வாட்ஸ்அப் புகைப்படங்கள் கேலரியில் (Gallery) தோன்றாமல் மறைப்பது எப்படி? (ஆண்ட்ராய்டு)
மூன்றாம் நபர் பைல் மேனேஜர் (File Manager) அப்ளிகேஷன் ஒன்றை பயன்படுத்தி இதனை மிக இலகுவாக மேற்கொள்ளலாம்.
இதற்கு ஈ.எஸ் பைல் எக்ஸ்ப்ளோரர் அப்ளிகேஷன் சிறந்தது.
1. முதலில் குறிப்பிட்ட அப்ளிகேஷன் மூலம் உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்கும் வாட்ஸ்அப் (Whatsapp) கோப்புறையை (Folder) தேடிப்பெற வேண்டும்.
2. பின்னர் குறிப்பிட்ட கோப்புறைக்குள் இருக்கும் மீடியா (Media) ===> Whatsapp Images எனும் கோப்புறையை திறந்துகொள்ளுங்கள்.
3. இனி ஈ.எஸ் பைல் எக்ஸ்ப்ளோரர் அப்ளிகேஷனின் வலது கீழ் மூலையில் தரப்பட்டுள்ள பிளஸ் குறியீட்டை (+) சுட்டும் போது தோன்றும் சாளரத்தின் ஊடாக File என்பதை சுட்டுக.
4. பின் அதற்கு .nomedia என பெயரிடுக.
அவ்வளவுதான்...!
இனி வாட்ஸ்அப் புகைப்படங்கள் கேலரியில் தோன்ற மாட்டாது.
வாட்ஸ்அப் புகைப்படங்கள் மீண்டும் கேலரியில் தோன்றச் செய்ய விரும்பினால் கீழுள்ள வழிமுறைகளை பின்பற்றுக.
1. ஈ.எஸ் பைல் எக்ஸ்ப்ளோரர் அப்ளிகேஷனின் இடது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று புள்ளிகளால் ஆன மெனு குறியீட்டை சுட்டுக.
2. பின்னர் தோன்றும் சாளரத்தில் "Show hidden files" என்பதை செயற்படுத்திக் கொள்க.
3. பின்னர் வாட்ஸ்அப் (Whatsapp) ===> மீடியா (Media) ===> Whatsapp Images எனும் கோப்புறைக்கு மீண்டும் செல்க.
4. இனி அதில் நீங்கள் உருவாக்கிய .nomedia எனும் கோப்பை நீக்கி விடுக
அவ்வளவுதான்.
உதவிக் குறிப்புகள்:
மேற்கூறிய முறையில் .nomedia எனும் கோப்பை உருவாக்கிய பின்னும் வாட்ஸ்அப் புகைப்படங்கள் கேலரியில் இருந்து மறையவில்லையா?
அப்படியாயின் Settings ===> Genaral ===> Application Manager எனும் பகுதி மூலமாக Gallery ஐ தெரிவு செய்து Clear Cache என்பதை சுட்டுக.
Whatsapp Images எனும் கோப்புறையில் நீங்கள் உருவாக்கிய .nomedia கோப்பை நீக்கிய பின் வாட்ஸ்அப் புகைப்படங்கள் கேலரியில் தோன்றவில்லையா?
1. அப்படியாயின் பின் அதில் இருக்கும் Whatsapp Images எனும் கோப்புறையை தொடர்ச்சியாக சிறிது நேரம் அலுத்துக. (இனி அது Tick செய்யப்படும்)
2. பின்னர் ஈ.எஸ் பைல் எக்ஸ்ப்ளோரர் அப்ளிகேஷனின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று புள்ளிகளாலான மெனு குறியீட்டை சுட்டும் போது திறக்கும் சாளரத்தில் Rename என்பதை சுட்டுக.
3. இனி அதற்கு நீங்கள் விரும்பும் பெயர் ஒன்றை இட்டு Ok அலுத்துக இனி நிச்சயமாக அவைகள் கேலரியில் தோன்றும் (ஆனால் இன்னும் முடியவில்லை)
4. பின்னர் மீண்டும் அதன் பெயரை Whatsapp Images என்பதாக மாற்றிக்கொள்க. (இல்லையெனில் வாட்ஸ்அப்பில் இருந்து வரக்கூடிய புகைப்படங்களுக்கு Whatsapp Images எனும் புதியதொரு கோப்புறை உருவாக்கப்பட்டு
விடும்.
Sunday, 22 November 2015
வாட்ஸ்அப் புகைப்படங்கள் கேலரியில் (Gallery) தோன்றாமல் மறைப்பது எப்படி?
Labels:
வாட்ஸ்அப்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment