கட்டளையிடும் நீதிப்பேராணை பற்றி ...
..
STATUS REG-WRIT OF MANDAMUS...
கோரிக்கை /புகார்.....( PETITION/
COMPLAINT)
..
அரசு அலுவலர்கள் /அதிகாரிகள் உங்கள் கோரிக்கை /புகார் மனு மீது நடவடிக்கை /பரிசீலனை செய்யாத பட்சத்தில் ...என்ன செய்ய வேண்டும்...
..
நீங்கள் கொடுக்கும்/பதில் அஞ்சல் மூலம் தரும் புகார் மனு/கோரிக்கை மனு மீது அரசு அலுவலர்கள் 60 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதி மன்றம் உத்தரவு அளித்துள்ளது ...
..
உங்கள் கோரிக்கை மனு/புகார் மனு மீது 60 நாட்களுக்குள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் ....தான் உயர்நீதி மன்றத்தை நாட வேண்டும்...
..
சரி...இந்த 60 நாட்கள்...எப்படி...நாம் வகுத்து செயல்பட வேண்டும் என்று பார்ப்போம்...
..
முதலில் கோரிக்கை மனு/புகார் மனு....எழுதி நேரில் அல்லது பதிவு அஞ்சல் மூலம் கொடுக்கிறர்கள் ...
..
நீங்கள் புகார்/கோரிக்கை தந்து 30 நாட்கள் ஆன பிறகு ...ஒரு
# நினைவூட்டும் கடிதம்(REMINDER LETTER) கொடுக்க/அனுப்ப வேண்டும்...
..
நினைவூட்டும் கடிதத்துடன் ..நீங்கள் மனு தந்ததற்கு ஆதாரமாக ஒப்புகை ரசீது நகல் இணையுங்கள் ...
.
..
நினைவூட்டும் கடிதம் அனுப்பி 15 நாட்கள் ஆன பிறகு ....
..
ஒரு # சட்டப்பூர்வ அறிவிப்பு அனுப்புங்கள் ...அதாவது புகார் தந்து இதுவரை எவ்வித நடவடிக்கை/என் மனு மீது பரிசீலனை செய்யவில்லை ...ஆதலால்,இவ்வறிவிப்பு கிடைத்த 15 நாட்களில் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ...மனுதாரர் /புகார்தாரர் ஆகிய நான்...
..
நீதியை நிலைநாட்ட ..உயர் நீதி மன்றத்தில் ...கட்டளை நீதிப்பேராணை (WRIT OF MANDAMUS)
தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிடலாம் ....
..
அறிவிப்பு அனுப்பி 15 நாட்களில் ...எவ்வித நடவடிக்கைகள் இல்லாத பட்சத்தில் ...
..
..
உயர் நீதி மன்றத்தில் ...கட்டளை நீதிப்பேராணை (WRIT OF MANDAMUS) யை தாக்கல் செய்ய வேண்டும்.
Monday, 23 November 2015
கட்டளையிடும் நீதிப்பேராணை பற்றி ...
Labels:
சட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment