Monday, 23 November 2015

உங்கள் பகுதியில்ஒரு ஆக்கிரமிப்பு உள்ளது.

உங்கள் பகுதியில்ஒரு ஆக்கிரமிப்பு உள்ளது.
அப்போது,நீங்கள் அதை அகற்ற மனு செய்யநினைக்கிறீர்கள்.
நீங்கள் தகவல் சட்டம் மூலம்
எவ்வாறு மனு செய்யலாம்? அதற்கானஒரு மாதிரி இதோ –-----------------------------------------------------------
------------------------------------------------------------
----------------நீங்கள் பொது தகவல் அதிகாரியிடம்,
கீழ்கண்டஇடத்தில் ஆக்கிரமிப்பு உள்ளஇடத்திற்கு வழங்குமாறு,அவரத
ு கோப்பிலுள்ள தகவலை கீழ்கண்டவாறு கேட்கலாம்.
(A) ................................
(B)........................
(C)....................
(D)...................(இடம் /சொத்தை பற்றி)
(1)ஆக்கிரமிப்பை பற்றி
(2) பொது இடம் எந்த அளவு (சைஸ்)ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது எனகுறிப்பிட்டு சொல்லுங்க.
(3) எப்போது இது குறித்து உரியஅதிகாரிக்கு தெரியும் என்பதையும்தெரிவியுங்கள்.
(4) அந்த ஆக்கிரமிப்பை அகற்ற உரியஅதிகாரி என்னநடவடிக்கை எடுத்துள்ளார்?அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்,என்ன காரணம் என்பதற்கு தங்கள் அலுவலககோப்பில் உள்ள தகவல் படி, காரணம்சொல்லுங்கள்.
(5) யார் இது குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமோ, அந்த அதிகாரியின் பெயர் /விலாசம் / தொடர்பு என் மற்றும்அவரது பதவி
(6) தங்கள் துறை விதி / நடைமுறை படி,ஆக்கிரமிப்பு அகற்றாமல் இருந்தஅதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்.
(7) உரிய ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டியஅதிகாரிகள் மீது, இந்திய தண்டனை சட்டம்பிரிவு 217 மற்றும், பிரிவு 13(1)(d), லஞ்சஒழிப்பு சட்டப்படி, என் நடவடிக்கை எடுக்ககூடாது என்பதை காட்டும், தங்கள்அலுவலக விதிமுறைகள்.
(8) ஆக்கிரமிப்பு அகற்றல் தொடர்பான என்மனு மீதான உரிய அதிகாரிகள் எடுத்தநடவடிக்கை குறித்து, தங்கள் அலுவலகfileகள் அனைத்தையும், எனது சாட்சி மற்றும்வீடியோ காமிரா மூலம் ஆய்வு செய்ய இடம்மற்றும் நேரம் சொல்லுங்கள்.
(9) எத்தனை நாட்களுக்குள், இந்தஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும்என்பதை காட்டும் தங்கள் அலுவலக விதிகள்அடங்கிய பதிவேட்டை தர வேண்டுகிறேன்.
(10) இந்த மனுவிற்கு தாங்கள் பதில்அளிக்காத பட்சத்தில், நான் யாரிடம் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றஅலுவலரின், முழு பெயர், முகவரி, செல்போன் என்.

No comments:

Post a Comment