Wednesday, 21 October 2015

10 ஆம் வகுப்பு - ஆங்கிலம் முதல் தாள் எளிதில் தேர்ச்சி பெற 11 குறிப்புகள்

10 ஆம் வகுப்பு - ஆங்கிலம் முதல் தாள் எளிதில் தேர்ச்சி பெற 11 குறிப்புகள்

அன்பு மாணவர்களே !

ஆங்கிலம் இரண்டாம் தாளை விட முதல் தாளுக்கு நீங்கள்  கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதல் தாளில் நீங்கள் 40 முதல் 50 மதிப்பெண்கள் பெருமளவுக்கு எழுதி விட்டால், இரண்டாம் தாள் மிக மிக எளிது. அதில் 50 மதிப்பெண்களை  எளிதில் பெற்றுவிடலாம்.

இப்ப வாங்க.... என்ன படிக்கலாம்? எப்படி படிக்கலாம்னு பார்ப்போம்.

1. கட்டகமும், பொதுத் தேர்வும் , ஒரு,இரு  மதிப்பெண் வினாக்களும் :

நடந்து முடிந்த தமிழ்த் தேர்வுகளில், தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்பட்டுள்ள சிறப்புக் கையேட்டிலிருந்து சுமார் 60 சதவீத அளவிற்கு வினாக்கள் கேட்கப் பட்டிருப்பதாக ஆசிரியர்களும் மாணவர்களும் பரவலாக கூறுகிறார்கள்.
அதனடிப்படையில், SYNONYMS, ANTONYMS, ABBREVIATIONS, PHRASAL VERBS, COMPOUND WORDS, AMERICAN- BRITISH ENGLISH, HOMOPHONES, SINGULAR-PLURAL   போன்றவற்றிற்கு கட்டகத்தில் (Module) உள்ளவற்றை நன்றாகப் படித்துக் கொள்ளுங்கள்.
பாடப் பகுதியில் இரு மதிப்பெண் வினாக்களுக்கும் கட்டகத்தில் உள்ள வினாக்களுக்கான் விடைகளை முதலில் எழுதிப் பார்த்து பயிற்சி செய்து கொள்ளுங்கள்.

 2.MEMORY POEM, PROSE, POEM- Paragraphs:
மொத்தம் இருக்கும் 4 மனப்பாடப் பாடல்களில், முதல் 2 மனப்பாடப் பாடல்கள் அல்லது அடுத்த 2 மனப்பாடப் பாடல்கள் என நன்றாகப் படித்து எழுதிப் பார்த்துக் கொள்ளுங்கள். 2 இல் ஒன்று கண்டிப்பாக கேட்கப்படும்.
PROSE Paragraph இல் முதல் மூன்று பாடங்களுக்குரிய கட்டகத்தில் இருக்கும் சிறிய Paragraph களை  மட்டும் நன்றாக எழுதிப் பார்த்துக் கொள்ளுங்கள். அதிலும் முதல் இரண்டு பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள்.
POEM- Paragraph ம் அப்படியே. முதல் 3 படித்தால் போதும். அதிலும் முதல் 2 க்கு அதிக கவனம் செலுத்துங்கள்.

3. வினா  எண் 25:(கொடுக்கப்பட்ட  இரண்டு வாக்கியங்களை ஒரு இணைப்பு வார்த்தையை பயன்படுத்தி  ஒன்றாக சேர்த்து எழுதுதல்.பொதுவாக and ,but  அல்லது so இவற்றில் ஒன்றை பயன்படுத்துவது போன்றே இது வரை வினாக்கள் அமைந்துள்ளன.)
இரண்டு வாக்கியங்களுக்கு இடையே உள்ள புள்ளியை நீக்கிவிட்டு, அந்த இடத்தில்  and அல்லது but அல்லது so - இந்த மூன்றில் எதாவது ஒரு இணைப்பு வார்த்தையை கொடுக்கப்பட்ட வாக்கியங்களின் பொருள் அறிந்து பொருத்த வேண்டும். (and - மற்றும், but -ஆனால் , so - ஆகவே )

4.வினா எண் 28: 'If ' clause :
கொடுக்கப்பட்ட இரண்டு வாக்கியங்களில் எந்த வாக்கியம் முதலில் வரும் என்பதை பொருளறிந்து அதற்கு முன் 'If ' சேர்த்து முதலில் எழுதி பின்னர் மீதம் இருக்கும் வாக்கியத்தை சேர்த்து எழுத வேண்டும்.

5. வினா எண் 29:
அளவுகளுடன் கொடுக்கப்பட்ட 3 அல்லது 4 வாக்கியங்களில் எண்ணிக்கை எந்த வாக்கியத்தில் அதிகமாகக் காணப்படுகிறதோ அந்த வாக்கியத்தை எடுத்து அதிலிருக்கும் adjective (உரிச்சொல்)லோடு ' est' சேர்த்து எழுதி அதற்கு முன் the  போட்டு எழுதவும்.

6.  Punctuation 30.: ( நிறுத்தற் குறி இடுதல்)
கொடுக்கப்பட்ட வாக்கியத்தை " (மேற் கோள் குறி )யோடு ஆரம்பித்து, முதல் எழுத்தை capital எழுத்தில் எழுதவும். முடிக்கும் போது (மேற் கோள் குறி )யோடு முடிக்கவும். I, He,She, It என்பன போன்ற பிரதி பெயர் சொற்கள் காணப்பட்டால் முதல் எழுத்தை capitalஎழுத்தில் எழுதவும். ஆள் பெயர், ஊரின் பெயர் வந்தால் capital எழுத்தில் ஆரம்பிக்கவும். வினா வார்த்தைகள் காணப்பட்டால் ? வினாக்குறி இறுதியில் போடவும்.

7. வினா எண் 40 முதல் 43 முடிய:
கட்டகத்தில் உள்ளவற்றை அவசியம் படித்துக் கொள்ளவும். கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் பெரும்பாலும் கேள்விக்கு மேலே கொடுக்கப்பட்டுள்ள வரிகளிலேயே அடங்கியுள்ளது என்பதை 'நினைவில் கொண்டு' எழுதவும்.

8. வினா எண் 44 முதல் 48 முடிய : 
alliteration, figure of speech, rhyming words, rhyming scheme என்பன போன்ற எளிதான வினாக்கள் இடம் பெரும் பகுதி இது. figure of speech பொறுத்தமட்டில் ஒவ்வொரு பாடலுக்கும் வழக்கமாக இருக்கக் கூடியவற்றை நன்கு படித்துக் கொள்ளவும். கட்டகத்தில் உள்ளவை மிக முக்கியம்.

9. வினா எண் 50:
இதில் வழங்கப்படும் 10 மதிப்பெண்களுக்கு 8 முதல் 9 மதிப்பெண்கள் எளிதில் பெற்றுவிடலாம். கொடுக்கப்பட்ட பத்தியை நன்றாக இருமுறை வாசித்துப் பாருங்கள். பதில் அந்தப் பத்தியில் தான் உள்ளது.

முடியவில்லை எனில்,  ஒவ்வொரு வினாவிலும் இருக்ககூடிய (வினா வார்த்தையைத் தவிர்த்து) வார்த்தைகளை படித்து மேலே இருக்கும் பத்தியில் அவ்வார்த்தை தென்படும் வரியையும் அதற்கு அடுத்த வரியையும் எடுத்து எழுதவும்.

10. வினா எண் 51:
இதில் 5 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கேள்வியிலும் ஏதேனும் ஒரு தவறு இருக்கும் அதை நாம் திருத்தி எழுத வேண்டும்.
கொடுக்கப்பட்ட கேள்வியில்,
an   இருந்தால் அதை நீக்கி விட்டு   a போடவும்.
அதே போல்,
a    இருந்தால் அதை நீக்கி விட்டு   an  போடவும்.

than  இருந்தால் அதை நீக்கி விட்டு   to   போடவும்.
அதே போல்,
to   இருந்தால் அதை நீக்கி விட்டு    than    போடவும்.

கொடுக்கப்பட்ட கேள்வியில் 'est'இணைந்து ஒரு வார்த்தை இருப்பின் அந்த வார்த்தைக்கு முன் the போட்டு எழுதவும்.

11. மிக முக்கியமான குறிப்பு:
விடைகளை வரிசையாக மாற்றாமல் எழுதுங்கள். மொத்தமுள்ள 52 வினாக்களில் எதையும் விட்டு விட்டு வந்துவிடாதீர்கள். 

வினா வெளியிலிருந்தோ , தவறாகவோ கேட்கப்பட்டால், நீங்கள் அதை எழுத முயற்சித்திருந்தால் மட்டுமே முழு மதிப்பெண் வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வினா எண்களை நினைவிலிருத்திக் கொள்ளுங்கள்.

25,28,29,30,38,39,44-48, 49,50,51- இவையெல்லாம் நீங்கள் மிக மிக எளிதாக மதிப்பெண் பெறக் கூடிய வினாக்கள்.

எனவே வினாக்களை நன்றாக புரிந்து கொண்டு செல்லுங்கள்.

No comments:

Post a Comment