Wednesday, 21 October 2015

சட்டம் படிக்க

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திலும் அதன் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளிலும் சட்டப் படிப்புகளைப்படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

 

 

சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள ‘ஸ்கூல் ஆஃப் எக்ஸலன்ஸ் இன் லா’ கல்வி நிலையத்தில் பி.ஏ.,பி.எல்., (ஆனர்ஸ்), பி.காம்., பி.எல்., (ஆனர்ஸ்)  ஆகிய ஐந்து ஆண்டுஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள் உள்ளன. இந்தப் படிப்புகளில் பிளஸ் டூ படித்த மாணவர்கள் சேரலாம். இங்குள்ளமூன்று ஆண்டு பிஎல் (ஆனர்ஸ்) பட்டப் படிப்பில், இளநிலைப் பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் சேரலாம். பொதுப்பிரிவுமாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் 70 சதவீத மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும். 

 

 

 

அதிகபட்ச வயது வரம்பு 20. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்கள் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன்தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 22-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இதே கல்வி நிலையத்தில்  பி.எல். (ஆனர்ஸ்) மூன்றாண்டு படிக்க விரும்பும் மணவர்கள் பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ், பி.பார்ம்., உள்பட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

 

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி, செங்கல்பட்டு, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில்உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் பி.ஏ.,பி.எல்., ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பும் மூன்று ஆண்டு சட்டப்படிப்பும் உள்ளன. வேலூர் சட்டக்கல்லூரியில் மட்டும் பட்டப் படிப்பு படித்தோருக்கான, பி.எல்., மூன்று ஆண்டு இளநிலைசட்டப்படிப்பு உள்ளது.

 

 

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில்  பிசினஸ் லா, கான்ஸ்டிடியூஷனல் லா  - ஹியூமன் ரைட்ஸ்,இன்டலக்ச்சுவல் ப்ராப்பர்ட்டி லா, இண்டர்நேஷனல் லா - ஆர்கனைசேஷன், என்விரான்மென்டல் லா - லீகல் ஆர்டர்,கிரிமினல் லா - கிரிமினல் ஜஸ்டிஸ் அட்மினிஸ்ட்ரேஷன், ஹியூமன் ரைட்ஸ் - ட்யூட்டிஸ் எஜுக்கேஷன், லேபர் அண்ட்அட்மினிஸ்ட்ரேட்டிவ் லா ஆகிய பாடப்பிரிவுகளில் இரண்டு ஆண்டு எம்.எல். படிப்புகள் உள்ளன.

 

 

பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு சட்டப்படிப்புகள், மூன்றாண்டு சட்டப்படிப்பு, இரண்டாண்டுமுதுநிலை சட்டப்படிப்பு படிக்க விரும்பும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம், நேரில் பெற ரூ. 1,000. தபாலில் பெற ரூ. 1,100. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம், நேரில் பெறரூ. 500. தபாலில் பெற ரூ. 600.

சட்டக்கல்லூரிகளில் படிக்க விரும்பும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம், நேரில் பெற ரூ. 500.தபாலில் பெற ரூ. 600. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கான விண்ணப்பக் கட்டணம், நேரில் பெற ரூ. 250.தபாலில் பெற ரூ. 350.

 

 

 

தேசியமயமாக்கப்பட்ட எந்த ஒரு வங்கிக்கிளையில் இருந்தும் The Registrar, The Tamilnadu Dr. Ambedkar Law University, Chennai என்ற பெயரில், சென்னையில் மாற்றத்தக்க வகையில், டிமாண்ட் டிராப்ட் எடுத்து, அதன் மூலமாக மட்டுமேகட்டணத்தை செலுத்த வேண்டும்.

 

 

 

விண்ணப்பத்தை நேரில் பெற விரும்புபவர்கள், தங்களுக்குரிய கட்டணத்துக்கான டிமாண்ட் டிராப்ட்டுடன் அம்பேத்கர்சட்டப் பல்கலைக்கழத்திற்கு நேரில் வந்து விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம். சட்டக்கல்லூரிகளில் உள்ளமுதல்வர் அலுவலகத்திலும் டிமாண்ட் டிராப்ட்டை நேரில் கொடுத்து விண்ணப்பத்தினை பெற்றுக் கொள்ளலாம்.தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள், அதற்குரிய சான்றிதழின் நகலை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.தபால் மூலம் விண்ணப்பத்தைப் பெற விரும்புபவர்கள் எங்கு படிக்க விரும்புகிறாரோ, அந்தக் கல்வி நிலையத்திற்குகேட்புக் கடிதத்துடன், என்ன படிக்க இருக்கிறீர்கள் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டு, டிமாண்ட் டிராப்ட், தேவைப்படின்சாதிச் சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

 

 

பி.ஏ.,பி.எல்., (ஆனர்ஸ்), பி.காம்., பி.எல்., (ஆனர்ஸ்)  ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை பட்டப்படிப்பு, அரசு

சட்டக்கல்லூரிகளில் பி.ஏ.,பி.எல்., ஐந்து ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை பட்டப்படிப்பு ஆகிய படிப்புகளில் சேரவிரும்பும் மாணவர்கள் ஜூன் 14-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

 

 

பி.எல்., (ஆனர்ஸ்), எம்.எல், தொலைநிலைக் கல்வி முறையிலான டிப்ளமோ படிப்புகள், சட்டக்கல்லூரியில் மூன்றாண்டுபி.எல். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஜூலை 10- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

 

 

பிளஸ் டூ அல்லது பட்டப்படிப்பில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்களின் அடிப்படையிலும் தமிழ்நாடு அரசின்ஒதுக்கீட்டு அடிப்படையிலும் தகுதியுடைய மாணவர்கள் இப்படிப்புகளில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

 

 

விவரங்களுக்கு: www.tndalu.ac.in

நன்றி ;- புதிய தலைமுறைக்கல்வி

 

 

 

No comments:

Post a Comment