Friday, 20 November 2015

எழுத்தில் வடிக்காத இலக்கு எழுச்சி பெறாது. ஏற்றம் பெறாது. ஊக்கம் தராது. நினைவில் இராது.


எழுத்தில் வடிக்காத இலக்கு எழுச்சி பெறாது. ஏற்றம் பெறாது. ஊக்கம் தராது. நினைவில் இராது.

Matching the factors of Goal – இலக்கின் பாகுபாடுகளைப் பொருத்துதல்

Most important – A – மிகவும் முக்கியம்

Most urgent – B – மிகவும் அவரசம்

Most desired – C – மிகவும் விரும்புவது

Skill oriented – X – திறன் சார்ந்தது

Knowledge oriented – Y – அறிவு சார்ந்தது

Physical work oriented – Z – உடலுழைப்பு சார்ந்தது

உதாரணமாக நீங்கள் ஓர் ஓட்டப்பந்தய வீரராக வேண்டும் என்ற இலக்கானது “CZ” எனப் பாகுபடுத்தப்படும். ஓர் ‘IAS’ ஆக வேண்டும் என்றால் ‘AY’ என்ற பாகுபாட்டின் கீழ் வகைப்படுத்தலாம். இலக்கை விஞ்ஞான பூர்வமாக நிர்ணயிப்பதற்கு இந்தப் பாகுபாடு உதவுகிறது.

Analysis Your Potential – உங்கள் தகுதிசார் திறனை ஆராய்ந்து பார்க்கவும்

Ambition – குறிக்கோள் (கனவு)

Strength – பலம்

Taste – விருப்பம் (ரசனை)

Money – பணம்

உங்கள் இலக்கானது மேற்குறிப்பிட்ட தகுதிசார் திறன்களை ஆராய்ந்து, அதன் அடைப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

Never Underestimate

உங்களையோ அல்லது உங்கள் இலக்கையோ ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். “என்னால் இது முடியுமா” என்ற எண்ணம் வேண்டாம். உங்களால் முடியும் என்ற உறுதிப்பாட்டில் உங்கள் இலக்கினை நிர்ணயுங்கள்.

Achieving the Goal – இலக்கை அடைதல்

விஞ்ஞான பூர்வமாய் நிர்ணயிக்கப்பட் இலக்கை உங்கள் முயற்சியினால் சுலபமாக அடைய முடியும். ஒருபோதும் மனந்தளர வேண்டாம். கடினமான இலக்கை சிறுசிறு பிரிவுகளாக மாற்றிச் செயல்படுத்தலாம். அதீத ஈடுபாடோ அல்லலது மெத்தனமோ வேண்டாம். இலக்கை அடைந்த விட்டதாக மனக்கண்ணில் காட்சிகளை ஓடவிட்டுக் காணுங்கள். (visualisation)

இவ்வாறு சிறிது முயற்சியும், சிறித நேரமும் சீரிய முறையில் செலவழிக்கப்பட்டு, சிக்கலின்றி இலக்கை நிர்ணயித்து சிறப்பாக அதை அடைந்தால், சரித்திரமும், சந்ததியும் உங்களை “சாதனையாளன்” என வாழ்த்தும்.

இது உறுதி



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

வேரில் பழுத்த பலா

மனது ஆழ்கடலைப் போன்றது என்பார்கள் சிலபேர்; மனது இனம் காண முடியாத இருட்குகை என்றார்கள் சிலபேர்; இன்னும் சில பேருண்டு. அவர்களுக்கு மனம் என்பது எதை நோக்கி பயணிக்கிறது என்று கண்டறிய முடியாத வினோத வாகனம்.

எது எப்படியோ எல்லோருக்கும் மனது என்பது விளங்க முடியாத புதிர் யாருக்கும் தன் மனதைப் பற்றி புரிந்துகொள்ளும் ஆற்றல் கிடையாது. மனதுக்குள் பொதிந்து கிடக்கும் எல்லையற்ற ஆற்றல்களை புரிந்துகொள்ள முயற்சிப்பது கூட கிடையாது. மனதிற்குள் என்னென்ன இருக்க அனுமதிக்கலாம்? என்னென்ன இருக்கக்கூடாது என்று முடிவு கட்டி விரட்டியடிக்க வேண்டும்? இந்த இரண்டு கேள்விகளைக் கேட்டு விடையறிந்து செயல்படுத்தினால் ஒருவன் இந்த பூமியில் புனிதனாய் வாழ இயலும்; வெற்றிகளை குவிக்க முடியும்.

மனதிற்குள் இருக்க வேண்டியது; அன்பு, தன்னடக்கம், தன்னம்பிக்கை, பொறுமை, இலட்சிய நோக்கம், நட்பணர்வு, உலக உயிர்கள் பால் நேசம், எதிர்காலத் தொலைநோக்கு, அறவுணர்வு, பக்திநெறி, பண்பாடு, செய்நன்றி அறியும் பண்பு.

மனதிற்குள் இருக்கக்கூடாதவை: பழியுணர்வு, அச்சம், பேராசை, நம்பிக்கையின்மை, ஏமாற்றும் பண்பு, திருட்டுபுத்தி, களவு, பொறாமை போன்றவையே.

ஒரு மரம் வெட்டுபவன் காட்டுக்குள் சென்று ஆற்றங்கரையில் இருந்த மரத்தில் ஏறி சில கிளைகளை வெட்டத் தொடங்கினான். அப்பொழுது அவனது மரம்வெட்டும் அரிவாள் ஆற்றுக்குள் விழுந்துவிட்டது. அவனுக்குள் துயரம் பொங்கியது. அவனுக்கிருந்த ஒரே சொத்து அதுதான். அதைக் கொண்டுதான் மரம் வெட்டி விறாக்கி விற்று நேர்மையுடன் பிழைப்பு நடத்தி வந்தான். அவனது அழுகுரலை கேட்டு ஒரு தேவதை அவன் முன் தோன்றியது. ‘என்ன நேர்ந்தது, ஏன் அழுகிறாய்?’ என்று கேட்டது. அவன் நடந்ததைச் சொன்னான். தேவதை ஆற்றில் மூழ்கி எழுந்து ஒரு தங்க அரிவாளை அவனிடம் காட்டி, ‘இதுதான் உன்னுடையதா?’ என்று கேட்டான்.

அவன் ‘இல்லை’ என்றான். தேவதை மறுபடி ஆற்றில் மூழ்கி எழுந்து ஒரு வெள்ளி அரிவாளை கொண்டவந்து ‘இதுதான் உன்னுடையதா?’ என்று கேட்டது. அதற்கும் அவன் இல்லை என்று தலையாட்டினான். தேவதை மீண்டும் ஆற்றுக்குள் போய் மீண்டும் வந்து அவனது இரும்பு அரிவாளைக் கொணர்ந்து தந்தது. அவன் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொண்டான். அவனது நேர்மையைக் கண்டு மகழ்ந்த தேவதை தங்க அரிவாள், வெள்ளி அரிவாள் இரண்டையும் அவனிடமே கொடுத்து ‘இவற்றை விற்று வரும் பணத்தில் உன் வாழ்க்கையை நல்லபடி அமைத்துக் கொள்’ என்று ஆசிகள் வழங்கி மறைந்தது. அவன் செல்வந்தனாக வாழத் தொடங்கினான்.

‘அவனுக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைத்தது?” என்று அடுத்த வீட்டுக்காரன் கேட்டான். ‘காட்டில் மரம்வெட்ட, சென்றபோது எனது அரிவாள் ஆற்றில் விழுந்தது. ஒரு தேவதை தோன்றி எனக்கு தங்க அரிவாள், வெள்ளி அரிவாள், இரும்பு அரிவாள் தந்தது’ என்று சுருக்கமாகக் கூறினான். அடுத்த வீட்டுக்காரன் தனது அதிர்ஷ்டத்தை சோதித்துப பார்க்க விரும்பினான். அவனும் காட்டுக்குள் சென்று தனது இரும்பு அரிவாளை ஆற்றில் தவறி விழச் செய்தான். தேவதை தோன்றி ‘என்ன ஆயிற்று?’ எனக்கேட்டது. தனது அரிவாள் ஆற்றில் விழுந்து விட்டதாக அவன் சொன்னான். தேவதை ஆற்றில் மூழ்கி எழுந்து ஒரு தங்க அரிவாளை கொண்டு வந்து காட்டி, ‘இது உன்னுடையதா?’ என்று கேட்டான். அவன் பேராசையுடன் “ஆமாம்” என்றான். தேவதை அவனைப் பார்த்து ‘மூடனே! நீ பேராசைக்காரன்; நேர்மையற்றவன்; உனக்கு ஒன்றும் கிடையாது, போ!’ என்று கூறி மறைந்தது. அவன் தனது இரும்பு அரிவாளையும் இழந்து வருந்தி திரும்பினான்.

வாழ்வில் உயர விரும்புகிறவன் குறுக்கு வழிகளை நாடக்கூடாது. இலட்சிய நோக்கு இருக்க வேண்டும். அது பேராசையாக மாறக்கூடாது. மனதிற்குள் எந்த மாதிரி எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவான தீர்மானம் இருந்தால் அதன்படியே வாழ்வும் அமையும்.

மனதில் உள்ள எண்ணங்களின் பாங்கு நம் வாழ்க்கையைத் தாக்குகின்றன. இதை நிறையபேர் புரிந்துகொள்வதில்லை. ‘உன் எண்ணங்களின் உயரம்தான் உன் வாழ்க்கையின் உயரமும்’ என்கிறார் ஒரு கிரேக்க அறிஞர்.

அண்மையில் IAS தேர்வில் அகில இந்திய அளவில் 130வது இடம்பிடித்து தேர்வாகியுள்ள ஒரு தமிழ்ப்பெண் கூறுகின்றார்; “எனக்கு படிப்பதில் அவ்வளவு ஆர்வம் இருக்கவில்லை. ஆனால் ஆசிரியராக இருந்த என் தந்தையார் உயர்நிலைப்பள்ளி பருவத்திலிருந்தே என்னிடம் “நீ IAS தேர்வுக்கு 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்துப் படித்து தேர்வு எழுதி வெற்றி பெற்றேன்” என்கிறார். என்ன வியப்பு பாருங்கள்! இவர் மனதில் இல்லாத வெற்றி எண்ணம் இவரது தந்தை மனதில் இருந்து உறுதிபெற்று இவர் மனதிற்கு மாற்றப்பட்டுள்ளது. “சுடர் விளக்காயினும் தூண்டு கோல் தேவை” என்பார்கள். அதுபோல குடும்பத்தில் உள்ளவர்கள் வலிமையான எண்ணங்களால் ஆட்கொள்ளப்படுவார்களானால் அது அக்குடும்பத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவியர் இருந்தால் அவர்களது முயற்சிக்கு வலிமை சேர்க்கும்.

“The difference between a successful person and others is not lack of strength not lack of knowledge but rather lack of will” என்கிறார் வைஸ்லம்பார்டி என்கிற ஆங்கில அறிஞர். “வெற்றி பெற்றி மனிதர்க்கும் வெற்றி பெறாத மனிதர்க்கும் இடையே உள்ள வேறுபாடு என்பது பலமின்மையோ அறிவின்மையோ அல்ல; நம்பிக்கை இன்மையே” என்பது இதன் பொருள். வெற்றி பெறத் தேவையான விடாமுயற்சியை மேற்கொள்ளத் தேவையானது உத்வேகமும் உற்சாகமும்தான். இதற்கென சிறப்பான அறிவாற்றலோ வலிமையோ தேவையில்லை. “மனதின் காரணமாக பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன என்று சொல்வதைவிட, மனதின் காரணமாக ஏற்படுகிற நோய் படிப் படியாக பல்வேறு நிலைகளை அடைகிறது” என டாக்டர் மெனிங்கர் என்ற அறிஞர் குறிப்பிடுகின்றார். மனம் என்கிற மருத்துவனே உங்கள் நோய்க்கு காரணியும் நிவாரமும் ஆவான். மனதை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்போது நமது உடலும் செயல்களுக்கு கூட கடுப்பாட்டுகள் வந்து விடுகின்றன. மனமே உடலின் ஒவ்வொரு உறுப்பின் செயல்களையும் இயக்குகின்றது. காலை எழுவதில் இருந்து இரவு படுப்பதுவரை நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாட்டையும் மனமே ஆணையிடுகின்றது.

ஒரு சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிள் வைத்திருந்தால் வாரம் ஒருமுறையாவது அதைத் துடைத்து பராமரிப்புப்பணி செய்கிறோமில்லையா? அதுபோல் மனதில் ஏற்படும் எண்ணக் குவியல்களையும் அடிக்கடி ஆய்வு செய்து பராமரிக்க வேண்டும். அரிசியிலிருந்து கற்களைப் பொறுக்கி தாய்மார்கள் வீசுவதுபோல எண்ணக் குவியல்களில் கலந்து கிடக்கும் தீய நோக்கங்களை, பலவீனமான உணர்வுகளை பொறுக்கி எடுத்து வீசிட வேண்டும்.

நல்ல நினைவுகள், நல்ல எண்ணங்கள், நல்ல நோக்கங்கள் நிறைந்த மனது பூந்தோட்டம்’ போல மணம் வீசும்; உங்களைச் சுற்றி வெளிச்சமும் மகிழ்ச்சியும் நடனமாடும்; உங்களை அனைவரும் விரும்புவர்; போற்றுவர்; உங்கள் நட்பினை நல்லோர் நாடி வருவர்; உங்கள் வீட்டிலும் உங்கள் சுற்றத்தினர் நடுவேயும் நலமும் வளமும் நிறைந்து காணப்படும். “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வையுங்கள் சத்தியம்


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #4 on: April 24, 2012, 07:33:59 AM »

ஜெயிப்பது நிஜம்

வெற்றியாளர்களின் மிக முக்கியமான 12 சூத்திரங்கள்
1. வெற்றியாளர்கள் உலகின் மிகப்பெரிய, அறிவு சார்ந்த சொத்தான, மூளையை (Intellectual Property Brain) பயன்படுத்தி, அதாவது சிந்தித்து, பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டுபிடித்து வெற்றி பெற்றுள்னர்.
2. வெற்றியாளர்கள், கடந்த கால தோல்விகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. எதிர்காலத்தைப் பற்றி பயப்படுவதும் இல்லை. ஆனால் நிகழ்காலத்தில் வாழுகிறார்கள். தோல்வியின் மூலம் ‘எதைச் செய்யக்கூடாது’ என்றஅனுபவத்தையும், வெற்றியின் மூலம் ‘எதைச் செய்ய வேண்டும்’ என்றவெற்றியின் சூத்திரங்களையும் (Success Formulae) கண்டுபிடித்து, பயன்படுத்தி வெற்றி வாகை சூடுகின்றனர்.
3. வெற்றியாளர்கள், தோல்வி அடைந்தால், பிறரை பற்றி குறைகூறுவதில்லை (Finding Fault). நொண்டிச்சாக்கு (Lame Excuse) சொல்வதில்லை. செய்த தவறைநியாயப் படுத்துவதில்லை (Justification) தோல்விக்கு தானே காரணம் என ஒத்துக்கொண்டு, தன்னைத் திருத்தி, சீர்படுத்தி, நேர்மறையாகச் சிந்தித்து, செயலில் ஈடுபட்டு வெற்றி அடைந்துள்ளனர்.
4. வெற்றியாளர்கள், சுயபரிசோதனை (Self Analysis) செய்து அவர்களுடைய பலங்கள் (Strengths), பலவீனங்கள் (Weaknesses), வெற்றி வாய்ப்புக்கள் (Opportunities), எதிர்கால பயங்கள் (Threats) போன்றவற்றைஅலசி ஆராய்ந்து குறிக்கோள் (Goal) நிர்ணயம் செய்கின்றனர். பின்பு திட்டமிட்டு (Plan) குறிக்கோளுக்கு, கால நிர்ணயம் (Target Date) செய்து, தங்களுடைய அறிவைப் (Knowledge) பெருக்கித் திறமையை (நந்ண்ப்ப்) வளர்த்து, நேர்மறைமனோபாவத்துடன் (Positive Attitude), தங்களை உற்சாகப்படுத்தி (Self Motivation) குறிக்கோளை அடைகின்றனர்.
5. வெற்றியாளர்கள், குறிக்கோளை அடைய நிரூபிக்கப்பட்ட வெற்றி முறைகளைப் பயன்படுத்தியுள்ளனர். புதிய மேலாண்மை யுக்திகளை, நவீன தொழில் நுட்பங்களைக் கையாளுபவர்கள். வெற்றியாளர்கள் வெற்றி வாய்ப்புகளை தேடி அல்லது உருவாக்கிப் பயன்படுத்துவார்கள். ஐம்புலன்களையும் (Five Senses) சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். குறிப்பாக தொடர்பு கொள்ளுதல், வாசித்தல், எழுதுதல், பிறரது உடல்மொழியைக் கண்டுபிடித்து எடை போடுதல், உற்றுக் கவனித்தல், கண்காணித்தல், பிறரிடம் பழகும் தன்மை தலைமைப்பண்பு (Leadership) போன்றவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தி, வெற்றி அடைந்துள்ளனர்.
6. வெற்றியாளர்கள் நீர்வளம், நிலவளம், எண்ணெய்வளம், கனிமவளம், இயற்கைவளம் (Water, Land, Oil, Mineral, Natural Resources) போன்றவளங்களை பயன்படுத்தி வெற்றி அடைந்துள்ளனர். போட்டி நிறைந்த இந்த பொருளாதார உலகத்தில் மனித வாழ்க்கையைச் (Human Resources) சிறப்பாகப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர்.
7. வெற்றியாளர்கள் மனிதர்களை நிர்வாகம் (HRM Human Resource Management) செய்வதில் கெட்டிக்காரர்கள். மனிதர்களை முன்னேறச் (HRD Human Resource Development) செய்வதில் நல்லவர்கள். அது தவிர நேரத்தையும், தன்னையும் (Time Management and Self Management) நிர்வாகம் செய்வதில் வல்லவர்கள்.
8. வெற்றியாளர்கள் கடினமாக உடல் உழைப்புடன் (Physical Hardwork), புத்திசாலித்தனமான மூளை உழைப்புடன் (Smart Mental Work), தொழிலாளிகள், வாடிக்கையாளர்கள் … ஆகியோர்களின் கூட்டு உழைப்புடன் (Team Work), தங்களை முழுமையாக அர்பணித்து (Commitment) குறிக்கோளை அடையும்வரை, திட்டமிட்டபடி, விடாமுயற்சி (Endurance) செய்து, வெற்றி அடைந்துள்ளனர். தன்னம்பிக்கை அவர்களின் தாரக மந்திரம்.
9. வெற்றியாளர்கள் மாற்றத்தை விரும்புபவர்கள், மாற்றம் ஒன்றேநிலையானது என்று நம்புபவர்கள். நேர்மறைமனோபாவத்துடன் (Positive Mental Attitude) பிரச்சனைகளை வெற்றி வாய்ப்புகளாக மாற்றுபவர்கள். தடைக்கற்களை, படிக்கட்டுகளாக மாற்றுபவர்கள். பலவீனங்களை பலமாக மாற்றுபவர்கள். மொத்தத்தில் சோதனையைச் சாதனையாக மாற்றுபவர்கள். துன்பத்தை இன்பமாக மாற்றுபவர்கள்.
10. வெற்றியாளர்கள் செய்யும் தொழிலே தெய்வம் (Work is worship) என போற்றி வழிபடுபவர்கள். வாடிக்கையாளர் களுக்குத் தரமான சேவை செய்து மகிழ்ச்சி அளிப்பவர்கள் மொத்தத்தில் செய்யும் தொழிலை கஷ்டப்பட்டு செய்யாமல், இஷ்டப்பட்டு விரும்பி செய்பவர்கள். வெற்றியை அடைய செயலில் ஈடுபடுபவர்கள். வெற்றியாளர்கள் தான் மட்டுமின்றி பிறரும் வெற்றியடைய விரும்பி செயல்படுவார்கள்.
11. வெற்றியாளர்கள், அவர்களுக்கு எது தேவையோ (Need), எது (Want), அதை மற்றவர்களுக்கு அதிகமாகக் கொடுக்கின்றனர். அன்பை (Love) பொழிகின்றனர். சரியான நபருக்கு சரியான நேரத்தில் உதவி (ஏங்ப்ல்) செய்கின்றனர். தியாகம் செய்கின்றனர். மற்றவர்களுக்கு வழி காட்டுகின்றனர். பிரபஞ்சத்தில், தங்களுக்குத் தேவையானவற்றை கேட்டுப் பெறுகின்றனர்.
12. வெற்றியாளர்கள், மனம் என்னும் மந்திரச் சாவியை பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளனர். ஆன்மிக முறைப்படி அல்லது விஞ்ஞான முறைப்படி மனத்தை கையாண்டு வெற்றி அடைந்துள்ளனர். வெற்றியாளர்கள் குறிக்கோளை அடைய லட்சியக் கனவை அடிக்கடி (Creative Visualization) காணுபவர்கள். ஆழ்மனத்திற்கு (Sub Conscious Mind) கட்டளையிடுபவர்கள் (Auto Suggestion).
மேற்கண்ட 12 வெற்றி சூத்திரங்களை, வாழ்க்கையில் பின்பற்றினால் உங்கள் வெற்றி நிச்சயம்!
ஜெயிப்பது நிஜம்.

 Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

சத்தியம்

Super Hero Member

Posts: 1507


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #5 on: April 24, 2012, 07:34:38 AM »

தன்னம்பிக்கை

ஒரு மனிதரை தன்னம்பிக்கை மிக்கவர் என்று நாம் சொல்லுகிறோம் என்றால் அவர் எந்தச் சூழலிலும் எந்த புதிய இடத்திலும் தன் சமநிலையை (Balanced State of Mind) தவறவிடாமல் மனதில் துளியும் அச்சமில்லாமல் மிக எளிதில் அந்தச் சூழலில் அந்த இடத்தில் நடத்திக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர் என்று பொருள் கொள்ளலாம். ஆங்கில அகராதியில் இர்ய்ச்ண்க்ங்ய்ஸ்ரீங் என்றசொல்லிற்கு பொருளைப் படித்துப் பார்த்தால் Belief in one’s own abilities என்றிருக்கிறது. அதாவது ஒருவர் தன் திறமைகளின் ஆற்றல்களின் மேல் வைத்துள்ள நம்பிக்கை. அவரால் எந்தச் சூழ்நிலையிலும் அசௌகரியமாக உணராமல் சௌகரியமாக (Comfortable) உணர்கிறார் என்று பொருள். அவருடைய Comfort zone எல்லை பரந்து விரிந்திருக்கிறது.
உங்கள் தன்னம்பிக்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றால் உங்களுடைய Comfort Zone எல்லையை மேலும் மேலும் விஸ்தரித்துக் கொண்டே செல்ல வேண்டும். இந்த உங்களின் Comfort zone எல்லையை அதாவது உங்களின் தன்னம்பிக்கை அளவை எப்படி அதிகரித்துக் கொள்வது?
உங்களின் தன்னம்பிக்கையை உயர்த்திக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய, தலையாய விஷயங்கள் என்னவென்றால்…
1. அறிவாற்றல் (Knowledge) பெருக்கிக் கொள்ளல்
2. செயலாற்றல் (Functional Skill) வளர்த்துக் கொள்ளல்
3. நேர்மறை மனோபாவம் (Positive Mental Attitude) உருவாக்கிக் கொள்ளல்.
ஒரு வரைபடத்தின் மூலம் இந்த தன்னம்பிக்கை வளர்ச்சியை புரிந்து கொள்ள முயல்வோம்.
இதன் அடிப்படையில் தான் கல்வி முறையை உருவாக்கிய அறிஞர்கள் வகுப்பறையில் ஆசிரியர்கள் வாயிலாக அறிவாற்றலைப் பெருக்கு வதற்கும், பெற்றஅறிவை, கற்ற செய்திகளை வாழ்க்கையில் பயன்படுத்தி வெற்றி காண்பதற்காக செயலாற்றலை வளர்த்துக் கொள்ள கல்வித் திட்டத்தில் சோதனைச்சாலை செயல்முறைப் பயிற்சிகளும், தொழில்முறை பழகுனர் பயிற்சிக்கால பணியும், மாதிரி திட்ட அல்லது துறைசார்ந்த திட்ட அறிக்கைகள் தயாரித்தல், பணியிடங்களை பார்வை செய்தல் முதலிய செயலாற்றல் வளர்ச்சி பயிற்சிகளும் உள்ளன.
துரதிஷ்டவசமாக நேர்மறை மானோபாவத்தை Positive Mental Attitude (PMA) எப்படி வளர்த்துக் கொள்ளுவது என்பதைப் பற்றி எந்த பல்கலைக் கழகங் களும் பாடத்திட்டம் வைத்திருக்கவில்லை. ஒவ்வொருவரும் அவர்களாக பாடத்திட்டம் வைத்திருக்கவில்லை. ஒவ்வொருவரும் அவர்களாகவே வாழ்க்கையில் பட்டறிவின் மூலம் இந்த மானோ பாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டியவர் களாக இருக்கிறார்கள்.
நேர்மறை மனோபாவம் என்பது எல்லா செயல் பாடுகளிலும் நன்மை தரத்தக்கவைகளையே பார்க்கிற மனlTôeÏ Try to Profit out from the Loses என்பது போல சாதக மற்றவைகளில் சாதக மான அம்சங்களை பார்க்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய பழக்கத்தில் “புத்திக்கொள்முதல்” என்று ஒரு வழக்குச் சொல் பழக்கத்திலிருக்கிறது. இது எதைக் குறிக்கிறது என்றால் ஒரு செயல்பாடு எதிர்பார்த்த பலனைத் தராதபோது அந்த அனுபவம் நமக்கு ஒரு அறிவூட்டும் அனுபவமாக ஆகிறபோது அது நமக்கு “புத்திக் கொள்முதல்” தானே.
நீங்கள் எவ்வளவுதான் அறிவாற்றலிலும், செயலாற்றலிலும் திறமைசாலியாக இருந்தாலும் இந்த நேர்மறை மனோபாவம் இல்லையென்றால் வெற்றி பெறவியலாது. வாழ்க்கையின் தலையாய இலட்சியமாக “ஆனந்தம்” என்பதை அனுபவிக்கவும் இயலாது.
அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ள “ஆர்வத்தை உருவாக்குங்கள்” புதியன அறிந்து கொள்ள வேண்டும் என்\ “Inquestive Nature” உங்கள் பண்பாக மாறட்டும். புத்தகங்களை நேசியுங்கள். நிறைய வாசியுங்கள். ஒரு Intellectual Personality (அறிவார்ந்த ஆளுமை)யை வளர்த்துக்கொள்ளுங்கள். கற்றவர்களோடும். நட்பை உருவாக்கிக்கொள்ளுங்கள். உங்களது இல்லத்தில் ஒரு சிறிய நூலகத்தை உருவாக்குங்கள். வாசித்த விஷயங்களை நண்பர் களோடும் அறிஞர்களோடும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் கலந்துரையாடுங்கள்.

 Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

சத்தியம்

Super Hero Member

Posts: 1507


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #6 on: April 24, 2012, 07:35:44 AM »

கனவுகள் மெய்ப்பட வேண்டும்

“மனம் விரும்பும் பணம் ” தொடர் மூலம் உங்களுடன்
உறவாடி வந்ததற்கு,
நீங்கள் தந்த
வரவேற்பினாலும்,
தன்னம்பிக்கை
நிறுவனத்தாரின்
ஆதரவினாலும்,
மீண்டும் 2003ம் புத்தாண்டில்……..
உங்களது கனவுகளை நனவாக்கி, மெய்ப்படச் செய்ய வேண்டும் என
என் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள கனவே இந்த
புதிய தொடர்……..
மீண்டும் கரங்களை இணைப்போம்!
இப்போது கனவுகளைச் சுமப்போம்!
அன்புடன்
குமரேசன்

கனவுகளுக்கும் MLMக்கும் என்ன சம்பந்தம்?

கனவுகளுக்கும், வெற்றிக்கும் என்ன தொடர்பு?

சார், கொஞ்சம் பொறுங்க, கனவு என்பது என்ன? நாங்கள் தூங்கும் போதெல்லாம் வரும் கனவுகளை நினைத்தால் சில சமயங்களில் சிரிப்பும், பல சமயங்களில் பயமும் தானே ஏற்பட்டு வருகிறது என நீங்கள் யோசிப்பது புரிகிறது.

நல்லதுங்க. உங்களுக்காகத் தான் இந்த விழிப்புணர்வுத் தொடரே. மேலே படிங்க.

இது ரொம்ப புதுசுங்க, விழித்திருக்கும் போது கற்பனை செய்ய வேண்டிய கனவு. விழிப்புணர்வுடன் உங்கள் எதிர்காலம் பற்றி கற்பனை செய்ய வேண்டிய கனவு. உங்கள் குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் கற்பனை செய்ய வேண்டிய கனவு.

மனித வாழ்க்கையில் மிகப்பெரிய, புரியாத புதிர் எது தெரியுமா? வெற்றித் திருமகள் ஏன் ஒரு சிலர் இல்லத்திற்கு செல்கிறாள்? என்பதுதான்.

பல வெற்றியாளர்களிடம் ஒத்திருக்கும் ஒரு விசயம் என்ன தெரியுமா? அவர்கள் அனை வருமே இந்த வெற்றியைப் பற்றி கனவு கண்டவர்கள் என்பதுதான்.

கனவு + முயற்சி + பயிற்சி + செயல் = நிச்சயமான வெற்றி!

இதில் கனவு எந்த இடத்தில் இருக்கிறது என்பதை கவனி யுங்கள், முதலிடத்தில்!

மனிதனது எதிர்கால எதிர்பார்ப்புகள், ஆசைகள், விருப்பங்கள், இதனைக் கனவுகள் எனலாம்.

கனவுகளை இலட்சியமாகக் கருதி நேர்மறை எண்ணங் களுடன் தொடர்ந்து உழைப் பவன் சாதாரண நிலையில் இருந்து சாதனையாளராகிறான். இதனைதான் “நீ எதை நினைக் கிறாயோ அதாகவே ஆவாய்” என விவேகானந்தர் அன்றே அறிவுறுத்தியிருக்கிறார்.

இறைவன் அருளால் நாம் மனிதப் பிறவியாய் மலர்ந் துள்ளோம். நமது மனித சக்தி மகத்தானது என்று நம் மனதில் புரியும் தினமே உண்மையிலேயே நமது பிறந்த நாளாகும்.

சாதாரணமாக, விலங்கினங்கள் பிறக்கின்றன; இரை தேடுகின்றன; வளர்கின்றன; இனப்பெருக்கம் செய்கின்றன; இறந்து விடுகின்றன.

சாதாரண மனிதனும்,

மனிதனாகப் பிறக்கின்றான், மூன்று வேளை உண்கின்றான்; வளர்ந்து வாலிபம் அடைகின் றான்; வாரிசுகளை உருவாக்கி, இறுதியில் முதுமை பெற்று விடுகின்றான். என்ன வித்தியாசம்? இரண்டிற்கும்.

ஆனால், சாதனையாளர்கள்,

மனிதனாகப் பிறந்து, கனவு கண்டு, கனவை நனவாக்க இலட்சியம் கொண்டு, தனது திறமை களை வளர்த்துக் கொண்டு, வெற்றி பெற்று சாதனைகளைப் படைத்து, சரித்திரத்தில் இடம் பெறுகின்றார்கள்.

இந்த மூன்றுமே உண்மை தானே. இதில் நீங்கள் முடி வெடுக்க வேண்டியது உங்கள் பெயர் சரித்திரத்தில் இடம் பெற வேண்டுமா? உங்களது இல்லத் தில் இருந்து தரித்திர தேவியைத் துரத்த வேண்டுமா? என்பதுதான்.

நம் எல்லோருக்கும் பகைவன் ஒருவன் இருக்கிறான். யார் தெரியுமா?

“வறுமைதான்”

இதனை நான் கூறுகிறேன் என எண்ணாதீர்கள். இந்தியாவின் மூத்த குடிமகன், இந்தியாவை வல்லரசாக்க வந்திருக்கும் இன் னொரு மகாத்மா மாண்புமிகு டாக்டர். அப்துல் கலாம் எழுச்சி தீபங்களில் எடுத்துரைக்கிறார்.

சரிதாங்க! வறுமையை விரட்ட என்ன வேணும்? தெரிந்ததுதான்

“பணம்தான்”

சந்தேகமேயில்லை. ஆனால், இது நேர்மையான வழியில் வர வேண்டும் என்ற கோட்பாட்டு டன் செயல்பட வேண்டும்.

பசியுடன் இருப்பவனுக்கு, அவனது பசியைத் தீர்க்கும் வழியைச் சொல்லாமல் உப தேசம் செய்து எந்தப் பயனு மில்லைதானே?

பணமே வாழ்க்கையில்லை என்றாலும், பணமில்லா வாழ்க்கையில் மகிழ்ச்சி ஏது?

மனிதனது வாழ்க்கைச் சக்கரம் சுழலுவதே கனவுகளால் தான். அந்த அநேக கனவுகளை நனவாக்குவது பணத்தின் அளவே.

ஆகவே, கனவை உருவாக்கி, உயிர் கொடுத்து நனவாக்கிட உரிய வழியினைத் தேர்ந்தெடுத்து வெற்றிப் பயணத்தை தொடங்கிட வேண்டும்.

வெற்றி பெற எல்லோரும் தயார். ஆனால் வெற்றிக்குரிய வழியைக்காட்ட, மனித சக்தி மகத்தான சக்தி என்பதை எடுத்துக்கூற, ஒவ்வொரு மனிதனின் ஆழ்மனச் சக்தியின் அருமையைத் தெரிவிக்க எந்த கல்லூரிகளும் இதுவரை இல்லை. சரி என்னதான் செய்வது?

ஒவ்வொரு மனிதனும் தன்னைத்தானே திறனாய்வு செய்து கொள்ளவும், கனவில்லா மனிதனுக்கு கனவை உருவாக்கிக் கொள்ளவும், உருவான கனவிற்கு உயிர் கொடுக்கவும் உதவிடுவது நிச்சயமாக, சுயமுன்னேற்ற, தன்னம்பிக்கை நூல்கள் (Positive Mental Attitude Books) சுய முன்னேற்றப் பயிலரங்குகள், கருத்தரங்குகள் தான்.

பல்வேறு சாதனையாளர் கள் தங்களது அனுபவத்தையும், ஆலோசனைகளையும், வெற்றி பெறக்கூடிய விதிமுறையினை யும் (Success Principal) உங்களுட னிருந்து, உங்களுக்கு கற்றுக் கொடுத்தால் எப்படியிருக்கும்? நிச்சயமாக நீங்களும் வெற்றி யாளர்தானே?

இது சாத்தியமா? என சந்தேகிக்க வேண்டாம். இதனைத் தான் செய்து முடிக்கின்றன, அவர்களது சுயமுன்னேற்ற நூல்கள். எனவே,

சுயமுன்னேற்ற நூல்கள் வாங்குவது செலவு அல்ல அதுவே உங்களின் வெற்றிக்கு மூலதனம்.

உங்களது கனவுகள் உண்மையானதாக இருக்க வேண்டும். அதனை அடைய தொடர்ந்து முயற்சி சரியான வழியில் இருக்க வேண்டும்.

“சூரியோதயம்” பார்க்க வேண்டும் என்ற கனவு நனவாக, மேற்கு திசையில் மெர்சிடைஸ் பென்ஸ்ஸில் பயணம் செய் தாலும் முடியாது. ஆனால், அடிமேல் அடிவைத்துச் சென்றால் கூட கிழக்கு திசையில் பயணம் செய்தால் சாத்தியமாகும்.

ஒரு மனிதனின் வெற்றி, நிறுவனத்தின் வெற்றி, தொழிலில் வெற்றி அனைத்துமே அளவிடப் படுவது வருமானத்தை வைத்துத் தான்.

வருமானம் என்பது என்ன? ஒவ்வொருவரும் அவர்களது நேரத்தையும் உழைப்பினையும் கொடுத்துப் பெறுவது தானே.

இவற்றில் தான் எத் தனையோ ஏற்றத் தாழ்வுகள். அவரவர் திறமை, அறிவு, முதலீடு, நேரம் போன்றவற்றைப் பொருத்து ஏற்படுகின்றன.

இன்னும் சற்று ஆழமாகப் பார்க்கலாமா?

தனது கல்வியறிவு, திறமை, அனுபவம், நேரம் இவற்றினை ஒரு நிறுவன வளர்ச்சிக்காக 20 முதல் 60 விழுக்காடு வரை செலவு செய்து தகுந்த வருமானம் பெறுவதை “வேலை” என்கிறோம்.

தனது கல்வியறிவு, திறமை, அனுபவம், நேரம், இவற்றினை தனது வளர்ச்சிக்காக, சொந்த மாக தொழில் வியாபாரம் செய்து தகுந்த வருமானம் பெறுவதை “வியாபாரம்” என்கிறோம்.

சற்று சிந்தித்துப் பாருங்கள். இன்று வரை உங்களுக்குத் தெரிந்து வேலைக்குச் சென்று வருமானம் பெற்று எத்தனை பேர் கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர்?

சரி, பிறகு எதனால் இத்தனை பேரும் வேலைக்குச் செல்கின்றனர்? முதலீடு, தொழில் அனுபவம் இல்லாமை, பயம், சூழ்நிலை இவைகள்தான்.

தலைமுறை, தலை முறையாக “நல்லா படி, முதல் மார்க் வாங்கு, நல்ல வேலைக்குப் போ” என்று குழந்தைப் பருவம் முதல் எத்தனை ஆயிரம் முறை நமது எண்ணத்தில் விதைக்கப் படுகிறது.

எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை “டாட்டா” போல “அம்பானி” போல “பில்கேட்ஸ்” போல வர வேண்டும் என அறிவூட்டுகிறார்கள். இதுவரை இல்லையெனில், இனி வரும் தலைமுறைக்காவது தொழில் அதிபரா குங்கள் என எடுத்துரையுங்கள்.

வேலையினையும், வியாபாரம் / தொழில் –

இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க் கலாமா?

வேலைக்குச் செல்வது ஒரு துடுப்புடன் படகை இயக்குவது போன்றது.

இருக்கும் நிலையிலேயே சுழன்று கொண்டிருக்கலாம். செக்கில் கட்டிய மாடு போல எட்டு மணி நேரம் உழைத்து விட்டு பதினாறு மணி நேரம் வெட்டியாக வீண் கதை பேசி, பொழுதைக் கழிக்கலாம்.

தொழில் / வியாபாரம் இரு துடுப்புடன் படகை இயக்குவது போன்றது.

இதில் எத்தனையோ புயல், காற்று, அலைகள் குறுக்கிட்டாலும் சூழ்நிலையை சாதுர்ய மாக சமாளித்து, பயணித்து இலக்கை அடைகிறார்கள். கனவு நனவாகிறது. ஏனெனில், பதினாறு மணி நேர உழைப்பு உள்ளது. பொழுது போதவில்லை என்ற நிலைமை உள்ளது.

வருமானத்தைப் பற்றி தெரிந்து கொண்ட நாம் சற்று பாதுகாப்பினைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

வருமானம் செய்து வரும் ஒவ்வொருவரும் (வேலை, வியாபாரம், தொழில்) சிந்தனை செய்து பாருங்களேன்?

நீங்கள் இல்லாத நிலையில் உங்கள் குடும்பம், குழந்தைகள் பாதுகாப்பாக வாழ வழி செய்துவிட்டீர்களா? என. நிச்சயம் விடை தெரியாத கேள்வியாகத் தான் அநேகம் பேருக்கு இருக்கும்.

சரிங்க, எல்லோருக்கும் ஏற்ற வியாபாரம் எங்கு உள்ளது, வாய்ப்புகள் இல்லாததால் தானே வேலைக்குப் போகிறோம் என்பவர்களுக்காகவும்,

ஏங்க, இப்ப பார்க்கற ஒரு வேலையையே, தொழிலையே, பார்க்க நேரமில்லை நான் ரொம்ப பிஸி. என்பவர்களுக் காகவும் மேற்கொண்டு பார்ப்போமா?

வாழ்க்கையில், வேலை தொழில் வியாபாரம் என எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது நேர நிர்வாகமும், உபரி வருமானமும்தான்.

வேலை Job – Just Obey The Boss – For Boss Life.
.

தங்களது நிறுவன வளர்ச் சிக்கு என எட்டு மணி நேரமும், குடும்பம், குழந்தை சொந்த வேலைக்கு என எட்டு மணி நேரமும் செலவிட்டாலும், உங்களது குடும்பம் பொருளா தார சுதந்திரம் பெறுவதற்காக மீதமுள்ள எட்டு மணி நேரத்தில் ஏதாவது பயனுள்ள காரியம் செய்து பலன் பெறலாமே?

வியாபாரம் – Business – Use Your Sense / Knowledge For Your Life & Family.
.

இப்போது பார்க்கும் தொழில் வியாபாரத்திற்கே நேரம் சரியாக உள்ளது என்ற போதி லும், எத்தனை வருடங்களாக இதே நிலை உள்ளது? வாழ்விற்கு வருமானம் வருகிறது. வளமான, பாதுகாப்பான, நிலை உள்ளதா? பாருங்கள். பலலட்சம் மதிப் புள்ள புதிய காரில் கூட அதிகப் படியாக ஒரு டயர் பொருத்தப் பட்டு (Stepney) இருக்கிறதே ஏன்?

நான்கு சக்கரங்களிலும் புதிய டயர் இருந்த போதிலும், போகின்ற சாலை உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் பயன் படத்தான் அந்த டயர்.

இதே போல தற்சமய வியாபாரம் / தொழில் நன்றாக இருந்தாலும் காலப்போக்கில் போட்டிகள், பாதிப்பு ஏற் பட்டால் என்ன செய்வது. இத னால் புத்திசாலிகள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் /வியா பாரம் மேற்கொள்கிறார்கள்.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியதென்ன?

இன்றைய வாழ்விற்காக (சாப்பாட்டிற்காக) வேலை செய்பவராக இருப்பினும் வியாபாரம் / தொழில் செய்ப வராக இருப்பினும், எதிர்கால வளமான வாழ்விற்காக அடுத்து ஏதாவது செய்தாக வேண்டும்.

வெற்றிக்குரிய எளிய வழி என்னவென்று தெரிந்து கொள்வோமா?

எந்த மனிதருக்கும், எந்தக் காரியத்தையும் செய்யத் துவங்கும் முன் இரு மனநிலைகள் ஏற்படும். ஒன்று கஷ்டம், மற்றொன்று சுலபம்.

ஒரு சம்பவத்தை உதாரணமாகப் பார்ப்போம்.

ரவி நன்கு படித்தவர், பண வசதி மிக்கவர், புதிய கார் ஒன்றினை வாங்குகிறார். அதனை எடுத்துச் செல்ல கார் விற்கும் நிறுவனத்திடம் உதவி கேட்கிறார். நிறுவன நிர்வாகமோ அவரையே எடுத்துச் செல்லுமாறு கூறுகிறது. அதற்கு ரவி “என்னால் இயலாது. கஷ்டம். ஏனெனில், எனக்கு கார் ஓட்ட தெரியாது” என்கிறார்.

பிறகு, நிறுவனம் தன் நிறுவனத்தில் பணியாற்றும் பெரியசாமி என்பவரைக் கூப்பிட்டு அந்தக் காரினை எடுத்துச் சென்று ரவி கூறும் இடத்தில் விட்டு விட்டு வருமாறு கூறுகிறது. உடனே பெரியசாமி அதனைச் செய்கிறார். ஆனால், பெரியசாமி படிக்காதவர். சாதாரண மெக்கானிக், எப்படி இது சாத்தியம்? மிகவும் சுலபம்.

பெரியசாமி கார் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறார். இதனால் அவரால் இதனைச் சுலபமாக செய்ய முடிந்தது.

இதிலிருந்து நாம் அறிவ தென்ன, எதனையும் முறையாக கற்றுக்கொண்டால் இந்த உலகில் எல்லாமே எளிதானதுதான்.

ஆகவே, வெற்றிக்குரிய வழியில் முதலானது கற்றுக் கொள்ளுதல்

இனி, இரண்டாவதாக இணைந்து செயல்படுதல் மூலமாக எப்படி எளிதாக வெற்றி பெறலாம் என்பதைக் கற்றுக் கொள்வோம்.

இதற்கும் ஒரு உதாரணம் பார்ப்போம்.

மூர்த்தி, சந்திரன் என இரு எழுத்தாளர்கள் இருந்தனர். எழுத்துத்திறமையில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

மூர்த்தி என்ன செய்கிறார், அவரது திறமையைப் பயன்படுத்தி ஆறுமாத காலத்திற்கு ஒரு புத்தகமாக எழுதி அதனை பதிப்பிக்கவும், விற்பனை செய்யவும் ஒப்பந்தம் ஏற்படுத்திச் செயல்படுத்துகிறார். அவர் ஒப்பந்தப்படுத்திக் கொண்டவர் விற்பனையில் சாமர்த்தியசாலி. இருவரது திறமையும் இணைந்து வெளிப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில்,

20 புத்தகங்களில் ஷ் மாத விற்பனை 1000 = 20,000 ஷ் எழுத்துரிமை 5 சதவீதம் என்ற வகையில் மாதாமாதம் லட்ச ரூபாய் வருமானம் பெறுகிறார்.

சந்திரனைப் பார்ப்போம். இவரும் எழுதுகிறார். அவரே பதிப்பிக்கிறார். அவரே கடை கடையாய் ஓடி ஓடி விற்கிறார். பல இடங்களில் பணம் இழக்கிறார். இதனால் மனம் சோர்கிறார். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வெளிவந்த புத்தகத்திற்கு வரவேற்பு இருந்தும் அடுத்த பதிப்பு வரவில்லை. புதிய அடுத்த புத்தகம், அதற்கெங்கே வழி.

இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வதென்ன. அவரவர்க்கு இருக்கும் திறமையை 100% பயன்படுத்த வேண்டும். தெரியாத வேலையை அதற்குத் திறமையானவர்களிடம் தந்துவிட வேண்டும். பணிப்பகிர்வு, நல்ல எண்ணம், இலாபத்தில் பகிர்ந்து கொள்ளும் பண்பு, நல்ல உள்ளம் கொண்டு செயல்படவேண்டும்.

இணைந்தால் எதனையும் சாதிக்கலாம் என்பதே சரித்திரத்தில் நிருபிக்கப்பட்ட உண்மை.

நாளைய மாதத்தில் நாம் சந்திப்பதற்கு முன் உங்களது கனவு என்ன? உங்கள் நோக்கம் என்ன? உங்கள் லட்சியம் என்ன? என்று முடிவு செய்யுங்கள்.

மற்றவர்களை வெற்றிபெறச் செய்து நாமும் வெற்றி பெற வேண்டும் – எனது கனவு.

வாருங்கள் ! முன்னேறலாம் ! – கனவு மெய்ப்படும்.

 Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

சத்தியம்

Super Hero Member

Posts: 1507


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #7 on: April 24, 2012, 07:39:37 AM »

துணிவுடன் போராடு! வெற்றி வரும்!!

“கடமையை செய்யத் துணிவுள்ளவனாக இரு; அதுவே உண்மை வீரத்தின் சிகரம்” என்பார் சிம்மன்ஸ். எடுத்துக்கொண்ட கடமையை திறம்படச் செய்து நிரம்பப் பாராட்டுகளை பெற்றவர் திரு. சி. சைலேந்திரபாபு அவர்கள்.

முதலமைச்சரின் வீரப்பதக்கம், பாரதப் பிரதமரின் உயிர்காக்கும் சேவைக்கான பதக்கம், STF-ல் பங்கேற்பு பதக்கம் மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் விருது என பல பதக்கங்களையும் விருதுகளையும் பெற்றவர்.

1987-ம் ஆண்டு இந்திய காவல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு – தமிழகத்தில் கோபிசெட்டிப்பாளையம், தர்மபுரி, சேலம் ஆகிய இடங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும் திண்டுக்கல், கடலூர், சிவகங்கை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மாவட்டங்களில் மாவட்ட காவல் அதிகாரியாகவும் பணியாற்றியவர்.

அந்த அந்த நாளின் நெறியுடன் கூடிய செயல்கள்
அந்த அந்த நாளின் நெறியுடன் கூடிய நிகழ்ச்சிகள்
அந்த அந்த நாளின் பெருந்தன்மை மிக்க சொற்கள்
அந்த அந்த நாளின் உயர்ந்த சொற்கள் என்னும்
இவை தவிர மனிதனின் முன்னேற்றத்திற்கு வேறு தீர்வு இல்லை”

STRATEGY (போர் யுக்தி முறை) என்கிற வார்த்தையை அதிகம் நீங்கள் பயன்படுத்துகிறீர்களே?

போர் யுக்தி முறை என்று குறிப்பிடுவதன் நோக்கம், ஏதோ போருக்கு தயார் செய்வது என்பது அல்ல.

நாம் எடுத்துக் கொண்ட செயல்களில், எப்படி செயல்பட்டால் வெற்றியின் இலக்கை அடைய முடியும். என்பதுதான் இங்கு “Strategy” என்பதாகும்.

Strategy என்பது பின்னால் செயல்படுத்த வேண்டியதை முன்னால் திட்டமிட்டு, அப்படியே செயல்படுத்துவதாகும். அப்படி செயல்படுத்துபவர்களால் தான் உண்மையிலேயே அதன் தாக்கத்தை அடைய முடியும்.

அது குடும்ப வாழ்க்கையானாலும் சரி மாணவர்களின் பொதுத்தேர்வு முறையானாலும் சரி, ஒரு நாட்டின் குறிப்பிட்ட செயல்திட்டம் என்றாலும் சரி “Strategy” என்பது மிக முக்கியம் ஆகும்.

Strategy யின் உள்ளடக்கம்,

திட்டமிடுதல் +செயல்படுத்துதல் = வெற்றி
Planning +Implement = Success

எந்தப் பணியை மேற்கொண்டாலும் மேற்கண்ட வழிமுறையை முக்கியமாகக் கருத வேண்டும்.

ஒரு ஆற்றைக் கடக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆற்றில் குதித்து நீந்திச் செல்ல வேண்டும். நீந்தினால் தான் கரையை அடைய முடியும். நீந்தாமல் தான் கரையை வெறுமனே கரையில் நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் அந்தக் காரியத்தை செயல்படுத்த முடியாது.

அதேபோல் ஒரு செயலை செய்கின்றபோது அதில் தோல்வி ஏற்பட்டாலோ (அ) அந்த செயலை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றாலோ உடனடியாக மாற்று வழியைக் காண வேண்டும்.

உதாரணமாக மகாத்மா காந்தி இந்திய சுதந்திரத்திற்காக போராடினார். பெரிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தையே எதிர்த்தார். அவரிடம் என்ன இருந்தது?

போர் படை இருந்ததா? ஆயுதங்கள் இருந்ததா? எதுவும் இல்லாமல் வெறுமனே அஹிம்சை வழியில் நின்று போராடி வெற்றி பெற்றார்.

அந்த போராட்டத்திற்கு பின்னால் அவரிடம் சுதந்திரம் பெறவேண்டும் என்ற செயல் முனைப்பு” இருந்தது (Implement) அதுதான் அவரை வெற்றியாளர் ஆக்கியது.

அதுபோல் செயல்பாடு 2 செயலாற்றல் என்பது மிகவும் முக்கியம்.

அதுதான் நான் சொல்கின்ற பிரதான சொல் “Strategy”.

தங்களைப் பற்றி, தங்கள் குடும்பப் பின்னணியைப் பற்றி சொல்லுங்களேன்?

என்னுடைய ஊர் கன்னியாகுமரி மாவட்டம். நாகர்கோவில் அருகே குளித்துறை ஆகும்.

அப்பா, அம்மாவுக்கு, என்னையும் சேர்த்து 8 பேர், அதில் 5 ஆண்கள், 3 பெண்கள், 8 பேரில் எல்லோரும் முதுநிலைக் கல்வி பயின்று முடித்தவர்கள். 2 பேர் முனைவர் பட்டத்தையும் பெற்று உள்ளோம். அப்பாவுக்கு விவசாயம். அவர் முன்னால் கடற்படை அலுவலராக இருந்தவர். எங்கள் வீட்டில் என் அம்மா தான் மிகவும் கண்டிப்பு.

நாங்கள் எப்போதும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும், எங்களுக்கு பாடங்களில் எழுகின்ற சந்தேகங்களுக்கு என் அம்மா தான் விளக்கம் கொடுத்து படிக்க வைப்பார்.

நாகர் கோவிலில் பள்ளிப்படிப்பை படித்து முடித்தேன். கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து B.Sc. Agri, M.Sc Agri Extension (வேளாண் விரிவாக்கத்துறை பயின்றேன்.

எனது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் என் தாய். நல்ல எதிர்காலப் பின்னணியில் நான் வளர வேண்டும் என்ற பேராவல் கொண்டவராக,

நன்றாக படித்து முன்னேற வேண்டும் என்கிற அக்கறையுடன் அதே சமயம் ரொம்பவும் கண்டிப்புடன் இருந்தார்.

விவசாயக்குடும்பம் என்பதால் ஆடு, மாடு, கோழி என அதுகளையும் கவனித்துக்கொண்டு, தோட்டத்துக்கும் சென்று விவசாய வேலைகளையும் கவனித்தபடி, நன்றாகவும் படிக்க வேண்டும் என்கிற கண்டிப்பு என் தாயிடம் அதிகம் இருந்தது.

நீங்கள் படித்த காலங்களில், மறக்க முடியாத நினைவுகள் பற்றி?

படிக்கும் காலத்தில் ஏழாவது வகுப்பு வரை ரொம்பவும் குறும்பு செய்வேன். உடன் படிக்கிற மாணவர்களுடன் எப்பவும் சண்டை போடுவேன்.

என் அம்மாவிடம் தினமும் ரிப்போர்ட் வரும். உங்க மகன் அவனை அடித்துவிட்டான். இவனை அடித்துவிட்டான் என்று தினமும், எம்மேல் புகார் வரும். ரொம்பவும் குறும்பு செய்வேன். எட்டாம் வகுப்பு சென்ற பிறகு நன்றாகப் படிக்க ஆரம்பித்தேன்.

நான் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது கோவை PSG கல்லூரிகள் பங்கேற்ற நடனப்போட்டி நடைபெற்றது. அதில் நான் கலந்து கொண்டேன்.

இறுதியாக, நடனப் போட்டியில் எனக்கும், டான்ஸ் நடிகர் (நாகேஷ் மகன்) ஆனந்த பாபுவுக்கும் போட்டி, இறுதியில் நான்தான் டான்ஸ் போட்டியில் வெற்றி பெற்றேன். இப்படி, கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகள் – பல உண்டு.

உங்கள் வாழ்க்கைப் பின்னணியில் உங்களுக்கு முன் மாதிரியாகவும் (Roll Model) திருப்பு முனையையும் ஏற்படுத்தியவர்கள்?

சதானந்த வல்லி ஆசிரியை.

அதன்பிறகு, என் மனதில் யூனிபார்ம் போட வேண்டும் என்று குறிக்கோளை உண்டாக்கியவர் எங்கள் பள்ளி NCC ஆசிரியர் “இராமசாமி ஐயா”. இவர்தான் என் மனதில், பள்ளியில் படிக்கும்போது போலீஸ் யூனிபார்ம் பற்றி ஓர் ஆர்வத்தை உண்டாக்கியவர்.

நான் M.Sc. (Agri) முடித்து, வங்கிப் பணியாளர் தேர்வு எழுதி அதன் பிறகு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) பணிக்கு சேர்ந்தேன். Agri யிலேயே தொடர்ந்து Ph.D படிக்க ஆசை என்பதால், குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வங்கிப் பணியில் சேர்ந்தேன். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணிபுரிந்து கொண்டே IPS தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தேன்.

IPS தேர்வில் எனக்கு “IPS Cadre” கிடைத்திருக்கிறது என்பது தெரிந்தது. அன்றைய தினம் வங்கிப் பணி முடிந்தவுடன், சைக்கிள் எடுத்துக்கொண்டு நேராக முதலில் இந்த விஷயத்தை திரு. இராமசாமி ஐயா அவர்களிடத்தில் சொல்ல வேண்டும் என்பதற்காக,

எங்கள் வீட்டுக்குக் கூட போகாமல், நேராக அவர்களிடம் சொல்ல அவர் வீட்டுக்கு சென்றேன்.

அவர் வீட்டுக்கு சென்று “ஐயா” அவர்களை விசாரித்தால், “அவர் மூன்று மாதத்திற்கு முன்பே இறந்துவிட்டார்” என்று கூறினார்கள்.

எனக்குள் பேரதிர்ச்சி. இப்படியாகிவிட்டதே என்று மிகவும் வேதனைப்பட்டேன்.

நான் வங்கியில் பணிபுரிந்து கொண்டு IPS தேர்வுக்கு முயற்சிக்கிறேன் என்பதைப் பற்றி அவரிடம் சொல்லவேயில்லை.

IPSல் தேர்வான பிறகு சொல்லலாம் என்று இருந்தேன். ஆனால் கடைசி வரை இந்த விஷயத்தை அவரிடம் என்னால் சொல்ல முடியவேயில்லை என்பது எனக்கு வேதனைக்குரிய விஷயமாகிவிட்டது.

ஒரு காவல்துறை அலுவலராக இருக்கிறேன் என்பதை என் NCC ஆசிரியர் இராமசாமி ஐயா அவர்கள் அறியவில்லையே என்று என் மனதில் ஒரு ஏக்கம் இன்னும் இருந்து கொண்டு தான் உள்ளது.

உங்களின் பேச்சு, செயல்பாடு எல்லாவற்றிலும் ஒரு வேகம், துடிப்பு உள்ளது. சிறு வயதிலிருந்தே காவல்துறைக்கு வரவேண்டும் என்ற ஆர்வம் இருந்ததா..எப்படி?

பொதுவாகவே சிறு வயதில் நம்முடைய எண்ணங்கள் அதாவது, ஒரு மருத்துவரைப் பார்த்தால் மருத்துவராகவும் ஒரு இன்ஜினியரை பார்த்தால் இன்ஜினியராகவும் ஒரு விஞ்ஞானியைப் பார்த்தால் விஞ்ஞானியாகவும் ஆசை ஏற்படும்.

என்னுடைய மாமன் மகன் BHEL நிறுவனத்தில் இன்ஜினியராக (M.Tech) இருந்தார். அவரைப் போல நல்ல திறமையாளராக வர வேண்டும் என்பது எனக்குள் ஆசையானது.

அடிப்படையாக ஒரு மருத்துவர் ஆக வேண்டுமென்று ஆசைப்பட்டேன். ஏனென்றால் மருத்துவப்பணி என்பது ஒரு சமூக மனம்பான்மை உள்ள ஒரு பணி. ஆகவே மருத்துவராக ஆக ஆசைப்பட்டேன். பிறகு மருத்துவம் படிக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்தவுடன் IPSதான் செல்ல வேண்டும் என்பது என் முடிவான முடிவு.

ஏனென்றால் IPS பணி என்பது மருத்துவப் பணியைப் போலவே நல்ல சமூக ஈடுபாடான பணியாக நான் கருதுகிறேன். சமூக அக்கறை உள்ளவர்கள் சேருகின்ற பணியாக கருதுகிறேன். தவறு செய்பவர்களை தட்டி கேட்கும் உரிமை போலீஸ் அதிகாரிகளுக்கு உண்டு.

அதேபோல, சமூக விரோத செயல்பாடுகளை அடக்கவும், போலீஸ் துறையாளர்களால் தான் முடியும். ஆகவே போலீஸ் துறைக்கு மேலே எனக்கு ஈடுபாடு, போலீஸ்னா. எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

மருத்துவர் பணியும், போலீஸ் அலுவலர் பணியும் ஒன்று போலத்தான் என்று சொல்கின்றீர்கள். பொதுவாக ஒரு மருத்துவரின் மனநிலையும் (Mental setup) , ஒரு காவல்துறை அலுவலரின் மனநிலையும் (Mental setup) வேறுபடும்.. எப்படி.. இருவரின் மனநிலை ஒன்றுதான் என்று சொல்கின்றீர்கள்?

பொதுவாகப் பார்த்தீர்களேயானால்,

ஒரு காவல்துறை அலுவலர் எப்படி தன் பணியில் நேரம் காலம், பாராமல் பணியாற்ற வேண்டும் என்ற நியதியோடு இருக்கின்றாரோ,

அதே நியதி தான் ஒரு மருத்துவருக்கும் உண்டு என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம்.

எப்படியெனில்,

ஒரு உயர் காவல்துறை அலுவலர் தன் பணி சம்பந்தமாக எதுவாக இருந்தாலும், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும்.

அதேபோல, ஒரு மருத்துவர் என்பவர் காவல்துறையினரைப் போன்று நேரம், காலம் பாராமல் பணியாற்ற வேண்டும் .

பணியாற்றுகின்ற பணி வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம். அதாவது, மருத்துவரின் பழக்கவழக்கங்கள் வேறுபட்டிருக்கலாம். அதேபோல் காவல்துறை (Police) பழக்க வழக்கங்கள் வேறுபட்டு இருக்கலாம்.

ஆனால் இருவரின் பணியானது மக்கள் நலனைக் கருத்தில் கொண்ட பணியாகத்தான் இருக்க முடியும். இந்த இருவரின் பணியிலேயேயும் அர்ப்பணிப்பு (Dedication) என்பது மிகவும் அவசியம்.

உதாரணமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன்….

ஒரு மருத்துவர் என்பவரும், ஒரு போலீஸ் அதிகாரி என்பவரும் சமூக நலன் கொண்ட பொறுப்பானவர்கள் ஆவர்.

எப்படியென்றால்,

ஒரு மருத்துவர் தன் பணிக்காலத்தில் கால நேரம் பாராமல் தன் பணியைச் செய்ய வேண்டும்.

ஒரு ஆபத்து என்றால் உடனே அங்கு நோயாளியைப் பார்த்து தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும்.

அதேபோல் ஒரு காவல்துறை அலுவலரும் அப்படித்தான் உடனடியாக துடிப்புடன் செயல்படுபவராக இருக்க வேண்டும்.

உதாரணமாக, ஒரு வீட்டில் தீப்பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது என்றால், அந்த கண நேரத்தில் அங்கு சென்று செய்ய வேண்டிய பணிகளை உடனே செய்ய வேண்டும்.

உரிய நேரத்தில் சென்றால், ஆபத்திலிருந்து கொஞ்சமாவது காப்பாற்றலாம் அல்லவா? அதை நாம் செய்ய வேண்டும்.

கடமையில் அர்ப்பணிப்பு என்பது ஒரு காவல்துறை அலுவல் சார்ந்தவருக்கும் மருத்துவம் சார்ந்தவருக்கும் தேவை.

Protect Property அதாவது இனிமேல் எதுவும் நடைபெறாமல் தடுப்பவர்கள் தான் உன்னதமானவர்கள்.

மருத்துவமனைகளில், நோயாளிகள் நெஞ்சு வலியில் துடித்துக் கொண்டு இருப்பார்கள். அப்படியே விட்டு விட்டுப் போகாமல் ,

இன்னும், Poisson (பாய்சன்) கேஸாக இருந்தால், கதவைக் கூட திறக்காதவர்களாக இல்லாமல், “Protect Property” என்ற சேவை நோக்கோடு மருத்துவர்கள் இருக்க வேண்டும்.

ஆகவேதான் மருத்துவப் பணியும் காவல்துறைபணியும் ஒரேமாதிரியான பணி என்று சொல்கிறேன்.

உங்களுடைய பணியில் “Strategy” என்று குறிப்பிடும்படியாக…

நீண்ட சிந்தனைக்குப் பிறகு…

என்னுடைய Service -ல் “Strategy” என்று பார்த்தால் நிறையவே இருக்கிறது.

சென்னை மாநகரத்தில் இருந்தபோது-

பொது மக்கள் காவல்துறையிடம் தங்கள் குறைகளை வந்து தயங்காமல் சொல்ல வேண்டும் என்பதற்காகவும், மேலும் பொது மக்கள்,காவல் நிலையத்திற்கு பயம், பொறுப்பு, எதுவுமில்லாமல் சகஜமாக வந்து தங்களது குறைகளைக் கூற வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு காவல்துறை மூலமாக, சென்னையில் உள்ள 126 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் உள்ள பெண் காவலர்களை (பட்டம் பயின்ற) தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பொது மக்களிடமும் காவல்நிலையத்திற்கு வரும் நபர்களிடம் எப்படி நல்ல இனிமையான அணுகுமுறையுடன் பேசுவது என்பது பற்றியும் (அதாவது, Public Relationship Officer ஆக) புகார் கொடுக்க வருபவர்களிடம் எவ்வாறே பேசுவது எப்படி நடந்து கொள்வது போன்ற பயிற்சிகள் காவல் நிலையங்களின் அலுவலர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும் என்பதற்காக.

கணிப்பொறி நிறுவனத்தின் மூலம், நல்ல தலை சிறந்த மனித வள மேம்பாட்டு வல்லுநராக இருப்பவரை தேர்ந்தெடுத்து, பட்டம் பயின்ற மகளிர் காவலர்களுக்கு மனிதவள மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

« Last Edit: April 24, 2012, 07:57:53 AM by சத்தியம் » Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

சத்தியம்

Super Hero Member

Posts: 1507


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #8 on: April 24, 2012, 07:47:10 AM »

மன அழுத்தத்தை மாற்றுவோம்

இனிய தன்னம்பிக்கையாளர்களே!

தாழ்வு மனப்பான்மை என்ற உணர்வைத் தகர்த்தெறிந்தமைக்கு பாராட்டுக்கள்.

இன்றைய நவீன இயந்திர உலகில், மன அழுத்தம் என்று சொல்லும் STRESS தவிர்க்க முடியாதது. வாழ்வின் எல்லா நிலைகளிலும் இது நமக்கு வருகிறது. உடல் மற்றும் மனநிலைகளைப் பாதித்து இரத்த அழுத்தம், ஒரு பக்கத் தலைவலி, ஆஸ்துமா மற்றும் முதுகு வலி போன்ற உடல் வியாதிகளும், கவலை, படபடப்பு போன்ற மன வியாதிகளும் இது காரணமாக உண்டாகிறது. எனவே, எவ்வித பாதிப்புக்கும் உட்படாமல் மன அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பதை விரிவாய் சிந்திப்போம்.

STRESS மன அழுத்தம்

எந்த ஒரு பிரச்னையும், அது பிரச்சனை என்று தெரிந்து கொள்ளும்போது தான் பிரச்னையாகிறது. தீவிரமான எதிர்மறை உணர்ச்சிகள் (NEGATIVE EMOTIONS) காலப்போக்கில் ஒருவரது மனநலத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.

காரணம் : எதிர்மறை அறிவு (NEGATIVE PERCEPTION) எதிர்மறையான எண்ணங்கள், எதிர்மறையான நம்பிக்கைகள்.

பலர் தம் நேரத்தை, சக்தியை கடந்த கால நிகழ்வுகளை அசைப்போட்டும், எதிர்காலத்தை எண்ணிக் கவலைப்பட்டும் வீணாக்குவதாய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் மகிழ்வாக அல்லது வருத்தமாக வாழ்வது அவர் கையில்தான் உள்ளது.

விளக்கம் : நாமோ அல்லது நமது உடல் உறுப்புக்களோ ஒரு தீர்வுக்குரிய பிரச்னையை எதிர்கொள்ள நேரும்போது நமது உடலும் மனமும் மாற்றம் பெற்று வரும் விளைவுதான் மன அழுத்தம் என்று கூறப்படுகிறது. அப்பிரச்சனைகளைச் சரியன முறையில் கையாண்டு சமாளிக்க முடியாவிட்டால் மன அழுத்தம் உண்டாகிறது. (STRESS is a by product of Poor or Inadequate coping).

மன அழுத்தமும் சமாளித்தலும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டும், ஒன்றையொன்று சார்ந்தும் உள்ளன. நேரான மற்றும் எதிர்மறையான சூழ்நிலைகளிலும் தீர்வுக்குரிய பிரச்சனைகளால் மன அழுத்தம் உண்டாகிறது.

வகைகள் : (types) மன அழுத்தம் இரண்டு வகைப்படும். 1. EUSTRESS மகிழ்வுதரும் மன அழுத்தம். உதாரணம்: திருமணச் சூழல்

2. DISTRESS : துன்பம் தரும் மன அழுத்தம. உதாரணம் : நெருங்கியவர் மரணம்.

மன அழுத்தத்திற்கான காரணங்கள்

1. ஏமாற்றம் (FRUSTRATION)

குறிப்பிட்ட இலக்கை நோக்கிய செயல்பாட்டுக்கு உண்டாகும் தடைகள், அதன் தொடர்ச்சியாக வரும் தோல்விகள், ஏமாற்றங்கள் மன அழுத்தம் உண்டாக காரணங்களாகின்றன.

விளைவுகள் : பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாமல் குழப்பத்துக்குள்ளாகி, தன்னால் முடியாது என எண்ணி தோற்றுப் போதல்.

உதாரணம் : அகம் : தனிமை உணர்வு, குற்ற உணர்வு, உடல் உறுப்புகள் ஊனம் அடைதல். புறம் : வேலை இழத்தல், நேசிப்பவர், நெருங்கியவர் நட்பை இழத்தல்.

2. முரண்பாடு (CONFLICTS)

ஒருவரது எதிர்ப்பு, கருத்து வேறுபாடு, உடன்படாமை அல்லது இரு கருத்து, உறுப்பு இவற்றிடையேயான சண்டை இவை தொடர் பானது முரண்பாடு.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தேவைகள் அல்லது எண்ணங்கள் தொடரும்
போது இது உண்டாகும்.

இதன் தீர்வுக்குரிய வழிகளை மூன்று வகையாய் பிரிக்கலாம்.

முதல்வழி : (APPROACH, AVOIDANCE) நம் தேவையை நோக்கிய செயல்பாடு. நம் இலக்கு எதுவோ அதை நோக்கி செயல்படுவதுடன் அதை அடைய சிலவற்றை தவிர்க்கவும் வேண்டும். ஏனெனில் ஒவ்வொன்றுக்கும் சில சாதகமான அம்சங்களும், சில பாதகமான அம்சங்களும் (SOME “IVE & -IVE) உண்டு.

உதாரணம் : நடுத்தர வர்க்கத்திலுள்ள ஒருவர் பெரிய செல்வந்தராக எண்ணுதல். இவர் தனது தற்போதைய நிலையில் வாழ்ந்து கொண்டே, மனதில், இந்த நிலையை தவிர்த்து (AVOID) செயல்படுதல், அதாவது இப்போதைய நிலையை மறவாமல் செல்லவேண்டிய நிலைக்குத் தன்னைத் தயார்படுத்துதல்.

MIDDLE CLASS HIGH CLASS

2-ம் வழி : (DOUBLE APPROACH) இரண்டையும் பரிசீலித்து தேர்வு செய்துல்.

நலம் விரும்பும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலக்குகளில், இரண்டையும் பரிசீலித்து சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது, அல்லது முதலில் எது அடுத்து எது எனத் தேர்வு செய்வது, ஓர் இரவில் இரு திரைப்படங்கள் பார்ப்பது, இது பிரச்னையெனில் ஒருவர் தமது நேரம், சக்தி இவற்றின் அடிப்படையில் முடிவெடுத்து செயல்படுவது, ஏதாவது ஒன்றை பார்ப்பது, அல்லது ஒன்றை முதல் காட்சியிலும் மற்றதை

2-ம் காட்சியிலும் பார்ப்பது.

 Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

சத்தியம்

Super Hero Member

Posts: 1507


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #9 on: April 24, 2012, 07:48:27 AM »

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை

மனித சமுதாயம் வாழ்வதற்கு, மிகவும அடிப்படையானது உழைப்புத்தான். உழையுங்கள்!  உழையுங்கள்!  அதுவே அனைத்து நோய்க்கும் மருந்து” என்று கூறினார் சுவாமி விவேகானந்தர்.

எந்த தொழிலையும் செய்து வெற்றி காண இயலும் என்ற நம்பிக்கையின் உந்துவிசை உழைப்புத்தான். உழைப்பு ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையை உண்டாக்குகிறது. அந்த உறுதியான தன்னம்பிக்கையுடன், இணைந்த உழைப்புத்தான் உலகை இன்றைய உயர்நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்பது நூறுவிழுக்காடு உண்மைதான்.

தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும்.  செயலாற்ற வேண்டும் என்று கூறும் அதே நேரத்தில், இதற்குத் தடைக்கற்கள் உண்டா?  எனவும் சிந்திக்க வேண்டியுள்ளது.

சிலர் தொடங்கிய தொழில்களில் வெற்றியை இழக்கிறார்கள்.  தன்னம்பிக்கையோடு தொடங்கிய செயலிலும், சிலசமயம் இடைமுறிவு ஏற்படுகிறது!  சிலர் இடையில் சோர்ந்து போய்விடுகிறார்களே!  இதற்கெல்லாம் என்ன காரணம் என்று சிந்திக்க வேண்டியுள்ளது. அப்படி எதிர்மறையாகவும் சிந்தித்தாலன்றி, விடை காண்பது எளிதல்ல.

தொழில் தொடங்குவதும், அதனை வளர்ப்பது உழைப்புதம் உயிர் வாழ்க்கைக்குத்தான்!   அப்படி ஒரு தொழில் தொடங்கும்போது  அந்த தொழிலுக்கு எவ்வளவு உழைப்புத் தேவையை அதனைத் தன்னால் கொடுக்க இயலுமா? என்று சிந்திக்க வேண்டும்.

உழைப்புடன் தனது தேவையான முதலீடு ஏற்பாடு செய்ய வலிமை உண்டா? தொழிலில் ஏற்கனவே உள்ள பயிற்சி உதவுமா?  என்பவையும் தன்வலிமையில் தான் சேரும்.

எடுத்துக்காட்டாக, ஒரு நெசவுத்தொழிலாளி கைத்தறியில் மட்டும் பயிற்சி பெற்றவர்!  அவர் சொந்தமாக விசைத்தறிபோட எண்ணுவார் என்றால் கைத்தறிப் பயிற்சி மட்டும் உள்ள தான் விசைதறியை இயக்க இயலுமா?  பயிற்சி பெற்றால் போதுமா?  அதற்குத் தன்னிடம் வலிமை உண்டா என்பதை முடிவு செய்ய வேண்டும்.

“முடியும்” என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு “இந்த இடத்தில் தொழில் செய்ய சூழல் சரியாக உள்ளதா?  நூல் எளிதில் கிடைக்குமா?  சாயப்பட்டறை உள்ளதா?  அல்லது சற்றுத் தொலைவானால் நூல் கொண்டு வர வாகன வசதி உள்ளதா?  என்பதனையும் ஆராய வேண்டும்.

தமது வலிமையை அறியாமல் செய்யும் செயல்களில் முனைந்து இடைமுறிவுபட்டவர் பலர் என்கிறார் வள்ளுவர்.

“உடைத்தம்வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முறிந்தார் பலர்”

என்பது அவர் குறள்.  செயலின் வலிமை, தனது வலிமை மட்டும் பார்த்தால் நாம் எடுத்துக்கொண்ட செயலுக்குத் தடை வருமா?  அதை நீக்கத் துணை வருமா?  என்பதுவும் சிந்திக்கத் தக்கது.

‘வினை வலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிசெலல்” என்பது வள்ளுவம்.  இதனை எதற்கு வேண்டுமானாலும் பொருத்திப்பார்க்கலாம்.

அரசர்கள் நாடாண்டு, ஒருவருக்கொருவர் பகைகொண்டு, மண்ணாசையால் போரிடும் காலகட்டத்தில் எழுதப்பட்ட குறள், அன்றைக்கு பொருந்தும்;  இன்றைக்கும்  பொருந்தும்.

வினைவலி என்பது அன்று எத்தகைய போர் என்பது. இன்று எத்தகைய செயல் அல்லது தொழில் என்பது.

தன்வலி என்பது அன்று தன்படைவீர்ர், படைக்கருவிகள் ஆகியவற்றின் பெருக்கம், இன்று தனக்குள்ள ஊக்கம், உழைக்கும் திறன் ஆகியவை.

மாற்றான் வலி என்பது அன்று எதிரியின் படைவலிமை,  படைக் கருவிகள் பெருக்கம் முதலியன.

துணைவலி என்பது அன்று அரசனுக்கு படைத்துணையாக வருகின்ற வேற்று மன்னர்கள் உண்டா?  எதிரிக்கும் துணைவருவார்  உண்டா?  தன் நாட்டு அரசன் எப்படித்துணை செய்யும் எதிரி நாட்டு அரசன் எப்படித்துணை செய்யும் என்பன சிந்திக்கப்படும்.

இன்று துணைவலி என்பது உழைப்பவர் துணை செய்வார்களா?  பொருளாதாரதில் முன் தொகை தருவார்களா?  போன்றவை ஆராயப்படவேண்டும்.

இவ்வளவும் ஆராய்ந்து உடன்பான விடை கிடைக்குமானால் அதுவே தன்னம்பிக்கையை உண்டாக்கிவிடும்.

தானாகே உண்டாகிவிடும்.  அல்லது தானாகவே தன்னம்பிக்கை கொள்க என்பது சிறகு இல்லாமல் வானில் பறக்க நம்பிக்கைகொள் என்பதுபோலாகும். விமானம் அமைத்து பறக்க முடியும் என்பதுவே தன்னம்பிக்கை தரும்.

விதிவழி எல்லாம் நடக்கும் என விட்டுவிட்டால், தன்னம்பிக்கை உண்டாகாது. எல்லாவறையும் “சூழல்” உட்பட ஆய்ந்து முடிவெடுப்பின் தன்னம்பிக்கை வெற்றி பெறும்.

புறச்சூழல் சரியாக அமைந்தால் அல்லது அமைத்துக்கொண்டால் அகச்சூழல் செழும் அடையும் – அப்படிப்பட்ட செழுமை மண்ணில்தான் தன்னம்பிக்கைச் செடி செழித்து வளரும்.

மூட நம்பிக்கை என்ற களைகளும் வளராமல் களைந்தெறியப்பட வேண்டும்.  நல்ல உடம்பு இன்றிமையாதது.  நல்ல உடம்பில் தான் நல்ல மனம் – பண்பட்ட மனம் இருக்க இயலும்.  பண்பட்ட மனத்தில் தன்னம்பிக்கை உண்டாகும். அத்தன்னம்பிக்கை வெற்றியை உண்டாக்கும்.

குழந்கைகளுக்கு எதிர்மறை சிந்தனை ஊட்டக்கூடாது. ஆனால் வளர்ந்தபின் எதிர்மறைச் சிந்தனையும் கண்டு அதனை நீக்க வேண்டும். எதிர்மறை தடைக்கள்கள் தாம்!  அத்தடையைக் காண்பது தேவை. கண்டு நீக்கிவிட்டால், தன்னம்பிகை உறுதிப்படும்.  வாழ்வில் வெற்றி கிட்டும்.

 Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

சத்தியம்

Super Hero Member

Posts: 1507


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #10 on: April 24, 2012, 07:49:24 AM »

முயற்சி சிறகுகள் முளைக்கட்டும்

காத்திருக்கும்வரை
நம் பெயர்
காற்றென்றே இருக்கட்டும்…
புறப்பட்டு விட்டால்
புயலென்று புரியவைப்போம்!

இது கவிஞர் மு. மேத்தாவின் தன்னம்பிக்கைமிக்க கவிதைகளில் ஒன்று. தென்றலாக இருப்பவரை, புயல்போல புறப்படச் செய்யும் அற்புத வரிகள் இவை. காத்திருத்தல் என்பதற்குகூட ஓர் காலவரை இருக்கிறது என்பதை உணர்த்தும் கருத்தாழம்  மிக்கவை இக்கவிதை.

நம் தேவைகளை, நியாயமான ஆசைகளை அடைவதற்கு விடாமுயற்சியும், வாய்ப்புகளைத் தேடுவதில் முனைப்பும் வேண்டும். தண்ணீர்கூட ஓடும்போதுதான் நதியாகிறது. மாறாக தேங்கினால் அதுவே குட்டையாகிவிடும்.

அதுபோல, நமது முயற்சிகளில் வேகம் வேண்டும். தொடர்ந்த தேடுதல், சலிக்காத உழைப்பும் வேண்டும். நம் இலட்சியத்தை அடைவதற்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பதில் தெளிவிருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றிச்சிகரத்தில் நம் காலடித்தடத்தைப் பதிக்க முடியும்.

ஒரு தடவை சாக்ரடீசிடம், இளைஞர் ஒருவர் வந்து “நான் விரும்பிய இலட்சியத்தை எப்படி அடைவது?” என்று கேட்டார். அதற்கு சாக்ரடீசு சிரித்தபடியே, வா என்று ஒரு நதிக்கரைக்கு அந்த இளைஞரை அழைத்துச் சென்றார்.

கழுத்தளவு நீரில் இருவரும் இருந்தபோது, திடீரென இளைஞனின் தலையைப்  பிடித்து தண்ணீருக்குள் மூழ்கச் செய்தார் சாக்ரடீசு. சில வினாடிகளுக்கு பின், அந்த இளைஞர் திமிறியபடி தண்ணீருக்குள்ளிலிருந்து மேலெழுந்தார்.   பெருமூச்சு விட்ட இளைஞரைப் பார்த்த சாக்ரடீசு “நீ தண்ணீருக்குள் இருந்தபோது என்ன தேவையாய் ருந்தது?” இளைஞர் அதற்குச் சொன்னார் “காற்று!” .

சாக்ரடீசு அதற்கு “நீ தண்ணீருக்குள் இருந்தபோது காற்று மட்டுமே உன்னுடைய தேவையாய் இருந்தது. அது மாதிரி, உன் இலட்சியத்தை அடைவதில் மட்டுமே, உனக்கு கவனம் இருக்க வேண்டும்.

ஆம்! இலட்சியச் சிகரத்தைத் தொடுவதற்கு, நம் பாதையில் கவனம் வைத்தல் வேண்டும்.  அதற்கு நமது முயற்சிகளே சிறகுகளாக முளைத்திட வேண்டும்.  அப்போதே, வெற்றிப்பூக்கள் நம் வசமாகும்.

இலட்சியச் சிகரத்தைத்
தொடுவதற்கு -
முயற்சி சிறகுகள்
முளைகட்டும் உனக்கு!

 Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

சத்தியம்

Super Hero Member

Posts: 1507


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #11 on: April 24, 2012, 07:50:13 AM »

வாழ்க்கை சுமையல்ல

எழுந்து நில் இளைஞனே
எழுச்சி மிகக் கொண்டு
எழுந்து நில்!

விழிப்புடன்
வாழ்பவனுக்கு
வீழ்ச்சி என்றும் இல்லை!

இலட்சியம்
உள்ளவனுக்கு
தடைகள் பெரிதல்ல!

வாழத் தெரிந்தவனுக்கு
வாழ்க்கை சுமையல்ல
எழுந்தி நில் இளைஞனே
எழுந்து நில்!

 Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

சத்தியம்

Super Hero Member

Posts: 1507


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #12 on: April 24, 2012, 07:51:14 AM »

சாதிக்க விரும்புவோருக்கு ஒரு வழிகாட்டி

உலகெங்கும் தம் துடிப்பான பேச்சுக்களால் அவரவர் உண்மையான ஆற்றல்களை வெளி கொணர்ந்திருக்கிறார். பெரும்பாலான மக்கள் தோல்வியடைவது திறையின்மையாலோ அல்ல!  மாறாக விருப்பின்மையாலும் வழிகாட்டுதல் இன்மையாலும், ஒழுக்கமின்மையாலும் தான் என்று கூறகின்றார்.  உலகில் சில மனிதர்கள் மதிப்பு வாய்ந்த சொத்தான மக்களில் மேல் முதலீடு செய்து எப்படி வெற்றி பெறுவது என்பதை அவர்கள் கற்றுக்  கொண்டுவிட்டனர்.  எந்த வியாபாரத்திற்கும் மனித வளமே உங்களுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்க முடியும்.  மிகப்பெரிய கடன் சுமையாக ஆகவும் முடியும் என்கிற நமது மனப்பாங்கே நமது வெற்றியின் அஸ்திவாரமாகும்.  ஒரு பெரிய கட்டிடம் ஒரு பலமான அஸ்திவாரத்தின் மேல் நிற்பதைப்போலவே வெற்றியும் கூட பலமான அஸ்திவாரத்தின் மேல் நிற்கின்றது. வாய்ப்பு என்பது நமது காலடிகளுக்கு கீழேயே உள்ளது.  நாம் செய்ய வேண்டியதெல்லாம் அந்த வாய்ப்பைத் தேடி வேறெங்கும் போக வேண்டியதில்லை. அந்த வாய்ப்பை கண்டுணர்வதேயாகும்.  இக்கரைக்கு அக்கரை பச்சைபசுமையாக தென்படும் பொழுது அக்கறையில் உள்ளவர்கள் இக்கரையை பசுமையெனப் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

என்னால் அதைச் செய்ய முடியாது என ஒருவர் கூறினால் அதற்கு இரண்டு விதமான பொருள்கள்.  அதை எப்படி செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை என்றால் அது பயிற்சி சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும். அதை செய்ய விரும்பவில்லை என்றால் அது அவர்களுடைய மனப்பாங்கு சம்பந்தப்பட்ட பிரச்சனை.  மற்றும் எதிர்மறை எண்ணமுள்ளவர்கள் தமது தோல்விகளுக்கு எப்போதும் உலகத்தையும், தங்களது பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், கணவன், மனைவியையும், பொருளாதாரத்தையும், அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுவார்கள்.  இத்தகைய எண்ணங்களிலிருந்து விலக வேண்டும் என்றால் உங்களிடம் உள்ள அழுக்கை சுத்தப்படுத்தக் கொள்ளுங்கள்.  மக்களோடு ஒட்டி வாழுங்கள்.  உங்களுடைய கனவுகளையெல்லாம் ஒன்று சேர்த்து முன்னேறிச் செல்லுங்கள்.

வெற்றியின் அறிகுறிகள்

அடிக்கடி மகிழ்ச்சியாய் சிரிப்பதும், பிறரை மிகவும் நேசிப்பதும், புத்திசாலிகள் மரியாதைக்குப் பாத்திரமாவதும் குழந்தைகளின் பாசத்தை பெறுவதும், நேர்மறையான விமர்சகர் தான் அங்கீகார  பொய்யான நண்பர்களின் வஞ்சகத்தைப் பொறுத்தல், அழகை ஆராதித்தல், பிறரிடத்து, அமைந்துள்ள சிறப்புகளை கண்டுபிடிப்பது, அழகானதொரு குழந்தையை அடைதல், ஒரு ஆன்மாவை  மீட்டல், ஒரு பழத்தோட்டத்தை உருவாக்கல், ஒரு சமூக நிலையை உயர்த்தல் போன்ற பணியை செய்து முடித்தல், உற்சாகத்தோடு விளையாடி சிரித்தல், பெருமகிழ்ச்சியோடு பாடி இருத்தல், ஒரு உயிர் நன்மையடைந்ததை அறிந்திருத்தல், உண்மையான நேர்மையான நல்ல விஷயங்களை எண்ணுதல் மூலம் நாம் மனப்பாங்கைப்பெற முடியும்.  அசாதாரண மனிதன் வாய்ப்பை நாடுகிறான்.  ஆனால்… சாதாரண மனிதன் பாதுகாப்பை நாடுகிறான் .

நமக்கு என்ன தேவையோ அதன் மேல் மனதை வைக்க வேண்டும்.  வெற்றியாளர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவர் பண்புகளை ஏற்றுக்கொண்டு பன்படுத்தின் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்.  அது போல் தோல்வியடைந்தவர்களிடம் சில பண்புகள் இருக்கின்றன.  அதனை தவிர்த்தால் தோல்வியை தவிர்க்கலாம்..  சில அடிப்படைக் கொள்கையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் வரும் விளைவே வெற்றியைத் தருவதாகும். வெற்றி என்பது ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கை அடைதல்.  வெற்றி என்பது மன ஊக்கம்.  இலக்கை அடையும் விருப்பம், எப்படியும் இலக்கை அடைந்தே ஆகவேண்டும் என்ற மனப்பாங்கு. கடின உழைப்பு போன்றவற்றால் உண்டாகும் நல்ல தீர்வின் வெளிப்பாடாகும். உயிர் வாழ்வது மட்டும் போதாது வாழ்கையை முழுவதுமாக வாழ வேண்டும். மேலோட்டமாக தொடுவது மட்டும் போதாதது உணரவேண்டும்.

வெற்றிக்குத்த தடைகள்

1. தான் என்ற அகந்தை

2. வெற்றி/ தோல்வி பயம்

3. திட்டமின்மை

4. இலக்குகளை வகுத்துக்கொள்ளாதிருத்தல்

5. வாழ்க்கை மாறுதல்கள்

6. வேலைகளைத் தள்ளிப் போடுதல்

7. குடும்பப் பொறுப்புகள்

8. பொருளாதாரப் பாதுகாப்பு விஷயங்கள்

9. ஒருமுகப்படுத்தாமை

10. குழம்பி இருத்தல்

11. பணத்திற்காக நோக்கத்தைக் கைவிடுதல்

12. அதிகமான வேலைகளைத்தனியாகவே செய்வது

13. அதிகப்படியான கடமைப் பொறுப்பு

14. கடமைப் பொறுப்பின்மை

15. பயிற்சியின்மை

16. தொடர்ந்து முயற்சி செய்யும் உறுதி இல்லாமை

17. முன்னுரிமைகளின்மை வெற்றியின் விளிம்பு ஒரு சிறு அளவுக்கு உட்பட்டதே!

 Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

சத்தியம்

Super Hero Member

Posts: 1507


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #13 on: April 24, 2012, 07:52:28 AM »

எப்படி எப்படி எப்படி

சரி அடுத்தபடியான “புரிந்துகொள்ளுதல் எப்படி? ” என்கிறீர்களா?  பிறர் மூலம் அல்லது பிறரின் மூலம் அறிந்து கொண்டதை அப்படியே விட்டுவிட்டால் அதனால் எந்தப் பயனும் விளையாது.  ஏனென்றால் அறிந்து கொண்ட ஒன்றை அரைகுறையாகவே பிறரிடமும் பகிர்ந்து கொள்வதிலேயே தற்பெருமை அடைந்துவிடுகிறோம். மாறாக… நாம் அறிந்து கொண்ட ஒரு விஷயம் குறித்து எடுத்துக்காட்டாக கணிப்பொறியைப் பற்றி யாரோ பேசக்கேட்டு அறிந்து கொண்டபின் நாம் நமக்குள் தனிமையில் அமர்ந்து யோசிக்க  கணிப்பொறி பற்றிய யோசனையில் மூழ்க வேண்டும். இந்தக் கணிப்பொறியால் நமக்கு என்ன பயன்?  கணிப்பொறியின் அளப்பறிய நினைவாற்றலால் அதன் கொள்ளளவால் நமக்கென்ன பயன்? ஒரு கணிப்பொறியை வாங்குவதற்கு கிட்டதட்ட ரூ. 25 ஆயிரம் தேவை எனில் அவ்வளவு செலவு செய்து வாங்கி வைப்பதன் மூலம்  நமக்கென்ன பயன் வரும்?  -  போன்ற சிந்தனைகள் தோன்றுமென்றால் – அந்த ஐயப்பாடுகளை வல்லுநர்களிடம் விசாரித்து விடை பெறுவதையே நான் “புரிதல்” என்கிறேன். இதுவே தெளிவடைதலின் இரண்டாம் நிலை ஆகும்.

அடுத்து முனைறாம் நிலையாகிய “உணர்தல்” என்றால் என்னவென்று பார்ப்போம்?  எப்போது உணரமுடியும் தெரியுமா?  நாமே ஒன்றைச் செய்து அதனை நமது அனுபவமாக சொந்தமாக்கிக் கொள்வதே “உணர்தல்” எனப்படும்.  உதாரணமாக, உங்களிம் ஒருவர் “லட்டு” எப்படியிருக்கும்?  எனக் கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்?, “இனிப்பாய் இருக்கும்” என்பீர்களல்லவா?  அவர் உடனே “இனிப்பு” எப்படியிருக்கும்? எனக்கேட்டால்என்ன செய்வீர்கள் நீங்கள், இனிப்பை எப்படி விளக்குவது என்னும் யோசனையில் மூழ்கிக் கொடுத்து “தின்றுப் பாருங்கள் தெரியும்” என்பீர்கள் அல்லவா… அந்த அனுபவம் தான் உணர்வாகும்.

“தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்” என்பார்களல்லவா?   – இதுதான் உணர்தலைக் குறிப்பதாகும். ஏற்கனவே நீங்கள் கணிப்பொறியைப் பற்றி பிறர் மூலம் “அறிந்து” கொண்டீர்கள்;  பிறகு நீங்கள் கணிப்பொறியைப் பற்றி ஆழமாக உங்களுக்குள்ளேயே சிந்தித்தும் – விஷயமறிந்த வல்லுநர்களிடம் விசாரித்தும் “புரிந்து”  கொண்டீர்கள். இனி என்ன செய்ய வேண்டும் தெரியுமா?  ஒரு கணிப்பொறியை இயங்கி அதன் கூறுகளை, அதனுள் பொதிந்திருக்கும் தொழில் நுட்பத்தை, மென்பொருள் மற்றும் வன்பொருள் குறித்த நுணுக்கங்களை அனுபவமாக ஆக்கிக்கொள்ளும் செயலையே “உணர்தல்”என்று கூறுகிறேன்.

இனி வருவது நாம் எட்ட விரும்பிய நான்காவது படியாகும்.  அது தான் தெளிவடைவது, ஒரே ஒருமுறை அனுபவம் பெற்று உணர்ந்தால் மட்டும்  போதாது.  தொடர்ந்து பலமுறை அந்த கணிப்பொறி அனுபவத்தைப் பெற்று மீண்டும் மீண்டும் அதன் நுணுக்கங்களில் தேர்ச்சி பெற்றால் ஐயம் தெளிவடைந்து விடும்.  இது கணிப்பொறி விஷயத்தில் மட்டுமல்ல;  எந்தத்துறை குறித்த அறிவானாலும் சரி.. அது மருத்துவமானாலும் சரி,  பொறியியலானாலும் சரி, சமையலானாலும் சரி, அரசியலானாலும் சரி, மேலாண்மையானாலும் சரி, பயிலப் பயில, பழகப் பழகப் பெறுகிற தொடர் உணர்வே தெளிவை நோக்கி இட்டுச் செல்லும் மார்க்கமாகும்.

அப்படிப்பட்டத் தெளிவைப் பெற்றுவிடுகிறபோது, அந்தத் துறை குறித்த எந்த ஐயத்தையும் சிக்கலையும் – எங்கிருந்தபோதும், எந்த நேரமானாலும் தீர்த்துவைத்துவிட முடியும்.  ஒரு விமானத்திலிருந்தபடியே தன் அலுவலகத்திலிருக்கும் கணிப்பொறியில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களுக்கான தீர்வை கம்பில்லாத தொலைபேசி மூலம் தீர்த்து வைக்கும் வல்லமை கைவந்துவிடும்.

இத்தகையத் தெளிவையே “ஞானம்” என்கிறார்கள் நம் முன்னோர்கள்.  இவையே அறியாமையிலிருந்து ஞானத்தை (To Wisdom) அடையும் பயணத்தின் படிகளாகும். (“Knowing) (அறிதல்), (Understanding) (புரிதல்), Feeling of Experiencing (உணர்தல்), Becoming Clear (தெளிதல்).

என்ன நண்பர்களே.. “தெளிதல்” பற்றிய தெளிவைப்பெற முடிந்ததா?

3

வாழக்கையே ஒரு தேடல் திருவிழா தான். அந்தத் தேடல் தொடரில் முதலாவதாக, “தெளிதல் எப்படி” என்பதை அறிந்தோம். இந்த இதழில் நாம் காணவிருப்பது “கவனித்தல் எப்படி?” என்பதை!

“கவனிப்பது எப்படி”

“கவனிப்பது எப்படியா?” – இதென்ன விந்தையான கேள்வி என்று தோன்றுகிறதா?  “கவனித்தல்” என்னும் செயல் வெகு எளிதானதென்று நாம் எண்ணிக்கொள்கிறோம் என்றாலும் நடைமுறையில் அது முழுமையாக நிகழ்கிறதா? என்றால் “இல்லை” என்பதே பலரின் பதிலாக அமைந்திருக்கிறது.

“நில் கவனி!, புறப்படு” (Stop, listen and proceed) – என்னும் எச்சரிக்கை வாசகத்தை நாம் பயணத்தினூடே காண நேருகிறதல்லவா? அந்த மூன்று வார்த்தைகளுள் நடுவில் நாயகமாய் அமர்ந்திருக்கும் “கவனி” என்னும் சொல்லைக் கொஞ்சம் உற்று கவனியுங்கள்.  அது என்ன பொருளை நமக்கு வழங்குகிறதென்று இப்போது பார்ப்போம்.

“கவனித்தல்” – என்னும் ஒரு சொல் மூன்று பொருள்களை உள்ளடக்கியதாக பவனி வருகிறது. முதலாவது “பார்த்தல்”, இரண்டாவது “கேட்டல்”; மூன்றாவது “மனம் வைத்தல்” – என மூன்று பரிமாணகளை உள்ளடக்கிச் சுழலும் ஒரு சொல்லாக “கவனித்தல்” திகழ்கிறது.

சரி.. எப்படி கவனிப்பது?  அன்றாடம் எத்தனையோ விஷயங்களைக் கவனித்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

 Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

சத்தியம்

Super Hero Member

Posts: 1507


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #14 on: April 24, 2012, 08:00:46 AM »

கொடுத்துப் பெறுங்கள்

விமானப் பயணத்தின்போது உங்கள் இருக்கை அருகே ஒரு வெள்ளைக்காருக்கான இருக்கை இருக்கிறது என்றால் அதில் அமருவதற்கு வரும்போது அந்த நபர் உங்களிடம் ஒரு “ஹாய்” சொல்லிவிடும் பழக்கம் உள்ளது!  உங்களுக்கு ஆர்வம் இருந்தால் தொடர்ந்து ஹலோக் கொள்ளலாம். இலையனில் அப்படியே (உர் என்று) பயணிப்போம் என்று பொருள்.

புதியதாக சந்திக்கும் இரு நபர்களிடையோ, அல்லது ஓரிடத்தில் தொடர்ந்து இருக்க வேண்டிய சந்தர்ப்பமாக இருக்கும் சமயத்திலோ அல்லது ஒரு அலுவலகம் அல்லது நபரை சந்திக்க செல்லும் இடத்திலோ நம்மைப்பற்றி நாமே எப்படி அறிமுகம் செய்து கொள்வது என்பதைப் பார்ப்போம்!

எங்கு சென்றாலும் அங்கு இருக்கும் நபர்களுக்கு முதலில் வணக்கம் செலுத்துங்கள்.  (அங்கு இருப்பவரின் வயதைப்பற்றி கவலைப்படாதீர்கள்).. அறைக்கு உள்ளே போக வேண்டுமெனில் (அறைக் கதவு திறந்திருந்தாலும்)  அனுமதி கேட்டபின்பு உள்ளே செல்லுங்கள்.  வணக்கத்திற்குப் பிறகு உங்கள் பெயரை இனிஷியலுடன் திருத்தமாச் சொல்லுங்கள்.  நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதைக்கூறிய பின்பு நீங்கள் பார்க்க வேண்டிய நபரைப்பற்றி விசாரியுங்கள் அல்லது உங்களுக்கு தேவையான தகவல்களை “கோரிக்கை” யாக தெரிவியுங்கள்.  அத்தகவல்கள் எதற்காக தேவைப்படுகின்றன என்பதையும் தெரிவித்துவிடுங்கள்.

மேற்படி தகவல்கள் நீங்கள் யார்?  எதற்காக வந்துள்ளீர்கள்? என்பதற்கு போதுமானதாக இருக்கும்.

சில அலவலகங்களில் இதை எழுதிக் கேட்பார்கள்.  எப்போதும் சில வெள்ளைத்தாள்கள் உங்கள் பாக்கெட்டில் இருக்கட்டும். கேட்டதை புரியுமாறு சுருக்கமாக எழுதிக் கொடுங்கள்.

உங்களுக்குக் கிடைக்க வேண்டிய தகவல்கள் தர தாமதித்தாலோ, அங்கு அசட்டையான சூழ்நிலை நிலவினாலோ மீண்டும் ஒருமுறை அங்கிருப்பவரிடம் உங்களுக்கு அது தேவைப்படும் காரணத்தைக் கூறுங்கள். அவசியமேற்பட்டால் அலுவலமாக இருப்பின் உயரதிகாரியை பார்க்க வேண்டுமா?  என்பதையும் அவரிடமே கேளுங்கள்.  “வேண்டாம், பிறகு வாருங்கள் என்று கூறினாலும் சரி, நீங்க அங்க போனாலும் இந்த சீட்டுக்குதான் திரும்பி வரணும்” என்று கூறினாலும் சரி, “சரிங்க சார் வெயிட் பண்றேன்ணு” சொல்லுங்க.

எந்தக் காரணத்துக்காகவும் நீங்கள் காத்திருப்பதினால் உங்களுக்கு ஏற்படும் எரிச்சலைக் காட்டிவிடாதீர்கள். இதனால் நீங்கள் பெற வேண்டிய தகவல்கள் மேலும் தாமதமாகலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.

சிலருக்கு தங்களைப்பற்றி தாங்களே எப்படி சொல்லிக் கொள்வது என்பது சங்கோஜமாக இருக்கும்.

இன்டர்வியூ செல்லும் இளைஞர்களுக்கும், வேலை தேடிப்போகும் இடத்தில் உங்களைப் பற்றி நீங்கள் கூறவேண்டியது கட்டாயமானதாகும்.

முதலாளி அல்லது நேர்முகம் நடத்துவோர் உங்கள் சான்றிதழ்களைப பார்த்துக் கொண்டே, “உங்கள் பெயர் என்ன?” என்று கேட்பார்.

“அதுதான் சர்டிபிகேட்லியே இருக்கே!” என்று நீங்கள் நினைக்கக்கூடாது.  உங்களோடு சகஜமாக  பேசத் துவங்குவதற்கு உங்கள் பெயரைக் கேட்பது உதவும்.  உதாரணமாக தியேட்டரில் இடைவேளையின்போது திடீரென சந்திக்கும் நண்பனை எங்க பிக்சருக்கு வந்திங்களான்னு கேட்பது போலத்தான், உங்கள் பெயரை அவர் கேட்பார்.

இவ்விஷயங்களில் புதிதாக இருப்பவர்களுக்கு சில டிப்ஸ்:

1 ஒரு முகம் பார்க்கும் கண்ணாடிக்கு முன்பு நின்று உங்கள் பெயரை இன்ஷியலுடன் புன்சிரிப்புடன் உச்சரித்துப் பழகுங்கள் (வெட்கப்படாதீர்கள். கூச்சம் குறையும்)

2. உங்கள் பெயரை சில முறையேனும் (தனியாக) சத்தம்போட்டு சொல்லிப்பாருங்கள்.

3. இண்டர்வியூ செல்வதற்கு முன்பு (நண்பர்களிடம்) உங்களைப் பற்றி அறிமுகம் செய்து பழகுங்கள்.  (அன்று நண்பர்களுக்கு டீ, வடை நீங்கள் சப்ளை செய்துவிடுங்கள்).

4. தனியாக நாற்காலியில் அமர்ந்து, நின்று கொண்டு பல முறை பயிற்சி செய்து பாருங்கள்.

5. உங்களைப்பற்றி எழுதி வைத்து படித்துப் பாருங்கள்.

6. அலுவலக நிமித்தம் சென்றால் சரிசமமான பதவியில் இருப்பவராக இருந்தால் அங்கிருப்பவரிடம் (ஜென்டில் ஹேண்ட் ஷேக்) கைகுலுக்கலாம்.

உங்களைப் பற்றி சிறப்பாக தகவல் “கொடுங்கள்” உங்களுக்கு வேண்டியதை தாராளமாக “பெறுங்கள்”.

 Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

சத்தியம்

Super Hero Member

Posts: 1507


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #15 on: April 24, 2012, 08:01:33 AM »

உதவுங்கள் உயருங்கள்

வாழ்க்கை என்பது ஒருவழிப்பயணம். ஆனால் வளர்ச்சி என்பது இருவழிப்பயணம். ஆம்! முயன்றால் வளர்ச்சி, தளர்ந்தால் வீழ்ச்சி. ஆகவே வாழ்க்கைப் பயணம் வளர்ச்சியை நோக்கியே இருக்க முயற்சித்துக் கொண்டே இருங்கள். மேலும், வாழ்வில் ஒரு முறை நிகழ்ந்த எதுவும் மறுமுறை நிகழ்வதில்லை. கடந்த பொழுதில நிகழ்ந்தவை மீண்டும் மலர்வதில்லை. காலச் சக்கரம் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆகவே எதுவும் திரும்பி வருவதில்லை. வாழ்க்கை என்ற வாய்ப்பு மறுமுறை மலராத நிகழ்வுகளின் தொகுப்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொரு நொடியும் நமது கனவுகளின் விடியலை நோக்கி பயணப்ப்ட்டுக் கொண்டே இருக்கின்றோம்.

நம்பிக்கை கீதம்

உங்களுடைய மன வானொலியில் தன்னம்பிக்கை கீதங்கள் மட்டுமே இருபதினான்கு மணி நேரமும் இடைவிடாது ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் தன்னம்பிக்கைதான் வாழ்வின் ஆதாரம். நமது கனவுகள் நிச்சயம் நனவுகள் ஆகும் என்று நம்ப வேண்டும். இதைத்தான் வானொலி இயக்குனரும், கவிஞருமாகிய திரு. ஜெ. கமலநாதன் அவர்கள் “நாளை நமது கனவுகள் நனவுகள் ஆகும்; நலிந்த கவலைகள் நம்மை விட்டுப் போகும்” என்கிறார். கோவை வானொலி நேயர்களின் மனதில் தன்னம்பிக்கையை விதைத்து வெற்றியின் இரகசியத்தைப் புரிய வைத்த இந்த வரிகளை அவரே சொல்லும்போது, கேட்போரின் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்து தன்னம்பிக்கையும் உத்வேகமும் உள்ளத்தில் ஒளிர்வதை உணரமுடியும். பல்லாயிரக்கணக்கான நேயர்களின் கழுத்தில் வெறிமாலை விழுவதற்கு இந்த வரிகளே காரணமாகவும், தூண்டுதலாகவும் இருந்தது என்றால்அது மிகையல்ல; முற்றிலும் உண்மையாகும்.

தினசரி காலை எழுந்தவுடன் “எனது கனவுகள் நிச்சயம் நனவுகள் ஆகும்” என்று ஆழ்மனதில் அழுத்தமாகச் சொல்லி வாருங்கள். உங்களுடைய எண்ணங்களில் தன்னம்பிக்கை கலந்து செயலில் உத்வேகம் கொடுப்பதை உணர முடியும். தன்னம்பிக்கையும், உழைப்பும் உங்களை ஒருபோதும் கைவிடாது என்பதை உணர்வீர்கள்.

கனவுக்குக் கரையில்லை

சிலர் கனவு காணக்கூட அஞ்சுவார்கள். ஒரு இலக்கை நோக்கிப் பயணப்படும்போது, நிச்சயம் இலக்கை அடைவோம் என்று நம்ப வேண்டும் அப்பொழுதுதான் நம்மால் முன்னோக்கி நகர முடியும்.

இரு நணபர்கள் பள்ளியில் படித்துக் கொண்டு இருந்தார்கள். ஒருவன் மற்றவரிடம் கேட்டான். நீ என்ன இலட்சியத்துடன் படிக்கின்றாய்? என்று. “நான் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாகி இந்திய நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபடவேண்டும்” என்ற கனவோடு படிக்கிறேன் என்றான். மற்றவன், “அப்படி நீ ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியானால் என்னை உனது கார் டிரைவராக வைத்துக் கொள்வாயா?” என்றான் முதலாமவன். நிச்சயம் முடியாது என்றான் இரண்டாமவன். நீ எனது உயிர் நண்பன், இந்த சிறிய உதவியைக்கூட செய்யக்கூடாதா? என்று கேட்டான் முதலாமவன். நாம் இருவரும் ஒரே வகுப்பில் படிக்கிறோம், என்றாலும், கனவு காணக்கூட துணிவில்லாத உனக்கு எப்படி உதவ முடியும் என்றான் இரண்டாமவன்.

ஆகவே, கனவு காணக்கூட துணிவில்லாமல் நீங்கள் இருப்பீர்கள் என்றால் அது வேதனைக்குரியது. ஆகவே நமது குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறியதுபோல் கனவு காணுங்கள் வெல்வீர்கள்.

செயல்களே வெற்றிப்படிகள்

நமது கனவுகள் நனவுகளாக வேண்டும் என்று சதா எண்ணிக் கொண்டு இருப்பதோடு அதற்கான செயலில் இறங்குவது இன்றியமையாத்தாகும். நான் கோடி கோடியாக சம்பாதிப்பேன் என்பது உங்களுடைய கனவாக இருக்கலாம். “எனது தொழிலை மென்மேலும் உயர்த்தி உலகளாவிய வாடிக்கையாளர்களையும், அங்கீகாரத்தையும் பெறுவேன்” என்பது உங்களுடைய கனவாக இருக்கலாம். உங்களுடைய கனவு எதுவாயினும் அதை நோக்கியே உங்களுடைய செயல்பாடுகள் இருக்கட்டும். தோல்வி நேர்ந்து விடுமோ என்ற பயத்தில் எதையும் சாத்தியமில்லை என்று ஒதுங்கிவிடாதீர்கள். உலகத்தில் சாத்தியமில்லாதது என்று எதுவுமேயில்லை என எண்ணுகிறவர்கள்தான் பல்வேறு கண்டுபிடிப்புகளையும், சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளார்கள்.

வெற்றி உங்கள் பக்கம்

“எதையும் சாதிக்க முடியும்” என்ற தன்னப்பிக்கையோடு முழுமையாக முயற்சிக்க வேண்டும். முயற்சிகளின் வலிமையும், நோக்கமும் நேர்மை மிக்கதாகவும் மனித நேயம் மிக்கதாகவும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் உங்களுடைய செயல்கள் ஆற்றல் மிக்கதாக இருக்கும். ஆகவே உங்களுடைய சரியான செயல்கள் எப்பொழுதும் உங்களுடைய வெற்றியாக மலரும் என்பதை முழமையாக நம்புங்கள். ஒரு விதை முளைப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை எடுத்துக் கொள்கிறது. அரும்பு மலர்வதற்கு ஒரு குறிப்பிட்ட காலத்தை எடுத்துக் கொள்கிறது. அது போலத்தான் உங்களுடைய செயல்கள் வெற்றியாக மலர்வதறகு ஒரு குறிப்பிட்ட காலத்தை எடுத்துக்கொள்கிறது. நம்பிக்கைகள் எப்பொழுதும் வெல்லும் என்ற எண்ணம் நெஞ்சில் ஆழமாக வேரூன்றினால் வெற்றி எப்பொழுதும் உங்கள் பக்கம்தான்.

மனதை வெல்லுங்கள்

வெற்றி பெறுவது என்பதை நாம் அனைவரும் தவறாகப் புரிந்து கொண்டு, ஓயாது அலைந்து கொண்டும் அல்லல் பட்டுக் கொண்டும் இருக்கின்றோம். உண்மையில் வெற்றி பெறுவது என்பது மனதை வெல்வதாகும். ஆம்! ஒருவர் தன்னுடைய மனதை வென்றுவிட்டால், அங்கு அமைதியும் சாந்தமும் குடியேறுகின்றது. பிறகு அவர் மகிழ்ச்சியுடையவராகவும் அனைவரையும் நேசித்து அன்பு செலுத்துபவராகவும் மாறி விடுகின்றார். இந்த உலகம் அவருக்கு சொர்க்கமாகவும், இன்பத்தின் தாய் வீடாகவும் தென்படுகிறது.

மனதை வெல்வது எளிதா?

மனதை வெல்வது அவ்வளவு எளிதானதல்ல என்பது முற்றிலும் உண்மை. மனதை அடக்கி வென்றுவிட்டால் போதும் நம்மால் உலகில் எதை வேண்டுமானாலும் சாதித்துக் காண்பிக்க முடியும்.

மனதை வெல்வதற்கு முதலில் அதில் தோன்றும் எண்ணங்களைக் கண்காணிது வரத்தொடங்க வேண்டும். ஏனென்றால் எண்ணங்களின் தன்மையைப் பொருத்தே மனம் அமைதியாகவோ ஆரவாரமிக்கதாகவோ இருக்கின்றது. அதாவது மனதில் அன்புமிக்க எண்ணங்கள் தோன்றும்போது மனம் அமைதியாகவும், அகந்தை மிக்க எண்ணங்கள் தோன்றும்போது மனம் ஆராவாரமிக்கதாகவும் இருக்கின்றது. மேலும் மனதில் அன்பு தவழும்போது வாழ்க்கை அமைதியானதாகவும், பாசமிகதாகவும் அமைந்து மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் நமக்குக் கொடுக்கின்றது.

வழிகள் அமைப்போம்

தடைகளைத் தகர்த்து வழிகளை அமைப்போம். பாதைகளில் முட்கள் இருக்கின்றதென முடங்கிவிடாமல் முட்களை அகற்ற முயல்வோம். அல்லது காலுக்குச் செருப்புகளைத் தயார் செய்து அணிவோம். பாதை இல்லை என்பதற்காக பயணத்தை நிறுத்துவதா? பாதையில் பயணப்படுவது சாதனை அல்ல. பயணப்படுவதற்கு பாதையை அமைப்பேத சாதனையாகும். வழிநெடுக மலர்களைத்தூவிய வரவேற்பை எப்பொழுதும் எதிர்பார்த்துக் காத்து இருக்கக்கூடாது. முதற்பயணம் வென்றால்தான் உங்களுடைய பாதையில் மலர்களைத் தூவி வரவேற்க மக்கள் வருவார்கள். ஆகவே எண்ணங்களை நெறிப்படுத்துவதுதான் மனதை வழிப்படுத்துவதாகும்.

“வழிகள் தெளிவானால்
விழிகள் தெளிவாகும்

 Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

சத்தியம்

Super Hero Member

Posts: 1507


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #16 on: April 24, 2012, 08:03:20 AM »

மனிதம் வளர்ப்போம்

மனித மனம் என்பது இன்பத்தை மட்டுமே நாடுகிறது.  அதை மட்டுமே ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றது.  ஒரு குழந்தை பிறந்தபின், அவனது மழலைப்பருவத்தில் காண்பதெல்லாம் இன்பம்தான்.  ஏனென்றால், அவனது எதிர்பார்ப்பை அவனது சுற்றம் நிறைவேற்றுகின்றது.  அவனிடமிருந்து சுற்றமும் சமுதாயமும் எதுவும் எதிர்பார்ப்பதில்லை.  ஆனால் அவன் வளர வளர இந்நிலை மாறுபடுகிறது.

அவனது எதிர்பார்ப்புகளும், அவனிடத்து எதிர்பார்ப்புகளும் கூடுகிறது.  இது இருமுனைகளிலும் நிறைவேற்றப்படாதால் மிஞ்சுவது, எஞ்சுவது கசப்புதான்.  தனது குடும்பத்தில் வஞ்சிக்கப்படுவதாக நினைக்கும் அன்பைத்தேடி மற்றொரு மனிதரை  நாடுகிறான்.  அது நண்பனாக இருக்கலாம், அல்லது காதலியா…..

இளைஞர்களே!  சற்று சிந்தியுங்கள்.  துடுக்காக பேசுவதிலும், வேடிக்கையாக பிறரை கிண்டலடிப்பதிலும், நண்பர் குழுமத்துடன் நாகரீக உலகில் வெள்ளித்திரை ஹீரோகள் போல் நட்சத்திரம் மாதிரியாக உடையிலும், அசைவிலும் செயல்படுவதாலும் மட்டும் இன்பம் பெறமுடியாது. இளைய மனம் கட்டுப்பாட்டை விரும்பாதுதான்.  ஒரு சதுர  அறையுள் கல்வி கற்பதை வெறுத்து, ஒரு சதுர பெட்டியுள் இன்பம் கிடைப்பதாக நினைக்கிறோம்.

நாம் நமது சுகத்தையும், இன்பத்தையும் நாடுகிற அளவுக்கு, பிறரது இன்பத்தைப் பேண முயல்கிறோமா?  யோசித்துப் பாருங்கள்.  விவசாயி கலப்பையைக் கொண்டு உழுவது சுகமற்றது என்று எண்ணினால் நம் உடல் உணவு என்ற சுகத்தை அறியாமல் உயிரற்றதாகிவிடும்.  பல அறிவியல் அறிஞர்களும், அறிவாளர்களும் தாம் வாழ்க்கையை இன்பமாகக்கழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், ஏன் உனது தாய், தந்தையர் அலுவலகப் பணியை மேற்கொள்வதை, தனக்கு சுமையாக நினைத்தால்

அப்படியென்றால் இவர்களெல்லாம் வாழவில் இன்பத்தையே உணரவில்லையா?  என்றால், இல்லை.  அவர்கள் விரும்பிய இன்பத்தின் தன்மை வேறு.  நாம் இன்பமாக வாழ, பிறரது உழைப்பை, அறிவின் செயல்பாட்டை எதிர்பார்ப்பது நியாயமன்று.

பிறரது இன்பத்தில், தனது இன்பத்தைக் கண்டனர் ஞானியர்.   சாதனையாளர்கள் தமது கடமையை சுமையாக நினைப்பின் எங்ஙனம் பிறர் இன்புற வழிவகுப்பது?  அரட்டை அடிக்கும் போது உறும் இன்பத்தைக் காட்டிலும், கடமையை நிறைவேற்றி, சாதனையை நிகழ்த்தும் போது உறும் இன்பம் அளவிடற்கரியது. எந்த சாதனையாளனின் வாழ்க்கைப் படிகட்டுகளும் பூக்களால் அலங்கரிப்பட்டதில்லை. முட்களால் கற்களால் நிரம்பிக்கிடப்பவை. சரித்திரம் படிக்க அயர்வுறும் நாம், சரித்திரம் படைப்பது எங்ஙனம்?

 Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

சத்தியம்

Super Hero Member

Posts: 1507


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #17 on: April 24, 2012, 08:04:09 AM »

வாய்ப்புகளே வசந்தம்

இளமையை வசந்த வானமாக்கி வளமையை சொந்தமாக்குவோம்!

மனக்கதவுகளைத் திறந்து வைத்து வாய்ப்புகளை வரவேற்று ஏற்றம் பெற்றோர் பலர்.  ஒவ்வொரு நல்ல சந்தர்ப்பத்தையும் தவறவிடாமல் சந்தித்தவர்களே சாதனையாளர் ஆகின்றனர்.

பொறும் + சிந்தனை + விடாமுயற்சி இவற்றின் பலனே ஆற்றலின் பிறப்பிடம்

“யாகாவாராயினும் நாகாக்க” என்ற வள்ளுவனின் கூற்றுக்கேற்ப நல்லதையே பேசவேண்டும்.

நல்லதையே சாப்பிடவேண்டும். வாய்ப்புகளே வளம் சேர்க்கும் வித்தை நமக்கு சொத்தாகிவிட்டால் உலகை உவகையாக சந்திக்கும் சிந்தனை உருவாகிவிடும்.

பள்ளி மாணவராக இருந்தால் பல்கலையில் ஈடுபட்டு, எழுத்துப் பயிற்சியையும் சீராக்கி திறமையான மாணவராக உருடுத்து பள்ளிக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்து தன்னிலையில் சிறந்த மகிழ்ச்சியை கொண்டுவர  முடியும்.

கல்லூரிக்கு சென்றவுடன்  படிப்புடன் சேர்ந்து, கலை மற்றும் சில தொழில் துறைகளைக் கற்று, படிக்கும் போதே சம்பாதிக்கும் தன்மையை உண்டாக்கிக் கொண்டால் குடும்பத்தாருக்கு சுமையாக இருக்காமல் சொந்தக்காலிலே நிற்கும் தன்மை வந்துவிடும்.  இதனால்நாம் விரும்பும்வரை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.  ஆம். நான்கூட அப்படித்தான் படித்தேன். சிறுதொழில் செய்து சம்பாதித்த பணத்தில் சித்த வைத்தியம் படித்தேன்.  ஆடைகள் விற்பனை செய்து கிடைத்த பணத்தில் அக்குபஞ்சர் வைத்தியம் படித்தேன். ஏனென்றால் படிப்பதற்காக என் முன்னாடி வந்த வாய்ப்பை நழுவவிட மனம் இல்லை.  அப்படிப் படித்ததின் காரணம் இன்றைய தன்னம்பிக்கை புத்தகத்தில் சாதனையாளராக அறிமுகமாகும் வாய்ப்பே வந்தது.  தொழில் துறையினராக இருந்தால் பல்துறையில் வல்லுநராக திகழும் ஆற்றலை வளர்க்க வேண்டும். வாய்ப்புகளை வரவேற்றால் ஆர்வம், திறமை பளிச்சிடும்.

 Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

சத்தியம்

Super Hero Member

Posts: 1507


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #18 on: April 24, 2012, 08:07:01 AM »

தடைகளைத் தகர்ப்போம்

எந்த ஒரு மனிதனும் வெற்றியடைவதற்கு தனது முழு ஆற்றலையும் பயன்படுத்த வேண்டும்.  முழு ஆற்றலை வெளிப்படுத்தி வெற்றி பெறாதவர்கள் தோல்விக்கு தேடும் ஒரு காரணம் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

தாங்கள் வெற்றிபெற முடியாததற்கு ஏதேடும் ஒரு வலுவான காரணம் இருப்பதாக கூறுவார்கள்.  அவர்கள் கூறும் காரணம் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அந்த தடையை உடைத்து முன்னேறுவது எப்படி?

பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு காரணம் அல்லது குறைபாடு வெற்றிக்கு தடையாக இருப்பது இயற்கை.  ஆனால் எந்தவித தடையையும் தன்னம்பிக்கையால் கண்டிப்பாக சமாளித்துவிடமுடியும்.  சில தடைகள் சற்று பெரிதாக இருக்கக்கூடும். அவற்றை வெல்வதற்குச்சற்று கூடுதல் முயற்சியும் மனதிடமும் தேவைப்படும்..  அவ்வளவே!

குறைபாட்டை வெற்றிக்கு ஒரு ஏணியாக எப்படி பயன்படுத்தி சாதனைகளை சாத்தியமாக்குவது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.  எந்தக் காரியத்தை செய்ய முயலும் போதும் எத்தனையோ இடையூறுகள் வருகின்றன.  அப்போது நாம் தேக்கமடைகிறோம்.  சோர்வடைகிறோம். ஆனால் இந்த இடையூறுகளை கூர்ந்து கவனிப்போமேயானால் இவையாவும் மனிதன்  தாமாக ஏற்படுத்திக் கொண்டதாகத்தான் இருக்குமேயொழிய இயற்கையாக உண்டானதாக இருக்காது.  பிறக்கும் ஒவ்வொரு ஜீவனுக்கும் போதிய வாய்ப்புகளும், வசதிகளும், இயற்கை ஒழுங்கமைப்பில் நிறைந்தே இருக்கின்றன.  தடைகளும், பற்றாக்குறைகளும் மனிதன் தன் இயலாமையால் ஏற்படுத்தி கொண்டதேயாகும்.

மனிதன் தன் ஐம்புலன்களின் கட்டுப்பாடற்ற தன்னம்பிக்கை அதன் சுழலிலேயே சிக்கி தவிக்கிறான்.  ஐம்புலன்களை கட்டுப்படுத்தி அறிவை எப்போதும் விழிப்பு நிலையிலேயே வைத்திருந்து தனது ஆறாவது அறிவனை பயன்படுத்தி சிந்தனை ஆற்றலை வளர்த்து தன்னம்பிக்கை பெறும் பட்சத்தில் தடைகளை எளிதில் தகர்த்தெறிந்து வெற்றி பெற முடியும்.

தடைகளைத் தாண்டி வெற்றிபெற சில வழிமுறைகள்

1. வாய்ப்புகளை தேடுதல் (Serarch of Opportunities)

தனக்கு ஏற்ற வாய்ப்பு வரும் என்று காத்திராமல் வாய்ப்புகளைத் தேடி நாம் செல்ல வேண்டும்.  அதிர்ஷ்டத்தால் வாய்ப்பு கிட்டும் என எண்ணுவதை விட்டுவிட்டு முயற்சியால் வாய்ப்பினை தேடவேண்டும்.

2. சரியான வாய்ப்பினை தேர்ந்தெடுத்தல் (Select the Optinistic)

அவர்களிடம் இருக்கின்ற அனுபவம் என்கிற அற்புதமான கல்வியிலிருந்து, தங்களுக்குத் தேவைப்படும் பாடங்களைக் கற்கவேண்டும்..  அவைகளை, தங்களுக்கான சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றி செயல்படுத்த வேண்டும்.

வயதுக்கு மரியாதை தரவேண்டும் என்ற பண்பு காரணமாகாவாவது, முக்கியமான விஷயங்களில் மட்டுமாவது, அவர்களின் ஆலோசனைகளை கோரவேண்டும்.

ஒத்துவராது எனக்கருதும் அறிவுரையை, அவர்களின் மனம் நோகாதவாறு, பண்போடு ஒதுக்கவேண்டும்.

அவர்களை முகத்தளவிலாவது மதித்து மகிழ்விக்க வேண்டும்.  அவர்களின் அறியாமையைக் கண்டு ஏளனம் செய்யாமல், பொறுமைகாட்டி புரிய வைக்க வேண்டும்.  அவர்கள் சங்கடப்படும் அளவுக்கு, அதிகப் பிரசங்கித்தனம் காட்டக்கூடாது.

எல்லா நேரங்களிலும் இடங்களிலும் முக்கியமாக நாலுபேர் கவனிக்கும்போது மட்டுமாவது, மரியாதையும் மதிப்பும் தரவேண்டும்.

சுருக்கமாக,

ஒருவருக்கொருவர் உதவிகரமாக இருக்கும் உயர்ந்த குணம்  – Be helpful.  மற்றவர் உணர்வுகளை மதித்து நடக்கும் மாண்பு – Respect.

மற்றவர்களின் குறைகளையும் பலவீனங்களையும் ஒதுக்கித் தள்ளும் உத்தம குணம் – ignor short comings.   மற்றவர்களின் சுதந்திரத்தில் அளவுக்கதிகமாக மூக்கை நுழைக்காத நாகரிகம் – Decency.

தங்களுடைய சின்னச் சின்ன சௌகரியங்களையும் விருப்பங்களையும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கும் பெருந்தன்மை – Generosity.

மற்றவர்களுடைய இடத்தில் தன்னை இருத்தி அவர்களுடைய உணர்வுகளையும் சூழ்நிலையையும் புரிந்துகொள்ளும் தன்மை.

இந்த BRIDGE  இருந்தால் எந்த இடைவெளியையும் எளிதாக கடக்கலாமே.

நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் பட்சத்தில் அதில் சரியானவற்றை தன்னால் வெற்றி முடியும் என்ற வாய்ப்பினை தேர்ந்தெடுக்க வேண்டும். இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.

3. சரியாக திட்டமிடுதல் (Planning)

வாய்ப்புகளை தேர்ந்தெடுத்த பிறகு மேற்கொண்ட வாய்ப்பினை பயன்படுத்திட சரியாக திட்டமிடல் வேண்டும்.

4. செயல்படுத்துதல் (Implementation)

திட்டமிட்டு களத்தில் இறங்கி பிறகு திட்டத்தினை துரிதமாக தாமதமின்றி செயல்படுத்துதல்

5. தடைகளை தாண்டுதல் (Overcome the barriers)

செயல்படும்போது ஏற்படும் தடைகளையும், இடையூறுகளையும் ஏற்கனவே கூறியதுபோல தன்னம்பிக்கையுடன் போராட்ட குணம் கொண்டு தகர்த்தெறிதல் வேண்டும்.

6. தொடர்ந்து ஈடுபாடு (Continious Persistence)

எந்த நிலையிலும் தேக்கமின்றி தாமதமின்றி முழு முயற்சியாக ஈடுபட்டு செயல்படவேண்டும்.

7. இலக்கை எட்டுதல் (Achiveve the Goal)

தனது இலக்கான சாதனையை நிச்சயமாக அடைந்தே தீருவது.

மேற்கண்ட வழிகளை பின்பற்றி முயற்சி செய்யுங்கள்  சாதனைகள் யாவருக்கும் சாத்தியமாகும்.

 Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு

சத்தியம்

Super Hero Member

Posts: 1507


தீமைக்கும் நன்மையே செய்

Re: வெற்றிக்கான படிக்கட்டுக்கள்!

« Reply #19 on: April 24, 2012, 08:09:22 AM »

மனசே… மனசே..

மிக மிக முக்கியமான ஒரு வேலையை, அல்லது மனதிற்குப் பிடித்த ஒரு செயலை செய்து கொண்டிருக்கும்போது, கரெண்ட் கட்டானால் நமக்குள் பொங்கியெழும் கோபத்தைப் பார்க்க வேண்டுமே.

“சே… மனுஷனால நிம்மதியா ஒரு பைலை பார்க்க முடியுதா?  ஏன்தான் இப்படி கண்ட நேரத்திலேயும் கரெண்ட்டை நிறுத்தி உயிரை வாங்கறானோ…?

“காலையிலேர்ந்து வேலை, வேலைனு உயிர் போச்சு, கொஞ்சநேரமாவது ரிலாக்ஸ்டா டி.வி. பார்க்கலாம்னா,  இந்த பாழாப்போன கரெண்ட் இப்படி சதி பண்ணுது..!”

மூச்சுவிடாமல் புலம்புவோம். நாம் பதட்டப்படுவதற்கான காரணம் நியாயமானதா, இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் அக்கறையில்லை.  இயல்பு நிலையில் ஏற்படும் ஒரு சிறு மாற்றத்தை நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத நிலை.  இத்தகய குறுக்கீடுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லையே, நம்மை பாதிக்கும் ஒரு விஷயத்தை “கண்ரோல்” செய்யக்கூடிய “சாவி” வேறு எவரிடமோ இருக்கிறதே என்ற அடிமனதின ஆதங்கம்தான் இப்படி கோபமாக வெடித்துச் சிதறுகிறது.

“மாசாமாசம் கரெண்ட் பில் கட்டறோம்ல.  ஒருநாள் லேட்டானா பொறுத்துக்கிறீங்களா?  சர்வீஸை நிறுத்திடுறீங்கள்ல.  அப்ப, இதுலயும் நியாயமா இருக்கணும்.  அது மட்டும் செய்ய மாட்டீங்களே…”

நமக்கெனத்தான் ஒரு எளியவழி இருக்கிறதே.  டக் டக்கென தொலைபேசியில் எண்களைத் தட்டி எதிர் முனையில் வசமாய் மாட்டிக்கொண்டு விழிக்கும் மின்துறை ஊழியரை ஒரு பிடிபிடிப்போம்.

மின்சார கட்டணத்தை ஒழுங்காய் செலுத்துகிறோம். உண்மைதான்.  கொளுத்தும் வெயிலில் வியர்த்து வடிய உட்கார்ந்திருப்பதென்பது கொடுமையிலும் கொடுமைதான்.  அதுவும், சென்னை வாசிகளாயிருந்தால் அதோகதிதான்.  நாம் செலுத்தும் கட்டணத்திற்குரிய, நியாயமான சேவையை வழங்கவேண்டியது அவர்களின் கடமை என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. தவறு நிச்சயம் நம் பக்கமில்லை.  ஆனாலும்… ஆனாலும் நம் பேச்சு எடுபடுகிறதா, இல்லையே… இதற்கு இந்த நிலைக்குப் பெயர்தான்….

 Logged



உன்னில்.... என்னில்.......வாழ்கிறார் இறைவன்..வேறெங்கும் இல்லை...மனதையும் உடலையும் பரிசுத்தமாக வைத்திரு.

No comments:

Post a Comment