Delete பண்னிய டேட்டாக்களை recover செய்வது எப்படி கணினி அவசியம்.....
நீங்கள் அழித்துவிட்டதாக கருதும் தகவல்கலோ அல்லது பிற டேடாக்கலோ முழுவதுமாக அழிந்து போவது இல்லை. Hard disk-ல் அது இருக்கத்தான் செய்யும். எனினும் அதனை நம்மால் காண இயலாது. ஒரு வேளை நீங்கள் அவற்றைத் திரும்பப்பெற எண்ணினால் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அதன் மூலம் எளிதாக பெறலாம்.
இதற்கு அதிகமாக பயன்படுத்தப்படும் recovery tool ஆனது RECUVA. இந்த Software-ஐ இணைய தளங்களில் இலவசமாகவே பெறலாம். இது நீங்கள் நிரந்தரமாக delete செய்த fileகளை திரும்பபெற உதவுகிறது.
இதனைப் பயன்படுத்தி எவ்வாறு Recover செய்வது என்பதை கீழ் காணும் வழிமுறைகள் விளக்குகின்றது.
1. RECUVA மென்பொருளை முதலில் டவுண்லோடு செய்யவும்.
2. Softwareரினை Install செய்த பின், அதனை Open செய்யவும். திரையில் கீழ்காணும் Wizard தோன்றும். அதில் குறிப்பிட்ட Type வேண்டுமெனில் அதனை தேர்வு செய்யவும். இல்லையெனில் Others என்பதை தேர்வு செய்யவும்.
3. அதன் பின் நீங்கள் அழித்த Files-ன் இருப்பிடத்தினை கேட்கும். உங்களுக்கு தெளிவாக தெரியாத பட்சத்தில் “I’m not sure” என்பதை தேர்வு செய்யவும்.
4. தற்போது உங்களது தேடலை தொடங்கலாம். ஒருவேளை உங்கள் Fileகளை தேடுவதில் பிரச்சனை ஏற்படட்டால் “Deep Scan” என்பதை டிக் செய்து பின் Scan செய்யவும்.
5. தேடல் முடிந்தவுடன் தோன்றும் திரையில் உள்ள Fileகளில் உங்களுக்கு தேவையான Fileஐத் தேர்வு செய்து ”Recover” என்பதை கிளிக் செய்யவும்
குறிப்பு : Fileஐ Recover செய்யும்போது அதனை restore செய்யப்பட வேண்டிய Locationஐயும் குறிப்பிடவும். இல்லையேல் பழைய Fileகளின் மீது Overwrite செய்ய நேரிடலாம்.
RECUVA மென்பொருளை டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்து பெற்று கொள்ளுங்கள்>http://filehippo.com/download_recuva
No comments:
Post a Comment