Wednesday, 21 October 2015

திருக்குறள்

அதிகாரம்: ஒழுக்கம் உடைமை
இயல்: இல்லறவியல்
பால்: அறத்துப்பால்

மனதில் நினைப்பதை வகைப்படுத்தி செயலாகும்படி சொல்லும் திறன் ஒழுக்கம்.ஒழுக்கம் என்பதற்கு வரையறை இல்லை.அவரவர் நிலையில் உணரும் பாங்கு இருக்கும் போது எங்கும் இயலாமை சரி செய்யப்பட்டு மனதில் நினைப்பதை தரும் உத்திரவாதம் இருக்குமே தவிர சொல்லி விட்டால் செயலாகாது என்னும் தவறான எண்ணம் தக்க தயார் நிலை இல்லாது சாதிக்க அவசரப்படும்போது வருகிறது.

குறள் 131
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

மனதில் உள்ளதை ஒழுக்கும் நிலை நன்மையை தரலானது அதனால் அகம் நினைப்பதை ஒழுக்கும் வெளிப்படைத்தன்மையும் பதில் சொல்லும் பொறுப்பும் உயிரை விட பெரியது.மனதிற்குள் வைத்து தந்திரங்கள் செய்து மூலையை கசக்கி பெறும் பயனை விட மனத்தால் இயம்பி தக்க ஒத்துழைப்பு பெற்று உயருவது உயிர்க்காக்கும் வாழ்வியல்.

குறள் 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை

பரிவுடன் கேட்டு ஓம்பிக்காக்க வேண்டும் அகத்தில் உள்ளதை பகிருபவரிடம்.தெரிந்தோம்பி தெரிவு செய்தாலும் பரிவுடன் கேட்பவரே நல்ல துணை.

குறள் 133
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

மனதில் உள்ளதை தெளிவாக பகிரும் ஒழுக்கு அகம் உடையவன் குடிமைப்பண்பு பெற்றவன்.தன மனம் நினைப்பதை யுக்தியால் பெரும் இழுக்கு அகம் இழிந்த பிறப்பு என்னும் நிலையை தரும்.

குறள் 134
மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்

பரப்பனவரின் பணி வளம் சேர்க்கும் இடம் வளர மறை ஊதுவது.அந்நிலை மறந்தாலும் கூட ஏற்றுக்கொள்ளப்படுவார் , ஆனால் ஒழுக்கும் அகம் குறைந்து இழுக்கம் இருக்குமெனில் கெடுவார்.

குறள் 135
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு

பொறாமையுடைவனுக்கு ஆக்கமில்லாதது போல ஒழுக்கமிலாதவனுக்கு உயர்வு இல்லை.

குறள் 136
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து

இழுக்கத்தினால் வரக்கூடிய பழி , பாடு அறிந்து மனம் நினைப்பதை தவறாது பகிர்வார் உரம் மிக்கோர்.

குறள் 137
ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி

மனத்தில் தோன்றுவதை பகிருவதனால் மேன்மை எய்துவர்.இழுக்கத்தினால் அடையக்கூடாத பழி அடைவர்.

குறள் 138
நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

நல்லவை பகிருதல் நன்றிக்கு வித்தாகும்.தீயவை பகிருதல் என்றும் துன்பத்தை தரும்.

குறள் 139
ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்

தீயவற்றை தவறியும் வாயால் சொல்லாதிருத்தல் ஒழுக்கும் அகம் உடையவருக்கு உரியது.

குறள் 140
உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்

உலகத்தோடு ஓட்டும்படி பகிரும் வழி தெரியாதவர் பல கற்றும் கல்லாதவராகவே கருதப்படுவார்.

No comments:

Post a Comment