ஐபோன் 7 கான்செப்ட், பிடிச்சிருக்கா..??
ஒரு வருஷமாக இப்போ வருது, அப்போ வருதுனு எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் கருவிகள் செப்டம்பர் மாதம் தான் அறிவிக்கப்பட்டன. இன்று உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கருவிகளின் இந்திய விற்பனை எதிர்பார்த்த அளவு சிறப்பானதாக இல்லை என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த கருவி ஐபோன் 7 என்றும் அந்த கருவியின் சிறப்பம்சங்கள் இவை தான் என்றும் இணையம் முழுக்க செய்திகள் தீயாய் பரவ ஆரம்பித்து விட்டது.
கான்செப்ட்
கான்செப்ட்
பிரபல வடிவமைப்பாளரான ஹாசன் கேமக் இப்படி இருக்கலாம் என ஐபோன் 7 கான்செப்ட் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிறப்பம்சம்
சிறப்பம்சம்
வெளியான ஐபோன் 7 கான்செப்ட் வீடியோ மூலம் அந்த கருவியில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.
வாட்டர் ப்ரூஃப்
வாட்டர் ப்ரூஃப்
முந்தைய ஐபோன்களை விட ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் கருவிகளில் மேம்படுத்தப்பட்ட வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு வெளியாகும் கருவியில் முற்றிலும் பாதுகாப்பான வாட்டர் ப்ரூஃப் எதிர்பார்க்கப்படுகின்றது.
வடிவமைப்பு
வடிவமைப்பு
அடுத்த ஐபோன் கருவியின் டிஸ்ப்ளே கருவியை ஒட்டி வளைந்த டிஸ்ப்ளே போன்று இருக்கலாம்.
வயர்லெஸ் சார்ஜிங்
வயர்லெஸ் சார்ஜிங்
சாம்சங், சோனி, எல்ஜி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட ஸ்மார்ட்போன்களை சந்தையில் வெளியிட்டிருக்கும் நிலையில் ஆப்பிள் நிறுவனம் புதிய கருவியில் இந்த அம்சத்தினை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்டெல்
இன்டெல்
மேலும் அடுத்த ஐபோன் கருவியில் ஆப்பிள் நிறுவனம் இன்டெல் மற்றும் குவால்காம் என இரு வகை சிப்செட்களை பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகின்றது.
ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
ஓஎல்ஈடி டிஸ்ப்ளே
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன்கள் சாம்சங் கருவிகளுக்கு பலத்த போட்டியை அளிக்கும் என்பதால் அவைகளில் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிராசஸர்
பிராசஸர்
ஐபோன் 7 கருவியானது ஹெக்சாகோர் பிராசஸர் கொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment