Monday, 23 November 2015

“இந்திய தண்டனை சட்டம் – 1860”-ன்

IPC 120 A & 120 B
“இந்திய தண்டனை சட்டம் – 1860”-ன் சட்டப்பிரிவு 120 (A)-ல், “இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடிச் சட்ட விரோதமான காரியத்தை அல்லது நடவடிக்கையை மேற்கொள்வது என்று ஒத்துக் கொள்ளும்போது, அவர்கள் அனைவரும் ஒன்றுகூடிக் குற்றச் சதி செய்தவர்கள் ஆகின்றனர்” என சொல்லப்பட்டுள்ளது.
“இந்திய தண்டனை சட்டம் – 1860”-ன் சட்டப்பிரிவு 120 (B)-ல், “அத்தகைய சதியின் விளைவாக நடைபெறும் குற்றத்திற்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை அல்லது குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என்றால், சதியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும் விதிக்கப்பட வேண்டிய தண்டனையை விதிக்க வேண்டும்” என சொல்லப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment