Good evening Friends
தெரியாத நபர்களிடம் உங்களது தனிப்பட்ட அலைபேசி எண்ணை பகிர பயமா?
நியூயார்க், நவ.14-
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள ரெட்மாண்ட் நகரில் மொபைல்களுக்கான புதிய சாப்ட்வேர் தயாரிப்பு மற்றும் தொலைதொடர்பு துறை நிறுவனமாக ஐவிகார்ப் இயங்கிவருகின்றது. இந்நிறுவனம் தற்போது பாக்ஸ்(Phox) என்கிற சேவையை தொடங்கியுள்ளது.
இதன்படி, தனிப்பட்ட மொபைல் எண்களை தெரியாத நபர்களிடம் பகிர மனமில்லாதவர்கள், இந்த பாக்ஸ் சேவை மூலமாக கிடைக்கும், எண்ணை பகிர்ந்துகொள்ளலாம். இந்த சேவையின் மூலம் தெரியாத நபர்களின் எஸ்.எம்.எஸ்.-கள் நமது போலியான எண் வழியே தனிப்பட்ட எண்ணுக்கே வரும்.
நம்முடைய தனிப்பட்ட எண் மூலமாகவே இந்த போலி எண்ணுக்கான எஸ்.எம்.எஸ்.-களை அனுப்பலாம். ஒருவேளை தெரியாத நபர் நாம் கொடுத்த போலி எண்ணுக்கு நேரடியாக அழைப்பு விடுத்தால், அவர்களுக்கு நாம் வேறு எண்ணுடன் பேசிக் கொண்டிருப்பது போலவே தெரியும்.
ஆகவே, இதன்மூலம் நம்மைப் பற்றிய ரகசியத்தை யாரும் தெரிந்துகொள்ளாமல் தடுக்கலாம். இந்த சேவையை ஏழு நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். மேற்கொண்டு பயன்பாட்டுக்கு ஏற்ப இதில் கட்டணம் வசூலிக்கப்படும்.
மாதத்துக்கு 100 எஸ்.எம்.எஸ். அனுப்ப ஐந்து அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் முன்னூற்று இருபத்தேழு ரூபாய்), கணக்கில்லா எஸ்.எம்.எஸ்.-களை அனுப்ப மாதத்துக்கு 10 அமெரிக்க டாலர்களும் (இந்திய மதிப்பில் அறுநூற்று ஐம்பத்து ஏழு ரூபாய்) கட்டணமாக வசூலிக்கப்படும்.
--மாலைமலர்
No comments:
Post a Comment