Friday, 20 November 2015

ஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா? சரி செய்வது எப்படி?

ஆண்ட்ராய்ட் Play Store பிழை செய்தி வருகிறதா? சரி செய்வது எப்படி?

ஆண்ட்ராய்ட் மொபைல்களில் கூகிள் பிளே ஸ்டோரில் ஏதேனும் ஆப் இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி காண்பித்து பல நேரங்களில் நம்மை எரிச்சலூட்டும். இதனால் பலர் பிளே ஸ்டோரை விட்டு விட்டு மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோர் GetJar, Mobo Market, Mobile9, Amazon போன்றவற்றை நாடுகிறார்கள். இன்றைய பதிவில் கூகிள் பிளே ஸ்டோர்ல பிழை(Error) வந்தால் எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம். மேலும் November 14 2015 அன்று வெளிவந்த புதிய பதிப்பான Google Play Store 6.0.0 டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.

கூகிள் பிளே ஸ்டோரில் நாம் ஒரு அப்ளிகேசனை இன்ஸ்டால் செய்யும் போது பிழை செய்தி வந்தால் அதுக்கு Error நம்பர் ஒன்று கிடைக்கும். உதாரணமாக மேலே உள்ள பிழை செய்தியில் 403 என்று இருக்கிறது பாருங்கள். இப்போது ஒவ்வொரு நம்பருக்கும் எப்படி சரி செய்வது என்பதை பார்ப்போம்.

1. Google Play Store Error 403

பிழை எண் 403 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் இரண்டு கூகிள்/ஜிமெயில் கணக்கை கொடுத்து வைத்து இருக்கலாம். ஒன்றை மட்டும் தற்காலிகமாக அழித்து விட்டு மொபைலை ஆப் செய்து திரும்ப ஆன் செய்தால் சரியாகி விடும். அப்படியும் சரியாகவில்லை எனில் வேறொரு கூகிள் கணக்கை இணைத்து முயற்சி செய்யுங்கள். கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.

கவனிக்க: முறையற்ற Proxy settings மூலம் இன்ஸ்டால் செய்தாலும் இந்த பிழை செய்தி வரலாம்.

2. Google Play Store Error 495

பிழை எண் 495 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Settings >> Apps >> All >> Google Play Store டச் செய்து வரும் பக்கத்தில் Clear Data பட்டனை டச் செய்தால் எச்சரிக்கை செய்தி தரும். அதில் Ignore செய்து ஓகே கொடுத்து கிளியர் செய்யுங்கள். இப்போது Settings >> Accounts >> Add Account பழைய கணக்கை அழித்து விட்டு மீண்டும் கூகிள் கணக்கை கொடுங்கள். ஒரு முறை மொபைலை ஆப் செய்து திரும்ப ஆன் செய்யுங்கள். இப்ப கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.

3. Google Play Store Error 491

பிழை எண் 491 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் முதலில் Settings >> Accounts >> உங்கள் கூகிள் கணக்கை டெலீட் செய்யுங்கள். பிறகு Settings >> Apps >> All >> Google Play Services (கவனிக்க இது Google Play Services)  டச் செய்து Clear Data செய்யுங்கள். பிறகு Force Stop செய்யுங்கள். ஒரு முறை மொபைலை ஆப் செய்து திரும்ப ஆன் செய்யுங்கள்.இப்போது Settings >> Accounts >> Add Account உங்கள் கூகிள் கணக்கை இணையுங்கள். இப்ப கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.

4. Google Play Store Error 498

பிழை எண் 498 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் போதிய இடமில்லை என்று அர்த்தம். Cache அதிகமான இடத்தை எடுத்துக்கொண்டுள்ளது என்று பொருள். அதிகம் தேவையற்ற அப்ளிகேஷன்களை அழித்து விட்டு பயன்படுத்தி பாருங்கள். இல்லையேல் Hard Reset செய்தால் பிரச்சனை சரியாகும். Hard Reset செய்வது பற்றி தனி பதிவில் பாருங்கள்.

5. Google Play Store Error 941

பிழை எண் 941 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Settings > Apps > All > Google Play Store வரும் பக்கத்தில் Clear Cache மற்றும் Clear Deta இரண்டு பட்டனையும் டச் செய்து கிளியர் செய்த பிறகு (அதே வழியில்) Settings > Apps > All > Download Manager Clear Cache மற்றும் Clear Deta இரண்டு பட்டனையும் டச் செய்து கிளியர் செய்த பிறகு மொபைலை ஆப் செய்து ஆன் செய்யுங்கள் கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.

6. Google Play Store Error 921

பிழை எண் 921 வந்தால் உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் Settings > Apps > All > Google Play Store வரும் பக்கத்தில் Clear Cache டச் செய்து கிளியர் செய்யுங்கள். இப்போது மீண்டும் முயற்சி செய்யுங்கள். மீண்டும் பிரச்சனை தொடர்ந்தால் மீண்டும் Settings > Apps > All > Google Play Store சென்று UnInstall Updates பட்டனை டச் செய்து அன்இன்ஸ்டால் செய்து விட்டு இங்கே கிளிக் செய்து புதிய Google Play Store 6.0.0 டவுன்லோட் இன்ஸ்டால் செய்யுங்கள். பிறகு மொபைலை ஆப் செய்து ஆன் செய்யுங்கள் கண்டிப்பா பிரச்சனை சரியாகிவிடும்.

7. Google Play Store Error DF-BPA-09

இந்த பிழை எண் DF-BPA-09 பல சமயங்களில் வருவதுதான். இது வர இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று இது கூகிள் சர்வர்ல ஏற்படும் பிரச்சனையாக இருக்கலாம். கூகிள் இதனை விரைவில் சரிசெய்து விடும். இரண்டாவதாக நம் மொபைலில் பிரச்சனை இருந்தாலும் இந்த பிழை செய்தி சுட்டி நம்மை மேற்கொண்டு டவுன்லோட் செய்ய முடியாமல் செய்து விடும்.

நம் மொபைலில் இதனை எளிதில் சரி செய்ய முடியும். Settings >> Apps >> All சென்றால் Google Services Framework என்ற ஒரு ஆப் இருக்கும் அதை டச்

No comments:

Post a Comment