Friday, 27 November 2015

ரகசியமாக ஒரு போல்டரை மறைத்து வைக்க:

ரகசியமாக ஒரு போல்டரை மறைத்து வைக்க:

1.முதலில் START ->RUN என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

2.RUNBOX-ல் CMD என டைப் செய்ய வேண்டும்.

3.ஓபன் ஆகும் COMMAND PROMPT-ல்D-என்று டைப் செய்ய வேண்டும்.

அதில் D-என்று கொடுத்தபின்பு கீழுள்ள படத்தில் காட்டியவாறு வரும்.


இதில் மறைத்து வைக்க வேண்டிய FOLDER-ஐ பின்வருமாறு டைப் செய்ய வேண்டும்.

attrib +h +s your folder name

your folder name என்ற இடத்தில் நீங்கள் மறைத்து வைக்க வேண்டிய ஃபோல்ரின் பெயரை டைப் செய்யுங்கள் அவ்வளவுதான்.

இப்பொழுது டி ட்ரைவை போய் பாருங்கள். நீங்கள் மறைத்து வைத்த ஃபைல் இல்லாததை பார்ப்பீர்கள்.

மறைத்ததை திரும்ப கொண்டு வர:

மேலுள்ள படத்தில் காட்டியவாறு attrib -h -s foldername என்று டைப் செய்யவும.

folder name என்ற இடத்தில்  நீங்கள் மறைத்த ஃபோல்டரின் பெயரை டைப் செய்யுங்கள்.

இப்போது டி-டிரைவில் சென்று பாருங்கள் நீங்கள் மறைத்த ஃபோல்டரானது வந்திருக்கும்.

இந்த மறைத்தும் வைக்கும் முறைமையானது அனைவருக்கும் தெரிந்தால் கூட ஃபோல்டர் பெயர் தெரிந்தால்தான் கண்டுபிடிக்க முடியும்.

அதனால் ஃபோல்டர் பெயர் மறந்துவிடாமலிருப்பது நல்லது. 

No comments:

Post a Comment