வெப் ஹோஸ்டிங் இந்த வார்த்தை பற்றி தெரியாதவர் யாரும் இணையத்தில் ஒரு தளத்தை சொந்தமாக வைத்திருக்க இயலாது. அப்படி என்றால் என்ன? என்ன செய்கிறது வெப் ஹோஸ்டிங்? என்ன வசதிகள் உள்ளன? எல்லாம் தெரிந்து கொள்ளவே இந்தப் பதிவு. ஏதோ என்னால் முடிந்த அளவு தருகிறேன். Web Hostingஎன்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தன்னைப் பற்றியோ, தன் நிறுவனத்தைப் பற்றியோ இந்த உலகுக்கு இணையத்தின் மூலம் சொல்ல இது உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் இதை வழங்கும்.
இது இலவசமாக கூட கிடைக்கிறது.
இங்கு நான் வெப் ஹோஸ்டிங் என்பதை வெப் சைட் என்று குறிப்பிடுவேன்.
நீங்கள் கேட்கலாம் ப்ளாக் என்றால் என்ன என்று? அதாவது வலைப்பூ என்பது உங்களைப் பற்றி நீங்கள் எழுதும் டைரி போன்றது. ஆனால் வெப் சைட் என்பது ஒரு புத்தகம் எழுதுவது எனக் கொள்ளலாம். இரண்டிற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.
பெரும்பாலும் ப்ளாக் எல்லாம் ஒரே வடிவமைப்பைக் கொண்டிருக்கும். பல மாற்றங்கள் செய்ய இயலாது. ஆனால் வெப் சைட் ஆனது ஒரு ப்ளாக் என்பதை விட மிக அதிக வசதிகளை கொண்டது. இதில் பல மாற்றங்கள் நாம் செய்யலாம். தள வடிவமைப்பு என்பது மட்டும் அல்ல, பல்வேறு வசதிகள்.
ஒவ்வொரு வெப் சைட்டும் ஒரு ப்ளாக் கொண்டிருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு நிறுவனம் வைத்து உள்ளீர்கள் என்றால், அந்த வெப் சைட் மூலம் உங்கள் நிறுவனம் பற்றிய செய்திகளை சொல்ல வேண்டும். நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி சொல்வது ப்ளாக். உதாரணம், ஒரு தொலைகாட்சி நிறுவனம் தன்னுடைய நிறுவனம் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி அதன் தளத்தில் சொல்லி இருக்கும், அதே ஒரு நிகழ்ச்சி ஒரு புதிய வசதி மூலம் உங்களுக்கு கிடைக்கும் என்றால் அதைப் பற்றி சொல்வதற்கு அதன் ப்ளாக் பயன்படுத்தும்.
ஆனால் இன்று வெறும் சொந்த டொமைன் வைத்து எழுதினாலே அது வெப்சைட் என்று சொல்லும் வண்ணம் ஆகிவிட்டது.
இதுவரை வெறும் வெப் சைட் என்றால் என்ன என்று மட்டுமே சொல்லி உள்ளேன். சரி வெப் ஹோஸ்டிங் என்றால் என்ன?
நாம் நம் கணினியில் நமது தகவல்களை சேமித்து வைப்பது போன்றதுதான் இது. ஆனால் இதன் அளவு மிக மிக அதிகம்.
அதாவது நாம் எழுதும் உங்கள் வலைப்பூ தகவல்கள் எல்லாம் கூகுள் தனது சொந்த சர்வர் மூலம் சேமித்து வருகிறது. இது இலவசம். இதே வசதியை நாம் நம் சொந்த செலவில் சேமித்துக் கொள்வது தான் வெப் ஹோஸ்டிங். இதற்கு மாதம் ஒன்றுக்கு குறிப்பிட்ட அளவு செலவு ஆகும். செலவை பொறுத்து இடவசதி கிடைக்கும். இங்கு இடவசதி என்பது MB,GB என்பதில் குறிப்பிடப்படும்.
இதில் நமது தளத்தில் நாம் போஸ்ட் செய்யுபவை ஒரு குறிப்பிட்ட வெப் ஹோஸ்டிங் சர்வீஸ் மூலம் ஒரு சர்வர் கொண்டு சேமிக்கப்படும்.
பல்வேறு வகையான ஹோஸ்டிங் வசதிகள் உள்ளன. இலவசம், ஷேர்டு வெப் ஹோஸ்ட், சொந்த ஹோஸ்டிங், இன்னும் பல. ஆனால் இதில் ஷேர்டு ஹோஸ்டிங் தான் அதிகம் பயன்படுத்தப்படுவது. இவை வெப் ஹோஸ்ட் தளங்கள் மூலம் நமக்கு கிடைக்கும்.
வசதிகள் மட்டும் அல்ல வகைகளும் உள்ளன இதில் இமேஜ் ஹோஸ்டிங், வீடியோ ஹோஸ்டிங், பைல் ஹோஸ்டிங், ப்ளாக் ஹோஸ்டிங், ஈமெயில் ஹோஸ்டிங், ஷாப்பிங் கார்டு சாப்ட்வேர்.
ஒரு தளத்தை ஹோஸ்ட் க்கு மாற்ற வேண்டும் என்று நீங்கள் என்னும் போது பல விஷயங்களை கரு இவைகள் தான்
ஏசர் மற்றும் ஆசஸின் புதிய மடிக்கணினிகள்
லேப்டாப் உற்பத்தியில் ஏசர் மற்றும் ஆசஸ் ஆகியவை முத்திரை பதித்த நிறுவனங்கள் ஆகும். தற்போது முக்கிய செய்தி என்னவென்றால் ஏசரின் புதிய ஏசர் ஆஸ்பயர் எஸ்3 மற்றும் ஆசஸின் புதிய ஆசஸ் யுஎக்ஸ்31இ ஆகிய இரண்டு லேப்டாப்புகளும் இடையே சந்தையில் கடுமையான போட்டி உருவாகும் என்று தெரிகிறது.
ஏசர் ஆஸ்பையர் எஸ்3 மற்றும் ஆசஸ் யுஎக்ஸ்31இ ஆகிய இரண்டு லேப்டாப்புகளுமே விண்டோஸ் 7 இயங்கு தளத்தைக் கொண்டிருக்கின்றன. பிராசஸரை எடுத்துக் கொண்டால் இரண்டுமே இண்டல் கோர் ஐ5 அல்லது ஐ7 ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது.
இரண்டுமே 4ஜிபி கொண்ட டிடிஆர்3 எஸ்டி ரேமைக் கொண்டள்ளன. சிப்செட்டைப் பொருத்தவரை ஆஸ்பையர் இன்டெல் யுஎம்67 எக்ஸ்பிரஸ் சிப்செட்டையும் அதே நேரத்தில் ஆசஸ் இன்டெல் க்யூஎஸ்67 எக்ஸ்பிரஸ் சிப்செட்டையும் கொண்டுள்ளன. இரண்டுமே மிக மெல்லிய எடை குறைந்த லேப்டாப்புகளாகும்.
ஆசஸ் சென்புக் யுஎக்ஸ்31இ 1600 x 1900 பிக்சல் ரிசலூசன் கொண்ட 13.3 இன்ச் திரையைக் கொண்டுள்ளது. ஆனால் ஏசர் டிஎப்டி வண்ண எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட 13.3 இன்ச் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. ஆசஸின் மொத்த பரப்பு 32.5 x 22.3 x 0.3 செமீ ஆகும். அதே நேரத்தில் ஏசரின் மொத்த பரப்பு 323 x 219 x 17.5 மிமீ ஆகும்.
பேட்டரியைப் பொருத்தவரை ஏசர் 3260 எம்ஏஎச் கொண்ட 3 செல் லித்தியம் ஐயன் பேட்டரியைக் கொண்டுள்ளது. ஆசஸ் 50 வாட்ஸ் நேரம் கொண்ட பாலிமர் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இரண்டுமே இணைப்பு வசதிகளுக்காக ப்ளூடூத், யுஎஸ்பி இணைப்பு, 802.11 பி/ஜி/என் வைஃபை இணைப்பு, வயர்லஸ் இணைப்பு மற்றும் தரமான வீடியோ அவுட்புட்டை வழங்கும் எச்டிஎம்ஐ இன்புட் போர்ட் இணைப்பு ஆகிய அத்தனை இணைப்புகளையும் வழங்குகின்றன.
ஏசரின் ஆஸ்பயரின் ஹார்டு டிரைவின் அளவு 320 ஜிபி ஆகும். இது வெப்காம் மற்றும் மைக்ரோபோன் வசதிகளையும் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஆசஸின் சென்புக்கின் ஹார்டு டிரைவ் 256 ஜிபி அளவைக் கொணடுள்ளது. இரண்டு லேப்டாப்புகளுமே மினி விஜிஏ மற்றும் எர்த்நெட் இணைப்பு பெற்றுள்ளன. இரண்டுமே அலுமினியத் தகடுகளால் செய்யப்பட்டுள்ள பேனல்களை கொண்டுள்ளதால் பார்ப்பதற்கு பக்காவாக இருக்கின்றன.
ஆசஸின் சென்புக்கின் விலை ரூ.90,000மாக இருக்கும். அதே நேரத்தில் ஏசரின் ஆஸ்பையர் ரூ.50,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர்
ஜப்பானின் ஃபிஜிட்சு நிறுவனம் சமீபத்தில் K computer என்ற புதிய சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைத்து வெளியிட்டுள்ளது.இதுதான் இப்போது உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் வேகம் 8.162 petaflops அல்லது வினாடிக்கு 8.162 quadrillion கணக்கீடுகளை செய்யும் திறனுடையது.இதற்கு முன் சீனாவின் NUDT Tianhe-1A என்ற சூப்பர் கம்ப்யூட்டர் உலகின் அதிவேக கணினியாக இருந்தது ,இதன் வேகம் 2.507 petaflops ஆகும்.
தற்போது இது 672 கேபினட்(cabinet) இணைக்கப்பட்ட மிகப்பெரிய கணினி கட்டமைப்பு.இதில் பயன்படுத்தப்படும் பிராசசர் 8 core SPARC64 VIIIfx .மொத்தம் 672 கேபினட்-லும் 68,544பிராசசர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ப்ராசசரிலும் 8 கோர் என்றால் மொத்தமாக 5,48,352 பிராசசர் கோர்-களை கொண்டுள்ளது.
இணையத்தின் (Internet) வரலாறு - ஓர் அறிமுகம்!
1962 – Intergalactic Network குறித்த கருத்துக்களை J.C.R.லிக்லிடர் அறிமுகப்படுத்தினார்.
1974 – வின்ட் சேர்ப் மற்றும் பாப்கான் ஆகியோர் இந்டெர்னெட் என்ற வார்த்தையை முதன் முதலில் Transmission Control Protocol Pape இல் பயன்படுத்தினர்.
1976 – Dr.ரொபர்ட் மெக்காபே தரவுகளை விரைவில் இடமாற்றிக்கொடுக்க உதவும் Ethernet மற்றும் Coaxial Cable இனைக் கண்டுபிடித்தார். Ethernet ஒரு சிறிய பகுதிக்கான Local Area Networks (LAN) இனை ஏற்படுத்த மிக இன்றியமையாத ஒன்று.
1978 – பெரிதுவெக் தனது minicomputer மூலமாக 400 User களுக்கு முதன் முதலாக Spam email இனை அனுப்பினார்.
1983 – இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதியில் தான் எல்லா மெஷின்களும் Arpanet உடன் இணைக்கப்பட்டது. இந்த Arpanet Transmission Control Protocol மற்றும் internet protocol ஆகியவற்றை உபயோகிக்கப் பயன்படுகிறது. இது தான் பின்னர் இன்டர்நெட்டின் மையமானது.
1984 – Internet Engineering Task Forceஇனால் வெளியிடப்பட்ட செய்தித்தாள் ஒன்றில் Dr. ஜோன் போஸ்டல் .com, .org, .gov, .edu, .mil போன்றவற்றை பயன்படுத்துவதற்கான தனது எண்ணத்தை விளக்கினார்.
1985 – அனைத்து NSFNET Program இற்கு TCP/IP ஆகியன கட்டளைகளைப் பிறப்பிக்க வேண்டும் என National Science Foundation இல் இணைந்தகொண்ட டென்னிஸ் ஜென்னிங்ஸ் வலியுறுத்தினார்.
1987 – Compuserve தற்செயலாக Graphics Interchange Formate (GIF) Image இனை வெளியிட்டது. இவ்வாறானதொரு முறை தொழில்நுட்பத்தில் உள்ளமை அந்நேரத்தில் கண்டறியப்படவில்லை.
1989 – The World Internet Service provider முதல் commercial Dial up internet இனை வழங்கியது.
1992 – Word Wide Web இனை முதன் முதலாக Corporation for Research and Educational Networking வெளியிட்டது.
1993 – முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட Internet browser Md Mosaic For X இனை இலினோய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மார்க் ஆண்ட்ரசன் உருவாக்கினார்.
1994 – Pizza Hut முதன் முதலில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆன்லைன் மூலம் order செய்யும் முறையை வெப்சைட் மூலம் அறிமுகப்படுத்தியது.
1995 – தற்போது ebay எனப்படும் Auction Web இனை பியரி ஒமிட்யாது வெளியிட்டார்.
1996 – Network of research and Education institutions எனப்படும் Internet 2 வெளியிடப்பட்டது. Hotmail ஆரம்பிக்கப்பட்டது.
1998 – Andy Bechtolsheim இடமிருந்து Google நிதியினைப் பெற்றது.
1999 – Wi-fi Wireless internet technology வெளியிடப்பட்டது.
2001 – விக்கிபீடியா ஆரம்பிக்கப்பட்டது.
2003 – iTunes stores இனை Apple ஆரம்பித்தது.
2004 – ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி Google 1 GB அளவில் தரவுகளைப் பகிரக்கூடிய Gmail இனை ஆரம்பித்தது. hotmail மற்றும் yahoo முறையே 2MB மற்றம் 4MB அளவில் தரவுகளைப் பகிர்ந்துவந்த நிலையில் Gmail இன் இந்த அறிவித்தலை மக்கள் April Fool நிகழ்வாகக் கருதினர்.
2005 – Youtube ஆரம்பிக்கப்பட்டது.
2006 – டாம் சகொல்லா Twitter இனை அறிமுகப்படுத்தி ஆரம்பித்து வைத்தார்.
2009 –Mobile data traffic exceeded அறிமுகம்.
ATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா ?
பணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காமல் ATM க்கு பணம் எடுக்க செல்கிறீர்கள்....
நீங்க எது நடக்க கூடாதுன்னு நெனச்சீங்களோ அது இப்போ நடக்க போகுது ..
ஏதோ சொல்லி வச்ச மாதிரியே ஒரு பலே போக்கிரி உங்க துட்டை அடிச்சிட்டு போறதுக்காக ATM வாசலில் நிற்கிறான் .
ATM வாசலில் நீங்கள் மிதிக்கவும் உங்கள் கழுத்தில் கத்தி ...
"பணத்த எடுடா" ....திருடன் உங்களை மிரட்ட திரு திருவென்று நீங்கள் விழிக்கிறீர்கள்.
"சத்தம் போட்டா மவனே சொருகிடுவேன் பணத்தை எடுடா"
"அண்ணாச்சி நீங்க தப்பா நெனச்சிட்டீங்க நீங்க நினைக்கிறது மாதிரி நான் பணம் எடுக்க வரலை ....இது டோய்லெட் ஆக இருக்கும்ன்னு நெனச்சி சூச்சூ போறதுக்காக வந்தேன்"
"அப்படீன்னா இது எதுக்குடா கொண்டு வந்த ..." உங்கள் ATM கார்டு இப்போது அவன் கையில்
"அதிகமா வேணாம் ஒரு அம்பதாயிரம் மட்டும் எடுத்து கொடு "..கத்தி மேலும் நெருக்கமாகிறது .
இது போன்றதொரு சூழ் நிலையில் நீங்கள் மாட்டிக்கொண்டால் உங்கள் பணத்தை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்த பதிவுதான் இது .
நேராக ATM ல் கார்டை செருகி PIN நம்பரை REVERSE ஆக டைப் செய்யுங்கள்.உதாரணமாக உங்கள் PIN நம்பர் 1234 என்றால் 4321 என்று டைப் செய்யுங்கள் .
அவன் கேட்ட பணம் இப்போது வந்துவிடும் .ஆனால் அவன் அறியாமலேயே அவனுக்கு இப்போது ஒரு ஆபத்து .
உடனடியாக நீங்கள் திருடனிடம் மாட்டிக்கொண்ட விஷயம் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தெரிய வரும் .உங்கள் பணம் மீட்கப் படுவதற்கு வாய்ப்பு ஏற்படும் .
இந்த வசதி அனைத்து ATM களிலும் செய்யப்பட்டுள்ளது .பலருக்கு இது தெரியாததால் பயன்படுத்துவதில்லை .மனதில் இதை மறக்காமல் வைத்துக்கொள்ளுங்கள் .
இது எனக்கு Email மூலமாக வந்த தகவல் .
கட்டபொம்மனின் இறுதி நாட்கள்
தமிழ் மன்னர்களுக்கு என்றும் ஒரு தனித்துவத்தன்மை உள்ளதென்பது மறுக்க முடியாத உண்மை. சங்க காலம் தொட்டு ஆங்கிலேய ஆக்கிரமிப்பு காலம் வரைக்கும் தமிழ் மன்னர்களின் பெருமைகளை வரலாறு சொல்ல மறந்ததில்லை எனலாம். அந்த மன்னர்களின் வரிசையில் வீரம் என்றதும் நினைவிற்கு வரும் மன்னன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.
1760ல் பிறந்த இந்த வீரமகனுக்கு இன்று 252வது பிறந்த நாள்.
மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் இந்த மன்னனின் இறுதிநாட்கள் பற்றியதான பதிவினை இன்று ஆரம்பிக்கின்றேன். இப்பதிவு ஒரு தொடர்பதிவு. இதன் தொடர்ச்சியான பாகங்கள் அடுத்தடுத்த வாரங்களில் வெளிவரும் என்பதையும் கூறிக்கொண்டு பதிவை ஆரம்பிக்கின்றேன்.
வியாபார நோக்கத்திற்காக ஆரம்பத்தில் இந்திய உபகண்டத்தினுள் நுழைந்த ஆங்கிலேயர்கள் பின்நாளில் மண்ணாதிக்க வெறிக்கு உட்பட்டனர் காரணம் மண்ணில் இருந்த வளமும், வீரமும் அவர்களை அதிர்ச்சியடைய வைத்ததுதான். அந்த வகையில் இந்தியாவை கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் இந்தியாவின் தென்னாட்டில்உள்ள பாளையக்காரர்கள் எல்லோரும்தாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்துமுகஸ்துதி செய்து திறை செலுத்தவேண்டுமென்று ஆணையிட்டனர்.அவர்களின் மிரட்டலுக்கும் படை பலத்திற்கும் பயந்து பலர் ஓடிச்சென்று திறை செலுத்தினர்.பலர் மண்டியிட்டனர்.
சிலர்தான் “தாம் உயிர் நீக்க நேரினும்வரிசெலுத்த முடியாது” என்று கூறினர். ஆங்கிலேயரையும் எதிர்த்து நின்றனர்.அவ்வாறு எதிர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாஞ்சாலங்குறிச்சிமன்னன் வீரபாண்டிய கட்டபொம்மன்
அவரின் அனல் தெறிக்கும் கோபத்தினை கண்ட ஆங்கிலேயர்கள் தமது நில ஆதிக்கத்திற்கு இவர் தடையாக அமைந்து விடுவார் என்பதை உணர்ந்தனர். போரின் மூலம் அவரை அடக்க எண்ணி யுத்தத்திற்கு தயாராகினர்.
மேஜர் ஜோன் பானர்மன் என்ற ஆங்கில தளபதி தனது பிரமாண்டமான கம்பனிப்படையுடன் 1799 செப்டம்பர் 04ம் திகதி பாளையங்கோட்டையிலிருந்து புறப்பட்டுசிவலப்பேரி மார்க்கமாக பாஞ்சாலங்குறிச்சிநோக்கி விரைந்தார்.
இந்நேரத்தில் ஏக காலத்தில் கப்டன் ஓ ரீலி(O"Reilly), ப்ரூஸ்(Bruce), காலின்ஸ்(collins),டக்ளஸ்(Douglas), டார்மீக்ஸ்(Durmieux),ப்ளேக்(blake), ப்ரௌன்(Brown) போன்ற இதர ஆங்கிலேய அதிகாரிகளும்பாஞ்சாலங்குறிச்சியை சுற்றி தங்களதுபடைகளுடன் போருக்கான வேகத்துடன் நின்றனர்.
ஜோன் பானர்மனின் படை 05.09.1799காலையில் பாஞ்சாலங்குறிச்சியைவந்தடைந்தது. கோவில்பட்டியிலிருந்தும்,கயத்தாற்றிலிருந்தும் வந்த இராணுவவீரர்களும் ஆங்கிலேய படையுடன் இணைந்து கொண்டனர்.
இந்நேரத்தில் வீரத்தின் விளைநிலமாக திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மனின்மறத்தமிழர் படையும் தயாரானது. கட்டபொம்மனின் படையில் சிவத்தையாநாயக்கர், தானாபதிப் பிள்ளையின் தம்பிவீரபத்திரபிள்ளை, சம்பரதி பொன்னப்பபிள்ளை, ஃபாதர் வெள்ளை எனப்படும் வீரன்வெள்ளையத் தேவன், தன்னலங் கருதாதஊமைத்துரை, தளபதி சுந்தரலிங்கம்இவர்களுடன் பலர் உள்ளடங்கியிருந்தனர் .
போருக்கான ஆயத்தங்கள் இருபக்கமும் துரித கதியில் மேற்கொள்ளப்பட்ட வண்ணமிருந்த நிலையில் ஆங்கிலேயர்கள் நோட்டமிடும் நோக்கில் அதாவது கட்டபொம்மனின் யுத்த ஏற்பாடுகளை பற்றி அறிந்து கொள்வதற்காக ஒரு வழிமுறையை பின்பற்றினர். அதுதான் துாது அனுப்பியது.
மேஜர் ஜோன் பானர்மன் தம்முடையபடையோடு இருந்த ராமலிங்க முதலியாரைஹவில்தார் இப்ராஹிம் கான், அரிக்கரன்சாமிஆகியவர்களுடன் பாஞ்சாலங்குறிச்சிகோட்டைக்குள் துாதுவராக அனுப்பிவைத்தார். அவர்கள் கட்டபொம்மனைச்சந்தித்து “கட்டபொம்மன் உடனடியாக பானர்மன்னைச் சந்திக்கவும்” என்றசெய்தியை தெரிவித்தனர்.
அதற்கு கட்டபொம்மன் வழங்கிய பதில் இவ்வாறு இருந்தது.
“எழுத்து மூலமாக ஏதேனும் ஓர் உத்தரவுவந்தாலன்றி, மேஜர் பானர் மென்னைப்பார்க்க முடியாது” என்பதாகும்.
"I lost no time in ordering the polegar to surrender at discretion to the company. if i would grant a written cowl, he said he would come to me; but not without."
அரசின் செயலாளரான அப்போது இருந்த ஜோசையா வெப்பிற்குபாஞ்சாலங்குறிச்சியிலிருந்து மேஜர் ஜோன்பானர்மென் 05.09.1799 இல் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்த வரிகளே அவை..
பெயரளவில் நடந்த சமரச முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. ஆங்கிலேயருக்குஅடங்கி ஒடுங்கிப் போகவும் திறைசெலுத்திடவும் அஞ்சா நெஞ்சங் கொண்டவீரபாண்டிய கட்டபொம்மன் தயாராக இல்லை என்பது ஆங்கிலேயர்களுக்கு மேலும் உறுதிபடத் தெளிவானது.
அடுத்த கட்டமாக போர்தான் தீர்வு என ஆங்கிலேயர்கள் தீர்மானித்தனர். காலத்தால்அழியாத, வரலாற்றில் என்றென்றும்நிலைத்து நிற்கின்ற பாஞ்சாலங்குறிச்சிப்போர் ஆரம்பமானது.
பாஞ்சாலங்குறிச்சி கோட்டையின் தெற்குக்கோட்டை வாசலும், வடக்குக் கோட்டைவாசலும் ஆங்கிலேய படையினரால் முதலில் தாக்கப்பட்டது. இந்த முதற்கட்ட போரில் ஆங்கிலேய படையின் நான்கு ஐரோப்பியஅதிகாரிகள் கொல்லப்பட்டதுடன் இரண்டுபேர் காயமடைந்தனர். இருப்பினும் போர்தீவிமாக நடைபெற்றது. ஆங்கிலேய படையின்பீரங்கிகள் செயற்பட தொடங்கின.., அவை கோட்டைச் சுவர்களைத் துளைத்துஉடைத்தெறியத் தலைப்பட்டன.
இதனால் கோட்டையை இழந்து விடுவோமோஎன்ற நிலையில் தீவிர ஆலோசனையை உடனடியாக மேற்கொண்டார் வீரபாண்டியகட்டபொம்மன். இறுதியில் திருச்சி வரைசென்று ஆங்கிலேய மேலதிகாரிகளைச்சந்தித்து, விரைவில் வந்து விடுகிறேன் என்றுவீட்டாரிடம் விடைபெற்று விட்டு, ஒருதண்டிகை, ஏழு குதிரைகள், ஐம்பது வீரர்கள்,தம்பியர், தானாபதிகளோடு சித்தார்த்திவருடம் ஆவணி மாதம் 22ஆம் நாள் (07.09.1799)இரவு 10.30 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சிகோட்டையை விட்டு வீரபாண்டியகட்டபொம்மன் வெளியேறி வடதிசை நோக்கிவிரைந்து சென்றார்.
மறுநாள் முழுவதும் கோட்டையில் இருந்த படைகளுடன் இடம்பெற்ற கடுமையான போரினை தொடர்ந்து 09.09.1799 காலை 09.30 மணியளவில் பாஞ்சாலங்குறிச்சிகோட்டையினை மேஜர் பானர்மென்கைப்பற்றிக் கொண்டார். வீரபாண்டியகட்டபொம்மன் வெளியேறிச் சென்றிருக்கும்திசையைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொண்ட அவர் வீரபாண்டியகட்டபொம்மனைப் பிடிப்பதற்குரியமுயற்சிகளை மேற்கொள்ளுமாறு பலபாளையக்காரர்களுக்கும் கடிதங்களின் ஊடாக கட்டளையிட்டார்.
அந்த கடிதம் வடிவமைக்கப்பட்ட விதம் ஆங்கிலேயரின் பிரித்தாளும் தன்மையை மேலும் பறை சாற்றி நிற்கிறது எனலாம்.
"ஒவ்வொருவருடைய குணத்திற்கும்கட்டபொம்மன் மீது கொண்டிருக்கும்அவர்களுடைய அபிப்பிராயத்திற்கும்ஏற்றவாறு வெவ்வேறு விதமாக அந்தப்பாளையக்காரர்களுக்கு பானர்மென் கடிதம்எழுதியதாக அவரே அரசுக்கு 11.09.1799 இல்நாகலாபுரத்திலிருந்து எழுதிய கடிதத்தின்மூலம் தெரிவித்திருக்கிறார்.
... that I found it necessary to very the style of my letters to the different polegar, according to the knowledge I had of their characters, and what I knew of their dispositions towards cataboma Naig.
கடிதங்களின் மூலமாக கட்டளைகளை பிறப்பித்த பின் ஆங்கிலேய படைகள் கட்டபொம்மனை தேடுவதற்கு தயாராகின.லெப்டினென் டக்ளஸ் தலைமையில் இரண்டுகுதிரைப் படைகளையும், கப்டன் ஓ ரெய்லிதலைமையில் 400 குண்டு வீச்சாளர்களையும்இடது பக்கமாக அனுப்பி வைத்துவிட்டுமுக்கிய படைகளுடன் மேற்கு பக்கமாக மேஜர்பானர்மென் செல்வதும் எனதிட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி சிறிது தூரம்சென்றதும் எட்டயபுரம் பாளையக்காரர் தனதுபடைவீரர்களுடன் கட்டபொம்மனைப்பிடிப்பதற்குச் செல்வதாகவும், தனக்குஉதவியாக மேலும் சிப்பாய்களை அனுப்பும் படியும் ஆங்கிலேயருக்கு தகவல் தந்தார்.உற்சாகமடைந்த பானர்மென், குறிப்பிட்ட அளவு படைவீரர்களுடன் கப்டன் ஓ ரெய்லியையும் லெப்டினென் டக்ளஸையும்எட்டயபுரம் படையினருக்கு துணையாக அனுப்பி வைத்தார்.
கோட்டையை விட்டு வெளியேறிச் சென்றவீரபாண்டிய கட்டபொம்மனைஎட்டயபுரத்தாரின் படைகள் கோலார்பட்டிகோட்டைப் பகுதியில் எதிர்கொண்டன.இச்சம்பவம் 10.09.1799 அன்று நடைபெற்றது. இரண்டு தமிழர் படைகளுக்குமிடையில் போர் இடம்பெற்றது. இதில் இரு தரப்பிலும் பெரியசேதமேற்பட்டது. கட்டபொம்மனது படையினர்வீரப் போரிட்டனர். போரின் முடிவில் ஆறுவீரர்களுடன் குதிரைகளில் ஏறி வீரபாண்டியகட்டபொம்மன் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
தானாபதி சிவசுப்பிரமணியபிள்ளை, அவரதுதம்பி வீரபத்திரபிள்ளை, ஆதனூர்வெள்ளைச்சாமி நாயக்கர், அல்லிக்குளம்சுப்பா நாயக்கர், முள்ளுப்பட்டி முத்தையாநாயக்கர், கொல்லம்பரும்புக் குமாரசாமிநாயக்கர் முதலிய 34 பேர்களை ஆங்கிலப் படையினர் அப்போரின் போது கைதுசெய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(அன்று எட்டயபுரம் செய்த அந்த துரோகத்திற்கும், பாவத்திற்கு பரிகாரமாகவே ஆங்கிலேயரை எதிர்க்க பின்நாளில் பாரதியார் அதே மண்ணில் தோன்றினார் என கருதபடுகிரது.
அசைக்க முடியாத பாஸ்வேர்ட் அமைக்கலாம்
ஒவ்வொரு புரோகிராமிற்கும் தனியான பாஸ்வேர்டைப் பயன்படுத்தவும். ஒரே பாஸ்வேர்டை அனைத்திற்கும் பயன்படுத்தக் கூடாது. எப்படிப்பட்ட திருடனும் அசைக்க முடியாத பாஸ்வேர்டை நீங்கள் அமைக்கிறீர்களா? இந்த கேள்விக்கு பலர் இல்லை என்றுதான் பதிலளிப்பார்கள்.
ஏனென்றால் பலர் பாஸ்வேர்ட் அமைக்கையில் பெரும்பாலும் நமக்குப் பிடித்தவர்களின் பெயர், குழந்தைகளின் பெயர், குடும்பத்திலுள்ளவர்களின் பெயர், ஊர் பெயர் ஆகியவற்றுடன் பிறந்த நாள் அல்லது திருமண நாள் ஆகியவற்றை இணைத்து வைக்கிறார்கள். இது யாராலும் அனுமானம் செய்யக் கூடியது என்பதனை மறந்துவிடுகிறார்கள். அல்லது செல்லப் பெயர் வைப்பது போல மிகச் சிறியதாக வைக்கிறார்கள்.
இந்த முறைகள் எல்லாம் நம் பாஸ்வேர்டை எப்படியாவது கண்டு நம் பெர்சனல் தகவல்களைத் திருட முயற்சிப்பவர்களுக்கு எளிதாக வழி வகைக்கும் செயல்களாகும். ஒரு பாஸ்வேர்டினை எப்படி யாரும் தெரிந்து கொள்ள முடியாதபடி அமைக்கலாம் என்பதனையும் ஒரு பாஸ்வேர்ட் அமைப்பதில் என்ன என்ன கடைப்பிடிக்க வேண்டும், எவற்றையெல்லாம் பின்பற்றக் கூடாது என்பதனையும் இங்கு பார்க்கலாம்.
1. ஒரு பாஸ்வேர்ட் குறைந்தது 8 கேரக்டர்களில் அமைக்கப்பட வேண்டும். மிக உறுதியானதாக வேண்டும் என்றால் 14 கேரக்டர்களில் அமைய வேண்டும். இது எந்த வகையிலும் தொடர்ச்சியானதாக இருக்கக் கூடாது.
பாஸ்வேர்டை ஒரு சொல்லில் அமைப்பதைக் காட்டிலும் இரண்டு சொற்கள் அடங்கிய ஒரு சொல் தொடராக (“pass phrase”) அமைப்பது இன்னும் நல்லது.
இதனை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். நமக்கும் மனதில் வைத்திருப்பது எளிது. rendu idli என்று வைத்தால் யாரும் எதிர்பாராத சர்ப்ரைஸ் ஆக இருக்கும்.
2. எழுத்துகள், எண்கள் மற்றும் அடையாளக் குறிகள் (*&%#@) ஆகிய மூன்று வகைகளையும் இணைத்து உருவாக்குவது நல்லது. இதுவே 15 கேரக்டர்களில் அமைந்தால் இன்னும் ஸ்ட்ராங்காக இருக்கும். சரி இது எப்படி நம் மனதில் ஞாபகமாக இருக்கும் என்று கேட்கிறீர்களா? கீழ்க்கண்ட வழிகளில் சிந்தியுங்கள். முதலில் நீங்கள் பாஸ்வேர்ட் கொடுக்கும் புரோகிராம் ஸ்பேஸ் இணைந்த சொல் தொடர்களைப் பாஸ்வேர்டாக ஏற்றுக் கொள்ளுமா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
பின் உங்களுக்கு பிரியமான ஒரு வாக்கியத்தை நினைவில் கொள்ளுங்கள். My son is three years old. இப்போது இந்த வாக்கியத்தில் உள்ள சொற்கள் அனைத்திலும் முதல் எழுத்துக்களை எடுத்து ஒரு பாஸ் வேர்ட் அல்லது பாஸ் பிரேஸ் அமையுங்கள். எடுத்துக் காட்டாக இந்த வாக்கியத்தில் இருந்து msityo என்ற சொல் கிடைக்கிறது. இதிலும் கூட இடையே ஏதேனும் ஒரு எழுத்தை கேபிடல் லெட்டராக அமைக்கலாம். அடுத்து இதனுடன நீங்கள் விரும்பும் ஸ்பெஷல் கேரக்டர் அல்லது எண்களை இதனுடன் இணைத்துக் கொள்ளுங்கள். m$sit3yo என்று கூட அமைக்கலாம். இந்த பாஸ்வேர்டை ஏதேனும் ஒரு இணைய தளத்தில் கொடுத்தால் அது ஸ்ட்ராங்கானதா என்று சொல்லும்.
இனி தவிர்க்க வேண்டியவற்றைப் பார்க்கலாம்.
1. தொடர் எழுத்துக்கள் அல்லது எண்களைத் தவிர்த்திடுங்கள். 1234567 என்பது போலவோ abcdefgh என்றோ இருக்கக் கூடாது. அல்லது கீ போர்டில் உள்ள அடுத்தடுத்த எழுத்துக்கள் இணைந்ததாகவோ இருக்கக் கூடாது. இதனை ஒருவர் எளிதில் அனுமானித்துவிடலாம்.
2. S க்குப் பதிலாக $ அல்லது O வுக்குப் பதிலாக 0 என அமைத்தால் இந்த் லாஜிக்கைப் பயன்படுத்தி பிறர் எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள்.
3. உங்கள் பெயரில் ஒரு பகுதி, பிறந்த நாள், பான் கார்டு எண் அல்லது உங்கள் மனைவி மற்றும் குழந்தைகளின் மேற்படி விஷயங்களை பாஸ்வேர்டில் அமைக்க வேண்டாம்.
4. சொற்களைப் பின்புறமாக அமைத்தல் (Password Drowssap) ஒரு எழுத்து விட்டு ஒரு எழுத்து அமைத்தல் (Computer Cmuer) போன்ற வழிகளும் கூடாது. பொதுவாக மக்கள் தவறிழைக்கும் சொற்களையும் (Indhia, Telifon) பயன்படுத்தக் கூடாது. சிலர் வேண்டுமென்றே சொல்லக் கூசும் சொற்களைப் பயன்படுத்துவார்கள். இதனால் இன்னொரு நாளில் நம் குழந்தைகளிடம் பாஸ்வேர்ட் என்ன என்று சொல்ல முடியாது.
5. ஒவ்வொரு புரோகிராமிற்கும் தனியான பாஸ்வேர்டைப் பயன்படுத்தவும். ஒரே பாஸ்வேர்டை அனைத்திற்கும் பயன்படுத்தக் கூடாது. இமெயில் அக்கவுண்ட்டிற்கு ஒன்று, பேங்க் அக்கவுண்ட்டிற்கு ஒன்று, சில குறிப்பிட்ட தளங்களில் நுழைய வேறு என வெவ்வேறு பாஸ்வேர்ட்களைப் பயன்படுத்தவும்.
6. ஆன்லைனில் உங்கள் பாஸ்வேர்ட்களை எல்லாம் ஸ்டோர் செய்து வைத்தல் கூடாது.
7. பாஸ்வேர்ட்களை வேற்று நபர்களிடம் சொல்லவே கூடாது.
8. பாஸ்வேர்ட்களை எழுதி வைத்திருந்தால் அவற்றை மற்றவர்களின் கண்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். நமக்கு உற்றவர்கள் வேறு நபர்களிடம் சொல்ல மாட்டார்கள் என்ற எண்ணத்தில் பாஸ்வேர்டை வெளியிடுவதும் கூடாது.
9. இமெயிலில் அல்லது இமெயில் வழியாக வந்துள்ள படிவங்களில் பாஸ்வேர்டை டைப் செய்து அனுப்புவது கூடவே கூடாது.
10. பாஸ்வேர்டுகளை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும். உங்கள் பாஸ்வேர்ட் 14 கேரக்டர்களில் அமைந்து மிகவும் ஸ்ட்ராங்காக யாரும் அணுக முடியாதபடி இருந்துவிட்டால் ஓர் ஆண்டு வரை கூட மாற்றாமல் வைத்திருக்கலாம்.
11. உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத கம்ப்யூட்டர்களில் பாஸ்வேர்ட் பயன்படுத்துவதனைத் தவிர்க்க வேண்டும். இன்டர்நெட் மையங்கள், சைபர் கபேக்கள், பகிர்ந்து பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள், கருத்தரங்குகளில் தரப்படும் கம்ப்யூட்டர்கள், விமான மற்றும் இரயில்வே நிலையங்கள் ஆகியவற்றில் இமெயில் பார்ப்பது, பேங்க் பேலன்ஸ் கையாள்வது ஆகியவற்றைத் தவிர்ப்பது நல்லது.
12. எப்படிப்பட்ட பாஸ்வேர்டை நீங்கள் பயன்படுத்தினாலும் வல்லவனுக்கு வல்லவனான சில திருடர்கள் உங்கள் பாஸ்வேர்டைக் கண்டுபிடித்து பயன்படுத்தத் தொடங்கி விடுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உடனே சார்ந்த நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பிற ஆன்லைன் வர்த்தக மையங்களுக்குத் தெரியப்படுத்தி உங்கள் அக்கவுண்ட்டில் நீங்களாக தெரியப்படுத்தும் வரை வர்த்தகத்தை நிறுத்தச் சொல்லுங்கள். உடனே பாஸ்வேர்டை மாற்றும் வழிகளை மேற்கொள்ளுங்கள். ஏதேனும் திருடு நடைபெற்றதாகத் தெரிந்தால் உடனே அதற்கான காவல்துறை நிலையங்களில் முறையாகத் தெரிவித்து நடவடிக்க எடுக்கச் செய்யுங்கள். தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குத்தான் பாதகமாக அமைந்திடும்.
26th April 2012 முன்பு சக்தி ஆல் இடு
நாம் பயன்படுத்தும் அனைத்து புரோகிராம்களுக்கும் மானிட்டர் திரையில் ஷார்ட் கட் ஐகான்களை ஏற்படுத்த முடியாது. பின் ஏதேனும் ஒன்றைத் தேடுவது சிரமமாகிவிடும். புரோகிராம்கள் வேண்டும் என்றால் ஸ்டார் பட்டன் அழுத்தி பின் புரோகிராம் கிளிக் செய்து பின் வரும் நீண்ட மெனுவில் தேடும் புரோகிராம் உள்ள போல்டரைத் திறந்து குறிப்பிட்ட புரோகிராம் பெயரில் கிளிக் செய்வதும் சிரமமே. எடுத்துக் காட்டாக உங்களுக்கு கால்குலேட்டர் தேவையாய் உள்ளது. ஸ்டார்ட் –– புரோகிராம் –– அக்சசரீஸ் – கால்குலேட்டர் என வரிசையாகச் செல்வது எரிச்சல் படுத்தும் வேலைதான்.
இதற்கு ஒரு சிறந்த வழி உள்ளது. நாம் பயன்படுத்தும் பெரும்பான்மையான புரோகிராம்களை ரன் கமாண்ட் மூலம் பெறலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து ரன் விண்டோவில் கட்டளையை டைப் செய்வதன் மூலம் பெரும்பான்மையான புரோகிராம்களைப் பெறலாம். அவற்றில் சில இங்கு தரப்பட்டுள்ளது.
calc — கால்குலேட்டர், charmap – கேரக்டர் மேப்
clipbrd – விண்டோஸ் கிளிப் போர்ட்
control– கண்ட்ரோல் பேனல்
acrobat அடோப் அக்ரோபட் ரீடர்
photoshop அடோப் போட்டோ ஷாப்
firefox பயர்பாக்ஸ் பிரவுசர்
fonts – பாண்ட்ஸ் போல்டர்
freecell பிரீசெல் கார்ட் கேம்
iexplore இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
control keyboard கீ போர்டு புராபர்ட்டீஸ்
excel – எம்.எஸ். எக்ஸெல்
mspaint / pbrush – பெயிண்ட் புரோகிராம்
powerpnt பவர்பாயிண்ட் புரோகிராம்
winword – எம்.எஸ். வேர்ட் தொகுப்பு
notepad – நோட்பேட்
osk – ஆன்ஸ்கிரீன் கீபோர்ட்
realplay – ரியல்பிளேயர்
regedit32 / regedit – ரெஜிஸ்ட்ரி எடிட்டர்
shutdown– ஷட் டவுண் விண்டோஸ்
msinfo32–msinfo32– சிஸ்டம் இன்பர்மேஷன்
இது போல பல கட்டளைகளை ரன் விண்டோவில் கொடுத்து புரோகிராம்களை இயக்கலாம். ஆனால் இந்த புரோகிராம்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
கம்ப்யூட்டர் பயன்பாட்டு குறிப்புகள்
சிறுவயதிலிருந்து நாம் எதனையாவது கற்றுக் கொள்கிறோம் என்றால் படம் பார்த்து விளக்கம் பெற்றுத்தான் அதனை மனதில் இறுத்திக் கொள்வோம். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கின்றன. அத்தனையும் ஒருவர் தன் வாழ்நாளில் கற்றுக் கொள்ள முடியாது.
எனவே அவரவருக்கு எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறதோ அதனை மட்டும் தேடிப் பிடித்து கற்றுக் கொள்கிறோம். இணைய தளம் ஒன்றைத் தயாரிக்கிறீர்கள். டிஜிட்டல் போட்டோ எடுத்து அவற்றை கம்ப்யூட்டரில் இணைக்க முயற்சிக்கிறீர்கள்.
எடுத்த போட்டோக்களை எடிட் செய்திட விரும்புகிறீர்கள். இதற்கெல்லாம் உதவிக் குறிப்புகளை நாடுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கென உள்ள இந்த தளம் குறித்து நீங்கள் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய உதவியினை வளமாக நல்ல டுட்டோரியல் பாடங்களாகப் பதிந்து வைத்து இந்த இணையதளம் தருகிறது. இதன் முகவரி http://www.goodtutorials.com
13 பிரிவுகளாக இந்த வழிகாட்டும் தளங்கள் உள்ளன. அவை : CSS, Flash, HTML, Illustrator, Java, JavaScript, Maya, Photography, Photoshop, PHP, Ruby, Ruby on Rails and 3ds Max என பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பக்கத்தில் புதியதாக பதியப்பட்ட 15 உதவித் தளங்களின் பட்டியல் காணப்படுகிறது. நான் பார்த்த போது போட்டோ ஷாப்பிற்கான இன்டர்பேஸ் குறித்த டுடோரியல் காணப்பட்டது.
இதனைத் திறந்து பார்க்கையில் போட்டோ ஷாப் குறித்து பல செய்திகள் கிடைத்தன. இந்த உதவிக் கட்டுரைகளின் கீழாக மேலும் பல உதவி தரும் தளங்களுக்கான லிங்க்குகள் உள்ளன. அவற்றையும் கிளிக் செய்து படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதன் கீழ் சில பிரிவுகளும் உண்டு. அவை: Rating, Clicks, Comments, Save, Share and Report. இந்த தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.
எந்த கட்டுரையை சேவ் செய்திட வேண்டுமென்றால் சேவ் டேபைத் தேர்ந்தெடுத்து சேவ் செய்திடலாம். அப்போது இன்னொரு லிங்க் தரப்பட்டு அங்கு சேவ் செய்யப்படும். உங்கள் அக்கவுண்ட்டில் இந்த கட்டுரைகள் சேவ் செய்யப்பட்டு இருக்கும். உங்கள் அக்கவுண்ட்டை ஏற்படுத்த இந்த தளத்தில் பதிவு செய்வதும் எளிது. நிச்சயமாய் இது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் இன்றே இந்த தளம் சென்று பதிந்து கொள்ளுங்கள். குறைந்த பட்சம் உங்கள் பேவரிட் தளப் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்.
இணையத்தில் கிடைக்கும் இலவச நூல்கள்
எலக்ட்ரானிக் புக் என்று சொல்லக் கூடிய இ–புக் நூல்கள் மாணவர்களிடமும் விஷயங்களை அறிந்து கொள்ள விரும்பும் மற்றவர்களிடமும் பிரபலமாகி வருகின்றன. இ–புக் படிப்பதில் என்ன லாபம் என்றால் இவற்றில் பெரும்பாலானவை இலவசமாகக் கிடைக்கின்றன.
சிடிக்களில் பதிந்து எடுத்துச் செல்வது எளிது. அதிலேயே குறிப்புகளையும் எழுதி வைக்கலாம். பல நூல்களில் உள்ள ஒரே விஷயத்தைத் தொகுத்து வைத்து படிக்கலாம்.
நமக்குத் தேவையான பக்கங்களை மட்டும் பிரிண்ட் எடுத்து படிக்கலாம். ஒரு சில பக்கங்களுக்காக ஒரு புத்தகத்தையே விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை. எத்தனை ஆண்டுகளானாலும் இந்த நூல்கள் கிழியவோ அழியவோ போவதில்லை. யாரும் வாங்கிச் சென்று திருப்பித் தரவில்லை என்ற பிரச்னையும் இல்லை. எளிதாக ஒரு பென் டிரைவில் காப்பி செய்து எடுத்துச் செல்லலாம். மேலும் இன்னொருவருக்கு இமெயில் மூலமாக அனுப்பவும் செய்திடலாம். இணையத்தில் பல இடங்களில் இத்தகைய நூல்கள் கிடைக்கின்றன.
அவற்றில் கீழ்க்காணும் மூன்று தளங்கள் சிறப்பாக இயங்குகின்றன. முதல் தளம்www.freeebooks.net இதில் உள்ள நூல்களில் எத்தனை நூல்களை வேண்டுமானாலும் இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். உங்களுக்கு வேண்டிய உதவியினைத் தந்து தேவையான பொருளில் உள்ள நூல்களைக் காட்டுகிறது. அடுத்த தளம்www.ebooklobby.com இந்த தளத்தில் நூல்கள் வகைப்படுத்தப்படுள்ளன. வர்த்தகம், கலை, கம்ப்யூட்டிங், கல்வியியல் என அத்தனை பிரிவுகளிலும் நூல்கள் உள்ளன. எந்த வகையில் நூல்களைத் தேடுகிறீர்களோ அதனை கிளிக் செய்து உங்களுக்கான நூல்களை எடுக்கலாம், படிக்கலாம்.
www.getfreeebooks.com இதுவும் இலவசமாக நூல்களைத் தரும் தளம். எத்தனை நூல்களை வேண்டுமானாலும் டவுண்லோட் செய்து கொள்ளலாம். இணையம் முழுவதும் தேடிப் பார்த்து அனைத்து இ புக்குகளையும் இங்கு வெளியிட்டுள்ளனர். சில நூல்களை அவர்களே தயாரித்து வழங்குகின்றனர். நீங்கள் சிறப்பானது என்று எண்ணும் இ-புக் இந்த தளத்தில் இல்லையா? இந்த தளத்தின் அட்மினிஸ்ட்ரேட்டருக்கு இமெயில் மூலம் தெரிவித்தால் அவர் அதனைப் படித்துப் பார்த்து சேர்த்துவிடுவார்.
உங்கள் பாடலை ராக் இசையில் கேட்கலாம்: உங்களுக்கு ஆங்கிலத்தில் பாடல் எழுதத் தெரியுமா? தனித் திறமை ஒன்றும் தேவையில்லை. Happy Birthday to You My dear என்று எழுதினாலும் அது ஒரு பாடல் தான். இப்படி உங்கள் பிரியமானவருக்கு பாடல் எழுதி அதனை ராக் இசைப் பாடல்களைப் பாடுபவர்கள் பாடி அதனை அவருக்கு பிறந்த நாள் பரிசாக அனுப்பினால் எப்படி இருக்கும்? இதற்கென ஒரு வேடிக்கையான இணையதளம் உள்ளது. இதன் முகவரி http://www.srse/p1/src/ sing/ஸ்பீச் டு டெக்ஸ்ட் தொழில் நுட்பம் கேள்விப் பட்டிருப்பீர்கள்.
இது டெக்ஸ்ட் டு ஸ்பீச் என்ற வகையில் செயல்படுகிறது. உடன் இசையையும் சேர்க்கிறது. தற்போதைக்கு இந்த பாடல் தளத்தின் அகராதியில் 1,400 சொற்கள் மட்டுமே இருக்கிறது. நீங்கள் உங்கள் தோழி விஜயாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கவிதை எழுதி அதைப் பாடலாக அனுப்பச் சொன்னால் இந்த மாதிரி விஜயா என்ற சொல் இல்லை. இந்த சொல் உள்ள பாடல் ஏதாவது இருந்தால் எங்களுக்கு அனுப்புங்கள் என்ற செய்தி உங்களுக்குக் காட்டப்படும். வேடிக்கையாக இருந்தாலும் இது ஒரு புது அனுபவம்தான். தளத்திற்குச் சென்று பார்த்து அனுபவியுங்கள். முதலில் உங்களுக்கே ஒரு கவிதை ஒன்றை எழுதி இதன் மூலம் அனுப்பிப் பாருங்கள். பின் உங்கள் தோழர்களுக்கு அனுப்புங்கள்.
No comments:
Post a Comment