்.

2) Start ==> Run ==> CMD==> Enter கொடுக்கவும்.

3) இப்பொழுது பென்ட்ரைவ் எந்த ட்ரைவில் உள்ளது என பாருங்கள். My Computer செல்வதன் மூலம் கண்டறியலாம்.

4) உதாரணமாக E: டிரைவில் பென்ட்ரைவ் இருக்கிறது எனவைத்து கொள்வோம் அதற்கு நீங்கள் E: என கொடுத்து Enter அழுத்தவும்.

5) attrib -h -s -r /s /d *.*என டைப் செய்யுங்கள் ஒவ்வொருபகுதிக்கும் Space சரியாககொடுக்கவும்.

◦நீங்கள் சரியாக கொடுத்துஉள்ளீர்கள் என உறுதி செய்து கொண்டு Enter அழுத்துங்கள்.

◦சில வினாடிகள் பொறுத்திருங்கள். இப்பொழுது உங்கள் பென்ட்ரைவ் சோதித்து பாருங்கள் உங்களுடைய பைல்கள் அனைத்தும் திரும்பவும் வந்திருக்கும் —

உபயோகமான தகவல் என்று நினைத்தால், நண்பர்களுடன் பகிருங்கள்.

Saturday, 24 October 2015

வீட்டு ஒயரிங் தொடர் -1

வீட்டு ஒயரிங் தொடர் - 1 (House wiring part - 1)

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவு அனைவருக்கும் பயன்படும் வகையில் இருக்கும் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு. அப்படியே புன்னகையோடு பதிவுக்கு செல்லும் முன் சிறிய விளக்கம்:

நண்பர்களே நான் இதுவரையில் எழுதிய பதிவுகள் அனைத்தும் நான் பார்த்து புரிந்து கொண்ட மற்றும் என்னுடைய அனுபவத்தை வைத்து எழுதியவைகள் என்பதை தெரிவித்து அந்த வரிசையில் இந்த தொடர் பதிவையும் எழுதுகிறேன். இது ஒரு எலெக்ட்ரிகள் ஒயரிங் தொடர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த தொடர் அனைத்தையும் படித்து முடித்தவுடன் நாமாகவே ஒயரிங் இனைப்புகளை நம்முடைய வீடுகளில் கொடுக்க முடியும் என்பதை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். 

இனி பதிவிற்கு செல்வோம்:


ஒயரிங் செய்வதற்கு 1/8", 2/18", 3/18" மற்றும் 1/20", 3/20" என்று பல வகையான ஒயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

அதாவது,

1/18" இதில் 18 என்ற எண் ஆனது ஒயரின் உள்ளாக இருக்கக்கூடிய மின்சாரம் செல்லும் கம்பியின் பருமன் ஆகும். மேலும் கேஜ் என்பார்கள் (18 கேஜ் என்று சொல்வார்கள் ).

1 என்ற எண் ஆனது 18 கேஜ் பருமன் உள்ள மின்சாரம் கடத்தும் ஒரு கம்பி மட்டும் ஒயரின் உள்ளாக  இருக்கிறது என்பதை குறிக்கிறது.

இதே போன்று தான்  2/18", 3/18", 1/20", 3/20" எல்லாமே ஆகும். 

3/20" என்பது மேலே சொன்னதைப் போன்றே  20 கேஜ் பருமன் உள்ள மின்சாரம் கடத்தும் மூன்று கம்பி மட்டும் ஒயரின் உள்ளாக  இருக்கிறது என்று அர்த்தம் ஆகும். 

நாம் மின்சாரம் கடத்தும் கம்பியை கையால் தொட்டால் உயிருக்கு ஆபத்து ஏர்படும்   என்வே தான் ஒயர் என்ற இன்சுலேசன் அமைப்பிற்கு உள்ளாக கம்பி இருப்பது போல் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 

சரி அது என்ன இன்சுலேசன் என்ற கேள்வி எழுகிறதா இதோ பதில்:



நாம் மின்சாரத்தை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இன்சுலேட்டர் அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் மின் கடத்தா பொருள்கள் அனைத்தும் இன்சுலேட்டர்கள் என்று சொல்லலாம்.

உதாரணமாக:

கண்ணாடி, பிளாஸ்டிக்குகள், பேப்பர், பீங்கான், நன்றாக காய்ந்த மரக்கட்டை, ரப்பர் வகை மற்றும் காட்டன்கள். இவை அனைத்திலும் மின்சாரம் பாயாது. இதையே நாம் இன்சுலேசன் என்று சொல்கிறோம்.

சரி இனி விட்டதிலிருந்து தொடருவொம்,

 

இப்படி 1, 2, 3..... என்று கம்பிகள் இல்லாமல் அதற்கு பதிலாக அதிகமான பல சிறு சிறு கம்பிகள் உள்ள ஒயர்களும் இருக்கிறது. இதனை மல்டிபிளக்ஸ் ஒயர் என்று கூறவேண்டும்.

அதிக பருமன் உள்ள ஒயர்களை வாங்கும் போது sq.mm (ஸ்கொயர் எம் எம்) என்று சொல்லித் தான் வாங்க வேண்டும். 

உதாரணமாக:

16 sq.mm, 18 sq.mm, 20 sq.mm கொடுங்கள் சார் என்று கேட்டு வாங்க வேண்டும். 

மின்சாரத்தின் அளவைப் பொருத்தும், பயன்படுத்தும் மின் சாதனத்தின் மின்சார அளவைப் பொருத்து மட்டும் தான் நாம் ஒயரை வாங்க வேண்டும். 

கவணிக்க வேண்டியது:

கம்பியின் கேஜ் அதிகமாக இருந்தால் கம்பியின் பருமன்  சிறியதாக இருக்கிறது என்று அர்த்தம். கம்பியின் கேஜ் குறைவாக இருந்தால் கம்பியின் பருமன்  பெரியதாக இருக்கிறது என்று அர்த்தம். 

கம்பியின் பருமன் பெரியதாக இருந்தால் அதிக அளவு மின்சாரம் குறைந்த வேகத்தில் பாயும். கம்பியின் பருமன் சிறியதாக இருந்தால் குறைந்த அளவு மின்சாரம் அதிக வேகத்தில் பாயும். 

(தோட்டங்களில் பயன்படுத்தும் மோட்டார் பைப்புகளை நினைத்துப் பார்த்தல் தெளிவாகப் புரியும். பைப்பின் அளவு சிறியதாக இருந்தால் குறைந்த அளவு தண்ணீர் வேகமாக வரும். பைப்பின் அளவு பெரியதாக இருந்தால் தண்ணீர் அதிக அளவு தண்ணீர் குறைந்த வேகத்தில் வரும்.)

கம்பியின் பருமன் அதிகமாக இருந்தால் (கேஜ் எண் குறைவு) மின்தடை (resistance) குறைவாக இருக்கும் அப்படி என்றால் கரண்ட் ஆனது அதிகமாக செல்லும்.

கம்பியின் பாருமன் குறைவாக இருந்தால் (கேஜ் எண் அதிகம்) மின்தடை (resistance) கொஞ்சம் அதிகமாக இருக்கும். அப்படி என்றால் கரண்ட் ஆனது குறைவாகச் செல்லும்.

தொடரும்....

தகவல்: 

மின்சாரம் என்றால் என்ன ?

இதை நான் பல பதிவுகளில் சொல்லி இருக்கிறேன் . இருந்தாலும் படிப்பதை பல முறை படித்தால் தான் அது நம்முடைய மூளையில் நன்றாக பதியும் என்பதை கருத்தில் கொண்டு மீண்டும் எழுதுகிறேன். 

நாம் பார்க்கும் அனைத்துப் பொருள்களுமே பல அணுக்களின் கூட்டுக் கலவை ஆகும். இங்கு அணுக்கள் என்பது மிகவும் முக்கியமானது. இந்த அணுவின் உள்பகுதியில் எலெக்ட்ரான், புரோட்டான் சம எண்ணிக்கையில் இருக்கின்றன. இந்த எலெக்ட்ரான், புரோட்டான்களுக்கு அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் போது அது நகர்ந்து ஓடும். இந்த எலெக்ட்ரான், புரோட்டான்களின் ஓட்டமே மின்சாரம் ஆகும். 

மின்சாரம் பாயக்கூடிய பொருட்கள்:

செம்பு கம்பி (காப்பர்)


அலுமினியம்


தங்கம் (அதிக அளவில் பாயும்)

    

இரும்பு

சிலிக்கான் (சிறப்பாக பாயும்)


வெள்ளி 


யுரேனியம், பிளாட்டினம், ரேடியம் மற்றும் ஹைட்ரஜன் (காற்று). இவை அனைத்தும் மின்சாரத்தை கடத்தும். 

இவற்றில் துருப்பிடிக்காமலும் விலை மலிவாகவும் கிடைப்பது செம்பு கம்பியும் (காப்பர்), அலுமினியமும் தான் எனவே தான் அதனையே நாம் பயன்படுத்துகிறோம்.

இந்த மின்சாரத்தில் இருவகை உண்டு:

AC மின்சாரம், DC மின்சாரம் எனப்படும். இதைப்பற்றி வரவிறுக்கும் பதிவுகளில் பார்ப்போம். 

மின்சாரத்தின் வேகம்:


மின்சாரத்தின் வேகம் ஒரு நொடிக்கு மூன்று இலட்ச்சம் கி.மீ வேகத்தில் செல்லும் என்று கணித்திருக்கிறார்கள். அதாவது பல அணுக்களால் ஆன காப்பர் மற்றும் அலுமினியக் கம்பிகளில் இருக்கக்கூடிய எலெக்ட்ரான், புரோட்டான்கள் நொடிக்கு  மூன்று இலட்ச்சம் கிலோமீட்டர் (Km) வேகத்தில் ஓடும் என்று அர்த்தம்.

ம.பாண்டியராஜன்