Sunday, 29 November 2015

Free call and chat

உங்களைச் சுற்றி 100 மீட்டர் சுற்றளவிற்குட்பட்ட பகுதியிலுள்ள ஆண்டிராய்டு மொபைல் வைத்திருக்கும் நண்பர்களுடன் இலவசமாக பேசிக்கொள்ளவும் (voice call) மற்றும் செய்தி (text message) அனுப்பவும் மேலும் அனைத்துவகை கோப்புகளையும் (files) பரிமாறிக்கொள்ளவும் உதவக்கூடிய ஒரு அருமையான app "WIFI TALKIE". தேவையான இரண்டு மொபைல்களிலும் இந்த app இருத்தல் வேண்டும். மேலும் இரண்டு மொபைல்களும் wi- fi தொழில்நுட்பம் கொண்டதாய் இருத்தல் வேண்டும். இந்த app இனை Google play store மூலம் தரவிரக்கம் (download) செய்ய கீழ்க்கண்ட link ஐ உபயோகிக்கவும்.
மேலும் இது குறித்த சந்தேகங்களை comment இல் தெரிவிக்கவும் அல்லது தனிமடலில் (inbox) இல் கெட்கவும்.
" யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்"
Download link for WiFi talkie:
https://play.google.com/store/apps/details?id=com.remaller.android.wifitalkie_lite

எண்ணங்கள் பலவிதம்

எண்ணங்கள் பலவிதம்

என் எண்ணங்களின் நீருற்று

TAGGED WITH கிரைண்டர்

சில எண்ணங்கள் -25

மின் தடையால்
மிக்ஸி ஓடவில்லை
கிரைண்டர் ஓடவில்லை
ப்ரிஜ் ஓடவில்லை
வாசிங் மிஷின் ஓடவில்லை
மோட்டர் ஓடவில்லை
டீவீ ஓடவில்லை
ஆக மொத்தம் எனக்கு
கையும் ஓடவில்லை
காலும் ஓடவில்லை!

என்னது பூரிக்கு தொட்டுக்க கிழங்கா??
என்ன கொடுமை அம்மா இது!
.
.
.
.
புரட்டாசியில் புறப்படும்

புதல்வனின் புலம்பல்கள்!!

ஒரு ஊருல ஒரு ராஜா
இருந்தானாம்…
அவர் ஏழு கடல் தாண்டி
ஏழு மலை தாண்டி ஒரு
எலுமிச்சம்பழம் கொண்டு
வந்தாராம்….
ரெண்டு வரி கதை 
சொல்வதற்குள்ளேயே
பையன் அலுத்து கொண்டான்..
பக்கத்து பெட்டி கடை பாட்டி
கிட்ட கேட்டாலே குடுத்திருக்கும்..
போங்கடா நான் கதையே சொல்லல!!

ஒன்ன ரெண்டாக்கி
ரெண்ட நாலாக்கி
நால எட்டாக்கி
ஒவ்வொன்றுக்கும் 
இடையே கால் ஸ்பூன்
சீனி போட்டு தண்ணி
ஊற்றி…..
ஐய்யையோ சத்தியமா
ரெசிபி எல்லாம் இல்லை
ஒரே வாயில போட்டு
மாத்திரையை விழுங்க
சொன்னா கேக்க
மாட்டிகிரான் என் பையன்!

குக்கரின் சூடு பொறுப்பாள்
எண்ணெயில் பொரிந்து கைகளில்
வெடித்து சிதறும் கடுகின்
சூடை பொருட்படுத்த கூட மாட்டாள்
எதிர்பாராமல் கைகளில் கொட்டி
விடும் வெந்நீரை பூ வென்று ஊதி
வலி மறந்து போவாள்
மனம் பொறுக்க மாட்டாமல்
அலறுவாள் ‘அம்மா’ தன் குழந்தையின்
மேனி சுடும் போது மட்டும்!!

Saturday, 28 November 2015

ஷாப்பிங் போகலாமா..? கிரைண்டர்… வாங்கும் முன், பின் கவனிக்க!

ஷாப்பிங் போகலாமா..? கிரைண்டர்… வாங்கும் முன், பின் கவனிக்க!

ஷாப்பிங் போகலாமா..? 
கிரைண்டர்... வாங்கும் முன், பின் கவனிக்க!வ்வொரு பொருளையும் வாங்குவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை வழங்கும் இந்த `ஷாப்பிங் போகலாமா..?’ பகுதியில், இம்முறை  கிரைண்டர் வாங்க இருப்பவர்களுக்கான வழிகாட்டல்கள் மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளை வழங்குகிறார், நான்கு தலைமுறைகளாக கிரைண்டர் தயாரிப்பில் வெற்றிகண்டுவரும் ‘சௌபாக்யா’ நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் வரதராஜன்.

‘‘பொதுவாக எந்தப் பொருள் வாங்கி னாலும் ஆஃபர் பார்த்து வாங்காமல், உங்கள் வீட்டுக்கான அதன்தேவை, பயன்பாட்டைப் பொறுத்தே வாங்க வேண்டும். குழவிக்கல் செயினில் கட்டியிருக்கும் பழைய மாடலில் ஆரம்பித்து, இப்போது வந்துள்ள டேபிள் டாப் வரை, கிரைண்டரில் எட்டு வகைகள் உள்ளன. டேபிள் டாப் கிரைண்டர்கள் அனைத்தும் 1.25 லிட்டரில் இருந்து 2 லிட்டர் வரை கொள்ளளவும், 11 முதல் 45 கிலோ வரை எடையிலும் இருக்கும். கிரைண் டருக்கு சர்வீஸ் சார்ஜ் வாங்காத நிறுவனங்களும் உண்டு. இது போன்ற சலுகைகளையும் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்’’ என்ற வரதராஜன் வழங்கிய டிப்ஸ்கள் இதோ...

 டேபிள் டாப் வெட் கிரைண்டரின் சில வகைகளில் மூடியின் அழுத்தத்தில்தான் மாவு அரைபடும் என்பதால், மூடியை கவனமாக செக் செய்து வாங்கவும்.
 கிரைண்டர் வைக்க கிச்சனில் மேடை வசதியில்லை எனில், சந்தையில் கிடைக்கும் அதற்கென்ற பிரத்யேக ஸ்டாண்டுகள் வாங்கிப் பயன்படுத்தலாம்; கையாள்வது சுலபமாக இருக்கும்.
 கிரைண்டருடன் கோதுமை மாவு பிசைய, தேங்காய் துருவ எல்லாம் தரப்படும் அட்டாச்மென்ட்களும் வேண்டுபவர்கள், அந்த மாடலை தேர்வு செய்து வாங்கவும்.
 டிரம்மை தனியாக வெளியே எடுக்கும் வகையிலான டேபிள் டாப் கிரைண்டரில், டிரம் வைக்கும் ஸ்டாண்டில் புஷ் சரியாக இருக்கிறதா என்று ஒவ்வொரு முறையும் செக் செய்துகொள்ளவும்.
 கிரைண்டருக்கென குறிப்பிடப்பட்டுள்ள கொள்ளளவுக்கு அதிகமாக அல்லது குறைவாக தானியங்கள் போட்டு அரைத்தால், தேய்மானம் ஏற்படும்.
 எப்போதும் கிரைண்டரில் உளுந்து அரைத்த பின்னரே அரிசியை அரைக்கவும். அப்போதுதான் வழவழப்பு நீங்கி சுத்தம் செய்ய எளிதாக இருக்கும்.
 டேபிள் டாப் கிரைண்டரின் குழவிக்கல் தேய்ந்துவிட்டால் மாவு அரைக்க நேரமாகும் என்பதால், புதிதாக கற்களை மாற்றிக்கொள்ளவும்.
 கிரைண்டரில் உள்ள தள்ளு பலகை லூஸாக இருந்தால் மாவு சரியாக அரைபடாது என்பதால், இறுக்கமாக மாட்டப்பட்டிருக்கிறதா என்று அடிக்கடி செக் செய்துகொள்ளவும்.
 கிரைண்டர் குழவி மாட்டும் ஸ்டாண்டை உலர்ந்த துணியால் துடைத்துவிட்டால் துருப்பிடிக்காமல் இருக்கும்.
 மாவு தள்ளும் பலகை டிரம்மில் படாதபடியும், கல்லில் படாதபடியும் சிறிது இடைவெளி விட்டு இருந்தால் பலகை விரைவில் தேய்வதைத் தவிர்க்கலாம்.
 ஒவ்வொரு முறை கிரைண்டர் குழவிக் கல்லை கழுவும்போதும் அதன் கைப்பிடியில் உள்ள வாஷரின் உள்ளே தண்ணீர் சென்றுவிடாதபடி கழுவ வேண்டியது அவசியம்.
 கிரைண்டர் ஆட்டும்போது சத்தம் அதிகம் வந்தால், பேரிங் பழுதடைந்திருக்கும். உடனடியாக பேரிங்கை மாற்றவும்.

 மோட்டார் `ஆன்’ செய்தும் டிரம் ஓடவில்லை என்றால் பெல்ட் கழன்றிருக்கும். உடனடியாக மாற்றவும்.
 கிரைண்டரில் உள்ள பாலிஷ் மங்காமல் இருக்க சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை தேங்காய் எண்ணெய் கொண்டு துணியால் துடைக்கலாம்.
 கிரைண்டருக்கும் சுவருக்கும் சிறிதளவு இடைவெளி இருக்க வேண்டும். அந்த  அறையில் எர்த் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும்.
 கிரைண்டர் பயன்பாட்டில் இருக்கும்போது, அதிக மின்சாரம் இழுக்கக்கூடிய மற்ற மின்சாதனங்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.’’